நீ இல்லாத ஓர் மாலைவேளையில்
உன் 'bike' ம் நானும்
தனியே சந்தித்துக் கொண்டோம்.
என்னைக் கண்டதும்
தவிப்பாய் தலைகுனிந்து கொண்டது
அருகில் சென்றேன்...
'நீயுமா என்னை மறந்து விட்டாய்?'
என்றேன் வேதனையாய்...
'இல்லையில்லை'
என்று அவசரமாய்
நிமிர்ந்து விட்டு மீண்டும்
தர்மசங்கடமாய் தலைகுனிந்து கொண்டது
எதிரில் வந்த நீ
என்னை கவனிக்காமலே
கடந்து போனாய்...
உண்மை சொல்..
உங்கள் இருவரில் யார் ஜடம்?
6 comments:
தைரியமான பெண்ணாகத் தெரிகிறீர்கள் வாருங்கள் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.
அம்மணி... வணக்கம்மா... நம்ம ஊருக்காரப் பொண்ணாட்டீங்க.. உங்களுக்கு நல்வரவுங்க.... நல்லதா ஒண்ணு சொல்றேன், கேடுக்கோங்க... உங்க போட்டோ எல்லாம் வெளியவே காட்டாதீங்க... மோசமான, நெம்ப மோசமான ஆளுங்க நெறைய பேரு இருக்கற எடமுங்க.. நல்லவங்களும் இருக்காங்க... இருந்தாலும் நாம உஷாரா இருந்துக்கோணும் இல்லைங்களா...ஏதோ, நம்ம ஊருப் பொண்ணாச்சேனு சொல்றேனுங்க.. பாத்துக்குங்க... போட்டோ மட்டும் போடாதீங்க, மத்தபடி வெளுத்துக் கட்ட என்ற வாழ்த்துக்களுங்க...
ப்ரொஃபைல்ல லெக்சரர்னு போட்டிருக்கீங்க? பசங்க கலாட்டா பண்ணப் போறாங்க காயத்ரி :-)
வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள் பல..
வசந்த் சார் நம்ம ஊரா நீங்க? நீங்க சொன்னீங்களேங்கிற ஒரே காரணத்துக்காக என்னோட லேட்டஸ்ட் போட்டோவ எடுத்துட்டு வேற போட்டோ போட்ருக்கேன். இது சின்ன வயசுல நான் டீப்பா திங்க் (அப்பவே!!)பண்ணிட்டிருந்தப்போ எனக்கே தெரியாம எடுத்துட்டாங்க!! இது ஒ.கே வா?
அம்மணி... நெம்ப சந்தோசம்மா... இன்னும் நெறெய எழுதி நல்ல பேரு வாங்கும்மா..OK...
ஒரு மோட்டார் வண்டிக்கு உயிர் கொடுத்த பெருமை உங்களைச் சாரும்.
அற்புதமான சிந்தனை
ஓங்கி என் கன்னத்தில் அடித்தமாதரி இருந்தது...
From KSA
Post a Comment