Saturday, May 19, 2007

குட்டியாய் ஒரு கவிதை!

வெட்டப்பட்ட மரம்
இல்லாமல் போன பிறகே
உணர்த்துகிறது
அதன் இருப்பை!

15 comments:

அபிமன்யு said...

இருப்பை-இது இறந்த காலமா? நிகழ்காலமா? (முடிந்தால் பகுதி/விகுதி பிரித்துச்சொல்வீர்களா காயத்ரி?)

குட்டிபிசாசு said...

நாலு வரியில் ஒரு சுவடு
விட்டுச்சென்ற உங்களுக்கு!!

வாழ்த்துக்கள்

G3 said...

ஆனாலும் இந்த குட்டி பாப்பா படுத்துட்டே ரொம்ப யோசிக்குது போல.. :-))

காயத்ரி சித்தார்த் said...

//இருப்பை-இது இறந்த காலமா? நிகழ்காலமா? (முடிந்தால் பகுதி/விகுதி பிரித்துச்சொல்வீர்களா காயத்ரி?)//

ஏன்ங்க ஏன்? இங்கியும் க்ளாஸ் எடுக்க சொல்விங்க போல இருக்கே?

//நாலு வரியில் ஒரு சுவடு//

அவசரப்பட்டு சந்தோசப்பட்டுட்டேன்!

//ஆனாலும் இந்த குட்டி பாப்பா படுத்துட்டே ரொம்ப யோசிக்குது போல.. :-)) //

வெயில் காலம் முடியற வரைக்கும் தான் இப்டி!! அப்புறம் காலேஜ் போய்டுவேன்னு சொல்ல வந்தேன். என்ன நினச்சே நீ?

குட்டிபிசாசு said...

அவசர படாதிங்க சந்தோசம் படுங்க!!

நான் உண்மையாத்தான் புகழ்ந்தேன்!!
அது வஞ்சபுகழ்ச்சி இல்லை!!

காயத்ரி சித்தார்த் said...

//நான் உண்மையாத்தான் புகழ்ந்தேன்!!
அது வஞ்சபுகழ்ச்சி இல்லை!! //

அப்டின்னா சரிதான்! இல்ல யாரோ அது சுவடு இல்ல.. மாவடுன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு! அசரீரியா இருக்குமோ?

குட்டிபிசாசு said...

தமிழ்ல எழுதி நிறைய வருஷம் (9 வருடம்) அகிடுச்சேனு சும்மா எதோ கைக்கு வருவதை எழுதி ஜல்லியடிச்சிட்டு இருக்கேன்!!ஆனா நீங்க அருமையா எழுதிரீங்க(குறிப்பாக கவிதை ரொம்ப நல்ல எழுதிரீங்க)இதை சும்மா சொல்லல படிச்சிட்டு தான் சொல்லுரேன்!!blog open செய்ததால தான் பின்னூட்டம் எழுதினேன்!!ஆனா அதுக்கு முன்னரே நான் படிச்சி இருக்கேன்!!நான் எப்பவும் தமிழ்மணத்தில் வரும் நல்ல விஷயங்களை விடுவதில்லை!!இதுக்குமேல நான் எதாவது சொன்னேன உங்களுக்கு ஜலதோஷம் வந்துடும்!!வாழ்த்துக்கள்!!

காயத்ரி சித்தார்த் said...

ஜலதோஷமா? ஜன்னியே வர்ற மாதிரி இருக்குங்க!! தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்!!!

குட்டிபிசாசு said...

ஜன்னி எல்லாம் வராது, வெயில் ரொம்ப அதிகம் (மேற்குவங்கத்துலயும்) இப்ப தானே சொன்னேன் உங்க தமிழ் பிடிச்சி இருக்குனு!! நன்றிய தமிழ்ல சொல்லுங்க!!

காயத்ரி சித்தார்த் said...

விட மாட்டீங்க போலருக்கே!! நன்றி.. நன்றி.. நன்றிங்ங்ங்க

ப்ரியன் said...

நவகிரகங்களை சுற்றுகையில் நினைவுக்கு வரும்

/*நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதைப் பெறுவது?*/

விகடன் முத்திரைக்கவிதைப் போல வெட்டப்பட்ட மரங்களை பார்க்க நேருகையில் உங்களின் இக்கவிதை இனி நினைவுக்கு வரும்...நன்று...வாழ்த்துக்கள்...

aparnaa said...

very good and impressive one!!

காயத்ரி சித்தார்த் said...

ப்ரியன்.. அபர்னா.. ரொம்ப நன்றிங்க!

குருத்து said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

கவிதையின் உள்ளடக்கத்தை உறவுகளில் பொருத்திப்பார்க்கிறேன்.

இறந்துபோன பாசமான அப்பா,
இறந்துபோன இன்னொரு அம்மாவான என் மூத்த சகோதரி
இளவயதிலேயே இறந்துபோன என் நண்பன் .... என வரிசையாய் நினைவிற்கு வந்து போகிறார்கள்.

கிடைத்த படிப்பினையால், சுதாரித்துவிட்டேன். சர்க்கரை நோயினால் சிரமப்படுகிற, என் அம்மாவை கடந்த இரண்டு வருடங்களாக கவனமாய் பார்த்துக்கொள்கிறேன்.

MSK / Saravana said...

மரம் மட்டுமா?