Showing posts with label மொக்கைகள். Show all posts

Tuesday, July 10, 2012
காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் :))
சித்துவிற்கு லேசாக செலக்டிவ் அம்னீஷியா உண்டு. இஸ்ரேலின் ஆதியோடந்தமான வரலாறு, ஆண்டாளின் திருப்பாவை, குறுந்தொகைக் கவிதைகள், உலகப்படங்கள் மற்றும் அவற்றின் பிரத்தியேக காட்சிகள், Friends எபிசோட்ஸின் டயலாக்குகள், இயற்பியல் விதிகள், அண்டைநாடுகளின் அரசியல் மாற்றங்கள், விஷ்ணுபுரம்/ கொற்றவை/ பின் தொடரும் நிழலின் குரல் / காடு ஆகியவற்றில் எந்த வரி எத்தனையாவது பக்கத்தில் எதற்காக இடம்பெற்றுள்ளது, ஆப்பிள் நிறுவனத்தின் இது வரையிலான மற்றும் வரவிருக்கும் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள், மலையாளக் கவிதைகள் / இயக்குனர்கள், மகாத்மா காந்தி, அயன்ராண்ட், டெர்ரி ப்ராட்சட், அகிரா குரோசோவா, டால்ஸ்டாய், கம்பர், பாப் டிலன், இளையராஜா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ஹயோ மியாசகி, கிரிக்கெட், ரூபி நிரலாக்க மொழி பற்றியெல்லாம் எந்த நேரம் என்ன கேள்வி கேட்டாலும் யோசிக்காமல் பதில் சொல்லக் கூடிய மனிதர்.. எலுமிச்சம்பழம் வாங்குவதற்காக என்றே வேகாத வெயிலில் நடந்து கடைக்குப் போய்விட்டு, இடையில் நான் போன் செய்து “புதினாவும் சேர்த்து வாங்கிட்டு வாங்கப்பா” என்றால் வெறும் புதினாவோடு மட்டும் வீட்டிற்குத் திரும்புவார். :))) இந்த விநோதமான மெமரி ஸ்டேட்டை புரிந்து கொள்ள முடியாமல் நான் இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறேன். இதுவே இப்படியென்றால் நெருங்கியவர்கள் / உறவினர்கள் பிறந்தநாள், திருமணநாள், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை அவர் மறக்காமல் இருப்பதே பெரிய சாதனையாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத ஆச்சரிய அதிர்ச்சி.. :)
பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்பே மூணரைப் பவுனில் வளையல், மஸக்களி சுடிதார் என்று ’வல்லிய’ வசூலாகி விட்டதால் ஏழாம் தேதி இரவு 10.30 மணிக்கெல்லாம் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நிம்மதியாக தூங்க ஆரம்பித்திருந்தேன். திடீரென்று தூக்கத்தினிடையில் இனிமையான இசை ஒலிக்கக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எழுந்த போது அறை வெளிச்சமாக, அமைதியாக இருந்தது. அருகில் அம்மு மட்டுமே தூங்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன சத்தம் அது?.. சித்து எங்க?” என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த போது “ஹாப்பி பர்த் டே டூ யூ” என்று பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தார். மணி 12 ஆகியிருந்தது. கையில் ஒரு பெரிய தட்டில்.. Mini dates croissants, Nachos, strawberry & white chocolate milk shake, green tea with lemon & mint can, Ferrero Raffaello almond coconut treat chocolates, Ice cream Cakes என்று எனக்குப் பிடித்த தீனி வகையறாக்களை அடுக்கிக் கொண்டு வந்து நீட்டினார். சந்தோஷத்தில் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. இருந்தாலும் குழப்பம் முழுமையாய்த் தீராமல் "என்ன சத்தம் கேட்டுச்சு? நான் எப்டி எழுந்தேன்? நான் இப்ப எங்க இருக்கேன்?" என்று அடுக்கடுக்காய் நான் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு "நான் உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு உள்ள வந்தேன்.. உன் போனோட மெசேஜ் டோன் தான்" என்று சுருக்கமாக பதிலிறுத்தார். பின்னர், கப் கேக் போலிருந்த குட்டி ஐஸ்க்ரீம் கேக்கை வெட்டி சாப்பிட்டதோடு அவர் மனம் சங்கடப்படக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக அவர் கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு 1 மணிக்கு தும்மிக் கொண்டே படுத்துத் தூங்கினேன்.
விடிகாலையில் மூக்கிலிருந்து ஜலம் கொட்டத் தொடங்கி, தலை கனத்து எழுந்திரிக்கவே முடியாமல் போய்விட்டது. பிறந்தநாளன்று கணவரையும், மாமனாரையும் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ஆபீஸிற்கு பட்டினியாக அனுப்பினேன் என்ற குற்ற உணர்வு தாளாமல் சித்துவிற்கு பிடித்த மிளகுக் குழம்பு வைக்கலாம்.. மாலை வந்தாவது சாப்பிடட்டும் என்று மதியம் சமைக்கப் போனேன். மிளகை வறுத்து எடுத்து தட்டில் கொட்டலாம் என்று நினைத்துத் திரும்பிய வேளையில் திடீரென அமுதினி அழும் சப்தம் கேட்டு அடுப்பை அணைக்காமலேயே வெளியில் ஓடி, அவளைத் தூக்கி சமாதானப்படுத்திக் கொண்டே திரும்பி வருவதற்குள் ஏற்கனவே கருப்பாக இருந்த மிளகு வடிவேலுவைப் போல கருப்பாய் பயங்கரமாய் இருந்தது. “ஏன் எனக்கு மட்டும் இப்டியெல்லாம் நடக்குது” என்று துக்கம் தொண்டையை அடைக்க, மிளகுக் குழம்பு திட்டத்தைக் கை விட்டு மோர்க்குழம்பு வைக்கலாமென்று முடிவெடுத்தேன். சித்துவும், அப்பாவும் திரும்பி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு இரும்பு வாணலியில் வெண்டைக்காய் வதக்கி, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்துக் கொட்டி கொதிப்பதற்குள் குழந்தையை குளிப்பாட்டி விடலாம் என்று சென்று திரும்புவதற்குள்... இல்லை.. இல்லை.. இது தீயவில்லை. ஆனாலும் குழம்பு கருப்பாயிருந்தது. எப்படி என்று தான் புரியவில்லை. சரி.. அப்புறமாய் செஃப் தாமோதரனுக்கோ, மல்லிகா பத்ரிநாத்திற்கோ சமையல் சந்தேகங்கள் பிரிவில் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, குழம்பு கருப்பாய் இருந்தால் என்ன மோர் வெள்ளையாய் தானே இருக்கிறது? ஒளி இருளை விரட்டும் போது வெண்ணிற மோர், கார்க்குழம்பை வெளுப்பாக்காதா என்ன? என்ற நம்பிக்கையில் மோரையும் அதில் ஊற்றினேன். எல்லாம் சேர்ந்து மொத்தமாய் திரிந்து போய் விட்டது. அவ்வ்வ்.. வெளியில் எட்டிப் பார்க்கவிருந்த கண்ணீரை “பெண் என்பவள் அழப் பிறந்தவள் அல்ல; ஆளப் பிறந்தவள்" என்ற தினத்தந்தி ராணி காலண்டர் பொன்மொழி நினைவிற்கு வந்து அடக்கியது. இப்படியாக பிறந்தநாள் அன்று குடும்பத்தார்க்கு வெறும் சோற்றையும் ரசத்தையும் மட்டுமே உணவாகப் படைத்த பாவியாக பழியேற்கவிருந்ததால்.. டின்னரையாவது உருப்படியாக செய்து முடிப்பது என்று நான் கட்டாய சபதமெடுக்க வேண்டியதாயிற்று.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுசமயக் கடவுளர்களையும், பிற மதத்துத் தெய்வங்களையும், சீட்டில் எழுதி மரத்தில் கட்டினால் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றித் தரும் உள்ளூர் கடவுள் உட்பட அத்தனை சிறு தெய்வங்களையும், மதுரை ஆதீனம் தவிர்த்து பிற தமிழக ஆதீனங்கள் அனைவரையும் வேண்டி வணங்கி இரவு உணவிற்கு Tuna பிரியாணியும், சப்பாத்தி + கொங்குநாட்டுக் கோழிக் குழம்பும் சிறந்த முறையில் செய்து அசத்தினேன். (அசத்தினேன் என்றவிடத்தில் என 'அசந்தேன்' என்ற பதமும் பொருந்தக் கூடியதே) சித்துவின் நெருங்கிய நண்பரும் அவர் மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தனர். பிரியாணியும் குழம்பும் மிக அருமையாக இருப்பதாக வாய் கொள்ளாமல் பாராட்டி விட்டுச் சென்றனர். வீட்டிற்கு சென்றதுமே, எங்கோ மலேசியாவில் இன்னும் சில நாட்களில் கேன்சரில் சாகவிருக்கும் Zanzila binti Hashim என்ற முகம் தெரியாத புண்ணியவான் (புண்ணியவதி?) தன்னுடைய சொத்திலிருந்து 2 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை இவர்கள் பேரில் எழுதி வைப்பதாக மெயில் அனுப்பியிருந்தாராம். உடனேயே எனக்கு போன் செய்து "எல்லாம் உன் கை ராசி.. நீ செய்த பிரியாணியை வயிறாரச் சாப்பிட்டு வாயாரப் புகழ்ந்ததின் பலன் தான் இது.." என்று மேலும் அரை மணி நேரம் புகழ்ந்தார்கள். நான் அமைதியாக புன்னகை செய்து "என்னை ரொம்ப புகழாதீங்க. நான் என் கடமையைத் தான செஞ்சேன்?" என்று கூறியபடி சித்துவின் கண்ணாடியைக் கழற்றினேன். (நான் தான் கண்ணாடி போடலயே?) :)
Sunday, April 6, 2008
தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்
670 ரூபாய் ரொக்கம்
கொஞ்சம் சில்லறைக் காசுகள்
வீடு மற்றும் என் அறையின் சாவி
திருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்
கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடி
வங்கி பண அட்டைகள்
படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.
K750i சோனி எரிக்சன் மொபைல்
கறுப்பு ஜெல் பேனா
நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்
தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ராம மந்திரத்துடன் கூடிய நாமக்கல் ஆஞ்சனேயரின் படம்
டிசைனர் புடவைகளை பெட்ரோல் வாஷிற்கு கொடுத்ததற்கான ரசீது
மிளகு சைஸ் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு அட்டை....
இன்னும் அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என்பதை பேருந்தில் அது தொலைந்தபின் தான் அவசர அவசரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்..!
போன மாதத்தின் ஏதோவோர் புதன்கிழமை.. எனக்கு முனைவர் பட்டம் வழங்கும் பெருமையை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெற்றுக் கொள்ள விரும்பியதால் மனமுவந்து திருச்சிக்குக் கிளம்பினேன். அதிகாலை (பெரும்பாலும் அது யாமம்) 5 மணிக்கே ஈரோட்டில் திருச்சி பஸ் ஏறி வசதியாய் ஒரு சீட் பிடித்து ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து 5.15 க்கெல்லாம் ஆழ்ந்து தூங்கத் தொடங்கியிருந்தேன். அப்போது மேற்குறிப்பிட்ட இத்தியாதிகளோடு பர்ஸ் என் மடியில் தான் இருந்தது.
அப்பா எப்போதும் நிறைய முன்யோசிப்புகளோடிருப்பவர். அவர் வெளியூர் செல்வதாயிருந்தால் எங்கு போகிறேன்.. யாரைப் பார்க்க.. அவர் முகவரி என்ன.. தொலைபேசி எண் என்ன.. அது பிசியாக இருந்தாலோ அவர் தொடர்பெல்லைக்கு அப்பாலிருந்தாலோ வேறு எந்தெந்த எண்ணில் தொடர்பு கொள்வது.. அதே ஊரில் அந்த நபருக்கு வேறு நண்பர்கள் உண்டா.. அவர்களின் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்கள் என்ன என்பது வரை விலாவரியாய் (கார்பன் வைத்து) 2 பிரதிகள் தயார் செய்து ஒன்றை வீட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பிரகடனப்படுத்திவிட்டு மற்றொன்றைஅவர் எடுத்துச் சென்றிருப்பார்.
வழக்கமாய் விட்டலாச்சாரியார் படங்களில், ஏழு மலைகள் ஏழுகடல்கள் கடந்து, அடர்ந்த காட்டில், இருள் குகை ஒன்றில், பாம்புகளின் பாதுகாப்பில்,பாறைக்கடியில், மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில், வைக்கப்பட்டிருக்கும் கருவண்டிற்குள் மந்திரவாதியின் உயிர் இருப்பதாய் காட்சி வருமே? அதைப்போலத்தான் பயணங்களின் போது பணத்தையும் வெகுபாதுகாப்பாய் வைக்க விரும்புவார்! நானும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பமும் நான் அப்படியில்லாததால் மிகுந்த வருத்தங்களும் அவருக்கு உண்டு. இந்த முறையும் கிளம்பும்போது "ஏம்மா பர்ஸை ஒரு பையில் வைத்து எடுத்துப் போயேன்?" என்று சொல்லத்தான் செய்தார். நான்தான் கேட்கவில்லை.
என்றாலும் நீங்கள் இப்போது நினைப்பது போல நான் ஒன்றும் அத்தனை பொறுப்பற்றவளில்லை. கரூரில் ஒரு முறை, குளித்தலையில் ஒரு முறை அவ்வப்போது கண்விழித்து பர்ஸ் இருப்பதை உறுதி செய்துகொண்டுதானிருந்தேன். ஆனால் எப்போது அது தொலைந்தது என்பதைத்தான் கவனிக்கவில்லை.
மறுமுறை பெயர் தெரியாத ஊரில் கண்விழித்தபோது மடியில் வெறும் ஃபைல் மட்டுமேயிருந்தது. பக்கத்து சீட்டிலோ பின்னிரண்டு இருக்கைகளிலோ ஆட்கள் எவருமில்லை. 'மச்சானை பார்த்தீங்களா' ரீதியில் எவரிடமும் விசாரிக்கவும் வழியில்லை. சின்னதாய் குல்லாவும் சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்தகைக்குழந்தையுடன் பக்கத்தில் உக்காந்திருந்து எந்த நிறுத்தத்திலோ இறங்கிப் போயிருந்த பெண்ணை சந்தேகிக்க மனம் வரவில்லை. பேருந்தில் கீழே சாஷ்டாங்கமாய் விழாத குறையாய் எல்லாப்பக்கமும் தேடியாயிற்று இனி என்ன செய்ய?
நிலைமையின் தீவிரம் புரிய பதற்றம் கூடிக் கொண்டே போனது. கையில் ஒரு பைசா இல்லை.. திருச்சியில் தெரிந்தவர்கள் எவருமில்லை.. அங்கு போய் சேர்ந்த பின்பாய் திரும்பி வரவும் வழியில்லை. எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. குறைந்தபட்சமாய் 'மொபைல் தொலைந்து போய்விட்டது' என்பதையாவது அவசரமாய் யாருக்கேனும் போன் செய்து சொல்ல விரும்பினேன் நான். அதற்கும் வழியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாய் எனது மற்றும் எங்கள் இல்ல தொலைபேசி எண் தவிர்த்து மற்ற எவரின் எண்ணும் நினைவிலில்லை.
கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையில் யாருக்கு எப்படி என் நிலைமையை விளக்கி எவரிடம் உதவி கேட்டு எப்போது ஊர் போய்ச் சேர்வதென தவித்துக் கொண்டிருக்கையில் எப்போதோ தம்பி சொன்ன அறிவுரையும் நியாபகம் வந்தது.. 'எப்போதும் பணத்தை ஒரே இடத்தில் வைத்திருக்காதே' என்றான் ஒருமுறை. ஒருவேளை இந்த அதிகார மையம், குவியம், விளிம்பு பற்றில்லாம் இவனும் படித்திருப்பானோஎன்று அசந்தர்ப்பமாய் நினைத்துக் கொண்டேன். என்றாலும் அவன் பேச்சை மதித்துத்தான் பர்ஸின் வெளிப்பக்க அறையில்170 ரூபாயையும் உள்ளறையில் 500 ரூபாய் தாளையும் பிரித்து வைத்திருந்தேன்.. இப்படியாகுமென கனவிலும் நினைக்கவில்லை.
ஒரு வழியாய் யோசித்து, திருச்சியில் இறங்கியதும் கருணை ததும்பும் முகம் கொண்டகடைக்காரர் எவரேனும் கண்ணில் பட்டால் அவரிடம் நிலைமையை விளக்கி ஒரு போன் செய்துவிட்டு, மீட்க எவரேனும் வரும் வரை அடகுப் பொருள் போல கடையிலேயே அமர்ந்துகொள்வதென தீர்மானித்தேன். ஆனாலும் யாருக்குப் போன் செய்வதென்ற குழப்பம் நீடித்தது.
முதல் காரியமாய் எனக்கே போன் செய்யலாம்... அதாவது என் எண்ணுக்கு! மறுமுனையில் எடுப்பார்களா? நிச்சயமாய் எடுப்பார்கள்.. 'தொலைந்து போன பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும்..மாற்று இனத்தார் தானே வந்து உதவுவர்' என்று சென்ற மாத ராசிபலனில் போட்டிருந்ததே? சென்ற மாத ராசிபலன் இந்த மாதம் வரை நீடிக்குமா? மாற்று இனத்தவர் என்றால் யார்? தெலுங்கர்கள், கன்னடர்களா? கிறிஸ்துவர்.. இஸ்லாமியர் போன்றவர்களா? யாராயிருந்தால் என்ன போனை எடுத்தால் போதும்.. எடுத்ததும் என்ன பேசுவது? 'ஐயா உங்களிடமிருக்கும் அலைபேசி உண்மையில் என்னுடையது. அதை தாங்கள் என்னிடம்...'என்று பணிவுடனா? அல்லது அபிஅப்பா போல..'டாய்ய்ய்.. நான் யாருன்னு தெரியுமா? ஈரோடு சூரம்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் என்ஒன்னு விட்ட அக்கா வூட்டுக்காரருக்கு செம தோஸ்து' என மிரட்டலாகவா? சூரம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, திருச்சி திருடர்கள் பயப்படுவார்களா என்று வேறு சந்தேகமாயிருந்தது.
இழப்பின் அடர்த்தியை விடவும் இனி செய்யக்கூடியது என்ன என்பதே மிகவும் அலைக்கழித்தது.. "எக்ஸ்க்யூஸ் மீ... மிஸ் இது உங்க பர்ஸா? இங்க கீழ கிடந்தது" என்று காக்க காக்க சூர்யா போல சுமாரான இளைஞர் யாரேனும் சொல்லக்கூடுமா என்றும் கூட எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. சோர்ந்து முன்னும் பின்னுமாய் பேருந்திற்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கையில்.. என் இருக்கைக்கு 3 இருக்கைகள் பின்னால் அமர்ந்திருந்த பெரியவர் 'பாப்பா இதையா தேடறே' என்றார். ஆஹா! அவர் கையில் என்னைப் போலவே சாதுவான தோற்றத்துடன் இருந்தது என் பர்ஸ்! மடியிலிருந்து கீழே விழுந்து 3 இருக்கைகளுக்கு அது தத்தி தத்தி போகும் வரை என்னை உறக்கத்திலேயே ஆழ்த்தியிருந்த நித்திராதேவியை அவசர அவசரமாய் சபித்தேன். பர்ஸைப் பார்க்கப் பார்க்க,
"தேடினென்! கண்டனென்! தேவியே! என
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன்"
அசோகவனத்தில் சீதையை பார்த்து மகிழ்ந்த அனுமனைப் போல உள்ளுக்குள் உவகை பொங்கியது!
ஆனால் அவர் அதை என்னிடம் தருவதாய் தெரியவில்லை. அவர் கையில் என் அடையாள அட்டை இருந்தது.. என்னையும் அதையும் மாற்றி மாற்றிப் பார்த்து 'இது நீயா?' என்றார் சந்தேகமாய்.. அதில் 'நிச்சயமாய் நீயில்லை'என்ற உறுதிப் பொருள் தொனித்தது. 'சத்தியமா நான் தாங்க.. போட்டோ 5 வருஷம் முன்ன எடுத்தது' என்றேன் சோகமாய். அரைமனதோடு என் கையில் கொடுத்தார். நிச்சயமாய் சொல்கிறேன் இதற்கு முன்பாய் அந்த பர்ஸை அத்தனை அன்புடனும் வாஞ்சையுடனும் நான் பார்த்ததேயில்லை.
"நன்றிங்க... ரொம்ப நன்றி" என்றேன் திரும்பத் திரும்ப. அப்போது மனதிலிருந்த நன்றியைச் சொல்வதற்கு இந்த வார்த்தை போதுமானதாய் இல்லையென தோன்றியது.
பின் கோவில் பிரசாதம் போல பயபக்தியாய் அதை எடுத்துக் கொண்டு என் இருக்கைக்கு திரும்பினேன்.
"தொலைந்து போனது
நீ மட்டுமில்லை
நானும் தான்"
இப்படி ஏதாவது பர்ஸைப்பற்றி தலைப்பில்லாமல் கவிதை எழுதலாமா என்று கூட தோன்றியது.
அந்தப் பெரியவரும் பின்னாலேயே வந்து என் முகம் பார்த்துப் பேச வசதியாய் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
"நானா இருக்கங்காட்டியும் எடுத்துக் கொடுத்தேன்.. வேற எவனாச்சுமா இருந்தா லவட்டிகிட்டு போயிருப்பான்"தனக்குள் பேசுவது போல தன்னை தானே மெச்சிக் கொண்டார். 'ஆமாங்க' என்றேன்.
திடீரென ஆவேசமாகி... "இது தான் ஃப்ர்ஸ்ட் அண்டு லாஸ்ட்டு டைமா இருக்கனும்.. இதை நீ தொலைக்கறது" என்றார் கோபமாய்.
"லாஸ்ட் டைம்னு வேணா சொல்லுங்க.. நான் இதை தொலைக்கறது இதான் ஃப்ர்ஸ்ட் டைம் னு உங்களுக்கு எப்டி தெரியும்?" துடுக்குத்தனமாய் கேள்வி வந்து நின்றது உதட்டில். "பாதகி.. எதையாவது பேசி நன்றி கொன்றவளாகி விடாதே" என உள்ளிருந்து ஒரு காயத்ரி அதட்டியதால் பணிவாய் "சரிங்க" என்றேன்.
அவர் கொஞ்சம் சாந்தமானது போலிருந்தது.. சற்று நேரம் கழித்து "படிக்கறாப்லயா?" என்றார். எனக்கு குழப்பமாயிருந்தது. ஆமாம் என்றால் எத்தனாவது என்று கேட்பாரோ? பி.ஹெச்.டி யை எத்தனாவது என்று சொல்வது? 12+ 3+ 2+... வருடங்களை மனசுக்குள் கூட்டிக் கொண்டே ஆமாம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் குத்துமதிப்பாய் தலையசைத்தேன்.
"ம்ம்.. படிச்சாத்தான் இந்த காலத்துல பொழைக்க முடியும்" வழக்கம்போல தனக்குத்தானே பேசிக்கொண்டே "ஏம்மா நீ ....... சாதிப்பொண்ணா?" என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. சாதியெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகிறார் இவர்? லேசாய் கடுப்பாகி' இல்ல' என்றேன் சுருக்கமாய்... 'பின்ன?' என்றார் அவரும் சுருக்கமாய்.
எனக்கு நன்றியுணர்ச்சி மங்கிக் கொண்டே வர எரிச்சல் தலை தூக்கியது. இதுக்கு இந்த பர்ஸ் தொலைஞ்சே போயிருக்கலாம் போல. வேறு வழியில்லாமல் பதில் சொன்னேன். இத்தோடு விட்டுவிடமாட்டாரா என்று ஏக்கமாயிருந்தது.
அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் "அது சரி.. இப்ப எங்க போறாப்ல" என்று கேள்வியைத் தொடர்ந்தார். பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. 'ஈரோட்டுக்கு' என்றேன். "ஈரோடா? பஸ் திருச்சிக்கில்ல போகுது?" அதிர்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. "ம்ம்.. ஈரோட்டுக்கு போய்ட்டு திருச்சிக்கு போய்ட்டிருக்கேன்" என்றேன் பஞ்சதந்திரம் பாணியில்! என் கிண்டல் அவருக்கு புரிந்ததாய் தெரியவில்லை. குழப்பமாய் விழித்தார். பின்னும் சளைக்காமல் "ஈரோட்ல தான் வீடா? எந்த ஏரியா?" என்றார்.
நான் நொந்து போனேன்.. அப்பெரியவருக்கு எதேனும் கொள்ளைக் கூட்டத்துடனோ கடத்தல் கும்பலுடனோ தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் தெரிந்தபோதும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 20 கி.மீ தள்ளி இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன்.. "அங்க எங்க?" என்று கேட்பார் என்று முன்கூட்டியே யோசித்ததால் 'பிள்ளையார் கோவில் பக்கத்துல' என்றும் சொல்லிவைத்தேன். பிள்ளையார் கோவில்கள் இல்லாத தெருக்கள் தமிழகத்தில் மிகக்குறைவு தானே?
எதோ யோசித்தவர், அந்த பகுதியிலிருக்கும் ச.ம.உ அலுவலகத்திற்கு (MLA ஆபீஸ்!) எதிர்ச்சந்தில் 3 வதாக இருக்கும் பொட்டிக்கடையை தவிர்த்து விட்டு எண்ணினால் 8 வதாக இருக்கும் ஓட்டு வீட்டில் தான் தன் மூத்த மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதாக உபதகவல் வேறு சொன்னார். நல்லவேளையாய் அவர் அடுத்த கேள்விக்கு தயாராவதற்குள் திருச்சி வந்திருந்தது. அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு பெருமூச்சுடன் விலகி நடந்தேன்.
மேலும் இனிமேல் பர்ஸை தொலைப்பதாயிருந்தால் எவருமே இல்லாத இடத்தில் தொலைக்க வேண்டும்..திரும்பிப் போய் மீண்டும் நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டேன்!!

Wednesday, October 24, 2007
மக்கா.. என்னை யாரும் மறக்கல இல்ல?
நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

பி.கு 1: ஜி3 சகவாச தோஷத்தால 'டுபுக்கு சார்' பதிவில CP டெக்னாலஜி யூஸ் பண்ணி நான் போஸ்ட் போட்டிருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசப்படாது! ஏன்னா இது நானே என் பொற்கரங்களால டைப்பினது!!
பி.கு 2: நான் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கண்ணு மண்ணு தெரியாம வேலை செய்யற அளவுக்கு 'ரொம்ம்ம்ப பிசி' தான்னாலும் போஸ்ட் போடலன்னா குசும்பனை மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதாலயும், நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டே இந்த பதிவை போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்! நன்றி!

Tuesday, September 18, 2007
பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?
தலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன்.
"பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா? அது வர்றத எப்பிடி தெரிஞ்சிக்கறது?"
ஏன் கேட்கறேன்னா... எனக்கு பேய், பிசாசுன்னா ரொம்ம்ம்ம்ப பயம்ங்க. நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டும்போது "ரெண்டுகண்ணன்" வர்றான்.. சீக்கிரம் சாப்பிட்ரு" ன்னு டி.டி.எஸ் எபக்ட்ல சொல்லி பயமுறுத்துவாங்க. நானும் ஏதோ பேயோ பிசாசோன்னு பயந்தடிச்சு மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன். ரொம்ப நாள் கழிச்சி திடீர்னு ஞானோதயம் (ஒளிவட்டம்?) வந்து கோபமா அம்மாட்ட போய் "ஏம்மா எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தானே இரூக்கு? அத சொல்லி பயமுறுத்தியிருக்கீங்க.. நானும் பயந்திருக்கேன்.. இது என்ன கொடுமை? இது நியாயமா அடுக்குமா" ன்னு நியாயம் கேட்டேன். அம்மா ரொம்ப சாவதானமா "எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தான்.. ஆனா உனக்குதான் ரெண்டுன்னா எத்தனைன்னு தெரியாதே" ன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிட்டாங்க.
இவங்க தான் இப்படின்னா, எங்க பாட்டி வீட்டுக்கு போகும்போது ஒரு சித்தி சாப்பாடு ஊட்டுவாங்க.. என்னை சாப்பிட வைக்க இன்னொரு சித்தி முழுசா கறுப்பு பெட்ஷீட் போர்த்திகிட்டு திடீர்னு எங்காச்சும் இருந்து "ஊஊஊஊ ஹா ஹ்ஹா" ன்னு கத்திகிட்டே குதிப்பாங்க. "பச்சப்புள்ள.. எப்படி பயப்படும்? இப்படியெல்லாம் பண்ணினா உள்ள இருக்கற இன்னொரு ஜான்சிராணி (ஹிஹி நாந்தான்!) வளராமயே போய்டுவாளே?" அப்படின்னெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படறதில்ல..
ஆனா நான் இதுக்கெல்லாம் அசரல.. வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை" ன்னு பட்டம் தரலாமான்னு கார்ப்பரேஷன்ல இருந்து செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வரை யோசிச்சாங்க.. நாந்தான் பெருந்தன்மையா "அதெல்லாம் வேணாம்.. 'பரம் வீர் சக்ரா' மட்டும் குடுத்துடுங்க போதும்" னு சொல்லி அவங்க ஆர்வத்தை தணிச்சிட்டேன்.
எலி மாதிரியே புலியையும் தூக்கற ஐடியா கூட இருந்துச்சு.. "அது எலி மாதிரி கிடையாது. உசிரோட இருந்தா கடிச்சிரும்.. செத்துப் போச்சின்னா ரொம்ப வெயிட்டா இருக்கும்" னு தகவல் தெரிஞ்சதால அந்த ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்.
சரி அது இருக்கட்டும், சொல்ல வந்ததயே மறந்துட்டேன் பாருங்க. அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன். முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு போய்டுவேன். அங்க எந்த வேலையும் செய்யத் தேவை இல்ல.. ஜாலியா இருக்கலாம்! சாப்பிட்டு வெளில கிளம்பினா எங்க வேணா ஊர் சுத்தலாம்.. அவ்ளோ சின்ன ஊர்ல எங்கயும் நான் தொலைஞ்சு போய்ட முடியாதுன்ற தைரியத்துல சாயந்திரம் வரைக்கும் தேட மாட்டாங்க.
அப்டி ஒரு நாள், என்கூட 3 வருஷம் ஒண்ணா படிச்ச ஃப்ரண்ட் மைதிலிய தேடிட்டு போனேன். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா "நண்பியே.. நண்ண்ண்பியே.. நன்றி சொல்வேன் நண்பியே" ன்னு பாடிகிட்டு ஊர் முழுக்க சுத்திட்டிருந்தோம். உச்சி வெயில்ல அலைஞ்சி களைச்சு ரொம்ப பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நடக்கவே முடில. அப்பதான் அந்தப்பக்கமா ஒரு கோவில் கண்ல பட்டுச்சு..
"ஹேய் மைத்தி.. அங்க போனா எதுனா பிரசாதம் தருவாங்க.. அட்லீஸ்ட் சுண்டலாச்சும் தருவாங்க. சாப்டு தெம்பா வீட்டுக்கு போய்டலாம்" னு நான்
சொன்னேன். என் அறிவோட 'தீட்சண்யத்தைப்' பாத்து ஆனந்தத்துல அவளுக்கு கண்ணே கலங்கிடுச்சி.. சிவாஜி கணேசன் மாதிரி குரல் தழுதழுக்க "நீ இன்னும் மாறவே இல்லயாம்மா? மாறவே இல்லியா?" னு ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா ஆய்ட்டா!
சரின்னு ரெண்டு பேரும் கோவிலுக்கு போனோம். கோவில் முன்னால பெரிசா ரெண்டு அரச மரம், வேப்ப மரமெல்லாம் இருந்திச்சு.. அதில நிறைய ஆணி வேற அடிச்சு வெச்சுருக்காங்க.. ஆணி அடிக்க வேற இடமா இல்ல? இந்த லூசுப் பயப்புள்ளகளுக்கு ன்னு யோச்சிட்டே உள்ள போனா ரெண்டு க்யூ நின்னுச்சு. ஒரு க்யூவுல நிறைய கூட்டம்.. இன்னொன்னுல ஒரு 5 பேரு நின்னாங்க. சின்னக் க்யூவுல நின்னா சீக்கிரம் பிரசாதம் வாங்கிக்கலாம்னு
ரெண்டு பேரும் அடிச்சி பிடிச்சி ஓடிப்போய் நின்னோம்.
க்யூவுல எனக்கு முன்னால செவப்பு தாவணி போட்டுகிட்டு அழகா ஒரு பொண்ணு (அக்கா!) நின்னுகிட்டிருந்திச்சு. தல மட்டும் ரொம்ப கலைஞ்சிருந்துச்சு. அந்தக்கா திரும்பி எங்கள பாத்து ரொம்ப சினேகமா சிரிச்சிது. நானும் "ச்சே.. கிராமம்னா கிராமம் தான்..என்னா எளிமையான மனுஷங்க" ன்னு சந்தோசப்பட்டுகிட்டே பதிலுக்கு சிரிச்சி வெச்சேன். உடனே அந்தக்கா திரும்பி.. என்கிட்ட பேச ஆரம்பிச்சிடுச்சு.
"உன் பேரு என்ன?"
"பி.காயத்ரி... இவ எல். மைதிலி"
" எத்தனாவது படிக்கறே?
"8த் ஸ்டேண்டர்ட் பி"
"ஓ.. எந்தூரு நீங்க?"
"இவ இங்க பக்கத்துல தான் இருக்கா.. நான் ஈரோட்ல இருந்து லீவுக்கு வந்திருக்கேன், உங்களுக்கு தெரியாதா என்னய? திருச்செங்கோட்டார் வீட்டு மொதப் பேத்தி"
என்னமோ நாட்டாமை பொண்ணே நாந்தான்ற மாதிரி நான் கேக்கறேன்.. அது சுரத்தே இல்லாம..
"ஓஹோ.." அப்படின்னுச்சு.
இந்த ஊர்ல நமக்கு பப்ளிசிட்டி போதல போலிருக்கேன்னு நான் ஃபீல் பண்ணிட்டிருக்கும் போதே,
"ஈரோட்ல எங்க இருக்கீங்க?" ன்னு கேட்டுச்சு!
நான் ரொம்ப குஷியாகி..
"ஹை ஈரோடு வந்திருக்கீங்களா நீங்க? அங்க காரைவாய்க்கால் பக்கத்துல தான் குடியிருக்கோம், ராதாகிருஷ்ணன் வீதி, ஏழாம் நம்பர் வீடு,
பச்ச பெயிண்ட் அடிச்சிருக்கும், வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"
ன்னு லேண்ட் மார்க்கெல்லாம் சொல்லி அட்ரெஸ் சொல்லிட்ருக்கும் போது எங்க க்யூவுல இருந்தவங்க எல்லாம் முன்னால போய் ஒரு மண்டபத்துல
வரிசையா தரைல உக்காந்துகிட்டாங்க. நாங்களும் பின்னாடியே போனோம். நான் ரொம்ப பிரியமா செவப்பு தாவணி அக்கா பக்கத்துல உக்காந்துகிட்டேன்.
ஒரு அம்மா வந்து எல்லாருக்கும் ஒரு தட்டும் எலுமிச்சம் பழமும் குடுத்திட்டு போனாங்க.
"ஆஹா இம்புட்டு நல்லவங்களா இவிங்க? பூஜை பண்றதுக்கு முன்னாடியே பிரசாதம் தர்றாங்களே? அதும் தட்டுல போடுவாய்ங்க போலிருக்கு.. ஆமா என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது கூட இருக்கறவங்க எல்லாம் தட்டுல எலுமிச்சம்பழத்தை வெச்சு தட்டத் தூக்கி தலை மேல வெச்சிகிட்டாங்க. எங்களுக்கு ஒரு எழவும் புரியல.. இப்படி பண்ணினா தான் சாப்பாடு போடுவாங்க போலன்னு நாங்களும் தட்டத் தூக்கி தலைல வெச்சிட்டு 'தேமே' ன்னு உக்காந்திருந்தோம்.
அப்புறம் ஒரு தட்டு பூரா விபூதிய எடுத்துகிட்டு, கைல வேப்பிலை வெச்சிகிட்டு ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒரு பூசாரி வந்தார். வந்தவரு
என் பக்கத்துல தட்ட கீழ வெச்சிட்டு கைல உடுக்கை எடுத்துகிட்டு திடீர்னு சத்தமா " ஏய்ய்ய்ய் கருப்புசாமி முனுசாமி.." ன்னு வரிசையா சாமி பேர்
சொல்லி "வந்துடு வந்துடு" ன்னு ஆடிகிட்டே பாட ஆரம்பிச்சிட்டார். திடீர்னு உடுக்கை அடிச்சதுல மைதிலி 'விருக்'னு பயந்துட்டா. அவ தலைல
இருந்த தட்டு 'டமால்' னு கீழ விழுந்துடுச்சு. நானும் பயத்துல தான் இருந்தேன்னாலும் அவ மூஞ்சிய பாத்து "ஹெஹ்ஹே" ன்னு சத்தமா சிரிச்சிட்டேன்.
உடனே பூசாரி உடுக்கை அடிக்கறத நிறுத்திட்டு என் பக்கத்துல வந்து என் கண்ணை உத்த்த்த்துப் பாத்து.. "யாரு நீ? சொல்லு யாரு நீ" ன்றாரு.
நான் நொந்து போய்ட்டேன். "யோவ்.. என்ன பயோடேட்டா சொன்னா தான் பிரசாதம் தருவீங்களா?" ன்னு உள்ளார கொந்தளிக்கறேன்... ஆனா வாய்ல இருந்து வார்த்தையே வரல.
நான் பேசலன்னதும் அவரு இன்னும் சத்தமா உடுக்கை அடிச்சிட்டு நாராசமா பாட ஆரம்பிச்சிட்டாரு. அப்ப தான்.. பக்கத்துல "ஹ்ஹ்ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்ம்" னு
யாரோ உறுமற மாதிரி சத்தம். திரும்பிப்பாத்தா செவப்பு தாவணி அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ப கோபமா பூசாரிய பாத்து மொறச்சிட்டிருக்கு. பூசாரி உடனே
என்னை விட்டு அக்கா பக்கத்துல ஷிப்ட் ஆகி.. "யேய்.. யாரு நீ? சொல்லு யாரு நீ?" ன்றாரு. (இந்தாளுக்கு வேற வேலயே இல்லியா?)
உடனே அந்தக்கா.. " நானா?.. நாஆஆனா?" ன்னு கத்திட்டு முன்னயும் பின்னயுமா சாமியாடுச்சு. அப்புறம் "நானு செல்வராசு.. மேலத்தெரு செல்வராசு" ன்னு ஆம்பளக் குரல்ல அட்ரெஸ் சொல்லுது.. யம்மே! எனக்கு கொல நடுங்கிடுச்சு.
அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? இந்த புள்ளய எங்க வெச்சி புடிச்சே" ன்னு டீடெய்லா விசாரிக்க, அதுவும்
"நானு புளியமரத்தாண்ட இருந்தேன்.. இந்த புள்ள உச்சில கறிக்கொழம்பு கொண்டு போச்சி.. ஏறிகிட்டேன்" ன்னு பொறுப்பா பதில் சொல்லுது.
அடுத்தாப்பல "சரி.. நீ போய்டனும்.. என்ன வாங்கிட்டு போறேன்னு சொல்லு? நாட்டுக்கோழியும் நாலுகட்டு பீடியும் போதுமா?" ன்னு டீலிங் பேசறாரு
பூசாரி. அது "இல்ல.. சாராயம் குடு.. சாராயம் குடு" ன்னு கத்துது.
நான் வெலவெலத்து திரும்பிப் பாத்தா மைதிலிய ஆளயே காணோம்.. பாவி.. எப்ப எஸ்கேப் ஆனான்னு தெரியல.. எனக்குள்ள இருந்த ஜான்சிராணியும்
பர்மனெண்டா லீவ் போட்டுட்டு போய்ட்டா. அவ்ளோ தான்.. நானும் 'கபால்'னு கிளம்பி கண்ணு மண்ணு தெரியாம ஓடறேன். பின்னாடியே யாரோ துரத்தறாப்பல வேற இருக்கேன்னு பயந்து நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "ஏய் நில்லுடி, நில்லுடி" ன்னு அந்த துரோகி மைதிலியோட குரல் கேட்டுச்சு. கோவில் பக்கத்துல ஒளிஞ்சிருந்து நான் ஓடும் போது அவ தான் பின்னால ஓடி வந்தாளாம். நாசமா போக..
வீட்டுக்கு வந்தும் நான் யார்கிட்டயும் எதும் மூச்சு விடல. அடுத்த நாளே "ச்சே... கிராமம் ரொம்ப போர் அடிக்குது" ன்னு பந்தா பண்ணிகிட்டு
ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்.
வீட்டுக்கு வந்து, "ஆத்தி அவ்ளோ நேரம் பேய்கிட்டயா பேசிட்டிருந்தோம்? அட்ரஸ் எல்லாம் சொன்னமே? முருங்கை மரம் இருக்குன்னு வேற சொல்லிட்டோமே? ரொம்ம்ப முக்கியமா இதெல்லாம்? அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்துடுமோ" ன்னு ராத்திரி பகலா ஷிப்ட் போட்டு பயப்பட்டுகிட்டே இருந்தேன்.
ரெண்டு நாள் கழிச்சு அக்கம் பக்கத்து ஃப்ரண்ட்ஸ்கிட்ட இந்த பிரச்சினை பத்தி சொல்லி டிஸ்கஸ் பண்ணினேன். உடனே எல்லாரும் "பேய்க்கு வெள்ளைப் பூண்டுன்னா பயம்.. இல்லல்ல.. வெங்காயம்னா தான் பயம்" னு ஆளாளுக்கு பேயறிவுத் தகவல்களா சொன்னாங்க.
நான் ரொம்ப குழம்பிப் போய்.. எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்ச நாள் ஸ்கூல் பேக்ல வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..
அப்புறம் ஜான்சிராணி மறுபடி லீவ் முடிஞ்சி வந்துட்டதாலயும் நாங்க புதுசா குடி மாறுன வீட்டோட அட்ரெஸ் மிஸ்டர். செல்வராசுக்கு
தெரியாதுன்ற தைரியத்துலயும் அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்!

......ரமேஷ் அண்ணாவிற்கு
Thursday, August 23, 2007
குரு பார்த்தால் கோடி நன்மையா?
நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு பார்த்தால் கோடி நன்மை'ன்னும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன... இப்டியெல்லாம் எழுத நானென்ன டிவில ராசிபலனா சொல்றேன்?
'குரு' ன்னு ஒரு படம்ங்க. கமல், ஸ்ரீதேவி நடிச்சது இல்ல. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிச்சு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்னு நமக்கு பிடிச்ச காம்பினேஷன்ல போன வருஷம் வந்த படம். அதை நான் பார்த்தது என் கலையுலக வரலாற்றுலயே மறக்க முடியாத சம்பவமா அமைஞ்சுது! (படம் பாக்கறதும் கலைச்சேவைதானே?) அதத்தான் சொல்லப் போறேன் இங்க!
அப்போ நான் சேலத்துல ஹாஸ்டல்ல தங்கி கலைச்சேவையோட சேர்த்து தமிழ்த்துறை விரிவுரையாளரா 'கல்விப்பணியும்' செஞ்சுட்டிருந்தேன். (ஹிஹி) ஹாஸ்டல்ல ஆனந்தி ஆனந்தின்னு (2 பேர் இல்ல) 'பட்டாணி' சைஸ்ல (அவ்ளோ தான் உயரம்) ஒரு ரூம் மேட். என்னை மாதிரி அமைதி எல்லாம் இல்ல (?!) ... வாயாடின்னா வாயாடி அப்படி ஒரு வாயாடி. வழக்கமா என்னை ஹாஸ்டல்ல சேர்த்தாங்கன்னா என்னை விட்டுட்டு அம்மாப்பா வீடு போறதுக்குள்ள பிரிவுத்துயர் தாங்காம பின்னாடியே அடுத்த பஸ்ல கிளம்பி நானும் வீட்டுக்கு போய்டுவேன்! அந்தளவுக்கு ஹோம் சிக் வரும் எனக்கு.
ஆனா இங்க சேர்ந்த அன்னிக்கு அவ பேச ஆரம்பிச்சதுல பிரிவாவது, துயராவது.. இந்த கொடுமைல இருந்து தப்பிச்சா போதும்னு பெட்ஷீட் போர்த்திட்டு தூங்கிட்டேன்! அப்படியாப்பட்ட நல்ல பொண்ணு அது. ஒரு நாள்ல 3 மணி நேரம் காலேஜ் போறதும் (அதுல ஒன்னரை மணி நேரம் ட்ராவல்!) 16 மணி நேரம் தூங்கறதும், மீதி 5 மணி நேரமும் என்னை கலாய்க்கறதும் அவளோட அன்றாட கடமைகளா இருந்துது. ஆனா அவகிட்ட ஒரு நல்ல கொள்கையும் இருந்துச்சு... எந்த படம் வந்தாலும் உடனே பாத்துடுவா. ''நமக்காக கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கறாங்க.. அதை முதல் நாளே பாக்கறது தான் அவங்களுக்கு நாம பண்ற முதல் மரியாதை''ன்னு கண்கலங்க உணர்ச்சிபூர்வமா சொல்லுவா! அதை கேட்டு கேட்டு எனக்கும் அது சரிதானேன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.
நானும் இந்த கொள்கை முடிவுக்கு மாறினப்போதான் அந்த 'குரு' படம் ரிலீஸ் ஆச்சு. நாங்களும் இன்னிக்கு வரும் நாளைக்கு வரும்ன்னு காத்து கிடந்ததால படம் வந்ததும் அன்னிக்கே பாத்துடறதுன்னு கிளம்பினோம். ஈவ்னிங் ஷோ.. படம் முடிஞ்சு வர்றதுக்கு 9 மணி ஆகும். ஹாஸ்டல் 8.30 வரை தான் திறந்திருக்கும்.. என்ன செய்றதுன்னு யோசிச்சி.. வெள்ளந்தியான எங்க வார்டன் அக்காகிட்ட போய்.. "எனக்கு காலேஜ்ல பிராக்டிகல் (தமிழுக்கு?!) ஒர்க் இருக்கு.. அது முடிஞ்சு மீட்டிங் இருக்கு.. 9 க்குள்ள வந்துடுவேன்" னு நானும்... "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தறேன்னு வேண்டியிருக்கேன்(!) நாமக்கல் போறேன்"னு அவளும் பர்மிஷன் வாங்கினோம்.
ஈவ்னிங் நான் வர்றதுக்குள்ள அந்த 'பட்டாணி' ஒரு தடவை தியேட்டருக்கே போய் என்னா நிலவரம்னு துப்பறிஞ்சிட்டு வேற வந்திருக்கு! ஒரு வழியா ஈவ்னிங் ஊருக்கு முன்னால கிளம்பிப் போய் மல்டி ப்ளக்ஸ் வாசல்ல நின்னுகிட்டோம். அவ போய் டிக்கட் வாங்கிட்டு வந்தா.. வாங்கிப் பாத்தா பயங்கர ஷாக்.. டிக்கெட் ஹிந்தில இருக்கு. மணிரத்னம் அந்த படத்தை தமிழ், ஹிந்தி ரெண்டு மொழிலயும் எடுத்து ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ணிருந்தார்.. எனக்கு வேற ஹிந்தில.. "ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும். "என்னாடி இது" ன்னு நான் டென்ஷன் ஆனா.. அவ ரொம்ப கூலா "ஏய் நான் விசாரிச்சுட்டேன்.. மேட்னிஷோ மட்டும் தான் ஹிந்தி.. இது மத்யானம் மிஞ்சிப் போன டிக்கட்டா இருக்கும்"ன்றா. "அடி ஆத்தி.. அப்படி கூடவா பண்ணுவாங்க"ன்னு நானும் ஆச்சரியப்பட்டுகிட்டு நின்னேன். எங்க பாத்தாலும் ஒரே சேட்ஜிங்களா இருக்காங்களேன்னு டவுட்டு வேற.
ஒரு வழியா உள்ளார போயி செட்டிலானோம். அக்கம்பக்க சீட்காரங்ககிட்ட விசாரிச்சா எல்லாரும் ஹிந்திப்படம்ங்கிறாங்க, இவளா "தமிழ்தான்! நான் விசாரிச்சுட்டேன்"னு சாதிக்கிறா. சரி படம் போட்டா தெரிஞ்சிடப்போகுதுன்னு ஒரே த்ரில்லா பாத்திட்டிருந்தோம். படம் ஆரம்பிச்சதும் பாத்தா .. டைட்டில் கார்டெல்லாம் இங்கிலீஷ்ல வருது. :( அப்புறம் ஒரு பாட்டு வந்துச்சி... அது தமிழா, ஹிந்தியா, இங்கிலீஷான்னே புரியல. ரொம்ப நேரமா கஷ்டப்பட்டு கேட்ட பின்னாடி "நான் ச்ச்சீனியில் செய்த கடல்ல்ல்" னு என்னமோ ஒரு வரி புரிஞ்சிது. ஹை.. தமிழ்தான் போல! டயலாக்கும் இப்டி கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சாகூட போதும்"னு நாங்க சைலண்ட் ஆய்ட்டோம். வந்திருந்த ஹிந்திக்காரங்களுக்கும் அது என்ன மொழிப்பாட்டுன்னு கன்ஃப்யூஸன் போல! அவங்களும் சமத்தா பேசாம உக்காந்திருந்தாங்க! (அதுக்கு மல்லிகா ஷெராவத்தும் காரணமா இருந்திருக்கலாம்!)
அடுத்த சீன்ல "திருநெல்வேலி ஜில்லா" ன்னு தமிழ்ல எதோ ஊர்ப் பேர் வந்துச்சு. அவ்ளோ தான்! எல்லாரும் 'டபார்'னு எந்திரிச்சி கச்சா முச்சான்னு என்னமோ கத்தறாங்க. "ஏய் மன்னாரு படத்த ஹிந்தில போடுடா"ன்னு கத்தினாங்க போலருக்கு. எதாச்சும் புரிஞ்சாத்தானே! உடனே படம் நின்னு போச்சி. உள்ளார இருந்து நாட்டாம கணக்கா ஒருத்தர் வந்து என்னமோ பஞ்சாயத்து பண்ணினார். அவர் போனதும் மறுபடி ஃபர்ஸ்ட்ல இருந்து படம் போட்டாங்க. மறுபடி இங்கிலீஷ் டைட்டில், அதே பாட்டு, பாட்டு முடிஞ்சதும் ... ஹிஹி! மறுபடி "திருநெல்வேலி ஜில்லா!" உடனே மறுபடி எல்லாரும் ஜனகன மண பாடறாப்பல எந்திரிச்சி நின்னுகிட்டு கத்தறாங்க. நாங்க நொந்து போய் படத்தை 'பார்ஸி' மொழில போட்டாலும் பாக்கற ஸ்டேஜுக்கு வந்துட்டோம்.
திடீர்னு மறுபடி படம் நின்னு போய் தியேட்டர் ஒரே சைலண்ட்டா ஆய்டுச்சி. நாட்டாமை வந்து எட்டிப்பாத்துட்டு போனார். அப்புறம் திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து படம் ஓடுது. இந்த முறை படத்துல சத்தமே இல்ல!! "தமிழா ஹிந்தியான்னு என்னாத்துக்கு பிரச்சினை? எல்லாரும் பாக்கட்டும்"னு நல்ல மனசோட ஆடியோவயே கட் பண்ணிட்டாங்க போல!! எல்லாருக்கும் செம டென்ஷனாய்டுச்சி. ஆனந்தியும் எந்திரிச்சு நின்னு கத்தினா. நின்னாலும் உக்காந்த மாதிரியே இருந்ததால சேர் மேலெல்லாம் ஏறிநின்னு கத்தினா பாவம்!
இந்த ரோதனை பத்தாதுன்னு ஒவ்வொரு முறை படம் நிறுத்தினப்பவும் பக்கத்து சீட்டு சேட்டம்மா என்கிட்ட "க்யா ஹுவா.. க்யா ஹூவா" ன்னு இம்சை பண்ணிட்டே இருக்குது. நானும்
"ஹாங் ஜி" ..
"ஜி ஹாங்"...
"அச்சா அச்சா" ...
"குச் குச் ஹோத்தா ஹை" ன்னு
தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தையும் சொல்லிப்பாத்தேன். அந்தம்மா அடங்கறாப்பலயே இல்ல. நானும் எவ்ளோ நேரம்தான் ஹிந்தி புரிஞ்ச மாதிரியே நடிக்கறது? அழுவாச்சியா வருது எனக்கு...
கடைசியா அந்த நாட்டாமை மறுபடி வந்து "தமிழ்ல பாக்கறவங்க மட்டும் இருங்க.. மத்தவங்க எல்லாம் பணத்தை திருப்பி வாங்கிக்குங்க.. படம் தமிழ்ல தான் ஓடும்" ன்னு தீர்ப்பு வழங்கினார்! கேஸ் முடியவே மணி 7.20 ஆய்டுச்சு... இருந்தாலும் "ஆஹா.. எப்பவும் நீதி தேவதை நம்ம பக்கம்தான் இருக்கா போல" ன்னு சந்தோஷமாய்டுச்சி எங்களுக்கு. ஹிந்திக்காரங்க எல்லாம் சோகமா திரும்பிப் போறத பாத்து எளக்காரமா "உங்கள எல்லாம் பாத்தா பாவமா இருக்கு" ன்னு டயலாக் விட்டுட்டே பாக்கறேன்.... பாவி மக்கா! தியேட்டர்ல இருந்த அத்தனை பேரும் போய்ட்டானுங்க. :( நானு, பட்டாணி, அப்புறம் நம்ம 'ராம்' மாதிரி பச்சப்புள்ளங்க ரெண்டு பேர், குசும்பன் மாதிரி பால் வடியற முகமா ஒருத்தர், தம்பி மாதிரி உயர்ந்த மனிதர் ஒருத்தர்னு மொத்தமே 6 பேர் தேமேன்னு உக்காந்திருக்கோம்.
நாட்டாம மறுபடி வந்து பாத்துட்டு "ஷோ கேன்சல்" ன்னு தீர்ப்ப மாத்தி சொல்லிட்டு போய்ட்டார். ஹ்ம்ம்! நாங்க நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெர்மிஸிலி ஆகி.... 7.30 க்கு (நேரத்தை பாத்தீங்களா!) பணத்தை வாங்கிட்டு வெளில வந்து அண்ணா பார்க், கெவீஸ் ரெஸ்டாரண்ட்னு சுத்தி புண்பட்ட மனசை ஆத்திகிட்டு நல்ல புள்ளைங்களா 8.30 க்குள்ள ஹாஸ்டல் வந்து எங்க பேரை காப்பாத்திகிட்டோம்.
ஆனாலும் விடாப்பிடியா மறுநாள் "பாட்டி செத்துப்போச்சின்னு" காலேஜுக்கு லீவ் சொல்லிட்டு போய் படத்தை பாத்துட்டு அதுக்கடுத்த நாள் காலேஜ் போனதும் வழில எங்க ஹெச்.ஓ.டி "என்னாச்சி பாட்டிக்கு" ன்னு விசாரிக்க நான் "எந்தப் பாட்டி?" ன்னு மொதல்ல தடுமாறி அப்புறம் சுதாரிச்சி "ஆமாம் மேம்... பாட்டி செத்துப்போய்ட்டாங்க.. பாவம் ரொம்ப சின்ன வயசு வேற..." ன்னு சோகமா உளறிக்கொட்டினது தனிக்கதை! இதெல்லாம் கலைச் சேவைக்காக நான் பட்ட கஷ்டங்கள்... தெரிஞ்சுக்கோங்க!
பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!
பி.குக்கு.பி.கு: பின் குறிப்பு தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!!

Monday, June 4, 2007
சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை!
ஹி..ஹி.. தெரியும். தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே? அதான் இல்ல! சமையல் கலையை கத்துக்கிறதுக்கு நான் என்னெல்லாம் முயற்சி மேற்கொண்டேன்.. அதுக்கு எத்தனை விதமான கூர்நோக்கு, நுண்ணோக்கு மற்றும் தொலைநோக்கு அணுகுமுறைகள் கையாளப்பட்டனன்னு இந்த கட்டுரைல (!) விம் பார் போட்டு விளக்கப் போறேன். அதுக்கு தான் இந்த தலைப்பு!!
நான் ரொம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு +2 படிச்ச கண்ணீர் கதைய சொல்லிருக்கேன் இல்ல? அதனால.. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரே டயர்ட் எனக்கு! ஸ்ஸ்ஸ்... அப்பாடான்னு நிம்மதியா சாப்டு, தூங்கி, குட்டீஸ் கூட லூட்டி அடிச்சு, ஊர் சுத்தி, படம் பார்த்து.. சொந்தக்காரங்க வீட்டுக்கெலாம் போய் நலம் விசாரிச்சு.. சந்தோஷத்தோட உச்சத்துல இருந்தப்போ திடீர்னு நம்ம புத்தருக்கு வந்த மாதிரி ஒரு ஞானோதயம் வந்து தொலச்சிடுச்சு. "இப்படி எத்தனை நாள் ஆட்டமும் பாட்டமுமா இருப்ப காயத்ரி? உனக்கு என்னிக்கு தான் பொறுப்பு வரும்"னு என் மனசாட்சி என்னை பெஞ்ச் மேல நிக்க வெச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவ எடுக்க வேண்டியதா போச்சு. அதாங்க.. சமையல் கத்துக்கிறதுன்னு!
உடனே நேரா அம்மாட்ட போய் வீரசிவாஜி மாதிரி விறைப்பா நின்னு, "ஆணையிடுங்கள் அம்மா.. நான் செய்து முடிக்கிறேன் சமையலை" ன்னு வசனம் பேசினேன். புள்ளைக்கு பொறுப்பு வந்தா பண்டிகைக்கு கூழ் ஊத்தறேன்னு அம்மா வேண்டியிருந்தாங்க போல! உடனே நடிகர் திலகம் சிவாஜி மாதிரி எமோஷனலா கண்ணீர் ததும்ப சமயபுரம் மாரியம்மன பாத்து ஒரு லுக் விட்டாங்க! அப்புறம் சமையல் க்ளாஸ் ஸ்டார்ட் ஆச்சு. என்னிக்கு என் திட்டம் வெளில தெரிய வந்துச்சோ அன்னிக்கே.. "அம்மா! நான் லைஃப்ல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் வாழணும்னு ஆசைப்படறேன்" அப்டின்னு சொல்லிட்டு சித்தி வீட்டுக்கு போய்ட்டான் என் தம்பி. நான் இதுக்கெல்லாமா அசருவேன்? "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"ன்னு பாட்டு பாடிட்டே சமைக்க ஆரம்பிச்சேன். அதென்னமோ தெரிலங்க.. நான் சமைக்க ஆரம்பிச்சவுடனே எங்கம்மாக்கு பக்தி முத்திப் போச்சு. என்னிக்கெல்லாம் நான் சமைக்கிறனோ அன்னிக்கெல்லாம் அவங்க விரதம் இருப்பாங்க! இருக்கட்டுமே? 'அப்பா'ன்னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை? அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர்.. நான் எப்டி சமைச்சாலும் சாப்பிடுவார்!!
தினம் எங்கம்மாவ ஹால்ல உக்காத்தி வெச்சிட்டு ஒவ்வொரு டப்பாவா எடுத்திட்டு வந்து.. "மிளகாத்தூள் இதானே?" "மல்லித்தூள் இவ்ளோ போட்டா போதுமா?" ன்னு கேட்டு கேட்டு கிச்சனுக்கும் ஹாலுக்குமா ஓடி ஓடி ரன் எடுப்பேன் நான். உள்ள.. வறுத்தல், வதக்கல், காய்தல், தீய்தல்னு எல்லா எக்ஸ்ப்ரிமெண்ட்டும் முடிச்சு குழம்பு மாதிரி ஒன்ன கொண்டு வந்து அப்பா முன்னாடி வெப்பேன். அவர் பிசைஞ்சு ஒரு வாய் சாப்பிடறதுக்குள்ள... ரிசல்ட் பாக்குற ஸ்டூடெண்ட், பிரசவ வார்டு முன்னாடி நிக்கற ஹஸ்பண்ட், லவ்வ சொல்லப்போற விடலைப்பையன் இவங்கள மாதிரி எல்லாம் டென்ஷனாகி அவர் மூஞ்சிய உத்து உத்து பாப்பேன். எங்கப்பா ரொம்ப கூச்சப்பட்டு நெளிஞ்சு.. "போம்மா...நல்லாத்தான் இருக்கு"ன்னு கூசாம பொய் சொல்வார்!
சித்திரம் மட்டுமில்லிங்க.. சமையலும் கைப்பழக்கம் தான். பழகிப் பழகி இப்ப நல்லாத்தான் சமைக்கிறேன். (சத்தியமா! நம்புங்க ப்ளீஸ்) ஒரே ஒரு குறை என்னனா... எவ்ளோ போராடியும் எனக்கு இன்னும் டீ போட வர மாட்டிங்குது. சில நேரம் சலசலன்னு இருக்கும்.. சுண்ட வெச்சா கசக்கும்.. பால் கம்மியாகி கருப்பாவோ.. ஜாஸ்தியாகி சப்புன்னோ ஆய்டும். எல்லாம் சரியா இருந்தா ஆத்தி ஆத்தியே ஆறிப்போய்டும். சரியான இம்சைங்க இது. "டீயே போட வரல. நீ நல்லா சமைக்கிறேன்னு நாங்க நம்பனுமா"ன்னு கேக்கப்படாது. சில உண்மைகள் அப்படித்தான். கஷ்டப்பட்டாவது நம்பித்தான் ஆகனும்.
இந்த பிரச்சினையால அம்மா இல்லாத நேரம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா பதட்டமாய்டும் எனக்கு. அவங்க மழைல சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு வந்தாலும்.. "ஹி ஹி.. வாங்க.. உக்காருங்க.. ஜூஸ் சாப்பிடறீங்களா" அப்டின்னு தான் கேப்பேன்.

அப்டித்தான் ஒருத்தர் வந்தார் அன்னிக்கு. அம்மா அப்பதான் பக்கத்து கடைக்கு போயிருந்தாங்க. என்ன பண்றது? நானும் பிஸ்கட்.. முறுக்கு எடுத்து வெச்சு.. பையன் சவுக்கியமா.. பாட்டி சவுக்கியமா.. நாய்க்குட்டி சவுக்கியமான்னு பேச்ச வளர்த்திப் பாத்தேன். அவரா.. "தலைவலிம்மா.. கொஞ்சம் டீ போடேன்" ன்னு வாய் விட்டே கேட்டுட்டார். இதுக்கு மேல என்ன பண்ண? "இந்த அம்மாவ வேற காணமே"னு உள்ள உதறல். திரு திருன்னு முழிச்சுட்டே உள்ள போய் அடுப்ப பத்த வெச்சு.. ஒரு டம்ளர் டீக்கு 2 டம்ளர் தண்ணி வெச்சு தூள் போட்டு.. அடுப்பையும் sim ல வெச்சிட்டு உள்ளயே செட்டில் ஆய்ட்டேன்!! அவ்ளோ தண்ணியும் சுண்டறதுக்குள்ள அம்மா எப்படியும் வந்துடுவாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!
நான் சத்தமில்லாம கிச்சன்லயே இருக்க.. அவர் ஹால்ல தேமேன்னு உக்காந்திருக்க நேரம் பாட்டுக்கு போய்ட்டுருக்கு. ஒரு வழியா அம்மா வந்துட்டாங்க. "வாங்க.. எப்ப வந்திங்க.. டீ எதாச்சும் சாப்டிங்களா?" ன்னு அம்மா கேக்க.. "ம்ம்.. உங்க பொண்ணு டீ போடறேனு உள்ள போனா. போய் பாருங்க தூள் வாங்க எஸ்டேட்டுக்கே போய்ட்டா போல" ன்னு அந்த மனுஷன் என் மானத்தை கப்பலேத்தி டாட்டா காட்டி அனுப்பி வெச்சிட்டார்.
அன்னில இருந்து நாங்க எல்லாரும் டீ குடிச்சாலும் விருந்தாளிங்களுக்குன்னே ப்ரூவும்.. காம்ப்ளானும் வாங்கி வெச்சிட்டாங்க வீட்டுல. ஹி ஹி.. அதெல்லாம் நல்லா போடுவேனாக்கும்! உயரமா வளர முடியலன்னு கவலைப்படறவங்க யாராச்சும் இருந்தா வாங்க வீட்டுக்கு.. காம்ப்ளான் குடிக்கலாம்!
பி.கு: நல்லா டீ போடத் தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்க.. ப்ளீஸ்!

Thursday, May 24, 2007
எனக்கு உடம்பு சரியில்ல... :(
ஹலோ மக்கள்ஸ்!! வணக்கம்ப்பா! எல்லாருக்கும் ஒரு வருத்தமான செய்தி சொல்ல போறேன். எனக்கு 2 நாளா உடம்பு சரியில்ல. (யாரது சந்தோஷமா விசிலடிக்கிறது? குட்டிபிசாசா தான் இருக்கனும்.. வரவர எதிரிங்க ஜாஸ்தி ஆய்ட்டே போறாங்க) :( அடடா.. ஜி3 நீ அழாதடா.. எனக்கு ஒன்னும் ஆகல..
2 நாளா நடந்தா உடம்பு கூட கூட வருது.. தூங்கும் போது கண்ணு தெரிய மாட்டிங்குது.. அப்பாவ பாத்தா டாடி மாதிரியே தெரியுது.. மூஞ்சி வேற ரொம்ப அழகாய்ட்டே வருது!!! என்ன பண்றதுன்னே தெரில. என்னம்மோ ஏதோன்னு எங்க ஏரியால இருக்கிற எம்.காம் படிச்ச கைராசிக்கார டாக்டர்ட்ட போனேன். என்னத்த சொல்ல? ஐயகோ.. இது எதையும் குணப்படுத்தவே முடியாதாமே?! அவர் சோகமா கண்ணாடிய கழட்டிட்டே.. "எதயுமே இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்லமுடியும்" னு சொன்னாரு. "பரவால்ல டாக்டர் நான் நேத்தே கேட்டதா நினச்சுட்டு பதில் சொல்லுங்களேன்.. எனக்கு என்ன ஆச்சு" ன்னு கேட்டேன். மனுஷன் கடுப்பாகி, "மனச தேத்திக்குங்க.. எங்க கைல எதும் இல்ல" ன்னு சொல்லிட்டு போய்ட்டார்.
அதோட இன்னொன்னும் சொன்னார்.. "உங்களுக்கு மல்ட்டிபிள் பர்ஸனாலிட்டி டிஸார்டர், ஷார்ட் டைம் மெமரி லாஸ், 'கவுஜோ'மேனியா ன்னு 3 விதமான, வித்யாசமான, வினோதமான.. அற்புதமான, ஆச்சரியமான.. அதிசயமான...(ஸ்ஸ்..அபா இப்பவே கண்ண கட்டுதே!) பாதிப்புகள் எல்லாம் பேசி வெச்சிகிட்டு சேர்ந்து ஒன்னா கிளம்பி வந்திருக்கு. இதுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல அதனால நீங்க எப்ப கவித எழுதுவிங்க.. எப்ப மொக்க போடுவிங்கன்னு உங்களுக்கு மட்டுமில்ல.. அந்த அய்யனாருக்கே தெரியாது.." (சாமிங்க! யாரது சிண்டு முடியறது? அவர் ஏற்கனவே என் மேல கடுப்புல இருக்கார்!!) அப்டின்னு சொன்னார்.
மக்களே! இப்ப நான் என்ன பண்றது சொல்லுங்க? என் மேல எதுனா தப்பிருக்கா? இந்த பக்கம் நாலு பேரு.. அந்த பக்கம் நாலு பேரு நின்னுட்டு "நீ கவித எழுது" "இல்லல்ல நீ மொக்க போடு"ன்னு இழுத்தா ஒரு சின்ன பொண்ணு என்ன பண்ணும்? இருந்தாலும் நான் விடறதா இல்ல.
எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா என் 'கலை தாகம்' அடங்குற வரைக்கும் இப்டி தான் எல்லாரையும் இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. (இது எக்கோ கண்டுக்காதீங்க!!) இது அந்த அய்யனார் மேல.. :) வேனாம் காடுவெட்டி கருப்புசாமி மேல சத்தியம்.!! :)))
ஏன்னா.. கவித பாதி.. மொக்க பாதி கலந்து செய்த கலவை நான்!! உள்ளே கவித வெளியே மொக்கை.. விளங்க முடியா இம்சை நான்!
இப்போதைக்கு அப்பீட்டு.. வருவேண்டா ரிப்பீட்டு!!
(டி.ஆர் எஃபக்ட்ல டிரை பண்ணினேன்! சாரி)

Tuesday, May 22, 2007
சத்தமில்லாமல் ஒரு மொக்கைப்பதிவு!
"அடப்பாவமே!"
"தெரியுமா விஷயம்?"
"எப்ப இருந்து?"
"இப்ப தான்.. நாலஞ்சு நாளா!"
"ச்சே! நல்லா இருந்த பொண்ணு.. யார் கண்ணு பட்டுச்சோ!"
"ம்ஹூம்.. நாமென்ன பண்ண முடியும்"
டுபுக்கு அண்ணா, சென்ஷி, ஜி3, தங்கச்சி, அபிஅப்பா இப்டி நிறைய பேர் என்னை பத்தி கவலை தெரிவிச்சிருக்காங்கன்னு தகவல்!! ஆளாளுக்கு "என்ன ஈரோட்டுல வெயில் ஜாஸ்தியா"ன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நம்ம தலைவர்.."என்னங்க என்னாச்சு.. ஏன் இப்டி"னு துக்கம் கேட்டவர் தான்.. அதுக்கப்புறம் ஆளயே காணல. தங்கச்சி (மை ஃப்ரண்ட்) என் ஸ்டூடென்ட்ஸ் மாதிரியே வந்தமா.. அட்டெண்டென்ஸ் குடுத்தமான்னு உடனே எஸ்கேப் ஆயிடறா! எல்லாம் திடீர்னு சீரியஸா பதிவு போட ஆரம்பிச்சதோட விளைவுகள்!
எல்லாருக்கும் அந்த ரகசியத்த சத்தமா சொல்லப் போறேன் இப்போ! நம்ம அய்யனார் இருக்காரே! அதாங்க துபாய்ல இருந்து அப்பாவித் தமிழர்களை இம்சை பண்ணிட்டிருக்காரே அவர்தான்! தெரியாத்தனமா அவரோட தனிமையின் இசை பக்கம் ஒரு நாள் தனியா போய்ட்டேங்க! அன்னிலருந்து 'வேட்டயபுரம் அரண்மனைக்கு மிட்நைட்ல போய்ட்டு வந்த மாதிரி' பேஸ்தடிச்சு உக்காந்திட்டிருக்கேன்! மனுஷன்.. புலிங்கிறாரு.. நீலிங்கிறாரு... அடர் கானகம், அரூபதர்ஷினினு... ஒரு சின்ன பொண்ண இப்டியா பயமுறுத்துவாங்க? (இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லயா?) அதுக்கப்புறம் 'என்னனு தெரில.. என்ன மாயம்னு புரில' ஒரே கவித கவிதையா கொட்டுது. (கவுஜ?) (தமிழ்நதி அடிக்க வரப்போறாங்க!!)
சரி இன்னிக்கு நம்ம மக்கள்ஸ்க்கு எதாச்சும் கத சொல்லலாமான்னு ஒரு யோசனை. கத சொல்றது.. கேக்கறது ரெண்டுமே ஒரு சுகானுபவம் இல்ல? சின்ன வயசுல கிராமத்துல இருந்தப்போ அப்பா நிறைய கத சொல்வார். அம்மாவும் சொல்வாங்கன்னாலும் அப்பா தான் அதிகம்.
அப்போ எனக்கு 5 வயசு இருக்கலாம். வசதியான குடும்பத்துல பிறப்பு.. ஊர்லயே பெரிய கான்வெண்ட்ல எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிப்புன்னு என் கதைய எழுத ஆரம்பிச்ச விதி.. திடீர்ன்னு "இந்த ஆட்டம் செல்லாது.. செல்லாது"ன்னு எல்லாத்தயும் எச்சில் தொட்டு அழிச்சிட்டு மொதல்ல இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்னு ஒரு சின்ன கிராமத்துல ஓட்டு வீட்ல கொண்டு போய் விட்ருச்சு. நானும் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்துட்டேன். ஸ்கூல்ல ராஜமரியாதை எனக்கு! (ஏற்கனவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிச்ச சீனியராச்சே!!) புத்தக மூட்டை இல்ல.. கை ஒடிய எழுத ஹோம்வொர்க் இல்ல.. செம ஜாலியான அற்புதமான லைஃப்ங்க அது! எல்லாத்த விட அம்மா, அப்பாவோட அருகாமை அதிகம் கிடச்சுது.
டெய்லி 8 மணியானா கதை நேரம் ஆரம்பிக்கும் எங்க வீட்ல. 7 மணில இருந்தே நானும் தம்பியும், "ப்பா...ப்பா.. கதப்பா... சொல்லுங்கப்பா" னு நான்ஸ்டாப்பா கேட்டுட்டே இருப்போம். அவரும் 'சாப்டாத்தான் சொல்வேன்', 'இந்த பால குடி சொல்றேன்'னு பிளாக்மெயில் பண்ணி காரியம் சாதிச்சுக்குவார்! சரியா 8 மணிக்கு.."ம்ம்.. என்ன கத வேனும் இன்னிக்கு"ம்பார். எங்களுக்கு என்னமோ கடவுள் வந்து என்ன வரம் வேனும்னு கேட்ட மாதிரி டென்ஷன் ஆய்டும்.
''அப்பா சிங்கம் கத சொல்லுங்க.. இல்லன்னா முயல் கத.. வேணாம் யான கத சொல்லுங்க" ன்னு சாய்ஸ் குடுப்பேன் நான்!
"வேணாம்ப்பா கொரங்கு கத சொல்லுங்க... யான வேணாம்" னு அழ ஆரம்பிக்கும் எங்க வீட்டு குட்டிக்குரங்கு. (என் தம்பி.. ஹி ஹி)
"போடா கொரங்கு.. அதான் நீ இருக்கியே? ப்பா..யான கத தான் சொல்லனும்"
"பாருங்கப்பா என்ன கொரங்குன்னு சொல்றா.. நீ தான் கொரங்கு..போ"
ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிக்கறதுக்குள்ள அவசர அவசரமா.. "இப்ப என்ன உனக்கு யான.. உனக்கு கொரங்கு... அவ்ளோதானே.. சொல்றேன் பேசாம இருங்க"ன்னு ரெண்டும் சேர்ந்து வர்ற மாதிரி கத சொல்வார் அப்பா. ஆனா.. இந்த மெகா சீரியல்காரங்க மாதிரி கதைக்கு சம்பந்தமே இல்லாம நாங்க கேட்ட கேரக்டர சேர்த்து எங்கள ஏமாத்திருக்காருன்னு ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு தாங்க தெரிஞ்சுது!!!
எந்த கதயா இருந்தாலும் "ஒரு ஊர்ல" ன்னு ஆரம்பிச்சா தான் சுவாரஸ்யமாவே இருக்கும். அது இல்லன்னா கத கேக்குற சுகமே போய்டும்! இப்டி தினம் தினம் நிறய்ய கதைகள்!! அரக்கர்கள்.. தேவதைகள்.. மாயாஜாலங்கள்.. பேசும் விலங்குகள்... யப்பா! தனி உலகம்ங்க! எல்லாக் கதைகள்ளயும் கெட்டது தோத்து நல்லது ஜெயிச்சதாவே க்ளைமாக்ஸ் இருக்கும்.
"உனக்கு என்ன வரம் வேனும் மைதாஸ்னு கடவுள் கேட்டாரா ... நான் தொட்டதெல்லாம் தங்கமாகனும்னு வரம் வாங்கிட்டான்"
அப்பா.. சொல்லும்போது வியப்பில் எங்கள் கண்கள் விரியும். ஏதோ நாங்களே வரம் வாங்குனது மாதிரி ரெண்டு பேரும் ஆச்சரியமா பாத்துப்போம்! அவன் வாங்கினது வரமில்லன்னு தெரியும்போதும் அதே ரியாக்சன் தான்!!
ஆண்டாளோட காதல், மீராவோட பக்தி, கர்ணனோட கொடை, குசேலரோட நட்பு, மைதாஸோட பேராசை, கண்ணப்பரோட அன்பு, அலிபாபாவோட அதிர்ஷ்டம், சிந்துபாதோட பயணம், ராமனோட பிதா பக்தி, அரிச்சந்திரனோட உண்மை, நளன், நந்தன், அனுமன், பரதன்,சிண்ட்ரெல்லா, ஸ்நோ ஒய்ட்...னு எல்லாரும் அறிமுகமானது அந்த காலகட்டத்துல தான்.
இந்த கதாபாத்திரங்களை எல்லாம் வேறு வேறு பெயர்களோட வாழ்க்கைல அங்கங்க சந்திக்க நேரும்போது தான் கதைகள் வெறும் கதைகள் இல்லன்னு புரிஞ்சுக்க முடியுது.
கத முடியும்போது.. பெரும்பாலும் தம்பி தூங்கியிருப்பான். அல்லது.. "விடிய விடிய மகாபாரதம் கேட்டு குந்திக்கு கர்ணன் பெரியப்பா புள்ள"ன்ன மாதிரி (ஹி ஹி.. புதுசா ட்ரை பண்ணலாமேன்னு!!) என் பக்கம் திரும்பி "ஏய் உனக்கு புரிஞ்சுதா? எனக்கு புரியவேஏஏ இல்ல"ம்பான் ராகத்தோட!
அதுக்கப்புறம் அப்பாட்ட இருந்து இந்த பழக்கம் எனக்கும் தொத்திகிச்சு. ஸ்கூல்ல என்கிட்ட கத கேக்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துச்சு. வீட்லயும் சித்தி பசங்கள கூப்ட்டு வெச்சு சொல்வேன். சித்தி பையன் குரு.. கதை பிரியன் இல்ல.. கதை வெறியன்!! இவன்கிட்ட ஒரே இம்சை என்னன்னா வரிக்கு நாலு சந்தேகம் கேப்பான். சாக்ரடீஸ் ஆவி தான் தம்பியா பொறந்துடுச்சோன்னு அடிக்கடி டவுட்டு பட்ருக்கேன் நான்!
" திரும்பி பாத்தா பெரிய யான ஒன்னு நின்னுச்சு"- இது நான்
"எவ்ளோ பெரிய யான?"-இது அவன்!!
கைகளை விரித்து..'இம்மாம் பெரிசு' ன்னு சொல்லனும் அவனுக்கு. உடனே..
"நாம அன்னிக்கு கோயில்ல பாத்தமே அத விட பெரிசா?"ம்பான்!
ஒருவழியா அது எவ்ளோ பெரிசுன்னு சொல்லி முடிச்சு.."அது கால்ல முள்ளு குத்திடுச்சு" ன்னு சொன்னா "ஏன்?" ன்னு கேப்பான் சுருக்கமா!
"ஏன்னா? என்னடா கேள்வி இது? அது என்ன நம்மள மாதிரி செருப்பா போட்ருக்கு? இல்ல மொசைக் தரைல நடக்குதா? சும்மா தொனதொனன்னு கேள்வி கேட்டின்னா கதையும் கிடயாது ஒன்னும் கிடயாது" ன்னு டென்ஷன் ஆவேன் நான்! அவனுக்கு பிறகு காலேஜிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது எனக்கு. (ரொமான்ஸ் கதைக்கு மாறிட்டேன்!) அப்றம் க்ளாஸ்ல என் ஸ்டூடன்ஸ்க்கு சொல்ல ஆரம்பிச்சு இப்ப பதிவு வரைக்கும் வந்தாச்சு!
போன மாசம் சேலத்தில் அண்ணா வீட்டிற்கு போனப்போ, அண்ணி சீரியல் பாக்க, அண்ணா பையன் (யூ.கே.ஜி. படிக்கிறார்) தனியா ரூம்ல கார்ட்டூன் பாத்துட்டிருந்தான். 6 மணிக்கே சாப்பாடு ஊட்டிட்டாங்களாம்! திடிர்ன்னு எனக்கு, பாவம் இப்டி தனியா தேமேன்னு டிவி பாக்கறானே.. கூப்பிட்டு வெச்சு கத சொன்னா என்னனு ஒரு யோசனை. மெதுவா தாஜா பண்ணி தூக்கி மடில உக்காத்தி வெச்சு.. "அத்த கத சொல்றேன் உனக்கு! என்ன கத வேனும்?"னு கேட்டா.. "பவர் ரேஞ்சர்ஸ் தெரியுமா?"ங்கிறான்! நான் என்னமோ சிவில் சர்வீஸ் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் பாத்த மாதிரி திருதிருன்னு முழிச்சேன்! "அது கார்ட்டூன் கேரக்டர்ஸ் காயத்ரி"ன்னு அண்ணி ஹால்ல இருந்து குரல் குடுத்து காப்பாத்தினாங்க! சரின்னு ரொம்ப யோசிச்சு அவனுக்கு பிடிக்கிற மாதிரி ஸ்டண்ட் ஸ்டோரியா சொல்ல ஆரம்பிச்சேன். ரெண்டு நிமிஷம் கூட இருக்காது.. பயபுள்ள தூங்கி விழறான்! என்ன பண்ணி தொலயறது சொல்லுங்க? "ச்சே 11 மணி வரை தூங்காம அடம் பண்ணுவான்.. இப்ப சமத்தா தூங்கிட்டானே"ன்னு அண்ணி பாராட்டு வேற. அவன் முழுக்கத.. வேணாம்.. அரைக்கதை கேட்டுட்டு தூங்கிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். 2 வரிலயே தூங்கி ரொம்ப அவமானப்படுத்திட்டான்!
நீங்களாச்சும் முழுசாப் படிச்சீங்களா? ரொம்போ டேங்க்ஸ்ப்பா!!

Saturday, May 12, 2007
பப்ளிக் எக்'ஜாம்' - டிப்ஸ்!
நம்ம தலைவரோட இந்த பதிவ படிச்சுட்டு எனக்கும் டார்ட்டாய்ஸ் சுத்த ஆரம்பிச்சிடுச்சுங்க! இருங்க.. இருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி ஃப்ர்ஸ்ட் லவ்வு, நெக்ஸ்ட் லவ்வு னு என் லைஃப்-ல எந்த 'காமெடி'யும் இதுவரை நடக்கல. ஆனா அவர் அந்த 'டிராயர் வெச்ச டேபிள்' பத்தி எழுதியிருந்தாரே? படிச்சிட்டு ஒரே சிரிப்பு! நானும் ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கறேன்னு இப்டி எல்லாம் நிறைய அழும்பு பண்ணிருக்கேன்! ஒகே.. Over to Flashback!
நான் அப்போ +2 படிச்சிட்டிருந்தேன்! பப்ளிக் எக்ஸாம்-னாலே நமக்கு வீட்ல ஓவர் மரியாதை இருக்கும். தம்பி கிரிக்கெட் மேட்ச் பாத்தா தைரியமா போய் 'நான் படிக்கனும் போடா' னு தலைல தட்டி டிவிய ஆஃப் பண்ணலாம்! இல்லனா எதாச்சும் 'கில்மா' (தமிழில் லஞ்சம் அல்லது கையூட்டு என்று அழைக்கப்படுவது!) வாங்கிகிட்டு allow பண்ணலாம்! யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினாலும் "புள்ளைங்கள peaceful ஆ படிக்க விடுங்க" னு கில்லி ஸ்டைல்ல சவுண்ட் விடலாம்! சொந்தக்காரங்க யாராச்சும் வரும்போது 'குவாண்டம் தியரி'.. 'கெப்ளர்'ஸ் லா' னு எந்த கர்மத்தையாவது சின்சியரா படிச்சு ஃபிலிம் காட்டலாம்! குறிப்பா எல்லார் வீட்டுக்கும் தெரியற மாதிரி மொட்ட மாடில குறுக்க நெடுக்க நடந்துகிட்டே கொஞ்ச நேரம் படிச்சுட்டு..' நைட் எல்லாம் படிச்சேன்.. கண்ணு எரியுதுமா'னு காலைல 7 மணி வரை தூங்கலாம்! இப்டி நிறய அட்வான்டேஜஸ் இருக்கும்!!
அதுலயும் நான் 10 th- ல எடுக்காம விட்ட 'ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' ட +2 ல எடுத்தே தீருவேன்னு சரஸ்வதி சபதம் போட்டிருந்ததால மரியாத கொஞ்சம் தூக்கலாவே இருந்துச்சு! நானும் ரூம்ல.. கிழக்கு பார்த்து வீணை வாசிக்கிற சரஸ்வதி படம் எல்லாம் மாட்டி வெச்சு, நம்ம தலைவர் மாதிரியே டேபிள், சேர் எல்லாம் வாங்கிப் போட்டு.. வாஸ்துப் படி (!) ஈசானி மூலைல உக்காந்து அவர மாதிரியே "மண்டய கவுத்தி" படிப்பேன்! சுவத்தில வேற, எந்த பக்கம் திரும்பினாலும்..."Success is yours", "எங்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்", "இப்போது இல்லாவிட்டால் எப்போது ஜெயிக்கப் போகிறோம்.. நாம் ஜெயிக்காவிட்டால் (?!) வேறு யார் ஜெயிக்கப் போகிறார்கள்" னு தன்னம்பிக்கை வாசகமெல்லாம் வேற ஒட்டி வெச்சிருந்தேன். ஸ்கூல் விட்டு வந்ததும் தட்டுல சாப்பாடு போட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு (படிக்கிற புள்ள! தெம்பு வேனாமா?) ரூமுக்குள்ளார போவேன்.. 'சக்திமான்' மாதிரி ஒரு என்ர்ஜி வரும்.. வீராவேசமா போய்..பிசிக்ஸ் புக்கயோ..கெமிஸ்ட்ரி புக்கயோ எடுத்து பிரிப்பேன். அவ்ளோதான்.. சார்ஜ் போடாத செல்போன் மாதிரி பேட்டரி குறைஞ்சிட்டே வந்து 1 மணி நேரத்துல 'ஸ்விட்ச் ஆஃப்' ஆய்டுவேன்! சிலநேரம்.. இந்த பாடமெல்லாம் கண்டுபிடிக்காத காலத்துல.. ஒரு ஆதிவாசியாவோ.. கற்கால மனுஷியாவோ பொறந்திருக்க கூடாதானு ஃபீல் பண்ணிட்டு உக்காந்திட்டிருப்பேன்!
இப்டிபோய்ட்டிருந்த வாழ்க்கைல.. ஒரு நாள் ஸ்கூல்ல திடிர்னு 'மெமரி பவர் & பெர்ஸனாலிட்டி டெவெலப்மென்ட்' கிளாஸ்க்கு ஏற்பாடு பண்ணினாங்க. எங்களுக்கு ஒரே சந்தோஷம்! (கெமிஸ்ட்ரி பீரியட் கட் ஆகுதே!) வந்தவரும் சீரியஸா என்னென்னமோ டிப்ஸ் குடுத்தாரு.. நாங்களும், யாரு பெத்த புள்ளயோ இப்டி தனியா புலம்புதேனு பரிதாபப் பட்டு.. எந்த சேட்டையும் பண்ணாம தேமேன்னு கேட்டுட்டு இருந்தோம்.
"டெய்லி கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்க.. மைண்ட் சுறுசுறுப்பாகும்"
(தியானமா? உக்காந்துட்டே தூங்கறேன்னு வீட்ல இருக்கிற குட்டிச்சாத்தான் கலாய்க்குமே!?)
"தினம் 4 அல்லது 5 மணிக்கு எந்திரிச்சு படிங்க! பாடம் மனசுல நல்லா பதியும்"
(அடப்பாவி மக்கா! நடுராத்திரில எந்திரிச்சு படிக்கிறதா?)
"ஆனா விடிகாலைல படிக்கும் போது பசிக்கும்"
(ஆமா! பசிக்காதா பின்ன?)
"அதனால வீட்ல சொல்லி பிஸ்கட், பிரெட், ஜாம் எதாவது வாங்கி வெச்சிட்டு சாப்பிட்டு படிக்க ஆரம்பிங்க!
(அட! இது நல்லாருக்கே!)
வீட்டுக்கு வந்ததும் மொத வேலயா 'பிரெட், ஜாம் வந்தா தான்.. ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' னு அம்மாட்ட கறாரா சொல்லிட்டேன். அம்மாவும்... அப்பாக்கு போன போட்டு "வந்தா ஜாமோட வாங்க.. இல்லன்னா வராதிங்க"னு சொல்லிட்டாங்க!
அப்பாக்கு எப்பாவுமே என் மேல பாசம் ஜாஸ்தி! உடனே கடைக்கு போயிருக்கார். அங்க 'ஸ்டாக் கிளியரன்ஸ்' போட்டிருந்தான் போல! ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீனு 3+3 ஜாம் பாட்டில்களோட வீட்டுக்கு வந்துட்டார்! உண்மைய சொல்றேங்க! அதுநாள் வரைக்கும்.. ஜாம்னு கேட்டா எங்கம்மா பாழாப்போன சாஷே ல வாங்கிட்டு வந்து, பிரெட்டுகிட்ட "இதான் ஜாம்" னு கண்ணுல காமிச்சுட்டு குடுப்பாங்க! இப்ப என்னடான்னா..எனக்கே எனக்குனு இத்தன பாட்டில் ஜாம்! ஆனா.. காலைல படிக்கும் போது தான் சாப்பிடணும்னு கண்டிஷன்! சரினு 5 மணிக்கு அலாரம் வெச்சுட்டு படுத்தா.. கனவுல ஜாம் பாட்டில் எல்லாம் என்ன சுத்தி நின்னு "ரிங்கா ரிங்கா ரோஸஸ்"னு டான்ஸ் ஆடுதுங்க!
மறுநாள்.. அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சி.. அவசரமா பல் தேச்சு.. வேகமா ஓடி வந்து பிரெட்.. ஜாம எடுத்து.. பெட் மேலயே உக்காந்து..பிரெட் ல ஜாம தேய் தேய்னு தேச்சு ஆச தீர சாப்ட்டேன்! அப்புறம் தான்.. புக்கு எங்கனு தேடினேன்! கைக்கு கிடச்ச புக்க எடுத்து வெச்சிட்டு ஈசானி மூலைல சேர் போட்டு உக்காந்தா.. சரியா 5 நிமிஷம் தான்..உடனே 'அருள் வாக்கு' சொல்லப் போற மாதிரி உடம்பு சாமியாட ஆரம்பிச்சிடுச்சு. சரின்னு பெட்லயே.. தலகாணிய சுவத்தில சாய்ச்சு வெச்சு படிச்சேன்.. முதுகு வலிச்சுது...அப்புறம் குப்புறப் படுத்து கன்னத்துல கை வெச்சிட்டு படிச்சேன்! திடீர்ன்னு முழிச்சா..( தூங்கிட்டமுல்ல!) புக்கு தலகாணி ஆய்ருக்கு! சரஸ்வதி தேவி சபிச்சுட்டா என்ன பண்றதுனு.. கட்டிலுக்கு வெளில தல நீட்டி புக்க கைல வெச்சிகிட்டு மறுபடி ஃப்ர்ஸ்ட்டுல இருந்து ஆரம்பிச்சேன்! சரியா 2 நிமிஷத்துல புக்கு கீழ விழுந்துடுச்சு பாவம்! இப்டி நான் படிக்க ஆரம்பிகிறதுக்குள்ளார விடிஞ்சே போய்டுச்சு!
அம்மா.. காலைல ஜாம் பாட்டில் எடுத்து திறந்து.. 'இடி விழுந்த மாதிரி' ஜாம்ல பள்ளம் இருக்கறத பாத்து ஷாக் ஆய்ட்டாங்க! இப்டியே.. எல்லா ஜாமும் தீருர வரைக்கும் என்னோட 'நைட் ஸ்டடி' கண்டின்யூ ஆச்சு. அப்புறமா அந்த பழக்கத்த நிப்பாட்டிட்டேன்!
என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? அத வழக்கம் போல ஒரு கண்ணாடி போட்ட பொண்ணோ, பையனோ வாங்கிருப்பாங்க! அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர் நமக்கெதுக்குங்க?

Tuesday, May 8, 2007
நட்பெனப் படுவது யாதெனில்...
நண்பர்கள் எதற்காக?
ஹி.. ஹி தலைப்ப பாத்து சீரியஸ் பதிவுனு நினச்சிங்களா? நாமெல்லாம் சீரியஸா இருந்து என்னத்த சாதிக்க போறோம்? சும்மா சிரிச்சுட்டு போவமே! சொந்த சரக்கு இல்லீங்க! சுட்டது தான்!
(ஸ்ஸ்! அப்பாடா! கடமை முடிஞ்சுது! இனி ஆணி புடுங்க போலாம்!)

Sunday, May 6, 2007
நான் தனியாள் இல்ல!!
"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" னு தலைப்பு போட்டு.."நான் என்பது இலக்கணத்தில் ஒருமை.. நடைமுறையில் பன்மை"னு வைரமுத்து மாதிரி கவித்துவமா ஆரம்பிச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா.. 'இந்தப் பொண்ணும் எதோ கிறுக்குதே'னு அப்பப்ப பாலைத்திணைக்குள்ள எட்டி பாக்குறவங்களும்.."அடி ஆத்தி"னு அலறி அடிச்சு ஓடிட்டா என்ன பண்றதுனு இப்டி தலைப்பு குடுத்திருக்கேன். ( மீண்டும் ஒரு முறை தலைப்பை சிட்டிஜன் அஜித் ஸ்டைலில் படிக்கவும்!)
இந்த 16 வருஷத்துல.. சாரி பழைய நியாபகம்! இந்த 25 வருஷத்துல... எனக்கு கை கொடுத்தவங்க.. தோள் கொடுத்தவங்க.. இந்த கிணத்துல(?) (என் மனசு ரொம்ப ஆழம்!) கல்லு.. மரம்.. மட்டை..னு எறிஞ்சு இந்த அமைதியான பொண்ண (!?) சலனப்படுத்தினவங்க எல்லாரயும்.. வரிசைப்படுத்தப் போறேன். ரெடி ஜூட்! (ஓடறவங்க இப்பவே ஜகா வாங்கிக்கலாம்!)
10. திரு.கென் : நம்ம ப்ளாக்கர் தாங்க! இவரு கவிதை எழுதறாரா... இல்ல அடி பட்ட இடத்தை அப்டியே ரத்தகாயமா நம்மகிட்ட காட்றாரானு தெரில. பாக்கும் போதே வலிக்குது. ஆனா.."நான் நல்லவன்னு பொய் சொல்ல நான் ஒன்னும் கெட்டவனும் இல்ல. நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவனும் இல்ல" அப்டினு அவர பத்தி தெளிவா(!) புரிய வைப்பார்!
9. சுஜா அப்பா: என் யு.ஜி ஃப்ரண்ட் சுஜாவோட அப்பா. எங்கப்பாவே எட்டிப் பாக்காத எங்க ஹாஸ்டலுக்கு மாசம் ஒரு தடவ வந்து... முறுக்கு, பப்ஸ், good day, வீட்டு சாப்பாடு, ..இன்ன பிற அயிட்டங்கள கொண்டு வந்து குடுத்துட்டு.. எனக்கும் ராதிகாவுக்கும் சேர்த்து 3(!) லாலி பப் வாங்கி குடுத்து "சண்டை போடாம சாப்பிடுங்க"னு சொல்லிட்டு போகும் பாசக்கார தந்தை. நாங்க இரண்டாம் ஆண்டு படிக்கும் போது மாரடைப்பால் இறந்து போனார். நினைவு தெரிந்து நான் சந்தித்த.. என்னை உலுக்கிய.. முதல் மரணம். :-(
8. பேரில்லா பச்சைக்கிளி: நான் ஏழாவது படிச்சிட்டிருந்தப்போ.. ஸ்கூல் மரத்துல இருந்து காலொடிஞ்ச கிளி ஒன்னு கீழ விழுந்துச்சு. அத வீட்டுக்கு தூக்கிட்டு போக எல்லாருக்கும் ஒரே அடிதடி! கடைசியா எல்லார் பேரையும் சீட்டுல எழுதி குலுக்கிப் போட்டு எடுத்தாங்க.. பாத்தா என் பேரு! சந்தோஷமா வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ராமன் சொன்ன மாதிரி.."நால்வரோடு ஐவரானோம்" னு எங்க ஃபேமிலி மெம்பராய்டுச்சு. " குயில் கூவும்.. மயில் அகவும்.. கிளி பேசும்" னு ஒன்னாப்புல படிச்சதுக்கு அப்ப தான் அர்த்தம் புரிஞ்சுது. அவ்ளோ அழகா என்னை.."அக்கா.. அக்கா.."னு கூப்பிட்ட என் பச்சைக்கிளி.. ஒரு விஷேச நாள்-ல நாய் கடிச்சு செத்துப் போச்சு. வாயில கேசரியோட (நான் செஞ்சது இல்ல) அது செத்து கிடந்தத பாத்து நாள் முழுக்க சோறு தண்ணி இல்லாம அழுதேன். ஜூலை 6 ம்(!) தேதி அதுக்கு திதி வருதுங்க. ;-(
7. கண்ணன் சார்: என்னோட வெல்விஷர்.. வழிகாட்டி.. காட் ஃபாதர்.. எப்டி வேணா இவர சொல்லலாம். காந்திஜி, அப்துல்கலாம் ரேஞ்சுக்கு இவர் மேல மரியாதை வெச்சிருக்கேன்னா பாத்துக்குங்க. இவர் என்ன சொன்னாலும் நான் கேப்பேன். அதனால.. "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"!
6. ஆனந்த்: எப்பவும் புலம்பிட்டே இருக்கிற பொடிப்பையன். எனக்கு ஆச்சரியமெல்லாம்.. இவன எப்டி விப்ரோ -ல செலெக்ட் பண்ணினாங்கங்கிறது தான். "நீ ஏன் தமிழ் ப்ளாக் ஒன்னு ஆரம்பிக்கக் கூடாது" னு கேட்டு என் அறிவுக்கண்ணை ஓபன் பண்ணின புண்ணியவான். ஆகவே மக்களே! என் மேல எதுனா கோபம் -னா.. நீங்க இவன தொடர்பு கொள்ளலாம்! (பழி ஓரிடம், பாவம் ஓரிடம்-னு ஆயிடக் கூடாதில்ல?)
5. கதிரேசன்: நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிஞ்சவன்! chat ல அறிமுகமான நான் மிகவும் நேசிக்கிற நேர்மையான நண்பன். என்ன ஒரே குறைன்னா.. நியாபக மறதி ஜாஸ்தி. பத்து நாள் ஆன்லைன்ல வரலனா யார் நீ-னு கேப்பான்! ஆனா ரொம்ம்ம்ம்ப... நல்லவன்!!
4. ராதிகா: யு.ஜி ல அறிமுகமான அழகான லூசு! ( அழகு-னு சொல்லிடதால.. லூசு-னு சொன்னத கண்டுக்க மாட்டா!) க்ளாஸ்ல.. ரூம்ல.. னு கூடவே இருந்து கழுத்தறுத்த இம்சை அரசி. இவளும் ஒரு பாவப்பட்ட காலேஜ் ல.."அரம் செய்ய இரும்பு" னு சொல்லிக் குடுத்துகிட்டு இருக்கா! ரெண்டு பேரும் காலேஜ் போகும்போது ஒரு உளியும் சுத்தியும் எடுத்திட்டு போவோம். எதிர்கால இந்தியாவ செதுக்கனுமில்ல?! மொத்ததுல.. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், பாரி - கபிலர், சரத்குமார் - விஜயகுமார், விஜய் - சூர்யா, வரிசைல வர்ற சரித்திரப் புகழ் பெற்ற நண்பிகள்!
3. அப்பா: பாசமே உருவான என் தந்தை! தாய்மையை விடவும் அதிகமான அன்பை எங்கள் மீது செலுத்துபவர். அப்பாவுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று எனக்கு தெரியாது.. ஆனால்.. நான் என்றால் அவருக்கு 'உயிர்' என்பது மட்டும் தெரியும்!
2. அம்மா: மனைவி.. குடும்பத்தலைவி.. அம்மா.. ஃப்ரண்ட்.. என்று எல்லா பரிமாணங்களிலும் பிரகாசிக்கும் இனிய அம்மா! பூஜ்ஜியத்தை அடைந்து விட்ட குடும்ப பொருளாதாரத்தை படிப்படியாய் உயர்த்தியவர். அசுர உழைப்பாளி... வேலை செய்த நேரம் போக மிச்சமிருந்த சொற்ப நேரங்களில்.. அன்பு..ஒழுக்கம்.. நேர்மை.. பண்பாடு.. இன்ன பிற குணங்களை கற்றுத் தந்தவர். குடும்பத்தை உருவாக்கி.. காப்பாத்தி.. கஷ்டங்கள அழிச்சு...ஆக்கல், காத்தல், அழித்தல் னு 3 gods செய்ற வேலைய 3 in 1 ஆ செஞ்சுகிட்டு இருக்காங்க! அவங்ககிட்ட எதயுமே நான் மறைச்சதில்ல.. என்ன வேணா பேசலாம்.. என்ன வேணா!
( கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன் இல்ல! அம்மாவ நினச்சா ஒரே
ஃபீலிங்க்ஸ்பா!)
1. தீனதயாளன்: அடுத்து நம்ம டாப் டென்ல முதலிடத்தைப் பிடிக்கிறது.. என் கருவறைத் தோழன்.. ரத்தத்தின் ரத்தம்.. அருமைச் சகோதரன் தீனதயாளன்! அழுத்தம் னா அழுத்தம் அப்டி ஒரு அழுத்தக்காரன்! (பொம்பளைங்க தோத்து போகனும்) நான் பத்து வார்த்தை பேசினா அவன் குட்டியா ஒரு வார்த்தை பேசுவான். குறை இல்லாத மனுஷங்க கிடையாது.. பொறந்ததுல இருந்து இவன் -ட ஏதாச்சும் குறை இருக்கானு நக்கீரர் பேத்தி ரேஞ்சுல தேடரேன்.. மனுஷன் சிக்க மாட்டேங்கிறான்! கோபம்.. பாசம்.. வருத்தம் எல்லாத்தயும் 10% தான் வெளில காட்டுவான். அதுலயே நான் சரண்டர் ஆய்டுவேன்! ஒரே பாச மலர் தான் போங்க! (அக்கா-தம்பி பாசத்தை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் கவனிக்க!)
அவ்ளோ தான்..
பி.கு 1 : விதிமுறைகளுக்குட்பட்டது! கண்ணாலம்.. குழந்த குட்டி னு ஆன பின்னாடி இந்த பட்டியல் மாறலாம்!
பி.கு 2: இந்த பாலைத்திணைக்கு மூலகாரணமான ஜீவனை இந்த லிஸ்ட்டுல சேர்க்கல.

Saturday, May 5, 2007
அண்ணாந்து பார்க்கிறேன்!
ஒண்ணுமில்லங்க! புலம்பறத விட்டு புதுசா என்ன எழுதலாம்னு 2 நாளா கம்ப்யூட்டர முறைச்சு முறைச்சு பாத்துட்டு இருக்கேன். அதுக்கு மட்டும் வாய் இருந்தா.. " உங்கக்கா என்னை படுத்தறா டா" னு என் தம்பிட்ட போய் மூக்கால அழுதிருக்கும்!
சரி எத எழுத? பொறந்து வளர்ந்து 25 வருஷம் முடியப் போகுது. இத்தன நாளா நாம என்ன கிழிச்சிருக்கோம்னு எழுதலாமானு ஒரு யோசனை. இந்த..'திரும்பி பார்க்கிறேன்' 'சைடுல பாக்கரேன்'னெல்லாம் நிறைய பேர் டைட்டில் வெச்சுட்டதால..கொஞ்சம் புதுமையா இருக்கட்டுமேனு இப்டி தலைப்பு வெச்சிட்டேன்!
சரி உள்ளார எத எழுத? அடிக்கடி சவுண்டு உட்டு நம்மள டார்ச்சர் பண்ணுவாளே ஒருத்தி.. அதாங்க என் மனசாட்சி.. அவகிட்ட கேட்டேன். அவ்ளோதான்...ஒண்ணாங் கிளாஸ்-ல முதலும் கடைசியுமா கணக்குல 100 க்கு 100 வாங்கி சாதனை (!) படைச்சேனே அதச் சொல்லவா? அஞ்சாங்கிளாஸ்-ல கிளாஸ் லீடரா பதவி உயர்வு கிடச்சுதே அத சொல்லவா? எட்டாவது -ல அவன் பேரென்ன?.. ம்ம்.. ஜெயக்குமார். அவன் என் நோட்டுல கோணல் மாணலா ஐ லவ் யூ.. னு எழுதி வெச்சத பாத்து..ஐயோ அம்மானு கத்தி கூப்பாடு போட்டு ஹெச்.எம் ரூம் வாசல்ல அவன முட்டி போட்டு நிக்க வெச்சனே அந்த வீர சாகசத்த சொல்லவா? தமிழ் படிக்கிறேன் பேர்வழினு ஒரு சாமியார் காலேஜ் ல சேர்ந்து.. மொத வருஷமே பற்றறுத்து துறவறம் போகவிருந்தனே அந்த சோகத்த சொல்லவா? வேலைக்கு போன ஒரே வாரத்துல.. ஒருத்தன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்க.. கிடுகிடுனு கால் நடுங்க ஓடி வந்து அம்மாவ மொட்டை மாடிக்கு இழுத்துட்டு போய்.. எல்லாத்தயும் உளறிக் கொட்டி.."நான் எதுமே பண்ணலமா.. அவன் தான் கேட்டான்"னு சொதப்பினேனே அத சொல்லவா? னு பேஜார் பண்ண ஆரம்பிச்சுட்டா. நானும் யோசிச்சு யோசிச்சு கடைசில ஒன்னும் சொல்லப் போறதில்லனு முடிவு பண்ணிட்டேன்.
இதுல நான் எதாச்சும் சொன்னேனா?சொல்லலயா? அத நீங்க தான் சொல்லணும். :)

Thursday, May 3, 2007
இதை படிக்காதீங்க ப்ளீஸ்!
தெரியுமே! எத செய்யாதே னு சொல்றாங்களோ அத மொதல்ல செய்றது தானே நம்ம பாரம்பரிய வழக்கம்!! சரி வந்தது வந்துட்டிங்க... படிங்க பரவால்ல.
இதுவரை.. "என்னடா இது? சரியான அழுமூஞ்சிப் பொண்ணா இருக்கே? இப்டி புலம்பிட்டே இருந்தா பொழப்ப எப்ப பாக்கறது" னு யாராச்சும் எனக்காக கவலைப்பட்டிருந்தா... (டேங்க்ஸ்!) அவங்களுக்காக இத எழுதறேன்.
இழவு வீட்ல என்ன தான் மாஞ்சு மாஞ்சு கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வெச்சாலும்... மூக்கு சிந்தற gap ல 'என்னக்கா சேல புதுசா? இத நீ கட்டி நான் பாத்ததே இல்லையே?' னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க பாத்திருக்கிங்களா? அந்த மாதிரி.. மூலைல உக்காந்து அழுதிட்டிருந்தா உடைஞ்சது ஒட்டவா போகுது.. கிடைக்கிற gap ல நாமும் கொஞ்சம் கலாய்ச்சுக்கலாம் னு முடிவு பண்ணியிருக்கேன்.
நான் கூட மொதல்ல யோசிச்சேன்.. சோகமா பாலைத்திணை-னு தொடங்கிட்டமே.. சந்தோசத்த சொல்ல இன்னொன்ணு ஆரம்பிக்கலாமானு.
உடனே.."காயத்ரி அடக்கி வாசி" னு ஒரு அசரீரி கேட்டுச்சு.(எனக்கு அப்பப்ப இப்டி கேக்கும்!) சரீனு இதுலயே சொல்ல முடிவு பண்ணிட்டேன். "குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிஞ்சது" தானே பாலை? அதனால திணை அப்டியே தான் இருக்கும். இங்க பருவங்கள் வேணா மாறலாம்.
ஆனா, எத சொல்றது.. எப்ப சொல்றது.. எப்டி சொல்றதுனு இன்னும் முடிவு பண்ணல. அதனால நீங்க எல்லாரும் எதுக்கும் கொஞ்சம் அலர்ட்டாவே இருங்க!!
மறுபடி வருவேன்..(கொஞ்சம் ஒவரா போய்டுச்சோ?)

Subscribe to:
Posts (Atom)