Thursday, May 3, 2007

நிஜம் நிழலாகிறது...


நம் நட்புக்காலத்தில்
ஒருநாள்
உன் காதலியை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தாய்.


இரண்டு அரசிகள்
மரியாதை நிமித்தமாய்
பேசிக் கொள்வதுபோல
நிகழ்ந்தது அந்த சந்திப்பு.

நம் பிரிவிற்குப் பின்னால்
மீண்டும் ஒருமுறை
அவளை சந்திக்க நேர்ந்தது

அவள் இன்னமும்
அரசியாய் இருக்கிறாள்..
நான்...
அனைத்தையும் இழந்த அகதியாய்..

11 comments:

Ayyanar Viswanath said...

கலக்கிட்டிங்க
:)

பாலராஜன்கீதா said...

வருத்தப்படாதீர்கள். விரைவில் பேரரசியாக வாழ்த்துகிறோம்.

AKV said...

Hey.. From your words, I could sense that you were more a Friend centered person, now feeling bad for having lost a friend..

From your profile, I see that you do not have many friends..

I do not know whether you had read the book by Stephen Convey - The Seven Habits of Highly Effective people.. That explains the prominence of living a principle centered life. If you like to read books, its worth spending time on this one.

குசும்பன் said...

ஏங்க ஏன்! ஏன் இப்படி....
சோகத்த பிழியிறீங்க...

யாருன்னு சொல்லுங்க அந்த
அரசியை... காலி செய்துவிடலாம்....

இந்த கவிதையை என்னால்
நக்கல் அடிக்க முடியவில்லை..
அதான் இப்படி ஒரு சீரியஸ்
பின்னூட்டம்...

Anonymous said...

nadraaka varukiRathu paalaiththinai! peyarin athirchi marrum muthirchi.. ungal mutha vetri. payanam thodara vaalththukkal.

osai chella

காயத்ரி சித்தார்த் said...

//யாருன்னு சொல்லுங்க அந்த
அரசியை... காலி செய்துவிடலாம்//

இதான் உங்க ஊருல சீரியஸ் பின்னூட்டமா? :(

நன்றி செல்லா!

அபி அப்பா said...

hach hach hach...:-))

ILA (a) இளா said...

//யாருன்னு சொல்லுங்க அந்த
அரசியை... காலி செய்துவிடலாம்....//
சரியா? ஏற்பாடு பண்ணிடலாமா?

கோபிநாத் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் ;-(

கோபிநாத் said...

\குசும்பன் said...
ஏங்க ஏன்! ஏன் இப்படி....
சோகத்த பிழியிறீங்க...

யாருன்னு சொல்லுங்க அந்த
அரசியை... காலி செய்துவிடலாம்....

இந்த கவிதையை என்னால்
நக்கல் அடிக்க முடியவில்லை..
அதான் இப்படி ஒரு சீரியஸ்
பின்னூட்டம்... \\\

சித்த"ஆப்பு" உங்க பின்னூட்டம் கூட கவிதை போல இருக்கே !!!! ;)

MSK / Saravana said...

//குசும்பன் said...


யாருன்னு சொல்லுங்க அந்த
அரசியை... காலி செய்துவிடலாம்....//


REPEATEEEEEE..