Sunday, October 28, 2007

உதிர்தலும் துளிர்த்தலும்...

வாரத்தின்
ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...

நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.

பகலில் தொடங்கி
இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..

தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும்
சில நம்பிக்கைகளும்..

என்றாலும்..

யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...

Wednesday, October 24, 2007

மக்கா.. என்னை யாரும் மறக்கல இல்ல?

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

பி.கு 1: ஜி3 சகவாச தோஷத்தால 'டுபுக்கு சார்' பதிவில CP டெக்னாலஜி யூஸ் பண்ணி நான் போஸ்ட் போட்டிருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசப்படாது! ஏன்னா இது நானே என் பொற்கரங்களால டைப்பினது!!

பி.கு 2: நான் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கண்ணு மண்ணு தெரியாம வேலை செய்யற அளவுக்கு 'ரொம்ம்ம்ப பிசி' தான்னாலும் போஸ்ட் போடலன்னா குசும்பனை மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதாலயும், நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டே இந்த பதிவை போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்! நன்றி!

Sunday, October 14, 2007

வாழ்தல் இனிதென்று...

நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......

பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...

வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....

அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..

என்ன செய்ய?

அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!

Wednesday, October 10, 2007

கலையாத சுவடுகள்

வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்

உள்ளங்கைக் குழிவிற்குள்
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி

ஆழ்ந்தும் அகண்டும்
ஆகிருதி காட்டியும்
அலையடிக்கும் சமுத்திரச் சப்தம்
கேட்டபடியிருக்கிறது
சங்குகளுக்குள்ளும்.....

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ளவென
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்புமாய்
சில நினைவுகளைத் தவிர.......

Saturday, October 6, 2007

முதன் முதலாக...

பூ ஒன்று
மலர்வது போலவும்

பொழுதொன்று
புலர்வது போலவும்

அழகியதோர்
கவிதை போலவும்

பொருள் பொதிந்த
புன்னகை போலவும்

நம் சந்திப்பை
நேர்த்தியாய் நிகழ்த்தவென
நான் தீட்டியிருந்த
திட்டங்களனைத்தும்
செயலற்றுப் போயின....

சரி தான்.......

எதிர்பாரா நேரத்து மழையில்
என்ன செய்ய முடியும்
எதிர்கொண்டு ஆனந்தமாய்
நனைவது தவிர?

Wednesday, October 3, 2007

சந்தித்த வேளையில்...

நீரென்றோ
மேகமென்றோ
உருக்குலைந்து போதலும்
வடிவமற்றிருத்தலும்
உன் அருகாமைகளின்போது
நிகழ்கிறதெனக்கு...

கை நழுவவிருக்கும்
கண்ணாடிக் குவளையென
உடைவதற்கான தருணங்களை
எப்போதும்
எதிர்நோக்கியபடி
இருக்கிறதென் மெளனம்...

என்றாலும்...

உருகுதல்
பொங்குதல்
கரைதல்
காத்திருத்தல்
எல்லாமுமாதல்
இல்லாமல் போதலென
காதலின் எல்லாக் கணங்களிலும்

நம்மிடையே
பெறவும் தரவும் சாத்தியப்படுவது
இந்தக் கவிதைகளேயன்றி
வேறேதுமில்லை!