Monday, September 17, 2007

இழந்த மழை..







இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.

முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்
நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!

81 comments:

Ayyanar Viswanath said...

நட்சத்திர வாழ்த்துக்கள் காயத்ரி
ஒரே நாளில் மூன்று இடுகையா கலக்குங்க..:)
சில சங்க இலக்கிய பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்

Anonymous said...

இது இதத்தான் எதிர் பார்த்தோம் அப்படியே ஒரு மொக்கைப் பதிவு ஒன்னு போட்டு கவிதாயிணி ரசிகர்களை வீறு கொண்டு எழச் செய்வீங்கனு எதிர் பார்கிறோம்

இராம்/Raam said...

அட்டகாசம்....

துரியோதனன் said...

காலையில் எழுந்ததும் ஈரமான சாலை,
கொஞ்சம் பளிச்சுனு என் பைக் இதெல்லாம் பார்க்கும் போது நேற்று இரவு பெய்த மழை நினைவுக்கு வரும்.
இனிமே உங்க கவிதையும்.....

அனுசுயா said...

வாழ்த்துக்கள் நட்சத்திர மங்கையே. நல்லா ஜொலிச்சு மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

அதுசரி ஒரு நாளே மூணு போஸ்டா எப்டி தாங்குமா சரக்கு? :)

அபிமன்யு said...

காயத்ரி,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

கதிர் said...

மக்களே இன்னும் ஒரு ஆறு நாளைக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காயத்ரி தவறவிடாமல் படிக்கிறோம நீங்கள் எத்தனை போஸ்ட் போட்டாலும் :)

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் காயத்ரி.மழையோடு உன் ஆ....ரம்பம்...தொடரட்டும்.

சுகுணாதிவாகர் said...

நீங்கள் இந்த வாரம் நட்சத்திரமா? என்னை வெளியேற்றிவிட்டுத்தான் நட்சத்திரமாவானேன்னு முடிவெடுத்தீங்களா என்ன? ((- ஆனால் ஒரு எச்சரிக்கை. என்னை மாதிரி ஆட்கள் எழுதுவதை நிறுத்திவிட்ட தைரியத்தில் மொக்கைக் கவிதையா போட்டு வாசகர்களைத் துன்புறுத்தக்கூடாது. ஆமா, நட்சத்திரவாரத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கல். இந்த ஒருநாள் போகட்டும், இந்த ஒரு வாரத்திற்காவது கவிதை எழுதாமல் தமிழ்மண வாசகர்களைக் காத்தருள வேண்டுகிறேன். தோழர்.பெரியாரின் 129ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பார்ப்பனீயம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உங்கள் பங்கும் இணையட்டும். (தலைசுத்துதா?)

சுகுணாதிவாகர் said...

/சங்க இலக்கிய பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்/

எந்த சங்கம்? ப.பா. சங்கமா? அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

MyFriend said...

யக்கா.. ஒரு நாளைக்கு மூனா? அப்போ 21 பதிவுகள் போட்டு கலக்க போறீங்க.. இல்ல 25-50ன்னு போடலாமா? நீங்க போட்டு கலக்குங்க. :-)

MyFriend said...

நீங்க எழுதிய கவிதைகளிலேயே இதுதான் கொஜ்சம் புரியும் படியா இருக்கு! திருந்திட்டீங்களா? நல்லது! :-D

MyFriend said...

ஆனா ஒரு கேள்வி!!

இந்த கவிதை எனக்கு சோகமாகவே இல்லையே.. ஆனால், எதுக்கு "இழந்த மழை"ன்னு சோகமா ஒரு தலைப்பு????

மங்களூர் சிவா said...

இன்று வேகவேகமாய்
வந்து போய் விட்டிருக்கிறது
பிகர்கள்.


வந்து போன பின்னும்
அங்கிருந்து வரும்
சென்ட் வாசனைகள்


நினைவூட்டியபடி எரிச்சலூட்டுகின்றன
நான் தவறவிட்ட பிகர்களை!

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

என்ன நட்சத்திரம் கமெண்ட் மாடரேசன் ஆப் பண்ணிட்டிங்க போல ??

மங்களூர் சிவா

நிலா said...

கவிதை நல்லாவே இருக்கு காயத்ரி ஆன்ட்டி. அப்புறம் நீங்க நம்ம ஊர்காரராமே?

-நிலா

SurveySan said...

Nice Kavidhai!

mangalore Sivas' kavidhai is also good :)

//
இன்று வேகவேகமாய்
வந்து போய் விட்டிருக்கிறது
பிகர்கள்.
வந்து போன பின்னும்
அங்கிருந்து வரும்
சென்ட் வாசனைகள்
நினைவூட்டியபடி எரிச்சலூட்டுகின்றன
நான் தவறவிட்ட பிகர்களை!
//

காயத்ரி சித்தார்த் said...

நன்றி அய்யனார்..

//சில சங்க இலக்கிய பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்//

அப்படி ஒரு எண்ணமிருக்கு ரொம்ப நாளா.. முயற்சிக்கறேன்!

காயத்ரி சித்தார்த் said...

//கவிதாயிணி ரசிகர்களை வீறு கொண்டு எழச் செய்வீங்கனு எதிர் பார்கிறோம்
//

ஏங்க இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலயா?

துரியோதனன், ராம் நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

//அதுசரி ஒரு நாளே மூணு போஸ்டா எப்டி தாங்குமா சரக்கு? :)
//

தெரியலீங்க! பாப்போம்...

நன்றி அபிமன்யு.

காயத்ரி சித்தார்த் said...

//மக்களே இன்னும் ஒரு ஆறு நாளைக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.//

வெளில வராம தமிழ்மணத்தையே பாத்துட்டிருக்க சொல்றீங்களா? ஆனாலும் என் புகழ் பரப்பறதுல உங்களுக்கு இவ்ளோ ஆர்வம் கூடாது கதிர்!!

காயத்ரி சித்தார்த் said...

முத்துக்கா, கண்மணியக்கா.. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்!

மை ஃப்ரண்ட் உனக்கு கவிதை புரிஞ்சுதான்னு ஆச்சரியப்பட்டேன்..

//இந்த கவிதை எனக்கு சோகமாகவே இல்லையே.. ஆனால், எதுக்கு "இழந்த மழை"ன்னு சோகமா ஒரு தலைப்பு????
//

கவுத்துட்டியே செல்லம்! :(

காயத்ரி சித்தார்த் said...

//நீங்கள் இந்த வாரம் நட்சத்திரமா? என்னை வெளியேற்றிவிட்டுத்தான் நட்சத்திரமாவானேன்னு முடிவெடுத்தீங்களா என்ன? ((- //

சுகுணா... பின்னூட்டத்துலயே இவ்ளோ எழுதிட்டு இனிமே எழுத மாட்டேன்னு சும்மா கத வுடறீங்களா?

//பார்ப்பனீயம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உங்கள் பங்கும் இணையட்டும்.//

ங்ங்ங்கே? :(

//எந்த சங்கம்? ப.பா. சங்கமா? அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ//

கிர்ர்ர்ர்ர்

காயத்ரி சித்தார்த் said...

சிவா உங்களுக்கேன் இந்த வேண்டாத வேலை? குசும்பன் சண்டைக்கு வந்தா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன். :)

// அப்புறம் நீங்க நம்ம ஊர்காரராமே?//

எப்புறம் நிலா? ஆரம்பத்துல இருந்தே நான் ஒரே ஊர்ல தான் இருக்கேன். நீயும் ஈரோடா?

சர்வேசன் நன்றிங்க!

ILA (a) இளா said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா அழுகாச்சிய.
நட்சத்திரத்துல கொஞம் சந்தோசமா கவிதை போடுறது? ஆத்துல தண்ணி பத்தலையா?

Unknown said...

//நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!//

அழகிய கவிதை.. அற்புதமான சொல்லாடல்.. ரசித்தேன் :))

அபி அப்பா said...

சரிப்பா காயத்ரி! குட் ஆனா வர வர பெருசா தலைப்பு வச்சுட்டு பதிவே போட மாட்டங்குறப்பா சரி இந்த தலைப்புக்கு கவிதை சொல்லுப்பா! அது அடுத்த பதிவா சரி ஓக்கே!!

நாமக்கல் சிபி said...

//இந்த ஒருநாள் போகட்டும், இந்த ஒரு வாரத்திற்காவது கவிதை எழுதாமல் தமிழ்மண வாசகர்களைக் காத்தருள வேண்டுகிறேன்.//

அப்புறம் நாங்க எப்படி கலாய்க்குறதாம்?

நாமக்கல் சிபி said...

//mangalore Sivas' kavidhai is also good :)
//

mangalore Sivas' kavidhai is only good :)

நிலா said...

காயத்ரி ஆன்ட்டி நான் பொறந்ததில் இருந்தே ஈரோடுதான். என்ன நான் பொறந்து ஒரு வருசம்தான் ஆச்சு. சரி சரி இப்பொ பெரிய ஸ்டார் ஆ இருக்கீங்க. இப்ப போயி என்ன மாதிரி குட்டி பாப்பாக்குலாம் பதில் சொல்லிட்டு இருக்காதிங்க. நட்சத்திர வாரத்த முடிச்சிட்டு அப்புறம் பேசுங்க.

ஆன்ட்டி, ஸ்டார் வாரத்த கலக்கிருங்க. நம்ம ஊர் பெருமைய காப்பாத்துங்க ஆன்ட்டி.

காயத்ரி சித்தார்த் said...

இளா அண்ணா.. கிர்ர்ர் :@

தேங்க்ஸ் சாரு.. உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

நாமக்கல் சிபி said...

/சரிப்பா காயத்ரி! குட் ஆனா வர வர பெருசா தலைப்பு வச்சுட்டு பதிவே போட மாட்டங்குறப்பா சரி இந்த தலைப்புக்கு கவிதை சொல்லுப்பா! அது அடுத்த பதிவா சரி ஓக்கே!!

//

ஓ! தலைப்பே இவ்ளோ பெரிசா?

"எவ்ளோ பெரிய தலைப்பு" ன்னு தேவயாணி ஸ்டைல்ல படிச்சா நல்லாத்தான் இருக்கே!

அட! அதுவே ஒரு கவிதாதங்க அபி அப்பா!

நாமக்கல் சிபி said...

//ஆன்ட்டி, ஸ்டார் வாரத்த கலக்கிருங்க. நம்ம ஊர் பெருமைய காப்பாத்துங்க ஆன்ட்டி.//

இதை நான் வழிமொழிகிறேன் காயத்ரி ஆண்டி!

நாமக்கல் சிபி said...

//ஆரம்பிச்சுட்டாங்கய்யா அழுகாச்சிய.
//

இளா! நாளைக்கு கவிதை போஸ்ட் ரெடி பண்ண துலாபாரம் படத்தை டிவிடில போட்டு பல தடவை பார்த்துகிட்டிருக்காங்களாம்!

- ஒரு நம்பத்தகுந்த வட்டாரம்

காட்டாறு said...

கவிதை நல்லாயிருக்கு காயத்ரி. நெறையா, வெரைட்டியா எழுதுங்க

நாமக்கல் சிபி said...

போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் (கவிதைப்) பதிவைனைப் படிப்பவன் யாரடா!

போனால் போகட்டும் போடா!

- இவர் கவிதைகளைப் படித்து வாழ்க்கையை வெறுத்த ஒரு ஆவி!

நாமக்கல் சிபி said...

//வெரைட்டியா எழுதுங்க//

செவ்வாய் - இழந்த லெமன் சாதம்
புதன் - இழந்த புளியோதரை
வியாழன் - இழந்த தக்காளி சாதம்
வெள்ளி - இழந்த பொதினா சாதம்
சனி - இழந்த கொத்தமல்லி ரைஸ்
ஞாயிறு - இழந்த சிக்கன் பிரியாணி!

நாமக்கல் சிபி said...

முன்னோட்டம்!

இழந்த சிக்கன் பிரியாணி!

தமிழ் நாட்காட்டி
பாராமல்
தவற விட்டேன் தருணங்களை!
அடடா!
வந்து விட்டதே
புரட்டாசி!
இழந்து விட்ட
சிக்கன் பிரியாணி!
:(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாமக்கல் சிபி said...

//மக்களே இன்னும் ஒரு ஆறு நாளைக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.//

தம்பி!

நீ நம் இனமடா!

Dreamzz said...

kavithai nalla irukku :)

மங்களூர் சிவா said...

//சிவா உங்களுக்கேன் இந்த வேண்டாத வேலை? குசும்பன் சண்டைக்கு வந்தா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன். :)
//

குசும்பன் இப்போது ரவா தோசை கிண்டுவது. பெப்ஸி உமாவுடன்
வலை பதிவர்களை பேச வைப்பது என ரொம்ப பிசியாக இருப்பதால் பிறச்சனை இருக்காது. அப்டியே வந்தாலும் இங்கேயே பார்த்துக் கொள்கிறொம்.

பின்னூட்ட பெட்டி திறந்துதானே இருக்கிறது.

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

//

//mangalore Sivas' kavidhai is also good :)
//

mangalore Sivas' kavidhai is only good :)
//

இந்த வாரம் புல்லா 'நட்சத்திரத்தை' மட்டும்தான் கலாய்கனும்.

மங்களூர் சிவா

கோபிநாத் said...

\கண்மணி said...
வாழ்த்துக்கள் காயத்ரி.மழையோடு உன் ஆ....ரம்பம்...தொடரட்டும்.\\

சூப்பர் பின்னூட்டம் :)))

ஜமாலன் said...

இந்த கவிதையை நான் வேறுவிதமாக வாசிக்கிறேன்.

இரவு பேய்த மழையும்
இழந்துவிட்ட தருணங்களும்..

இந்த இரண்டுவரிகளை ரொமாண்டிசைஸ் பண்ணாமல் யதார்த்ததில் பொறுத்தினால்..

இதற்குள் ஒடுங்கி கிடக்கும் ஒரு அமைப்பு பாலியல் குறித்த அவதானிப்பைக் கோருகிறது.

பெண்ணிய வாசிப்பில் பெண் இழந்த தருணங்களா? அல்லது அவளுக்கு மறுக்கப்பட்ட தருணங்களா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. கவிதை ஆசரியை அல்லது கவிதைக்குள் பேசும் குரல் தன்னை பெண் அடையாளமாக உணராமல் சமூகம் கட்டமைத்துள்ள பெண்ணாக உணர்கிறது. மறுக்கப்பட்ட தருணங்களை இழந்த தருணங்களாக இக்கூற்ற இங்கு வடிவமைகிறது.

பொதுவாக புதுக்கவிதைகளில் மழை என்பது பாலியல் குறியீடாகத்தான் வருகிறது. கலாப்ரியாவின் கவிதைகளை வாசித்தால் மழையின் பண்முக அர்த்த சாத்தியங்களை புரிந்து கோள்ள முடியும்.

விமர்சனம் தலையைச் சுற்றினால்.. ஒரே ஒரு keyword மழை என்பதை பாலயில் கலவியுடன் பொறுத்திப் பாருங்கள். இது கவிதைக்குள் இயங்கும் அமைப்பு.. அல்லது கவிதையின் நினைவிலப் புலம்..

ரொம்ப ஸ்டாராங்கா இருக்கோ... மன்னிக்கவும்.

இயல்பான கவிதை ஒரு இயல்பற்ற உள்ளமைப்புடன். நீண்ட நாட்களாக நான் கவிதைகள் வாசிப்பதில்லை. எதெச்சையாக இதை வாசித்தபோது ஏற்பட்ட கருத்து. இக்கவிதையின் இறைச்சி என்பதைதான் இங்கு சுட்ட முயன்றேன்.

எளிமையாகவும் ஆழ்ந்த பொருள் பதிந்ததாகவும் இன்னும் கவிதைகள் வெளிவர வாழ்த்துக்கள்.

சிவபாலன் said...

வாவ்!

அருமை!

ஜமாலன் said...

கவிதையில் இழந்த தருணங்கள் என்பதை தவறவிட்ட தருணங்களாகவும்.. மழைத் துளிகள் நினவூட்டுபவையாகவும் உள்ள அமைப்பு குறித்து இன்னும்கூட அர்தங்கள் விரிந்து செல்கிறது."பொருட்கு பொருள் புரியின் அது வரம்பின்றே" ... அர்த்தங்களை தள்ளிப்போட்டபடி நகர்கின்றன இந்த நான்கு வரிகள்...

மொக்கையாக இருக்கோ....??????

Unknown said...

//தேங்க்ஸ் சாரு.. உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!//

:)) உண்மை பேர் அப்போ புடிக்கல.. புனைப்பெயர் தான் புடிச்சிருக்குன்னு சொல்றீங்களா??

கோபிநாத் said...

\\காட்டாறு said...
கவிதை நல்லாயிருக்கு காயத்ரி. நெறையா, வெரைட்டியா எழுதுங்க\\

எனக்கு என்னமே வறட்டியா எழுதுன்னு சொல்லற மாதிரி இருக்கு :))

Unknown said...

//முன்வாசல் மரங்களின் இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும் நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!//

ஜம்முனு அந்த மரத்துக்கு கீழ போய் நின்னு அந்த கிளைய ஒரு ஆட்டு ஆட்டுங்க.. இன்னொரு ரவுண்டு குட்டி மழை பெய்யும் :)))

Unknown said...

//அட்டகாசம்....//

தல.. கவிதைய பத்தி கமெண்ட் போட சொன்னா அஜீத் படத்தோட பேரெல்லாம் சொல்றீங்க???

கவிதாயினி தல கும்மி அடிக்காம இருக்க எம்புட்டு செலவு பண்ண??

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
காயத்ரி தவறவிடாமல் படிக்கிறோம நீங்கள் எத்தனை போஸ்ட் போட்டாலும் :)\\

சிலர் சிர்ப்பார்..சிலர் அழுவார் நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகின்றோம்.... ;) ;(

கோபிநாத் said...

\Charu said...
//நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!//

அழகிய கவிதை.. அற்புதமான சொல்லாடல்.. ரசித்தேன் :))\\

காயத்ரி இதுக்கு எவ்வளவு செலவாச்சி:)

G3 said...
This comment has been removed by the author.
G3 said...
This comment has been removed by the author.
ஜி said...

Simply superb... :)

Unknown said...

//காயத்ரி இதுக்கு எவ்வளவு செலவாச்சி:)//

நான் கேட்ட அளவு அவங்க குடுக்கல.. அதான் என் பேர்ல போடாம புனைப்பெயர்ல அந்த பின்னூட்டம் :)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

கவிதைய விட பின்னூட்டங்கள்தான் சூப்பரா இருக்கு. ஹஹஹா

குசும்பன் said...

கவிதை அருமையாக இருக்கு அதைவிட
எனக்கு பிடிச்சது நிலா கமெண்ட்

"கவிதை நல்லாவே இருக்கு காயத்ரி ஆன்ட்டி."
-நிலா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

குசும்பன் said...

தள என்ன தள 60 கமெண்ட் அடிச்சும் இத முதல் பக்கத்தில் இருந்து தூக்கமுடியல...

யாரோ பில்லீ சூன்யம் வச்சுட்டாங்க போல!!!

ஏதாவது செய்யுங்க தள!!! ஏன்னா நீங்கதானே பிளாக்கர் மக்கர் செஞ்சா சரி செய்யிற ஆளு...:)))

குசும்பன் said...

இராம் said...
அட்டகாசம்....

தல அட்டகாசம் அஜித் படம் அதுக்கு இன்னா இப்ப?

ஹோ விமர்சனம் எழுத சொல்றீங்களா?
எழுதுவாங்க எழுதுவாங்க!!!

குசும்பன் said...

அய்யனார் said...
"சில சங்க இலக்கிய பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்"

இதுக்கு பேர்தான் தானும் கெட்டு அடுத்தவங்களையும் கெடுக்கிறது என்பது.அய்ஸ் காயத்ரி ஆன்டியாவது ஒழுங்கா இருக்கட்டுமே!!!!

முரளிதரன் said...

KAVITHAIKAL GOOD. KEEP WRITING

காயத்ரி சித்தார்த் said...

//ஆன்ட்டி, ஸ்டார் வாரத்த கலக்கிருங்க. நம்ம ஊர் பெருமைய காப்பாத்துங்க ஆன்ட்டி.//

நிலா பாப்பா.. அதெல்லாம் காப்பாத்திடலாம். நீ ஆன்ட்டின்னு சொல்றத நிப்பாட்டி என் பெருமைய காப்பாத்துடா கண்ணு! :)

காயத்ரி சித்தார்த் said...

//சரி இந்த தலைப்புக்கு கவிதை சொல்லுப்பா! அது அடுத்த பதிவா சரி ஓக்கே!!
//

அபி அப்பாஆஆஆஆஆஆஆஆஆ....

:@
:@

காயத்ரி சித்தார்த் said...

ட்ரீம்ஸ், காட்டாறு, சிவபாலன் நன்றிங்க.


சாரு.. நீ யாருன்னு இப்பத்தான் தெரிஞ்சிது. கிர்ர்ர்ர்

ஜமாலன்.. எதுக்கு இப்பிடி என்னைத் திட்டிருக்கீங்க? ஒன்னுமே புரியல.. :(

காயத்ரி சித்தார்த் said...

கோபிநாத்..

//காயத்ரி இதுக்கு எவ்வளவு செலவாச்சி:)
//

3 ஃபுல் மீல்ஸ்ல ஆரம்பிச்சு ஹோட்டலையே காலி பண்ணிட்டா... அப்பவும் பத்தலயாம் :(

காயத்ரி சித்தார்த் said...

ஜி, முரளிதரன் நன்றி!

சிபியண்ணே.. நீங்களும் உங்க சீடன் குசும்பனும் எங்காச்சும் வனவாசம் போய்ட்டு வாங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ்?
:)

காயத்ரி சித்தார்த் said...

//சின்ன அம்மிணி said...
கவிதைய விட பின்னூட்டங்கள்தான் சூப்பரா இருக்கு. ஹஹஹா//

அவ்வ்வ்வ்வ்.. :(

SurveySan said...

ஹ்ம். நானெல்லாம் நட்சத்திரமா இருக்கும்போது ஒரு பய சீண்டல...
அவ்வ்வ்வ்வ்

ஏதோ, என்னோல முடிஞ்சது, உங்க கவிதையப் பாத்து inspire ஆகி ஒரு கவுஜ போட்டிருக்கேன்
http://surveysan.blogspot.com/2007/09/s.html

ப்ரியன் said...

Nice One

Jazeela said...

நட்சத்திர வாழ்த்துகள் காயத்ரி.

Unknown said...

Hi
I'm new here, I was recently introduced to Thamizmanam and blogs. I read some of your posts...rommmmmmmbbbbbaaa nalla ezhuthareenga....keep going.
Excuse me for Thanglish..I assure that next time it will be in Tamil :-)

LakshmanaRaja said...

இழப்பு நிகழும் பொழுது நாம் அதை (இழப்பை) உணர்த்தல் இல்லை.

மேலும் இழந்த பிறகு தான் எதுவும்
தன் இருப்பை (இருந்ததை) அதிகம் நினைவுபடுத்தும்.

Enbee said...

Vazhthukal

Unknown said...

தமிழ்மணத்துக்கு பல நாள் கழித்து வரேன்...... *-மானதால், உங்க பல பதிவுகள் படிச்சேன்ன்... இந்த கவிதை ரொம்ப்ப்ப்ப நல்லா இருந்தது!!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மதுசூதனன் said...

அற்புதம்.....

தினேஷ் said...

அருமை...

தினேஷ்

கார்த்திகா said...

G referred me this kavithai in his comment (For oru thuliyin pala mazhaigal) at my blog. Bcoz that resembled this kavithai. But your "Izhantha mazhai" really superb than that. Vaazhththukkal.
I'll be happy to invite u in my blog.

priyamudanprabu said...

இரவில் பொழிந்த
மழையின் துளியை
தவணைமுறையில்
தரைக்கனுப்புகிறது
என் வீட்டு கூரை..

சும்ம சில வருசத்துக்கு முன்ன எழுதுனது
http://priyamudan-prabu.blogspot.com/