Wednesday, September 19, 2007

அன்பின் மொழி


அடிவான விளிம்பில்
கண்கொள்ளா நிறங்களைக்
கொட்டி வைத்திருக்கும்
இந்தச் சூரியன் தான்
தகிப்பாய்த் தகித்தது
இன்றைய முற்பகலில்..

பூக்கள் மிதக்க
உதடு சுழித்து
புன்னகைத்தோடும்
இந்த நதியில்தான்
அன்று மிதந்து வந்தது
குழந்தையின் பிணமொன்று...

பொங்கியும் புரண்டும்

மகிழ்ச்சி துள்ள ஓடிவந்தும்
அடிவருடிப்போகும்
அலைகள் தான்
பலி கொண்டன
பல்லாயிரம் உயிர்களை.....

என்றாலும்...

வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை


சூரியனை..

நதியை..

அலைகளை...

உன்னையும்!

32 comments:

LakshmanaRaja said...

மிக ஆழமான பதிவு.
வாழ்த்துக்கள்.
உணர்ந்தால் சரி.

ஜாபர் அலி said...

சூரியன்: வாழ்க்கைக்கான அனைத்தையும் கொடுக்கிறது; அதுவே சில உச்சிப் பொழுதுகளில், உருக்கி வருத்துகிறது.

நதிகள்:பூமிக்கு வளம் சேர்க்கிறது, தாகம் தணிக்கிறது; அதுவே சில தருணங்களில், வெள்ளமாய் அழிக்கச் செய்கிறது.

கடல்: மழையின் உற்பத்திக் களனாய் அருள் பொழிகிறது; அதுவே சில நேரங்களில், சுனாமியாய் வாழ்வை புரட்டிப் போடுகிறது.

அதுபோல் நீயும், எனக்கு எல்லாமாக இருந்தும், சில கணங்களில், கொல்கிறாய்; ஆனாலும் உன்னை ரசிக்கிறேன் என்று கவிதையாய் முடித்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்

நிலா said...

இத்தனை பண்ணியும் அவன் மேல பித்தா இருக்காளே என்ன பொண்ணோ என்று அடிக்கடி எங்காவது காதில் விழும்.

இப்போ புரியுது

இராம்/Raam said...

//உன்னையும்!/


இவ்வளவும் சொல்லிட்டு எங்கடா நம்ம கவிதாயினி டச்'ஐ காணாமின்னு பார்தேன்...


நல்லாவே இருக்கு.... :)

Unknown said...

Miga armai...
Idu anbin mozhiya..illai ilappin valiya...puriyavillai...
anbudan,
arun

Unknown said...

அந்த உன்னை என்பது யார் என தெரியவில்லை. இருந்தாலும் கவிதை பரவாயில்லை.

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

புனைவின் நிழல் பற்றிய விமர்சனமும் அருமை.

வாழ்த்துக்கள்.

MyFriend said...

உள்ளேன் டீச்சர்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எல்லா கவிதைலயும் ஒரு negative punch வைக்கிறீங்களே அம்மணி.....

வித்யா கலைவாணி said...

எப்படி அக்கா எப்படி?
அற்புதம்

துரியோதனன் said...

//என்றாலும்...

வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை


சூரியனை..

நதியை..

அலைகளை...

உன்னையும்!//

உங்கள மாதிரியே தாங்க நாங்களும் அழுவாச்சி கவிதையாயிருக்கட்டும் மொக்க போஸ்ட்டாயிருக்கட்டும் கஷ்டப்பட்டு படிச்சுட்டு கண்னை துடைச்சுகிட்டு அடுத்த போஸ்ட் எப்போனு காத்திருந்து வரோமே ... .. உங்கள மாதிரியே தாங்க நாங்களும்

G3 said...

கவிதாயினி டச் மிஸ்ஸிங் :-(

ஆனா கான்சப்ட் சூப்பர் :)

அனுசுயா said...

அருமை காயத்ரி சில விசயங்கள் பல துக்கங்களையும் துயரங்களை தந்தாலும் ரசிக்காதிருக்க முடியவில்லை :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லைன்னு எல்லாரிடமும் நல்லது மட்டும் வடிகட்டி வச்சிக்கிடறீங்க ந்ல்லாருங்க...நல்லாருங்க.

கையேடு said...

கடைசி வார்த்தை புதிய பொருள் விளங்கச் செய்கிறது.. நன்று.. வழக்கம் போல் கலக்குங்க..

Suresh said...

அருமை !!! வாழ்த்துக்கள்...

நிலா said...

என்ன ஆச்சு? எந்த பின்னூட்டத்தயும் வெளிவிடவில்லயே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான கவிதை காயத்ரி!
மனதில் வெறுப்பு பொங்கினால் இந்தக் கவிதையைக் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்! வெப்பக் காற்று போய், தென்றல் காற்று வீச ஆரம்பிக்கும்! :-)

//என்றாலும்...
வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை...//

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? Life is complex but beautiful too!

//உன்னையும்!//

கவிதையின் இந்த இறுதிச் சொல் பொதுக் கவிதையைக் காதல் கவிதை ஆக்குகிறதோ? :-)

பாரதி தம்பி said...

/உன்னையும்!/

-இதை எதிர்பார்க்கவில்லை. சூப்பர்..!

காயத்ரி சித்தார்த் said...

நன்றி லக்ஷ்மண்..

ஹரன் என் கவிதைக்கு உரை எழுதியிருக்கீங்களா!! நன்றி.

நிலா பாப்பா.. உனக்கு இதெல்லாம் கூட புரியுதா? :)

காயத்ரி சித்தார்த் said...

தேங்க்ஸ் ராம்!

நன்றி நிக்கி! என்னாச்சு இன்னும் தமிழ்ல டைப் பண்ண முடியலயா?

சுந்தர், மை ஃப்ரண்ட், அறிவன் வருகைக்கு நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

வித்யா கலைவாணின்னே பேர் வெச்சிருக்கலாமே? ஏன் இப்படி? வருகைக்கு நன்றி வித்யா!

//கஷ்டப்பட்டு படிச்சுட்டு கண்னை துடைச்சுகிட்டு அடுத்த போஸ்ட் எப்போனு காத்திருந்து வரோமே ... .. உங்கள மாதிரியே தாங்க நாங்களும்
//

அச்சோ!! புல்லரிச்சுடுச்சுங்க துரியோதனன்! நன்றி.

காயத்ரி சித்தார்த் said...

ஜி3, அனுசுயா, சுரேஷ் நன்றி.

//எல்லாரிடமும் நல்லது மட்டும் வடிகட்டி வச்சிக்கிடறீங்க ந்ல்லாருங்க...நல்லாருங்க.
//

புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் முத்துக்கா!

காயத்ரி சித்தார்த் said...

கே.ஆர்.எஸ் நன்றி.. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும்.

நன்றி ஆழியூரான். தொடர்ந்து வர்றதோட பின்னூட்டமும் போடறிங்களே? மெல்லிசா ஒரு குற்ற உணர்ச்சி வருது எனக்கு. :(

நிலா said...

என்ன ஆன்ட்டி இப்டி கேட்டுட்டீங்க. நிலாவுக்கும் கவிதைக்கும் இல்லாத புரிதலா?

உங்க கவிதைல இருக்க ரென்டு எக்ஸ்ட்ரீம்ஸ் நிலாவிலும்தானே இருக்கு.

நிலா இல்லன்னா உங்கள மாதிரி பெரிய (போனா போவுது) கவிதாயினிலாம் என்னதான் பன்னுவிங்க

ILA (a) இளா said...

//உன்னையும்!//
பழைய ஸ்டைல் காப்பி அடிக்காம இருந்து இருக்கலாம். எனக்கு இந்தக் கவிதை பிடிக்கலை. Better Luck Next time...

கோபிநாத் said...

நல்லாயிருக்கு :)

ALIF AHAMED said...

காயத்ரி said...

மின்னல் வருகைக்கு நன்றி

nagoreismail said...

இந்த மாதிரி கவிதைகளை
எழுதிய காயத்ரி தான்
மொக்கை பதிவுகளையும்
இடுவது,
என்றாலும்
வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை
உங்கள் பதிவுகளை
- என்று குசும்பன் பின்னூட்டம் இட வாய்ப்புள்ளது

- அருமையான கவிதை

- நாகூர் இஸ்மாயில்

நந்தா said...

சத்தியமாக "உன்னையும்" என்ற வார்த்தையை எதிர்பார்க்க்க வில்லை.

அந்த வார்த்தை இல்லாமல் போயிருந்தால், வெகு சாதாரண ஒரு புலம்பலாய்ப் போய் இருந்திருக்கலாம்.

ஒற்றை வார்த்தையில் ஒரு கவிதை. நல்லா இருக்கு.

கதிர் said...

//மிக ஆழமான பதிவு. //

:))

நீச்சல் தெரியுமா லட்சுமண ராஜா அவர்களே!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//தொடர்ந்து வர்றதோட பின்னூட்டமும் போடறிங்களே? மெல்லிசா ஒரு குற்ற உணர்ச்சி வருது எனக்கு.//
அம்மணி,புரிஞ்சா சரி !!!!!!!

Unknown said...

சில நேரங்களில் சில மனங்கள்.