Wednesday, September 19, 2007

புனைவின் நிழல்




ஒவ்வொரு முறை 'பாலம் புக் ஷாப்'பை விட்டு வெளியில் வரும் போதும், "அடுத்த முறை இந்த வழியாய் வரக்கூடாது அல்லது வெறுங்கையோடு தான் வர வேண்டும்" என்று தீர்மானித்துக் கொள்வது இந்த சில நாட்களாய் வழக்கமாகியிருக்கிறது எனக்கு.


பாதி படித்து.. பக்க நுனி மடிக்கப்பட்டோ, தலைகுப்புறக் கவிழ்த்த நிலையிலோ தரையிலும் படுக்கையிலுமாய் இறைந்து கிடக்கும் புத்தகங்கள் தொடர்ந்து அதே நிலையில் கிடந்தபடியும், "ஒன்னா படி, இல்லன்னா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை........." என்று அம்மா என்னை வசைபாடுவதற்கு உதவி புரிந்தபடியும் இருக்கும்போது மறுபடி நான் புத்தகங்கள் வாங்கப் போவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

ஆனால் இந்த முறை வாங்கிய 'புனைவின் நிழல்' சேலத்திலிருந்து ஈரோடு வரையிலான ஒன்னரை மணிநேர பயணத்தில், இடைநிறுத்தமின்றி வெற்றிகரமாய்ப் படித்து முடிக்க ஏதுவாய் இருந்தது ஆச்சர்யம்தான்!

15 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் அது. நூலாசிரியர் மனோஜ். வளர்ந்து வரும் புனைகதை எழுத்தாளர். பத்திரிக்கையாளர். குழந்தைகளுக்காக "ஃப்ளைட் நம்பர் ஐ.சி 814" என்ற நாவல் எழுதியிருக்கிறாராம்.

"கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக் கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச் சென்றவண்ணமிருக்கின்றன"

என்கிறது புத்தகத்தின் பின்பக்க அட்டை!


இது போன்ற தொகுப்பு நூலையோ அல்லது கவிதைப் புத்தகத்தையோ கையிலெடுக்கையில் எப்போதுமே முதல் பக்கத்திலிருந்து தொடங்குவதில்லை நான். கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம் எப்போது தொடங்கியதென்று நினைவிலில்லை!

இதையும் அப்படிப் பிரித்த போது முதலில் கைக்குச் சிக்கியது 'கச்சை' என்ற சிறுகதை.

மலையாள தேசத்தில் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டிராத கீழ்ச்சாதி அடிமைப் பெண்களில் ஒருத்தியான 'குட்டிமோளு' மார்க்கச்சை அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகிறாள். யாருமறியாமல் தம்புராட்டியின் கச்சையைத் திருடி அணிந்து பார்க்கையில் அசந்தர்ப்பமாய்ப் பிடிபட்டு, தம்புரானால் அனைவர் முன்னிலையிலும் முழு நிர்வாணியாக்கப்படுகிறாள். அவமானம் தாங்காமல் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் குட்டிமோளு பல வருடங்கள் கழித்து.... அவ்வூருக்கு வரும் பெண்ணொருத்தி அணிந்திருக்கும் நவீன ரக சோளிகளை ஸ்பரிசித்துப் பார்க்க முயல்வதாக முடிந்த அக்கதை பரிதாபம் கலந்த திகிலுணர்வையும் நல்ல கதையொன்றைப் படித்த திருப்தியையும் தந்தது.


படித்து முடித்து முன் பக்கம் வந்தேன். "அட்சர ஆழி" என்ற வசீகரிக்கும் பெயர் கொண்ட முதல் சிறுகதை முதல் ஐந்து வரிகளிலேயே அதிர்ச்சி தந்தது.

"எப்படி விளங்க வைப்பது என்பது தான் எனக்குள்ள பிரச்சினையே. எனக்கு நிகழ்பவை எல்லாம் அவர்களுக்கு விநோதமாகத் தோன்றுகிறது. கண்கள் மின்ன நான் சொல்வதை மிக நிதானமாகக் கேட்கிறார்கள். இதழ்க்கடையில் ஒரு புன்னகை நெளியும். கேலியின் நெளியல் அது. அதன்பின் ஒற்றைச் சொல்லில் அடக்கி விடுகிறார்கள். "மாத்திரை சாப்டியா?"

மனநலம் பாதிக்கப்பட்டவனாய் கருதப்படும் ஒருவன் அறைக்குள்ளேயே நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு புத்தகங்களுக்குள் மூழ்கிப் போகிறான். அவன் தன்னுணர்விழந்து வார்த்தைகளில் அமிழ்ந்து போகும் போது அந்த வார்த்தைகள் உயிர் பெறுகின்றன! கதைகளில் நிகழும் சம்பவங்கள் அவன் அறைக்குள்ளும் நிகழ்கின்றன.

விவிலியத்தில் கடவுள் நதிகளைப் படைப்பதைப் படிக்கையில் அவன் அறை நீரால் நிரம்புகிறது. கட்டுரை ஒன்றில் கிறிஸ்தவப்படைகள் நூலகம் ஒன்றிற்கு வைக்கும் தீ அவன் படிப்பறையின் திரைச்சீலைகளில் பற்றுகிறது. புத்தகத்தின் 127 ம் பக்கத்திலிருந்து உருப்பெற்று வரும் அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்த யனோமாமி தொல்குடி மனிதன் கொடுத்த அரிய வகைச் செடி அவன் மேசையோரச் சாடியில் வளர்கிறது! இப்படி அந்தக் கதை நிறைய ஆச்சரியங்களைக் கொண்டிருந்தது!!

"857" என்ற எண்ணைத் தலைப்பாகக் கொண்ட சிறுகதை அந்தப்புரத்தில் சக்கரவர்த்தியின் மனைவியாய் இருக்கும் பெண்ணொருத்தியின் நினைவோட்டங்களை விவரிக்கிறது.

"திடீரென பின்னால் ஏதோ அரவம். திடுக்கிட்டுத் திரும்பினால் மகாராஜன். பெளருஷம் நிறைந்த தேகக்கட்டு. என்னுள் பதற்றம். நெருங்கிய ராஜன் என் தோள் தொட்டு முகம் உயர்த்தினான். நாணம் என்னைப் போர்வையாய்ப் போர்த்தியது. கரத்தால் என் மோவாய் உயர்த்தி ஊடுருவிப் பார்த்தான். புன்னகை இழையோட ராஜன் மெல்லிய குரலில் பேசினான் - "உன் பெயரென்ன?"

மெல்லிய அதிர்ச்சி தந்த இந்த வரிகள் தொடர்ந்து வளர்ந்து...

"நான் மனைவி.. சக்ரவர்த்தியின் மனைவி. தசரதச் சக்ரவர்த்தியின் அறுபதினாயிரம் மனைவியரில் 857 வதாகப் பிடிக்கப்பட்ட மனைவி"

என்று முடிந்தபோது லேசாய்ப் புன்னகை வந்தது!


"கள்ளா... நினைச்சேன். யார்ட்ட டா பேசிட்டிருக்கே?

"அய்யோ... திங்க் ஆஃப் தி டெவில். உன்னை நினைச்சு தான் உள்ள வந்தேன். உடனே வர்ற.. சிலுக்குதுப்பா"

"பொய்.. பொய் உன்னைத் தெரியாதா டா எனக்கு. லயர்.. லயர்.."

"சியாமு குட்டி என்னடா இப்டிச் சொல்ற.. போ.. ஒன்னும் பேச வேணாம்"

யாஹூ மெசஞ்ரில் கொஞ்சலும் சீண்டலுமாய் காதலித்துக் கொண்டிருக்கும் இருவரின் உண்மை முகங்களை அம்பலமாக்கி 'அடப்பாவிகளா'வென ஆச்சரியப்பட வைக்கிறது சூன்ய வெளி என்ற சிறுகதை!


இவை தவிர.. 15 கதைகளில் மிகவும் தவிர்க்க முடியாதனவாகவும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டிய அவசியத்தைப் பெற்றனவாகவும் இருக்கும் "றெக்கை" "பால்" என்ற இரண்டு புனை கதைகள்... "என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்!

அட்சர ஆழி, றெக்கை, பால், பின்னிருந்து சில குரல்கள், ஏவாளின் விலா எலும்பு, குளியல், திரை, 857, கச்சை, புனைவின் நிழல், சர்ப்ப வாசனை, அச்சாவோட சிச்சாமணி, சாமி, சூன்ய வெளி, மஹல்

என்ற 15 சிறுகதைகளும் திசைக்கொன்றாய் இருப்பது சலிப்பின்றி விரும்பிப் படிக்க வைக்கிறது. பிடித்திருந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்! (அடர்பச்சையில் இருப்பவை எனக்குப் பிடித்தமானவை என்று கொள்க!)

நூல் : புனைவின் நிழல்

எழுதியவர் : மனோஜ்

வெளியிட்டது : உயிர்மை பதிப்பகம்

விலை : ரூ.70

54 comments:

மங்களூர் சிவா said...

பேய் கதை ரேஞ்சுக்கு எதிர்பாத்தேன். நல்லா இல்ல.

பி.கு. இது படிக்காமல் போட்ட பின்னூட்டம் அல்ல

MyFriend said...

என்னுடைய கமேண்டுகள் எங்கே???

MyFriend said...

எதுக்கு இப்போ பழைய பதிவை அழிச்சுட்டு திரும்ப புதுசா போட்டீங்க???

MyFriend said...

பதில் சொல்லுங்க .....

ILA (a) இளா said...

ம்ம் சரிங்க. அப்படியா, ஓஹோ, அதானே, சொல்லிட்டீங்க இல்லே, பார்த்துக்குவோம், done, என்னமோ சொல்றீங்க....

ILA (a) இளா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னுடைய கமேண்டுகள் எங்கே???
//
சிபியோட பதிவேயே காணோமாம், இதுல ஒரு கமெண்ட் போனா காயத்ரி என்ன மொட்டை அடிச்சுக்கவா போறாங்க? இல்லே எல்லாருக்கும் ட்ரீட் குடுத்துர போறாங்களா?

மங்களூர் சிவா said...

//
ஈரோடு வரையிலான ஒன்னரை மணிநேர பயணத்தில், இடைநிறுத்தமின்றி
//

இல்லயே சங்ககிரில நிறுத்துவானே.

காயத்ரி சித்தார்த் said...

//பேய் கதை ரேஞ்சுக்கு எதிர்பாத்தேன். நல்லா இல்ல.
//

எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்தக் கூடிய எழுத்து யாருக்குமே சாத்தியமில்லை சிவா! :)

ILA (a) இளா said...

//பேய் கதை ரேஞ்சுக்கு எதிர்பாத்தேன். நல்லா இல்ல.//
பேய் கதையே அப்படித்தான் இருந்துச்சு. சரி தலைப்புல கவிதாயினி பேர் இருக்கேன்னு நல்லா இருக்குன்னு சொல்ல வேண்டியதாப் போயிருச்சு

ILA (a) இளா said...

//அடுத்த முறை இந்த வழியாய் வரக்கூடாது///
இப்படின்னு அந்த கடைக்காரர் இல்லே சொல்லனும். புஸ்தகம் பார்க்குறேன்னு சொல்லி முழு புஸ்தகத்தையும் அங்கேயே டீ ஆர்டர் பண்ணி படிச்சா வேற எப்படி நினைப்பாங்களாம்?

ILA (a) இளா said...

//பாதி படித்து//
முழுசாய் படிச்சாத் தான் எங்க நிலைமை நல்லா இருந்து இருக்குமே

ILA (a) இளா said...

//சேலத்திலிருந்து ஈரோடு வரையிலான ஒன்னரை மணிநேர பயணத்தில்//
டிக்கெட் வாங்கலையாமே, கேள்விப்பட்டேன்.
SPBT owner நமக்கு தெரிஞ்ச ஆள்ங்கிறதால சும்மா போய்ட்டு போய்ட்டு வர்றதா?

துரியோதனன் said...

ஆஹா! சூப்பர் ! பேஷ் பேஷ், பிரமாதம் எல்லா பின்னூட்டமும் நல்லா இருக்கு

இப்படியெல்லாம் சொன்னாதான் எங்க (அழுவாச்சி) கவிதாயினி கவுஜ போடுவாங்க.

நாகை சிவா said...

//ம்ம் சரிங்க. அப்படியா, ஓஹோ, அதானே, சொல்லிட்டீங்க இல்லே, பார்த்துக்குவோம், done, என்னமோ சொல்றீங்க....//

எங்கள் அன்புஅண்ணன் இளா கூறியதை வழிமொழிகிறேன்....

அப்படியே செய்துடுவோம்....:)

நாகை சிவா said...

//எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்தக் கூடிய எழுத்து யாருக்குமே சாத்தியமில்லை சிவா! :)//

அது என்னவோ உண்மை தான்... ரசனைகளும் வேறுபடுதுல... அதான் காரணம்...

நீங்க சொன்ன புத்தகத்தை எதிர்கொள்ள நேர்ந்தால் படிச்சு பாக்குறேங்கோ....

Ayyanar Viswanath said...

அறிமுகத்திற்கு நன்றி

துரியோதனன் said...

//எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்தக் கூடிய எழுத்து யாருக்குமே சாத்தியமில்லை சிவா! :)//

ஏற்றுக்கொள்கிறோம்! ஆனால் அதையும் தாண்டி உங்க எழுத்து மேல நாங்க வைத்திருக்கும் நம்பிக்கை எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

MyFriend said...

பழைய பதிவை நீங்க தூக்கியதால் என்னுடைய பின்னூட்டங்கள் கவிதாயினி கவிதைகளைபோல அனாதையா நிக்கின்றது..

இதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா.. என்னுடைய பின்னூட்டங்களை நான் மீள்பின்னூட்டம் பண்ண போகிறேன்.

MyFriend said...

மீள் பதிவு மட்டும் நீங்க எல்லாரும் பண்ணும்போது நான் என்னுடைய பின்னூட்டங்களை மீட்கப்போகிறேன். :-))

நந்தா said...

அறிமுகத்திற்கு நன்றி. உங்களது இந்த பதிவு அதை உடனே படிக்க வேண்டும் என்று தூண்டுகிறது.

அதிலும் கச்சை சிறுகதையும்,857 பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டது.

MyFriend said...

மீள்பின்னூட்டம் 1:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu....

Wed Sep 19, 09:35:00 AM

காயத்ரி சித்தார்த் said...

//எதுக்கு இப்போ பழைய பதிவை அழிச்சுட்டு திரும்ப புதுசா போட்டீங்க???//

சிரமத்துக்கு மன்னிச்சிக்கோங்க.. தலைப்பு வைக்க மறந்ததால வந்த வினை. :(

MyFriend said...

மீள்பின்னூட்டம் 2:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒவ்வொரு நாளும் நல்லா வெராய்ட்டியா பதிவு போடுறீங்களே! வாழ்த்துக்கள். :-)

Wed Sep 19, 09:36:00 AM

MyFriend said...

மீள்பின்னூட்டம் 3:

.:: மை ஃபிரண்ட் ::. said...

படிச்சுட்டு வர்ரேன். பை. :-)

Wed Sep 19, 09:36:00 AM

MyFriend said...

மீள்பின்னூட்டம் 4:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏன் இந்த பதிவுக்கு தலைப்பு வைக்கலை????

Wed Sep 19, 09:37:00 AM

MyFriend said...

மீள்பின்னூட்டம் 5:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. இப்போ தலைப்பு வந்துடுச்சு.. :-)

MyFriend said...

இன்னும் ரெண்டு பின்னூட்டங்களை காக்கா தூக்கிட்டு போச்சுங்கிறதுனால மீட்க முடியலை. குசும்பா, உன்னோட ஒரு பின்னூட்டமும் அங்கே இருந்துச்சு அதுவும் மீட்க முடியலை. :-( எல்லாம் இந்த கவிதாயினியை ஆட்டி வைக்கிற அந்த பேயை சொல்லணும்.

MyFriend said...

@ILA(a)இளா said...
//சிபியோட பதிவேயே காணோமாம், இதுல ஒரு கமெண்ட் போனா காயத்ரி என்ன மொட்டை அடிச்சுக்கவா போறாங்க? இல்லே எல்லாருக்கும் ட்ரீட் குடுத்துர போறாங்களா?//

அவங்க அடிக்காட்டினாலும் நாம அடிக்க வச்சிருவோம்ல. :-)

MyFriend said...

பதிவை படிச்சு முடிசுட்டேன். ஆங்.. சொன்னா நம்பணும். சரியா?

படிச்ச நேரத்துக்கு கமேண்ட் பண்ணலாம்ன்னு தட்டுனா, பேஜ் எர்ரோர் ஆகிடுச்சு. அதனால உங்க விமர்சனத்தை பத்தி என்ன எழுதணும்ன்னு நெனன்ச்சேனோ அது மறந்து போச்சு. ஸொ, இப்போ நான் அப்பீட்டு. வர்ர்ட்டா... ;-)

மங்களூர் சிவா said...

என்ன அக்கிரமம் இது. என்னோட கும்மி எங்க?

மத்தவங்க எல்லாம் கும்முறாங்க

பாரதி தம்பி said...

நூல் அறிமுகத்துக்கு நன்றி..! விரைவில் நீங்களும் பின் நவீனத்துவ பிசாசாக மாறக்கூடிய அபாயம் தெரிகிறது.

ஜே கே | J K said...

எங்க என் கமெண்ட்ஸ் இன்னும் வரலை...

கமெண்ட் வந்ததும் தான் நான் போஸ்ட் படிப்பேன்....

Unknown said...

புத்தக அறிமுகத்துக்கு நன்றி. முடிந்தால் இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துப் பார்க்கவும்.

ஜே கே | J K said...

இது அனியாயம், அக்கிரம்மம்...

கேட்க ஆளே இல்லையா?

நான் போட்ட 2 பின்னூட்டத்தை பப்ளிஸ் பண்ணவேயில்லை...

ஜே கே | J K said...

//மங்களூர் சிவா said...
என்ன அக்கிரமம் இது. என்னோட கும்மி எங்க?

மத்தவங்க எல்லாம் கும்முறாங்க//

ஆமாங்க சிவா, நான் போட்ட நல்ல பின்னூட்டம் கூட வரலை....

காயத்ரி சித்தார்த் said...

கும்மியடிக்காதீங்கப்பா... ப்ளீஸ்.

இராம்/Raam said...

போனமுறை புத்தகக் கடைக்கு போனப்போ இந்த புக்'ஐ பார்த்ததா ஞாபகம்....

நெக்ஸ்ட் போறப்போ வாங்கிறேன்....
நல்லவிமர்சனத்துக்கு நன்றி கவிதாயினி... :)

இராம்/Raam said...

//பாதி படித்து.. பக்க நுனி மடிக்கப்பட்டோ, தலைகுப்புறக் கவிழ்த்த நிலையிலோ தரையிலும் படுக்கையிலுமாய் இறைந்து கிடக்கும் புத்தகங்கள் தொடர்ந்து அதே நிலையில் கிடந்தபடியும், "ஒன்னா படி, இல்லன்னா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை........." என்று அம்மா என்னை வசைபாடுவதற்கு உதவி புரிந்தபடியும் இருக்கும்போது மறுபடி நான் புத்தகங்கள் வாங்கப் போவதில் என்ன அர்த்தமிருக்கிறது?//


//
இது போன்ற தொகுப்பு நூலையோ அல்லது கவிதைப் புத்தகத்தையோ கையிலெடுக்கையில் எப்போதுமே முதல் பக்கத்திலிருந்து தொடங்குவதில்லை நான். கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம் எப்போது தொடங்கியதென்று நினைவிலில்லை!//


ஆஆஆஆஆஆஆஆஆஆ...... சேம் பின்ஞ்.... :)

G3 said...

//"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //

எனக்கு ஒன்னும் விளங்கலைன்னு சிம்பிளா சொல்லாம ஏதோ பெரிய்ய்ய்ய விஷயம் சொல்ற மாதிரி தமிழ வெச்சு வெளாண்டிருக்க பாரு.. இது சூப்பரு.. இப்படிலாம் எழுதனும்னா தமிழ்ல எம்.ஏ. எம்.ஃபில் பண்ணனுமோ?? ;)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

// "றெக்கை" "பால்" என்ற இரண்டு புனை கதைகள்... "என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //

உங்களுக்கு எளிதான,மெல்லிய வசீகரிக்கும் நடை கைவரப் பெற்றிருக்கிறது.
மேலும் பழகினால்,கவரக் கூடிய சிறுகதையாளராக வர முடியலாம்...

மங்களூர் சிவா said...

//
@J K said
ஆமாங்க சிவா, நான் போட்ட நல்ல பின்னூட்டம் கூட வரலை....
//
நல்லதுக்கு எப்பவுமே காலம் இல்லன்னு எங்க ஆயா சொல்லும். இப்ப காயத்திரி (ஆயா) சொல்லாம சொல்லுறாங்க

நிலா said...

"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்!"


இதுக்கே உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம் ஆன்ட்டி

Jazeela said...

படிக்க தூண்டிய வாசிப்பனுபவம். //கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம்// கண்ணில் படும் பக்கம் கதையின் ஆரம்பமாக இல்லாமல் முடிவாக இருந்தால்?

தமிழ்நதி said...

'கச்சை'நல்லதொரு கதை. நானும் படித்திருக்கிறேன். நட்சத்திர வாரம் நல்ல வெளிச்சமாக இருக்கிறது காயத்ரி.

ஆவி அம்மணி said...

/அவமானம் தாங்காமல் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் குட்டிமோளு பல வருடங்கள் கழித்து.... அவ்வூருக்கு வரும் பெண்ணொருத்தி அணிந்திருக்கும் நவீன ரக சோளிகளை ஸ்பரிசித்துப் பார்க்க முயல்வதாக முடிந்த அக்கதை பரிதாபம் கலந்த திகிலுணர்வையும் நல்ல கதையொன்றைப் படித்த திருப்தியையும் தந்தது.
//

எனக்குக் கூட இந்தக் கதை ரொம்பப் பிடிக்கும்!

நீங்களும் ஆவிப் ப்ரியையோ?

இதோட ரெண்டு பதிவு ஆச்சு நட்சத்திர வாரத்துல எங்களைப் பத்தி எழுதி!

கோபிநாத் said...

\G3 said...
//"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //

எனக்கு ஒன்னும் விளங்கலைன்னு சிம்பிளா சொல்லாம ஏதோ பெரிய்ய்ய்ய விஷயம் சொல்ற மாதிரி தமிழ வெச்சு வெளாண்டிருக்க பாரு.. இது சூப்பரு.. இப்படிலாம் எழுதனும்னா தமிழ்ல எம்.ஏ. எம்.ஃபில் பண்ணனுமோ?? ;)\\

அப்போ...காயத்ரி பீலாவுடுதுன்னு சொல்றிங்களா!!! :)

காட்டாறு said...

நல்லா விமர்சனம் எழுதுறீங்கப்பா...

Unknown said...

உங்கள் மின்னஞ்சல் இல்லாது போனதால் இங்கு பதிகிறேன்.

மிகவும் ஆரோக்கியமான பதிவுகள் உங்களுடையவை.

நூல் ஆய்வு மிகவும் அற்புதமாக செய்திருக்கிறீர்கள்.

தில்லியில் இருந்து வரும் வடக்கு வாசல் இதழ் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

சிஃபி யிலும் கீற்றிலும் வடக்கு வாசல் நீங்கள் படிக்கலாம்.

உங்கள் படைப்புக்களை வடக்கு வாசலுக்கு அனுப்பலாமே?

என்னுடைய மின்னஞ்சல்

முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். பிடிஎஃப் வடிவில் இதழ்களை அனுப்பி வைக்கிறேன்.

பிடித்து இருந்தால் எழுதுங்கள்.

ராகவன் தம்பி

Unknown said...

ஒரு நல்ல புத்தகத்தை நான் படித்தபின், ‘எப்படியிருந்தது?’ என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு, நான் சொல்லுவது “படிச்சுப் பாருங்க”
நல்ல வாசிப்பனுபவத்தை வார்த்தைகளில் முழுவதுமாய் விவரித்துவிடமுடியாது, அதனை உணர வேண்டும் என்றே நினைப்பேன்.
ஆனால், உங்கள் பதிவு, புத்தகத்தையும் வாசிக்க தூண்டுகிறது. நன்றி.

Vaa.Manikandan said...

மனோஜ் பல காலமாக எழுதி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள்தான் இருக்கின்றன. இது பற்றி அவரிடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வினவியதற்கு "எண்ணிக்கை முக்கியமா?" என்றார்.

நல்ல விமர்சனம் காயத்ரி. நன்றி.

இராம்/Raam said...

கவிதாயினி,

இப்போதான் இந்த புத்தகத்தை முழுவதும் படிச்சு முடிச்சேன்..... எல்லா கதையும் அட்டகாசம்..

பால்,புனைவின் நிழல்,அச்சாவோ சிச்சாமணி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. டைம் கிடைச்சா வாசிப்பனுப பதிவொன்னு போடனும்... :)

manovarsha said...

நன்றி. nanbargal solli ippothuthan thangal pathivu parthen. padiththa vithathaiyum rasitha vithathaiyum nanraga ezhuthi ulleergal.

vaalthukkal

anbudan

manoj

குப்பன்.யாஹூ said...

Kuppan_yahoo says

Indru TNagar New Bookland il vaangi padithen. (miga nalla book shop, ningalum chennai varum pozuthu visit seiyavum (with rs.20000 in hand), TNagar, north usman road, near Joy alukkas complex, new bridge keez, left sidela).

2 kadhaigal padithen , miga arumai, innum 4 or 5 daysila matra 13 kadhaikalayum padithu vidugiren, Miga nalla book.

Nalla puthagathai arimugam seidatharkku kodaanu kodi nandri.

Indha book vaanga pona idathil, ENCHOTTUPEN by Tamizachi Tangapandiyanum, vaanginen (rs.95), Nalla kavithaigal, nalla munnuraigal.

Internet chats & Blogil nerathai tolaithu kondu irundha ennai meendum puthagam vaasikkum pazakkathirkku matriyatharkku sirappu nandri.

Nandrigal matrum vaazthukkaludan

Kuppan_yahoo

Siva said...

நன்றி காயத்ரி