Sunday, June 24, 2007

பாசக்காரக் குடும்பம் - சந்திப்பு!

மயிலாடுதுறையில் பாசக்கார குடும்பத்தினர் சந்திப்பு இன்னிக்கு கலகலப்பா நடந்துச்சு! பதிவு போடனுமேன்னு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தா அதுக்குள்ள கண்மணி அக்கா முந்திகிட்டாங்க! வழக்கமா இந்த வலைப்பதிவர் சந்திப்புன்னு அறிவிப்பு வந்தா நான் போறதே இல்லீங்க.. நாம வேற புதுசாச்சே.. போனா யாரப் பாத்து என்ன பேசறது? 'ஏன் இப்டி எல்லாம் எழுதி எங்கள கொடுமைப்படுத்தறீங்க'ன்னு யாராச்சும் சண்டைக்கு வந்துடுவாங்களோன்னு பயம்தான்!

'இது பதிவர் சந்திப்பு' இல்ல.. பாசக்கார குடும்ப சந்திப்புன்னு அபிஅப்பா தெளிவா சொன்னதால தைரியமா கிளம்பிட்டேன். அபிபாப்பாவோட குட்டித்தம்பிய பாக்கப் போனோம்னு தான் பேரு.. அவன பாத்ததென்னவோ வெறும் 10 நிமிஷம் மட்டும்தாங்க.. அங்கியும் சும்மா கும்மி களை கட்டிருச்சு.

நம்ம அண்ணாச்சி நைட்ல இருந்தே 'கிளம்பிட்டிங்களா' 'எத்தன மணிக்கு பஸ் ஏறுரீங்க' ன்னு விசாரிச்சுட்டே இருந்தார். 'ச்சே! என்னவொரு அக்கறை'ன்னு நெகிழ்ந்து போய் காலைல 5.20 க்கெல்லாம் மாயவரத்துல இறங்கி போன் பண்ணினா... 6.15 வரை மனுஷர் போன எடுக்கவே இல்லீங்க! 'தூங்கிட்டாரா.. இல்ல வீட்ட காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரா'ன்னு தெரியல. அட்ரசும் தெரியாம அல்லாடி ஒரு வழியா நம்ம குடும்ப உறுப்பினர்களை விசாரிச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு ஆட்டோல ஏறப் போகும் போது ஃபோன் அடிக்குது! எடுத்தா.. "நீங்க காயத்ரியா? நான் கோபி" ன்னு ஒரு குரல்! "ஓ.. துபாய் கோபியா.. சொல்லுங்க எங்கிருக்கீங்க" ன்னு கேட்டா.. "உங்க பின்னாடி தான் நிக்கறேன்"ங்கிறார். (துபாய்க்காரங்க எல்லாரும் இப்டி தானா? :( ) திரும்பிப் பாத்தா கேத்ரீன், ரீட்டா, வில்மான்னு எல்லா புயலும் சேர்ந்து அடிச்ச மாதிரி பரிதாபமா நிக்கறார் மனுஷன். என்னாச்சுங்கன்னா "3.30 ல இருந்து கூப்பிடறேன்.. அபிஅப்பா ஃபோன் எடுக்க மாட்டீங்கிறார்.. பஸ் ஸ்டேண்ட சுத்தி சுத்தி வந்தேன்.. ஒரே கொசுக்கடி" ன்னு சொன்னார்! அட.. நாம பரவால்ல போலிருக்கேன்னு சந்தோஷம் எனக்கு!

தேடிப்பிடிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள அபிஅப்பாக்கு தெளிஞ்சுடுச்சு. (தூக்கத்தை சொன்னேன்! தப்பா புரிஞ்சுக்காதீங்க!!) வீட்டு வாசல்ல நின்னு.. போன் பண்ணினா.. ஓவர் குழப்பத்துல இருந்தார் போலிருக்கு " சொல்லு கோபி" ங்கிறார் என்கிட்ட! "அண்ணாச்சி வாசல்ல பாவமா நின்னுட்டிருக்கோம்.. கதவ திறங்க ப்ளீஸ்"னு கெஞ்சின பின்னாடி பதறியடிச்சு ஓடி வந்தார். :) இவரு நல்லா கவுந்தடிச்சு தூங்கிட்டு... 'அபி பாப்பா ஃபோன எங்கியோ கொண்டுபோய் வெச்சிட்டா'ன்னு அந்த பச்ச புள்ள மேல பழியப் போட்டார். கொஞ்சம் கூட நம்பற மாதிரி இல்ல!

மெதுவா.. 8.30 - 9 மணி இருக்கும் போது.. நம்ம சின்ன கைப்புள்ள ராயல் ராம், கவிஞர் ஜி, இம்சையரசி ஜெயந்தி வந்தாங்க. நலம் விசாரிப்பு.. எங்க சோகக் கதை எல்லாம் பேசி முடிக்கும்போது முத்துலட்சுமி வந்தாங்க... அவ்ளோ தான்.. அப்புறம் அவங்களே தான் பேசினாங்க! நடுவுல அவங்க தெரியாம கமா, புல்ஸ்டாப் ஏதாவது வெச்சாங்கன்னா நாங்க யாராச்சும்.. "எக்ஸ்க்யூஸ் மீ அக்கா! ஒரு பின்னூட்டம் போட்டுக்கலாமா?" ன்னு பர்மிஷன் வாங்கிட்டு பேசிக்கிட்டோம்! பேசினாங்க.. பேசினாங்க அவ்ளோ பேசினாங்க!

10 மணிக்கு மேல சென்ஷி வந்தார். முத்துலட்சுமி அக்காவ தவிர வேற யாரயும் தெரியாததால திருதிருன்னு முழிச்சார். அபிஅப்பா அவர் பாணில.. ஜெயந்திய காயத்ரின்னும்.. என்னை ஜெயந்தின்னும்.. கோபிய ஜி -ன்னும் ஜி-ய கோபின்னும் (ஏதாவது புரிஞ்சுதா?!) அறிமுகப்படுத்தி.. அப்புறம் தெளிவுபடுத்தினார். எவ்ளோ தெளிவுபடுத்தியும் பாவம்! சென்ஷி நிலைமை பரிதாபம்.. "நான் இன்னும் செட்டில் ஆகல போலிருக்கு"ன்னு புலம்பிட்டே இருந்தார்!

எல்லோராலும் ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட கண்மணியக்கா தான் காலைல 10 க்கு வரேன்னு சொல்லி 1 மணிக்கு வந்து சேர்ந்தாங்க! (டீச்சரே லேட்!) அப்புறம் கூட்டம் செமயா களை கட்டிருச்சு.. அக்கா சொன்ன மாதிரி இம்சையரசி, பணம் குடுத்தாக்கூட வாயத் திறக்கல! "பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாய்டுச்சு... நீங்க பேசறது எதுவுமே புரியல" ன்னு சொல்லிட்டு ஒரு குமுதமோட செட்டில் ஆய்ட்டாங்க. ஆனா.. ப.பா சங்கத்த யாரோ கிண்டல் பண்ணினதும் பொங்கி எழுந்து சண்டைக்கு வந்தாங்க! (யாரு நாங்க!!) ஜி-யும், கோபியும் நாங்களும் இருக்கோம்னு காட்டிக்கிற மாதிரி அப்பப்ப பேசினாங்க. கோபி டீச்சர்ட்ட ரொம்ப மரியாதையா பேசினார். சென்ஷிக்கு முத்துலட்சுமியக்காவ கலாய்க்கறதும், ராமுக்கு என்னைக் கலாய்க்கறதும் தலையாய கடமைகளா இருந்துச்சு! அபிஅப்பா செம பிசி. வந்து வந்து பேசிட்டுப் போனார். முத்துலட்சுமியக்கா மட்டும்... அதான் ஏற்கனவே சொன்னனே!! டீச்சர் வந்த உடனே... "எங்கே எல்லாரும் ஒவ்வொருத்தரா ரைம்ஸ் சொல்லுங்க"ன்ற மாதிரி எல்லார் டீடெய்ல்சும் சொல்ல சொன்னாங்க. எந்திரிச்சு நின்னு கைய கட்டிகிட்டு சொன்னோம்!! வேற என்ன...

* கும்மின்னா கண்மணி கண்மணின்னா கும்மி ன்னு ஆய்ட்டதால சீரியஸ் பதிவு போட்டா ஒருத்தரும் மதிக்கிறதில்லன்னு வருத்தப்பட்டாங்க. அதுக்கு தான் கும்மிக்குன்னு தனிப்பதிவு போட்டாங்களாம்.

* குழந்தைகளுக்காக 'குட்டீஸ் ஜங்ஷன்' ன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னாங்க.

* மூத்த பதிவர் (!!) ராயல் ராம்... வேறு சில மூத்த பதிவர்களைப் பற்றியும், காணாமல் போய்விட்ட பதிவர்களைப் பற்றியும், தமிழ்மணம் பற்றியும்
பேசினார். ரொம்ப சின்ன பெண்ணான நான் ஜெயந்தி போலவே முழிக்க வேண்டியிருந்தது!

* Wordpress templates பயன்படுத்துவதில் இருக்கிற சாதக பாதகங்களைப் பேசினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கலாய்ச்சதோட அப்பப்ப என் கவிதை மற்றும் மொக்கை பதிவுகளை பெரிய மனசு பண்ணி பாராட்டினார்.

* முத்துலட்சுமி சீரியசாய் நிறைய பேசினதால எல்லாத்தயும் நியாபகம் வெச்சுக்க முடியல. முக்கியமா.. "நாம இப்பிடியெல்லாம் கும்மி அடிக்கிறோமே.. இது சரியா தப்பா" ன்னு நாயகன் ஸ்டைல்ல கேட்டாங்க.. அதுக்கு ராம் "நாலு பேர பாதிக்காதுன்னா எந்த கும்மியும் தப்பில்ல" ன்னு அதே ஸ்டைல்ல பதில் சொல்லிட்டார். குறிப்பாக.. கும்மியடிப்பவர்கள் அனைவரும் நம் குடும்பத்தவர்கள் என்பதாலேயே அது சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* புதிய பதிவர்களில்.. குசும்பன் மற்றும் குட்டிப்பிசாசின் பதிவுகள் நன்றாக இருப்பது பற்றி பேசப்பட்டது. அய்யனார் நாள் முழுக்க பேச்சில் அடிபட்டுக் கொண்டே இருந்தார். ( விக்கல் எடுத்துச்சா அய்யனார்?) பின்னூட்ட கும்மிகளைப் பற்றியும் பேசிச் சிரித்தோம். சென்ஷி வழக்கம் போலவே பேச்சிலும் "ரிப்பீட்டே" போட்டுக் கொண்டிருந்தார். மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.

* இது பாசக்கார குடும்ப சந்திப்பாக மட்டுமல்லாமல் ப.பா சங்கத்தின் செயற்குழு கூட்டமாகவும் அமைந்தது தனிச்சிறப்பு! (கண்மணி, நான், ஜெயந்தி)

* பின்நவீனத்துவம் (பின்னால தத்துவம்?) பற்றிக்கூட பேச ஆரம்பித்தோம்.. எங்கள் யாருக்குமே அது பற்றி தெரியாததால் நிறுத்திவிட்டோம்! :))

* அபிபாப்பாவும் முத்துலட்சுமியக்காவின் மகள் மாதினியும் இணைந்து பதிவு தொடங்கவிருப்பது புதிய தகவல்! விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்!


இது தவிர அபிஅப்பாவின் பொறுப்புணர்ச்சி, அபிபாப்பாவின் திறமைகள் போன்றவை தெரிய வந்தது. ஜன்னல் கதவை திறக்கக்கூட.. "பாப்பா இத எப்பிடி திறக்கனும்?"ன்னு சந்தேகம் கேட்கிறார் அண்ணாச்சி.

இறுதியாக அபிதம்பியை மருத்துவமனையில் சந்தித்தோம். பஞ்சுப்பொதி போல, கொள்ளை அழகுடன் உள்ளங்கைகளை இறுக்கிகொண்டு மும்முரமாய் தூங்கிக் கொண்டிருந்தார்! இரவெல்லாம் கண்விழித்து அழுததன் களைப்பாம்!! நேரமின்மையால் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கிருக்க முடிந்தது.

காலையில் சொதப்பி விட்டதால் இரவு நான் ஊருக்கு திரும்பி வரும்போது அப்பப்ப போன் பண்ணி விசாரிச்சுட்டே இருந்தார் அண்ணாச்சி! "நீங்க பத்திரமா போய்சேர்ந்துட்டீங்கன்னு (!!??) தெரிஞ்சா தான் நான் நிம்மதியா தூங்குவேன்"னு சொன்னார். 12.42 க்குக்கூட பேசினவர்.. 12.51 க்கு நாங்க வீட்டுக்கு வந்து போன் பண்ணும் போது தூங்கிட்டார். :) எடுக்கவே இல்ல!!

ஆக மொத்தம் நான் பிற்காலத்துல எழுதப்போற சுயசரிதைல 'மறக்க முடியாத அனுபவங்கள்' ன்னு ஒரு அத்தியாயம் எழுத வாய்ப்பளித்த பாசக்கார குடும்பத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

பி.கு : மதியம் சாப்பாட்டில் நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாமே இருந்தது நிஜம் தான். நேரமின்மை காரணமாகவும் நண்பர்களின் கேலி கிண்டலாலும் மிகககக் குறைவாகத் தான் சாப்பிட்டேன் என்பதை இதன் மூலம் கண்மணி அக்காவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்! :(

202 comments:

1 – 200 of 202   Newer›   Newest»
ILA (a) இளா said...

அட போங்கப்பா, இந்த சந்திப்பை மிஸ் பண்ணிட்டேனே :(. இப்படி ஒரு வயித்தெரிச்சலைக் கிளப்பனுமா?

delphine said...

அபி தம்பி போட்டா ஒண்ணு போட்டிருக்கலாமே!
ஏன் இன்னும் ஆஸ்பத்ரியில்..?
ஒருவேளை சிசேரியனோ?
almost eight days over?

manasu said...

//தேடிப்பிடிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள அபிஅப்பாக்கு தெளிஞ்சுடுச்சு. (தூக்கத்தை சொன்னேன்! தப்பா புரிஞ்சுக்காதீங்க!!) //

ரொம்ப குசும்புங்க உங்களுக்கு கலைஞர் மாதிரியே!! அவரும் அறிக்கை விட போறார் என் 49 வருட வாழ்க்கையில் நான் மதுவ தொட்டதே இல்லன்னு....

தமிழ்நதி said...

மாயவர சந்திப்பில் கலந்துகொண்டது போலவே இருந்தது. இன்றைக்கு நடக்கப்போகிற சந்திப்பைப் பற்றியும் இப்படி யாராவது எழுதுவார்களாயின் இன்றைக்குப் போகாமல் விடலாமென்றிருந்தேன். ஆனால் முத்துலட்சுமி காலையிலேயே தொலைபேசியில் அழைத்து 'வரீங்க இல்லை?'என்று கேட்டுவிட்டார். போய்ப் பார்க்கலாம் இன்று என்ன திருவிளையாடல் என்பதையும். காயத்ரி! நீங்கள் சென்னை சந்திப்பிற்கும் வந்திருக்கலாமே... பரவாயில்லை... எத்தனை சந்திப்பைத் தவறவிட்டாலும் எதனையும் தவறவிட மாட்டீங்க :)

CVR said...

நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க போல!!
வாழ்த்துக்கள்!!

ராம் அண்ணாவும் , இம்சை அரசி அக்க்காவும் என் சார்பா குழந்தைக்கு சிறப்பு வாழ்த்து சொன்னாங்களா??

:-)))

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ!! ;-)

MyFriend said...

இது ஒரு கும்மி பதிவுதானேஏ!! கும்மியடி பெண்ணே! கும்மியடி..

MyFriend said...

ஹாஹாஹா.. நல்ல ஒரு ரிப்போர்ட் எழுதியிருக்கீங்க.. கண்மணி டீச்சர்ட்ட சொல்லி பாஸ் போட சொல்றேன். :-)

MyFriend said...

கோபி.. அவ்வாளோ நல்ல்ல்ல்ல்லவனாஆஆ நீங்க? ;-)

இல்ல அபி அப்பா பழி வாங்கிட்டாரா?

MyFriend said...

//'இது பதிவர் சந்திப்பு' இல்ல.. பாசக்கார குடும்ப சந்திப்புன்னு அபிஅப்பா தெளிவா சொன்னதால தைரியமா கிளம்பிட்டேன். //

அதனாலத்தான் அங்கே சூப்பரா கும்மியடிச்சீங்களா? ;-)

MyFriend said...

//தேடிப்பிடிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள அபிஅப்பாக்கு தெளிஞ்சுடுச்சு.//

புரிஞ்சிடுச்சு!!!

MyFriend said...

//எங்க சோகக் கதை எல்லாம் பேசி முடிக்கும்போது முத்துலட்சுமி வந்தாங்க... அவ்ளோ தான்.. அப்புறம் அவங்களே தான் பேசினாங்க! நடுவுல அவங்க தெரியாம கமா, புல்ஸ்டாப் ஏதாவது வெச்சாங்கன்னா நாங்க யாராச்சும்.. "எக்ஸ்க்யூஸ் மீ அக்கா! ஒரு பின்னூட்டம் போட்டுக்கலாமா?" ன்னு பர்மிஷன் வாங்கிட்டு பேசிக்கிட்டோம்! பேசினாங்க.. பேசினாங்க அவ்ளோ பேசினாங்க!
//

ROTFL... :-))))

MyFriend said...

//"நான் இன்னும் செட்டில் ஆகல போலிருக்கு"ன்னு புலம்பிட்டே இருந்தார்!
//

இப்போவாவது ச்ட்ட்ல் ஆயிட்டீங்கலா சென்ஷி?

MyFriend said...

//கும்மின்னா கண்மணி கண்மணின்னா கும்மி ன்னு ஆய்ட்டதால சீரியஸ் பதிவு போட்டா ஒருத்தரும் மதிக்கிறதில்லன்னு வருத்தப்பட்டாங்க. அதுக்கு தான் கும்மிக்குன்னு தனிப்பதிவு போட்டாங்களாம்.
//

பல்சுவைல இனி கும்மி இல்லையா? :-(((

MyFriend said...

//மூத்த பதிவர் (!!) ராயல் ராம்... //

ஹாஹாஹா.. ஹேஹேஹே.. ஹோஹோஹோ..

MyFriend said...

//"நாம இப்பிடியெல்லாம் கும்மி அடிக்கிறோமே.. இது சரியா தப்பா" ன்னு நாயகன் ஸ்டைல்ல கேட்டாங்க.. அதுக்கு ராம் "நாலு பேர பாதிக்காதுன்னா எந்த கும்மியும் தப்பில்ல" ன்னு அதே ஸ்டைல்ல பதில் சொல்லிட்டார். //

ஆக மொத்ததுல எல்லாரும் சேர்ந்து ட்ராமா பண்ணிட்டு இருந்திருக்கீங்க!!

MyFriend said...

//குறிப்பாக.. கும்மியடிப்பவர்கள் அனைவரும் நம் குடும்பத்தவர்கள் என்பதாலேயே அது சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.//

அது என்னமோ ரைட்டுதான்.. (அதைதானே இப்போ பண்ணிட்டு இருக்கேன்.) ;-)

MyFriend said...

//புதிய பதிவர்களில்.. குசும்பன் மற்றும் குட்டிப்பிசாசின் பதிவுகள் நன்றாக இருப்பது பற்றி பேசப்பட்டது.//

இது முக்கியமாக பேசப்பட விஷயமேதான்.. அவங்களுக்கு எதாவது அவார்டு, லெக் பீஸு தரலையா?

இதுல குட்டிபிசாசு உங்களுக்கு லெக் பீஸு கிடைச்சதான்னு நலம் விசாரிச்சார்.. மறந்துடாதீங்க..

MyFriend said...

//அய்யனார் நாள் முழுக்க பேச்சில் அடிபட்டுக் கொண்டே இருந்தார்.//

மெடிகல் பில்லு அபி அப்பாதானே கட்டுறார்?

MyFriend said...

//சென்ஷி வழக்கம் போலவே பேச்சிலும் "ரிப்பீட்டே" போட்டுக் கொண்டிருந்தார். //

இன்னும் செட்டில் ஆகலை போல இவரு...

MyFriend said...

//மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.
//

என்னன்னு?

MyFriend said...

///இது பாசக்கார குடும்ப சந்திப்பாக மட்டுமல்லாமல் ப.பா சங்கத்தின் செயற்குழு கூட்டமாகவும் அமைந்தது தனிச்சிறப்பு! //

இதுக்கும் ஒரு பதிவு நிச்சயம்தானே? ;-)

MyFriend said...

//பின்நவீனத்துவம் (பின்னால தத்துவம்?) பற்றிக்கூட பேச ஆரம்பித்தோம்.. எங்கள் யாருக்குமே அது பற்றி தெரியாததால் நிறுத்திவிட்டோம்! :))//

ஜூப்பர்! அது பத்தி எனக்கும் தெரியாது.. ;-)

MyFriend said...

//அபிபாப்பாவும் முத்துலட்சுமியக்காவின் மகள் மாதினியும் இணைந்து பதிவு தொடங்கவிருப்பது புதிய தகவல்! விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்!//

அபி தம்பி எப்போ எழுதுறானாம்? கேட்டீங்களா?

MyFriend said...

எத்த்னை டிச்சேன்னு கணக்கு பண்ணலையே! ஒரு குவாட்டர் போட வழி இருக்கா?

MyFriend said...

என்ன? இல்லைய்யா?

MyFriend said...

பரவாயில்ல.. பாசக்கார குடும்ப மக்கள்ள்ஸ் பின்னால வந்து செஞ்சுரி அடிப்பாங்க..

MyFriend said...

நான் அடுத்த ரவுண்டு வர்றடதுக்குள்ள கமேண்டு மோடர்ர்ட் பண்ணி வைங்க..

வர்ர்ர்ட்ட்ட்டாஆஆ!!!

MyFriend said...

அக்கா,, ஆன்லைன்லதான் இருக்கீங்களா? அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா?

Anonymous said...

போட்டிருக்கிற ஒவ்வொரு கும்மிக்கும் கவிதாயினி பதில் சொல்லியே தீரனும்!

MyFriend said...

இன்னைக்கு சென்னை சந்திப்புக்கு நீங்க போகலையா?

SENTHIL EG IYAPPAN said...

Hi,
நடப்பன, பறப்பன, நீந்துவன ellaam saapidumbodhu vera feeling edhum vendaam. Nallaa Paathi katti saapidanum.

May God Bless.

MyFriend said...

25 போட்டது நாந்தானா? :-)))

கூலா ஒரு சோடா கொடுங்கப்பா. ;-)

MyFriend said...

என் பின்னூட்டங்களுக்கு பதில் போடாமல் இருக்கும் காயத்ரியை கடுமையாக கண்டிக்கிறேண். :-P

காயத்ரி சித்தார்த் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.
//

என்னன்னு? //

உன்னோட ஃப்ர்ஸ்ட்டோ மேனியா பத்தி தான்!!

MyFriend said...

மின்னல், குட்டி பிசாசு, குசும்பன், ஜி3, கோபி, சென்ஷி, கண்மனி டீச்சர், மற்றும் எல்லா பாசக்கார குடும்பமும் எங்கப்பா? இங்கண ஒரு பொண்ணு கடையை திறந்து வச்ஷுட்டு குந்திட்டு இருக்கா... வாங்க புகுந்து விளையாடுவோம். ;-)

காயத்ரி சித்தார்த் said...

நல்லா குவார்ட்டர் அடிக்கிறே செல்லம்!! சோடா எதுக்கு?!!

MyFriend said...

////.:: மை ஃபிரண்ட் ::. said...
//மை ஃப்ரண்ட், சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகா ஆகியோர் பற்றியும் பேசினோம்.
//

என்னன்னு? //

உன்னோட ஃப்ர்ஸ்ட்டோ மேனியா பத்தி தான்!! //

அப்போ சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகாவுக்கும் இந்த ஃபர்ஸ்ட்டோமோனியா நோய் இருக்கா?

ஜி3, வந்து இதை பத்தி கேளுங்க. ;-P

காயத்ரி சித்தார்த் said...

அடிப்பாவி.. வந்தது 1 மணிக்கு.. பதிவு போட்டு முடிச்சது 5 மணிக்கு. தூங்க வேணாமா நான்? இப்பவே மங்கலா தான் தெரியுது எல்லாம்!

காயத்ரி சித்தார்த் said...

யாருமே இல்லன்னாலும் தன்னந்தனியா கும்மி அடிச்சிருக்கியே!! உன் திறமையே திறமை!!

MyFriend said...

@காயத்ரி:

//நல்லா குவார்ட்டர் அடிக்கிறே செல்லம்!! சோடா எதுக்கு?!!
//

குவாட்டர் எனக்கில்ல.. அந்த குடிகார குப்பனுக்கு.. நேத்து அடிச்ச மப்பு இன்னும் இறங்காம குப்புற அடிச்சு படுத்திருக்கான்.. இன்னும் எழுந்திரிக்கலை.. யாருன்னு நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம். ;-)

MyFriend said...

@காயத்ரி:

//
அடிப்பாவி.. வந்தது 1 மணிக்கு.. பதிவு போட்டு முடிச்சது 5 மணிக்கு. தூங்க வேணாமா நான்? இப்பவே மங்கலா தான் தெரியுது எல்லாம்! //

மங்கலா தெரியுதா? பக்கதுல இருக்கிற சோட பொட்டி கண்ணாடிய மாட்டுங்க.. தெளிவா தெரியும். :-P

காயத்ரி சித்தார்த் said...

யாருன்னு கண்டுபிடிக்கிறதா? நானு வரல இந்த ஆட்டத்துக்கு.!!

MyFriend said...

@காயத்ரி:

//உன்கிட்ட உன்ன பத்தி பேசினத மட்டும் தான் சொல்லமுடியும்.. (பாவி சிண்டு முடியாதே!!) //

நீங்க எங்க என் கிட்ட மட்டும் சொன்ன்னீங்க? எல்லாருக்கும்தானே சொன்னீங்க.. இது பப்ளிக் chat... எல்லாரும் படிப்பாங்க இல்ல?
:-P

MyFriend said...

பின்னூட்டம் 40-ஐ தாண்டி வெகு வேகமாக பின்னி பெடலெடுத்து ஓடுது!! இன்னும் பாசக்கார குடும்பமத்த உருப்பிணர்கள் வரல.. வந்தா.. இன்னைக்கு செஞ்சுரி நிச்சயம். ;-)

MyFriend said...

@காயத்ரி:

//யாருன்னு கண்டுபிடிக்கிறதா? நானு வரல இந்த ஆட்டத்துக்கு.!!//

பாப்பா, பயமறியா பாவையம்மா நீயி! இப்படி ஆட்டத்துல இருந்து ஒதுங்கலாமா? :-P

காயத்ரி சித்தார்த் said...

இப்பதான் கண்ணு முழிச்சிருக்கேன்.. மறுபடியும் ஊருக்க்க்காஆஆஆ? சென்னை ரொம்ம்ம்ம்ம்ப தூரம்!

MyFriend said...

என்ன காயத்ரி..

நீங்க இவ்வளோ ஸ்லோவா லைப் பண்றீங்க? ஸ்பீட்டை கூட்டுங்க..ம்ம்.. தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்க வேண்டாமா?

காயத்ரி சித்தார்த் said...

ஆஹா!! வந்துட்டாரய்யா மூத்த பதிவர்!!

MyFriend said...

@காயத்ரி:

//இப்பதான் கண்ணு முழிச்சிருக்கேன்.. மறுபடியும் ஊருக்க்க்காஆஆஆ? சென்னை ரொம்ம்ம்ம்ம்ப தூரம்!
//

நேத்து அங்கணவே கேம்ப் போட்டிருக்கலாமே?

காயத்ரி சித்தார்த் said...

ஸ்லோவா? உன் ஸ்பீடுக்கு வரமுடியுமா தங்கச்சி! எனக்கு இப்பியே கண்ண கட்டுது! ஒரு முடிவோட தான் இருக்கியா நீயி?

காயத்ரி சித்தார்த் said...

அங்ஙனயே கேம்ப்பா? என்னை வீட்டு விட்டு துரத்த ப்ளான் பண்றியா நீ?

MyFriend said...

@காயத்ரி:

//
ஸ்லோவா? உன் ஸ்பீடுக்கு வரமுடியுமா தங்கச்சி! எனக்கு இப்பியே கண்ண கட்டுது! ஒரு முடிவோட தான் இருக்கியா நீயி? //

இது முடிவில்லா ஆரம்பம்.. நேத்து எடுத்த தீர்மானங்களை நிரைவேத்தணும்ல. ;-)

காயத்ரி சித்தார்த் said...

தீர்மானமே போடறதில்லன்றது தான் நேத்து எடுத்த தீர்மானம்? என்னது போலி 'தல' யா? நானு இன்னும் வளரணும் போலிருக்கே!

MyFriend said...

@காயத்ரி:

//
அங்ஙனயே கேம்ப்பா? என்னை வீட்டு விட்டு துரத்த ப்ளான் பண்றியா நீ?
//

ரெண்டு நாளு வீட்டுல அம்மா, அப்பா & தம்பி நிம்மதியா இருக்கட்டுமேங்கிற நல்லெண்ணம்தான். ;-)

குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//புதிய பதிவர்களில்.. குசும்பன் மற்றும் குட்டிப்பிசாசின் பதிவுகள் நன்றாக இருப்பது பற்றி பேசப்பட்டது.//

இது முக்கியமாக பேசப்பட விஷயமேதான்.. அவங்களுக்கு எதாவது அவார்டு, லெக் பீஸு தரலையா?

மைஃபிரண்ட் இதுல உல்குத்து ஏதும் இல்லையே!!!
உல்குத்து இல்லை என்றால் மைஃபிரண்ட் மைஃபிரண்ட் தான்.


மகிழ்ச்சியான சந்திப்பு இதுவரை எல்லாரையும்
மிஸ் செய்துவிட்டோமே என்று ஒரு சிறு வருத்தம்..

MyFriend said...

@காயத்ரி:

//தீர்மானமே போடறதில்லன்றது தான் நேத்து எடுத்த தீர்மானம்? என்னது போலி 'தல' யா? நானு இன்னும் வளரணும் போலிருக்கே! //

நேத்து நீங்க லெக் பீஸுலேயே கவனம் செலுத்துனதிலிலேயே எடுத்த தீர்மானக்களை மறந்துட்டீங்க போல.. ஹீஹீ

காயத்ரி சித்தார்த் said...

ஹி ஹி! அம்மாவயும் கூட்டிட்டு தானே போனேன்! எங்க நிம்மதியா இருக்கறது?

MyFriend said...

ஆஹா.. வந்துட்டார்ய்யா குசும்பன்.. வாங்க.. ஒரு கை குறையுது! ஆட்டம் ஆடுவொம்.. ;-)

காயத்ரி சித்தார்த் said...

நல்லா கேளுங்க குசும்பன்.. ஒரே குடும்பத்துல.. சங்கத்துல இருந்துகிட்டு மனசாட்சியே இல்லாம கலாய்க்கறத பாருங்க. என்ன வருத்தம்? அதான் எல்லாத்தயும் பதிவுல போட்டாச்சில்ல?

MyFriend said...

@குசும்பன்:

//மைஃபிரண்ட் இதுல உல்குத்து ஏதும் இல்லையே!!!
உல்குத்து இல்லை என்றால் மைஃபிரண்ட் மைஃபிரண்ட் தான்.//

உள்குத்தா? அப்படின்னா என்ன? :-P
கவலை வேண்டாம் குசும்பரே! உள்குத்து எதுவும் இல்லவே இல்ல.. ;-)


//மகிழ்ச்சியான சந்திப்பு இதுவரை எல்லாரையும்
மிஸ் செய்துவிட்டோமே என்று ஒரு சிறு வருத்தம்.. //

நமக்கு டிக்கெட் வாங்கி கொடுக்காமல் சந்திப்புக்கு வரமுடியாமல் செய்த அபி அப்பாவுக்கு கண்டனம் தெரிவிப்போம் வாங்க.. ;-)

காயத்ரி சித்தார்த் said...

//நேத்து நீங்க லெக் பீஸுலேயே கவனம் செலுத்துனதிலிலேயே எடுத்த தீர்மானக்களை மறந்துட்டீங்க போல.. ஹீஹீ //

பாவி நீயுமா? அவ்வ்வ்வ்வ்வ்.. :(((

MyFriend said...

@காயத்ரி:

//ஹி ஹி! அம்மாவயும் கூட்டிட்டு தானே போனேன்! எங்க நிம்மதியா இருக்கறது? //

ஆமா ஆமா.. அம்மாவுக்கு நிம்மதியே இருந்திருக்காது. ;-)

காயத்ரி சித்தார்த் said...

//நீங்கள் சென்னை சந்திப்பிற்கும் வந்திருக்கலாமே... பரவாயில்லை... எத்தனை சந்திப்பைத் தவறவிட்டாலும் எதனையும் தவறவிட மாட்டீங்க :) //

உங்கள பாக்க முடியாதது வருத்தம் தான் தமிழ்! என்ன இது? ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கே?

MyFriend said...

@காயத்ரி:

//நல்லா கேளுங்க குசும்பன்.. ஒரே குடும்பத்துல.. சங்கத்துல இருந்துகிட்டு மனசாட்சியே இல்லாம கலாய்க்கறத பாருங்க. என்ன வருத்தம்? அதான் எல்லாத்தயும் பதிவுல போட்டாச்சில்ல? //

கலாய்க்கிறது நல்லதுக்கேன்னு சின்ன கைப்புள்ள சொல்லியுக்கார்ல.. அதான்! ஹீஹீ

MyFriend said...

@காயத்ரி:

//பாவி நீயுமா? அவ்வ்வ்வ்வ்வ்.. :((( //

முன்னால "அப்" சேர்த்துக்கோங்க.. அப்+பாவி = அப்பாவி.. ;-)

காயத்ரி சித்தார்த் said...

ஹலோ குசும்பன்.. நீங்க அவள தட்டிக்கேப்பீங்கன்னு பாத்தா இப்டி சேம் சைட் கோல் போடறீங்களே?

காயத்ரி சித்தார்த் said...

அப்பாவியாமா!! :))) இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லியா? :(

MyFriend said...

@காயத்ரி:

//
ஹலோ குசும்பன்.. நீங்க அவள தட்டிக்கேப்பீங்கன்னு பாத்தா இப்டி சேம் சைட் கோல் போடறீங்களே?
//

இதுதான் கும்மி கோஷ்டிங்கன்றது! ;-)

காயத்ரி சித்தார்த் said...

மலேஷியால யாரும் தூங்கவே மாட்டிங்களா?

MyFriend said...

@காயத்ரி:

//அப்பாவியாமா!! :))) இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லியா? :(
//

இதோ நான் இருக்கேன். :-D

காயத்ரி சித்தார்த் said...

நீதான் இருக்கியே? :( ஏம்பா எனக்கு துணைக்கு யாராச்சும் வாங்களேன்?

MyFriend said...

@காயத்ரி :
//
மலேஷியால யாரும் தூங்கவே மாட்டிங்களா?
//

இப்போ மணி என்ன தெரியுமா? மதியம் 1.. நான் உங்களை போலவா மதியம் 1 வரைக்கும் தூங்குவேன்?

(உள்குத்து போதுமா?) :-P

கண்மணி/kanmani said...

காயத்ரி கொன்னுட்டே போ!!!!![நீ சாப்பிட்ட கோழியச் சொல்லல] மேட்டர அக்கு அக்கா பிரிச்சி மேஞ்சிட்டியே அதைச் சொன்னேன்.

குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//அபிபாப்பாவும் முத்துலட்சுமியக்காவின் மகள் மாதினியும்
இணைந்து பதிவு தொடங்கவிருப்பது புதிய தகவல்!
விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்!//

அபி தம்பி எப்போ எழுதுறானாம்? கேட்டீங்களா?

ஏன் மைஃபிரண்ட் எனக்கு போட்டியா இன்னொரு சிங்கத்த கூப்பிட்டு
வம்புக்கு இழுக்கிறீங்க....தம்பி வயசுலதான் இங்க ஒரு "கொயந்த"
புள்ள குசும்பன் என்கிற பெயரில் எழுதுகிறதே!!!

MyFriend said...

@கண்மணி:

//
காயத்ரி கொன்னுட்டே போ!!!!![நீ சாப்பிட்ட கோழியச் சொல்லல] மேட்டர அக்கு அக்கா பிரிச்சி மேஞ்சிட்டியே அதைச் சொன்னேன்.
//

கண்மணி டீச்சர், அக்கா பரிட்சையில பாஸ்தானே? ;-)

காயத்ரி சித்தார்த் said...

யக்கோவ்! மறுபடி கோழியா? :( மைஃப்ரண்ட் மாதிரி.. பதிவுல "மீ த ஃப்ர்ஸ்ட்டுனு" போட நினச்சேன்.. முந்திகிட்டீங்க.. இதுக்கு தான் அவ்ளோ அவசரமா கிளம்பினிங்களா? தெரியாம போச்சே?

MyFriend said...

@காயத்ரி:

//யக்கோவ்! மறுபடி கோழியா? :( மைஃப்ரண்ட் மாதிரி.. பதிவுல "மீ த ஃப்ர்ஸ்ட்டுனு" போட நினச்சேன்.. முந்திகிட்டீங்க.. இதுக்கு தான் அவ்ளோ அவசரமா கிளம்பினிங்களா? தெரியாம போச்சே? //

இதுலேயுமா? ஸ்ஸ்ஸப்ப்ப்பாஆஆ.. இப்பவே கண்ண கட்டுதே!!!!

காயத்ரி சித்தார்த் said...

ஆத்தி நீ வேற எடுத்துக் கொடுக்காதே! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல..

MyFriend said...

@காயத்ரி:

//ஆத்தி நீ வேற எடுத்துக் கொடுக்காதே! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல.. //

நான் நம்பிட்டேனாக்கும். :-P

காயத்ரி சித்தார்த் said...

அக்காஆஆஆ.. உங்க வேலை தானா!!

MyFriend said...

@காயத்ரி:

//அக்காஆஆஆ.. உங்க வேலை தானா!! //

யக்கா.. இன்னைக்கு என்கேயும் வெளியே போகலையா?

குசும்பன் said...

லெக்பீஸ் வராத வரை நான் மைஃபிரண்ட் சைட்...

மைஃபிரண்ட் அடுத்து கோழிக்கு ஏன் இரண்டு கால் படைத்தாய் ஆண்டவான்னு ஒரு கவிதையை
காயத்திர் ரெடி செய்துக்கிட்டு இருக்கிறார்கள்....என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்..

MyFriend said...

விளையாட்டு சூடு பிடிக்குதே!!! இங்கண நிறைய பேர் இருக்கீங்களே! வாங்க செஞ்சுரி அடிக்கலாம். ;-)

காயத்ரி சித்தார்த் said...

அக்கா.. யாருக்கு இம்போஷிசன் குடுத்தீங்க?

MyFriend said...

காய்த்ரியக்கா, கண்ண கட்டுதா? :-P

MyFriend said...

@காயத்ரி:

//அக்கா.. யாருக்கு இம்போஷிசன் குடுத்தீங்க? //

கண்மணி டீச்சர், உங்கள இவீங்க கூப்பிடுறாங்க.. :-P

குசும்பன் said...

காய்திரி பேசியது பாதி புரியவில்லை
என்று அபி அப்பா சொன்னார்..
எப்படி பேசினார் என்று கேட்டதற்க்கு

கும்வவேஎ னன் வா எவ்து ( கும்மி அடிக்ககூடாதுன்னு சொல்ல
வந்திருக்கிறார் வாயில் லெக் பீஸ் இருந்ததால் சிறு குழப்பம்)...

பின் அபி அப்பா நம்ம காயதிரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது நாமக்கல் பக்கம் பார்களாம் அங்கு கோழி பண்னை ஓனர் பையன் இருந்தால் சொல்லுங்கள் என்றார், நான் தான் சிபியிடம் கேட்போம் என்றேன்..

MyFriend said...

100 அடிக்க வழி இருக்கா?

MyFriend said...

100 அடிச்சாச்சு.. கூலா ஒரு பெப்ஸி டுவீஸ்ட் ப்லீஸ். ;-)

காயத்ரி சித்தார்த் said...

மயக்கமே வருது!!

MyFriend said...

ஆடுத்த தார்கேட் என்ன?

Anonymous said...

200

Anonymous said...

என்னோட காலை காணோம்!!!

MyFriend said...

///கும்வவேஎ னன் வா எவ்து ( கும்மி அடிக்ககூடாதுன்னு சொல்ல
வந்திருக்கிறார் வாயில் லெக் பீஸ் இருந்ததால் சிறு குழப்பம்)...///

ஜூப்பர் கலக்கல் குசும்பா
:-))))

காயத்ரி சித்தார்த் said...

என்ன கொடுமை சார் இது? இன்னிக்கு நான் தான் மாட்டினேனா? ஏய்.. குசும்பா அடங்குப்பா நீயி.

MyFriend said...

@காயத்ரி:

//என்ன கொடுமை சார் இது? இன்னிக்கு நான் தான் மாட்டினேனா? ஏய்.. குசும்பா அடங்குப்பா நீயி. //

லெக் பீஸ் இப்போ கையிலதானே இருக்கு காயத்ரி? :-P

குசும்பன் said...

காயத்ரி said...

மயக்கமே வருது!!

மைஃபிரண்ட் இப்ப பாருங்க எப்படி மயக்கத்த தெளிய வைக்கிறேன்னு...

யேய் யார்ப்பா அங்க சிக்கன் பிரியாணிய இங்க எடுத்து வா!!! என்னப்பா பிரியாணி மட்டும் கேட்டா
65யும் சேர்த்து எடுத்துவர

என்ன காயத்ரி மயக்கம் வருதுன்னு சொன்னீங்க..

மேட்சுக்கு போறதுக்கு முன்னாடி வாம் அப் செய்யுறமாதிரி ஏதோ செஞ்சுக்கிட்டு இருக்கீங்க

ஒ அடுத்த ரவுண்டா!!!

Anonymous said...

எங்க இனத்தின் கால்களையே குறி பார்த்து முழுங்கும் காயத்ரியை எங்க சங்கம் ஒழிக ஒழிக என்று போராட்டம் நடத்த போகிறது!!!!

MyFriend said...

கமேண்ட் மோடரேஷன் தூக்கலையா நீங்க?

காயத்ரி சித்தார்த் said...

ஒழிஞ்சு போங்க எல்ல்லாம்.. என்னால முடியலலலலலல..

MyFriend said...

குசும்பா,

அவங்க மூக்கு கிட்ட வச்சு வாசத்தை காட்டிட்டு வாய்க்குள்ள போகறதுக்குள்ள எடுத்து போயிடணும்.. சரியா?

MyFriend said...

@காயத்ரி:

//ஒழிஞ்சு போங்க எல்ல்லாம்.. என்னால முடியலலலலலல.. //

கோழி இனம் அழியத்தானே நீங்க லெக் பீசா பார்த்து அடிக்கிறீங்க.. புதுசா சிக்கன் 65.. :-P

Ayyanar Viswanath said...

லைவ் கமெண்ட்ரி கேட்டாப்ல இருக்கு பதிவு..

நன்றி

கும்மியடித்து களேபரப்படுத்திய அனைவரையும் வன்மையாக கண்ணடிக்கிறேன்

MyFriend said...

மயக்கம் தெளிஞதா?

MyFriend said...

காயத்ரி, போயிட்டீங்களா?

MyFriend said...

என்னப்பா.. ஆட்டம் ஸ்லோவா இருக்கு இன்னைக்கு?

கும்மி மன்னன் மின்னலை காணோமே!!!

காயத்ரி சித்தார்த் said...

கண்மணி யக்கோவ்.. போதும் விட்ருங்க ப்ளீஸ்!!

MyFriend said...

பாசக்கார குடும்ப சந்திப்புக்கு 100 கமேண்ட்ஸ் பத்தாது!! வந்து அடிங்க.. நாம யாருன்னு காட்டுவோம். ;-)

காயத்ரி சித்தார்த் said...

மின்னலா? அவரு வேற வரனுமா? நீய்யே இன்னிக்கு அடிச்சு ஆடறியே?

Anonymous said...

போதும் என்பது என் அகராதியிலேயே இல்ல

MyFriend said...

125 அடிக்க வழி இருக்கா?

MyFriend said...

@காயத்ரி:

//
மின்னலா? அவரு வேற வரனுமா? நீய்யே இன்னிக்கு அடிச்சு ஆடறியே?
//

மின்னல் இல்லாம ஆட்டமா? ;-)

காயத்ரி சித்தார்த் said...

யாருன்னு காட்றதா? ஒருத்தருக்கும் வேல வெட்டி இல்லன்னு எல்லாருக்கும் தெரியனும்! அதானே உன் குறிக்கோள்? நீ நடத்து.. எங்க இந்த ஜி3 ய காணோம்? வரட்டும் லேட் ஆனதுக்கு பெஞ்ச் மேல நிக்க வெக்கறேன்!

MyFriend said...

125 போட்டாச்சு! ;-)

Anonymous said...

நான் வந்துட்டேன்.. ஆத்தா நான் வந்துட்டேன்!!!

MyFriend said...

@காயத்ரி:
//
யாருன்னு காட்றதா? ஒருத்தருக்கும் வேல வெட்டி இல்லன்னு எல்லாருக்கும் தெரியனும்! அதானே உன் குறிக்கோள்? நீ நடத்து.. எங்க இந்த ஜி3 ய காணோம்? வரட்டும் லேட் ஆனதுக்கு பெஞ்ச் மேல நிக்க வெக்கறேன்!
//


இன்னைக்கு சண்டே! கும்மியடிக்க உகந்த நாள்! ;-)

காயத்ரி சித்தார்த் said...

கல்யாணராமா அகராதி வாங்கும்போதே செக் பண்ணிருக்கனும்.. இப்ப புலம்பி என்ன? ஆஹா.. ஜி3 வந்தாச்சு!!

காயத்ரி சித்தார்த் said...

அய்யனார்.. கண்ணடிக்கிறீங்களா? யாரும் கல்லால அடிக்காம இருந்தா சரி!

Anonymous said...

அம்மாடி,, நான் நேத்து உனக்கு நண்டு வருவல் தரலைங்கிறதுனால என்னை இப்படி கலாய்ச்சிரிக்கியே நீயி!

காயத்ரி சித்தார்த் said...

பார்யா! கும்மிக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் பாப்பா போலிருக்கு!

Anonymous said...

என் புத்தகத்துல தப்பா???? வார்த்தை குறைவா? யாருடா அப்படி சொன்னான்?

காயத்ரி சித்தார்த் said...

அபி அப்பா!! முழிச்சிட்டிங்களா? அதுக்குள்ளயா விடிஞ்சுருச்சு மயிலாடுதுறைல?

Anonymous said...

//
அய்யனார்.. கண்ணடிக்கிறீங்களா? யாரும் கல்லால அடிக்காம இருந்தா சரி!
//

எத்தனை கிலோ வேணும்?

காயத்ரி சித்தார்த் said...

இதா இந்த கல்யாணராமன் தான்! புடிச்சிட்டு போங்க..

MyFriend said...

//
பார்யா! கும்மிக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் பாப்பா போலிருக்கு!
//

எல்லாம் மங்கள கரமா இருக்கணுமே! அதான்! ;-)

Anonymous said...

ஆண்டி, நேத்து என் கையில வச்சிருந்த மொய்யு நீங்களே எடுத்துட்டு போயிட்டீங்களே!

காயத்ரி சித்தார்த் said...

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. நான் நண்டு வறுவல் சாப்பிடல.. அபி அப்பா நேரடி வாக்குமூலம். :)))

Anonymous said...

கல்யாண சமயல் சாதம்..
சிக்கன் 65யும் பிரமாதம்..
இந்த லெக் பீசும் சூப்பர்!
இது கல்யாண சமயல் சாதம்...

காயத்ரி சித்தார்த் said...

செல்லம்.. அதை எடுத்தது நான் இல்ல.. உங்க நைனா தாண்டா!

Anonymous said...

//எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. நான் நண்டு வறுவல் சாப்பிடல.. அபி அப்பா நேரடி வாக்குமூலம். :))) //

ஆமா.. காயத்ரி நண்டு வறுவல் சாப்பிடல.. ஆனா, 2 கிலோ இறால் பிரட்டி வச்சிருந்தத காலி பண்ணிட்டா

MyFriend said...

//அபி தம்பி said...
ஆண்டி, நேத்து என் கையில வச்சிருந்த மொய்யு நீங்களே எடுத்துட்டு போயிட்டீங்களே! //

அட பாவி மக்கா.. சின்ன வாண்டோட மொய்யையும் விட்டு வைக்கலையா நீங்க?

MyFriend said...

150 அடிக்க இன்னும் 7 கமேண்டுகள் பாக்கி...

MyFriend said...

யக்கா.. என்ன இது விளையாட்டு?

காயத்ரி சித்தார்த் said...

//ஆமா.. காயத்ரி நண்டு வறுவல் சாப்பிடல.. ஆனா, 2 கிலோ இறால் பிரட்டி வச்சிருந்தத காலி பண்ணிட்டா //

இத அபிஅப்பா சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி.. நானு கோழி தவிர வேற எதும் சாப்பிடல..சொன்னா கேளுங்க..

ஏய்.. மை ஃப்ரண்ட் யாரு என்ன சொன்னாலும் நம்புவியா நீயி?

Anonymous said...

என் தம்பி இங்கத்தான் இருக்கானா? நான் வீட்டுல தேடிட்டு இருந்தேனே!

குசும்பன் said...

அபி அப்பா said...

போகும் பொழுது பசிக்கும்ன்னு நீங்க
பார்சல் செய்து கொடுத்த ஆடு, கோழி...ய பற்றி சொல்லவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு
இல்லையே!!!


அபி அப்பா மாயவரத்தில் எங்க இருக்கீங்க!!!

MyFriend said...

@காயத்ரி:

//
//ஆமா.. காயத்ரி நண்டு வறுவல் சாப்பிடல.. ஆனா, 2 கிலோ இறால் பிரட்டி வச்சிருந்தத காலி பண்ணிட்டா //

இத அபிஅப்பா சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி.. நானு கோழி தவிர வேற எதும் சாப்பிடல..சொன்னா கேளுங்க..//

இதை அபி அப்பாதானே சொல்லியிருக்காரு! அப்போ உண்மை உண்மைதான். ;-)

//ஏய்.. மை ஃப்ரண்ட் யாரு என்ன சொன்னாலும் நம்புவியா நீயி? //

குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்க.. அப்போ அபி தம்பி சொன்னது உண்மைதானே! ;-)

MyFriend said...

உங்க பதிவுலே நீங்களே 150 அடிக்கிறீங்களே! இது நியாயமா?

Anonymous said...

இப்போ என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்கியே! ஏன்மா?

காயத்ரி சித்தார்த் said...

என்னது நானே 150 அடிக்கிறேனா? சொந்த செலவுல சுண்ணாம்பு அடிக்க நான் என்ன கண்மணியக்காவா? :)))
(ஆரம்பிச்சு வெச்சிட்டு பேச்சப் பாரு)

MyFriend said...

சரி, எனக்கு கடையில கொஞ்ச வேலை இருக்கு!

இங்க காயத்ரி அக்க இருக்காஹ..
குசும்பான குசும்பன் இருக்காஹ..
பற்றும் பலர் இருக்காஹ..

வாய்யா மின்னலுன்னு அவரை வர சொல்லி அழைச்சிட்டு நான் கிளம்புறேன். ;-)

Anonymous said...

//
என்னது நானே 150 அடிக்கிறேனா? சொந்த செலவுல சுண்ணாம்பு அடிக்க நான் என்ன கண்மணியக்காவா? :)))
(ஆரம்பிச்சு வெச்சிட்டு பேச்சப் பாரு) //

வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புறீயே நீயி! இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க..

காயத்ரி சித்தார்த் said...

யார வேணா கூட்டிட்டு வா! எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு.. கோழி, லெக் பீஸ் என்ற சொற்கள் இடம்பெறும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

Anonymous said...

ஃபோனா?

அதெல்லாம் இப்போ எதுக்கு! ஹீஹீ

காயத்ரி சித்தார்த் said...

ஆமாங்க.. சலவைக்காரரே! பச்ச மண்ணு!! (யாரது தலைக்குள்ளயான்னு கேக்குறது?)

Anonymous said...

அதான் என்னுடைய பல பின்னூட்டங்கள் வெளியாகமல் இருக்கா? இல்லைன்னா இன்னேரம் 200 வந்திருக்குமே!!!

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!!

காயத்ரி சித்தார்த் said...

பின்னூட்ட மன்னனா? யாரது மின்னலுக்கு எதிர்க்கட்சியா நீங்க?

அபிஅப்பா.. ஃபோன எடுத்துட்டு வாங்க ப்ளீஸ்.. பாவம் நம்ம மக்கள்ஸ்... வாழ்க்கை வெறுத்து உங்கள மாதிரியே சாமியாராகிடப் போறாங்க!

காயத்ரி சித்தார்த் said...

யப்பா! எல்லாரும் களைச்சுப் போய்ட்டாங்க! கண்மணிய்யக்கா எத்தினி அவதாரம் எடுப்பீங்க? :))

குட்டிபிசாசு said...

சென்று!! வென்று!! வந்த கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

சின்ன பாப்பா, இபப்டியா ஏமாறது?

ALIF AHAMED said...

காயத்ரி said...

பின்னூட்ட மன்னனா? யாரது மின்னலுக்கு எதிர்க்கட்சியா நீங்க?
//


யாருய்யா நீ.... :)

MyFriend said...

என்ன சத்தத்தையே காணோம்?

நான் கிளம்பின பிரகு ஆட்டம் க்லோஸா?

MyFriend said...

என்ன கொடுமை காயத்ரி இது???

MyFriend said...

knock knock knock!!!

இருக்கீயளா? இல்லையா?

MyFriend said...

என்னது இது!!!!! ஒரே மயான அமைதியா ஒருக்கு?????

MyFriend said...

........................

MyFriend said...

175 வந்துட்டேனா?

G3 said...

Naan varradhukkulla en velayum sethu mathavangalae pannitaangala? :-(((

Sogathudan thirumbi sellum G3 :-((

MyFriend said...

ஹீஹீ.. திரும்பி வந்தாச்சா?
அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் பண்ணலாமா?

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//யாருய்யா நீ.... :)//

ஆஹா.. மின்னலுக்கே ஆப்பா?

MyFriend said...

//Sogathudan thirumbi sellum G3 :-(( //

சோகமா? வேணும்ன்னா உங்களுக்காக இன்னொரு ஆட்டம் போடலாம்.. வர்றீங்களா?

காயத்ரி சித்தார்த் said...

//[ கண்டுபிடி கண்டுபிடி.. நான் யாருன்னு கண்டுபிடி! //

நான் வரல இந்த ஆட்டத்துக்கு. ரொம்ப டயர்டா இருக்கு!

மின்னல்.. வந்துட்டிங்களா? கேளுங்க.. யாரோ எதிரி நாட்டு மன்னன் உங்களுக்கு போட்டியா கிளம்பிருக்கார்.

செல்லம்.. மைஃப்ரண்ட் மறுபடியும் ஆரம்பிக்க்காத தாயே! இத்தன கும்மி அடிச்சா உடம்புக்கு ஆகாதுடா..

MyFriend said...

//நான் வரல இந்த ஆட்டத்துக்கு. ரொம்ப டயர்டா இருக்கு!//

இப்படி அதுக்குள்ள டயார்ட்டா?? வாங்க வாங்க..

//மின்னல்.. வந்துட்டிங்களா? கேளுங்க.. யாரோ எதிரி நாட்டு மன்னன் உங்களுக்கு போட்டியா கிளம்பிருக்கார்.//

மின்னலுக்கு போட்டியா? யாரங்கே!!! கூட்டுங்க செயல் குழுவை!!!!

//செல்லம்.. மைஃப்ரண்ட் மறுபடியும் ஆரம்பிக்க்காத தாயே! இத்தன கும்மி அடிச்சா உடம்புக்கு ஆகாதுடா.. //

முடியாது!! ஆடியே தீருவோம்.. ஆளுங்களை கூட்டிட்டு வந்தாச்சு...

G3 said...

//[ கண்டுபிடி கண்டுபிடி.. நான் யாருன்னு கண்டுபிடி! //

எனக்கு தெரியுமே.. ஆனா அந்த அப்பிராணிய போட்டு குடுக்க மாட்டேன்னு காயத்ரி மேல சத்தியம் பண்ணி சொல்லியிருக்கேனே.. அதனால அது யாருன்னு நான் சொல்ல முடியாதே :-((

Anonymous said...

//மின்னல்.. வந்துட்டிங்களா? கேளுங்க.. யாரோ எதிரி நாட்டு மன்னன் உங்களுக்கு போட்டியா கிளம்பிருக்கார்.//

ஆமா.. மின்னுது மின்னலுக்கு போட்டியா வந்திருக்கிறது இடிக்குது இடி

Anonymous said...

இன்னைக்கு இது இமாய சாதனையா இருக்கும் போல

Anonymous said...

கவிதாயினி,, ஓடிடாதீங்க.. இந்த இடி உங்களை தாக்காது!

குட்டிபிசாசு said...

காயத்ரி , மை பிரண்ட் தூக்கம் இல்லாம நைட் முழுக்க உட்கார்ந்து கும்மியடிச்சி இருக்கீங்க

குட்டிபிசாசு said...

என்ன பொழப்பு இது!!!!!

Anonymous said...

ஸ்டைலு ஸ்டைலு ஸ்டைலு....

G3 said...

//அப்போ சுகுணாதிவாகர், தமிழ்நதி, ஜி3, அவந்திகாவுக்கும் இந்த ஃபர்ஸ்ட்டோமோனியா நோய் இருக்கா?

ஜி3, வந்து இதை பத்தி கேளுங்க. ;-P //

வந்துட்டேன்.. பதில் சொல்லுங்க காயத்ரி

MyFriend said...

எங்க? என் பின்னூட்டங்கள் வெளியாகமல் இருக்கே!!!

இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

ALIF AHAMED said...

செல்லம்.. மைஃப்ரண்ட் மறுபடியும் ஆரம்பிக்க்காத தாயே! இத்தன கும்மி அடிச்சா உடம்புக்கு ஆகாதுடா..
//

பாத்தா அப்படி தெரியல 500 அடிக்கலாம்

Anonymous said...

பயப்படாதீங்க தங்கச்சி.. நோ பயம்!!

Anonymous said...

நான் அவன் இல்லை!!!!

MyFriend said...

வாங்க வாங்க...

MyFriend said...

என்னுடைய கமெண்டுகள் எங்கே எங்கே எங்கே??????

Anonymous said...

அப்பபா..சே.. உங்க லூட்டி.. செம போரடிக்குது. நிறுத்துங்கவேய்

MyFriend said...

ஆட்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கே!!! கமேண்ட் மோடரேஷன் தூக்கினீங்கன்னா வசதியா இருக்கும்.. ;-)

Anonymous said...

எ..ன்..ன்..ங்..க.. இ..து..?..

கு..ம்..மி..ன்..னு.. சொ..ல்..லி.. இ..வ்..வ..ளோ.. மெ..து..வா.. ந..க..ரு..தே..!..

குசும்பன் said...

மைஃபிரண்ட் இன்னும் கொஞ்சம் அடிச்சிஆடுங்க மழைவர மாதிரி இருக்கு...இன்னும் 15 தான் அடிச்சா 200 போட்டுவிடலாம்.
அப்புறம் மின்னல் வந்து ஒரு 50 கூடவா அடிக்காம போய்விடுவார்...

சிறந்த துவக்கதை ஏற்படுத்தி கொடுத்த
மைஃபிரண்ட்...ஆட்ட நாயகன் விருதுக்கு சிபாரிசு செய்யபடுக்கிறது...

குசும்பன் said...

காயத்ரி said...
ஆமாங்க.. சலவைக்காரரே! பச்ச மண்ணு!! (யாரது தலைக்குள்ளயான்னு கேக்குறது?)

வேற யாரு நான் தான்...

ALIF AHAMED said...

மாடு ரேஷன் இருக்குற எடத்தில்கும்மி அதிகமா அடிக்க கூடாது மை ஃபிரெண்ட் :)

அப்புறம் முட்டிடும்

காயத்ரி சித்தார்த் said...

என்ன உட்டுடுங்க.........:(

காயத்ரி சித்தார்த் said...

மாடரேஷன தூக்கிட்டு சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதா நான்?

MyFriend said...

200 நாந்தானுங்க அடிச்சிருக்கேன்.. குசும்பா உங்களுடைய இந்த மேசேஜ் 203ஆவது.. 220 அடிச்சச்சு.. :-D

//மைஃபிரண்ட் இன்னும் கொஞ்சம் அடிச்சிஆடுங்க மழைவர மாதிரி இருக்கு...இன்னும் 15 தான் அடிச்சா 200 போட்டுவிடலாம்.//

MyFriend said...

@ காயத்ரி said...
//என்ன உட்டுடுங்க.........:(
//

இதுக்கெல்லாம் அசருவோமா நாங்க??? ;-)

MyFriend said...

@காயத்ரி:

//மாடரேஷன தூக்கிட்டு சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதா நான்? //

செலவுக்கு பணம் கண்மனி டீச்சர்ட்ட வாங்கி தரவா? ஹீஹீஹீ

அபி அப்பா said...

கதவ தொறந்து வச்சா காத்து வராம..
அனானி பேயா அலையுது போல....
கொஞ்சம் நம்ம பதிவயும் பாத்துட்டு போப்பா...

பாசக்கார குடும்ப அண்ணாத்த..

அபி அப்பா

Anonymous said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//சென்ஷி வழக்கம் போலவே பேச்சிலும் "ரிப்பீட்டே" போட்டுக் கொண்டிருந்தார். //

இன்னும் செட்டில் ஆகலை போல இவரு...//

இதெல்லாம் ஓவரூ

senshe

இராம்/Raam said...

பதிவே போட்டு யாகூ கன்பரென்ஸ் சேட்'லே பேசிட்டு இருக்கிறமாதிரி பின்னூட்டங்களா...???

என்ன கொடுமை காயத்ரி இது??? :)

ஜி said...

அடப்பாவிகளா... என்ன இங்கே நடக்குது??

இன்னும் பல உண்மைகளை மறைத்த காயத்ரியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

ஜி said...

பாசக்கார குடும்பம் சந்திப்பில் வெளிவராத சில உண்மைகள்...

* வலைப்பதிவில் எப்போதுமே அடிவாங்கும் மூத்தப் பதிவர் (வயசுல இல்லீங்க), இளந்தலை ராயல் ராமை யாருமே டார்கட் செய்யவில்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம். அப்பப்ப செல்பேசியில் ரஞ்சனி காலிங், மஹா காலிங்னு மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.

* இம்சை அரசி தன்னை கண்மணி அக்கா டீச்சர் ஆக்கியதைக் குறித்து பயங்கற குற்றச்சாற்றை எழுப்பினார். தான் இன்னும் LKG தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் தன்னை மாணவியாக அறிவிக்க வேண்டுமென்றும் அடம்பிடித்தார். ஒரே இடத்திலேயே உக்காந்து உக்காந்து படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தனை வருசமாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

* சென்ஷி வந்த பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு கஜினி சூர்யா கேஸ் என்று. சந்திப்பு முடியும் வரை யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார். சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்பும் நேரத்தில் "இன்று சந்திப்பு நன்றாக நடந்தது ராம்" என்று என் கையைப் பிடித்து என்னிடம் கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படித்தியது.

* நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார்.

* கண்மணி அக்கா உள்ளே வந்தவுடனே, வலைப்பதிவிலுள்ள அதே கலகலப்பில் அனைவரையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதைப் பார்த்து முத்துலட்சுமி அக்காவே வாயடைத்துப் போனார் என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோழி பிரியானி, நண்டு வறுவல், மீன் பொறியல், சந்திப்பில் பேசிய பல விசயங்களை மறக்கடிக்க செய்துவிட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயத்ரி சித்தார்த் said...

// நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார்///


பொய்யி... பொய்யி.. யாரும் நம்பாதீங்க..

MyFriend said...

இது சொல்லாது இது செல்லாது..

MyFriend said...

இது அழுகுனி ஆட்டம்..

நாங்க போட்ட பின்னூட்ட எண்ணிக்கை கொறைன்சுட்டே போகுதே! 210 பின்னூட்டமாக இருந்தது! இப்போ 195 ஆகிவிட்டது!!!

காயத்ரி டவுன் டவுன்!!!

MyFriend said...

அனானியின் சுத்ந்திரமும் பறிக்கப்பட்டுவிட்டது.. :-((

காயத்ரி சித்தார்த் said...

கமெண்டெல்லாம் காக்கா தூக்கிட்டு போகுதா யாராச்சும் களவாண்டுட்டு போய்ட்டாங்களான்னு தெரியல...
:( நானு பொறுப்பில்ல. சும்மா இருந்தீன்னா உக்காந்து 250 வரை போட்டுட்டு போ செல்லம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதிகமா பேசினாலும் உருப்படியா பேசினேன்..அது ஒண்ணுகூட நியாபகம் வச்சு போட முடியலை என்ன பிள்ளைங்களோ இந்த காலத்து பிள்ளைங்க...தேறுற மாதிரி தெரியல.

«Oldest ‹Older   1 – 200 of 202   Newer› Newest»