குழந்தைகள்
அழகான தொல்லைகள்...
நீயும் அப்படித்தான்..
உடனிருந்தும் இல்லாமலும்
இம்சிக்கிறாய் என்னை!
சிறிது சிறிதாய்
அன்பு தந்து
என்னைப் பெரியதோர்
கடனாளியாக்கி விட்டிருக்கிறாய்..
உன் ஓயாத பேச்சுக்கள்
என் தனிமைகளை
நிரப்புகின்றன..
பயணங்களின் போது
உடன்வருகின்றன...
யாருமில்லா நாட்களில்
துணையிருக்கின்றன...
பிரியத்திற்குரிய தோழீ..
என்னிடம் தொலைபேசுவதை
தினசரிக் கடமையாகக்
கொண்டிருக்கிறாய் நீ
உன்னை மறவாதிருத்தலை
வாழ்நாள் லட்சியங்களிலொன்றாய்
வைத்திருக்கிறேன் நான்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
11 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்
ம்ம்... இங்கியும் நீதான் ஃப்ர்ஸ்டா? :)
Kanithai Super. Ennaku oru doubt. Neenga Male-aaa, Female-aaa? Romba kolapureenga. Naanum Erode-than. Tell me the Truth. [Enna kodumai sir ithu?]
Vanakkam Gaythri. Neenga Erode-aaa? Naan Erode. Unga kavithai ok ragam.
கவிதாயினி,
எப்பிடிங்க இப்பிடியெல்லாம் கலக்கீறிங்க??? :)
Fabulous
நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..
சந்தோஷத்தில் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)
//குழந்தைகள்
அழகான தொல்லைகள்...
நீயும் அப்படித்தான்..//
மிக அழகான அன்பை உணர்த்தும் வரிகள்!
வாழ்த்துக்கள்.
G3, ungalukku gayathri oru post, oru kavithainu pottu kalakaraanga! Juper!
//தொல்லைகள்...
இம்சிக்கிறாய்
கடனாளியாக்கி விட்டிருக்கிறாய்..//
பாவம்பா கவிதாயினி மனசுல எதையும் மறைக்க தெரியல.
g3 க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சும்ம்மா..
arumayana kavithai.. superb dedication for her bday.. i missed posting :(
Post a Comment