நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு பார்த்தால் கோடி நன்மை'ன்னும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன... இப்டியெல்லாம் எழுத நானென்ன டிவில ராசிபலனா சொல்றேன்?
'குரு' ன்னு ஒரு படம்ங்க. கமல், ஸ்ரீதேவி நடிச்சது இல்ல. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிச்சு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்னு நமக்கு பிடிச்ச காம்பினேஷன்ல போன வருஷம் வந்த படம். அதை நான் பார்த்தது என் கலையுலக வரலாற்றுலயே மறக்க முடியாத சம்பவமா அமைஞ்சுது! (படம் பாக்கறதும் கலைச்சேவைதானே?) அதத்தான் சொல்லப் போறேன் இங்க!
அப்போ நான் சேலத்துல ஹாஸ்டல்ல தங்கி கலைச்சேவையோட சேர்த்து தமிழ்த்துறை விரிவுரையாளரா 'கல்விப்பணியும்' செஞ்சுட்டிருந்தேன். (ஹிஹி) ஹாஸ்டல்ல ஆனந்தி ஆனந்தின்னு (2 பேர் இல்ல) 'பட்டாணி' சைஸ்ல (அவ்ளோ தான் உயரம்) ஒரு ரூம் மேட். என்னை மாதிரி அமைதி எல்லாம் இல்ல (?!) ... வாயாடின்னா வாயாடி அப்படி ஒரு வாயாடி. வழக்கமா என்னை ஹாஸ்டல்ல சேர்த்தாங்கன்னா என்னை விட்டுட்டு அம்மாப்பா வீடு போறதுக்குள்ள பிரிவுத்துயர் தாங்காம பின்னாடியே அடுத்த பஸ்ல கிளம்பி நானும் வீட்டுக்கு போய்டுவேன்! அந்தளவுக்கு ஹோம் சிக் வரும் எனக்கு.
ஆனா இங்க சேர்ந்த அன்னிக்கு அவ பேச ஆரம்பிச்சதுல பிரிவாவது, துயராவது.. இந்த கொடுமைல இருந்து தப்பிச்சா போதும்னு பெட்ஷீட் போர்த்திட்டு தூங்கிட்டேன்! அப்படியாப்பட்ட நல்ல பொண்ணு அது. ஒரு நாள்ல 3 மணி நேரம் காலேஜ் போறதும் (அதுல ஒன்னரை மணி நேரம் ட்ராவல்!) 16 மணி நேரம் தூங்கறதும், மீதி 5 மணி நேரமும் என்னை கலாய்க்கறதும் அவளோட அன்றாட கடமைகளா இருந்துது. ஆனா அவகிட்ட ஒரு நல்ல கொள்கையும் இருந்துச்சு... எந்த படம் வந்தாலும் உடனே பாத்துடுவா. ''நமக்காக கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கறாங்க.. அதை முதல் நாளே பாக்கறது தான் அவங்களுக்கு நாம பண்ற முதல் மரியாதை''ன்னு கண்கலங்க உணர்ச்சிபூர்வமா சொல்லுவா! அதை கேட்டு கேட்டு எனக்கும் அது சரிதானேன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.
நானும் இந்த கொள்கை முடிவுக்கு மாறினப்போதான் அந்த 'குரு' படம் ரிலீஸ் ஆச்சு. நாங்களும் இன்னிக்கு வரும் நாளைக்கு வரும்ன்னு காத்து கிடந்ததால படம் வந்ததும் அன்னிக்கே பாத்துடறதுன்னு கிளம்பினோம். ஈவ்னிங் ஷோ.. படம் முடிஞ்சு வர்றதுக்கு 9 மணி ஆகும். ஹாஸ்டல் 8.30 வரை தான் திறந்திருக்கும்.. என்ன செய்றதுன்னு யோசிச்சி.. வெள்ளந்தியான எங்க வார்டன் அக்காகிட்ட போய்.. "எனக்கு காலேஜ்ல பிராக்டிகல் (தமிழுக்கு?!) ஒர்க் இருக்கு.. அது முடிஞ்சு மீட்டிங் இருக்கு.. 9 க்குள்ள வந்துடுவேன்" னு நானும்... "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தறேன்னு வேண்டியிருக்கேன்(!) நாமக்கல் போறேன்"னு அவளும் பர்மிஷன் வாங்கினோம்.
ஈவ்னிங் நான் வர்றதுக்குள்ள அந்த 'பட்டாணி' ஒரு தடவை தியேட்டருக்கே போய் என்னா நிலவரம்னு துப்பறிஞ்சிட்டு வேற வந்திருக்கு! ஒரு வழியா ஈவ்னிங் ஊருக்கு முன்னால கிளம்பிப் போய் மல்டி ப்ளக்ஸ் வாசல்ல நின்னுகிட்டோம். அவ போய் டிக்கட் வாங்கிட்டு வந்தா.. வாங்கிப் பாத்தா பயங்கர ஷாக்.. டிக்கெட் ஹிந்தில இருக்கு. மணிரத்னம் அந்த படத்தை தமிழ், ஹிந்தி ரெண்டு மொழிலயும் எடுத்து ஒரே நேரத்துல ரிலீஸ் பண்ணிருந்தார்.. எனக்கு வேற ஹிந்தில.. "ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும். "என்னாடி இது" ன்னு நான் டென்ஷன் ஆனா.. அவ ரொம்ப கூலா "ஏய் நான் விசாரிச்சுட்டேன்.. மேட்னிஷோ மட்டும் தான் ஹிந்தி.. இது மத்யானம் மிஞ்சிப் போன டிக்கட்டா இருக்கும்"ன்றா. "அடி ஆத்தி.. அப்படி கூடவா பண்ணுவாங்க"ன்னு நானும் ஆச்சரியப்பட்டுகிட்டு நின்னேன். எங்க பாத்தாலும் ஒரே சேட்ஜிங்களா இருக்காங்களேன்னு டவுட்டு வேற.
ஒரு வழியா உள்ளார போயி செட்டிலானோம். அக்கம்பக்க சீட்காரங்ககிட்ட விசாரிச்சா எல்லாரும் ஹிந்திப்படம்ங்கிறாங்க, இவளா "தமிழ்தான்! நான் விசாரிச்சுட்டேன்"னு சாதிக்கிறா. சரி படம் போட்டா தெரிஞ்சிடப்போகுதுன்னு ஒரே த்ரில்லா பாத்திட்டிருந்தோம். படம் ஆரம்பிச்சதும் பாத்தா .. டைட்டில் கார்டெல்லாம் இங்கிலீஷ்ல வருது. :( அப்புறம் ஒரு பாட்டு வந்துச்சி... அது தமிழா, ஹிந்தியா, இங்கிலீஷான்னே புரியல. ரொம்ப நேரமா கஷ்டப்பட்டு கேட்ட பின்னாடி "நான் ச்ச்சீனியில் செய்த கடல்ல்ல்" னு என்னமோ ஒரு வரி புரிஞ்சிது. ஹை.. தமிழ்தான் போல! டயலாக்கும் இப்டி கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சாகூட போதும்"னு நாங்க சைலண்ட் ஆய்ட்டோம். வந்திருந்த ஹிந்திக்காரங்களுக்கும் அது என்ன மொழிப்பாட்டுன்னு கன்ஃப்யூஸன் போல! அவங்களும் சமத்தா பேசாம உக்காந்திருந்தாங்க! (அதுக்கு மல்லிகா ஷெராவத்தும் காரணமா இருந்திருக்கலாம்!)
அடுத்த சீன்ல "திருநெல்வேலி ஜில்லா" ன்னு தமிழ்ல எதோ ஊர்ப் பேர் வந்துச்சு. அவ்ளோ தான்! எல்லாரும் 'டபார்'னு எந்திரிச்சி கச்சா முச்சான்னு என்னமோ கத்தறாங்க. "ஏய் மன்னாரு படத்த ஹிந்தில போடுடா"ன்னு கத்தினாங்க போலருக்கு. எதாச்சும் புரிஞ்சாத்தானே! உடனே படம் நின்னு போச்சி. உள்ளார இருந்து நாட்டாம கணக்கா ஒருத்தர் வந்து என்னமோ பஞ்சாயத்து பண்ணினார். அவர் போனதும் மறுபடி ஃபர்ஸ்ட்ல இருந்து படம் போட்டாங்க. மறுபடி இங்கிலீஷ் டைட்டில், அதே பாட்டு, பாட்டு முடிஞ்சதும் ... ஹிஹி! மறுபடி "திருநெல்வேலி ஜில்லா!" உடனே மறுபடி எல்லாரும் ஜனகன மண பாடறாப்பல எந்திரிச்சி நின்னுகிட்டு கத்தறாங்க. நாங்க நொந்து போய் படத்தை 'பார்ஸி' மொழில போட்டாலும் பாக்கற ஸ்டேஜுக்கு வந்துட்டோம்.
திடீர்னு மறுபடி படம் நின்னு போய் தியேட்டர் ஒரே சைலண்ட்டா ஆய்டுச்சி. நாட்டாமை வந்து எட்டிப்பாத்துட்டு போனார். அப்புறம் திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து படம் ஓடுது. இந்த முறை படத்துல சத்தமே இல்ல!! "தமிழா ஹிந்தியான்னு என்னாத்துக்கு பிரச்சினை? எல்லாரும் பாக்கட்டும்"னு நல்ல மனசோட ஆடியோவயே கட் பண்ணிட்டாங்க போல!! எல்லாருக்கும் செம டென்ஷனாய்டுச்சி. ஆனந்தியும் எந்திரிச்சு நின்னு கத்தினா. நின்னாலும் உக்காந்த மாதிரியே இருந்ததால சேர் மேலெல்லாம் ஏறிநின்னு கத்தினா பாவம்!
இந்த ரோதனை பத்தாதுன்னு ஒவ்வொரு முறை படம் நிறுத்தினப்பவும் பக்கத்து சீட்டு சேட்டம்மா என்கிட்ட "க்யா ஹுவா.. க்யா ஹூவா" ன்னு இம்சை பண்ணிட்டே இருக்குது. நானும்
"ஹாங் ஜி" ..
"ஜி ஹாங்"...
"அச்சா அச்சா" ...
"குச் குச் ஹோத்தா ஹை" ன்னு
தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தையும் சொல்லிப்பாத்தேன். அந்தம்மா அடங்கறாப்பலயே இல்ல. நானும் எவ்ளோ நேரம்தான் ஹிந்தி புரிஞ்ச மாதிரியே நடிக்கறது? அழுவாச்சியா வருது எனக்கு...
கடைசியா அந்த நாட்டாமை மறுபடி வந்து "தமிழ்ல பாக்கறவங்க மட்டும் இருங்க.. மத்தவங்க எல்லாம் பணத்தை திருப்பி வாங்கிக்குங்க.. படம் தமிழ்ல தான் ஓடும்" ன்னு தீர்ப்பு வழங்கினார்! கேஸ் முடியவே மணி 7.20 ஆய்டுச்சு... இருந்தாலும் "ஆஹா.. எப்பவும் நீதி தேவதை நம்ம பக்கம்தான் இருக்கா போல" ன்னு சந்தோஷமாய்டுச்சி எங்களுக்கு. ஹிந்திக்காரங்க எல்லாம் சோகமா திரும்பிப் போறத பாத்து எளக்காரமா "உங்கள எல்லாம் பாத்தா பாவமா இருக்கு" ன்னு டயலாக் விட்டுட்டே பாக்கறேன்.... பாவி மக்கா! தியேட்டர்ல இருந்த அத்தனை பேரும் போய்ட்டானுங்க. :( நானு, பட்டாணி, அப்புறம் நம்ம 'ராம்' மாதிரி பச்சப்புள்ளங்க ரெண்டு பேர், குசும்பன் மாதிரி பால் வடியற முகமா ஒருத்தர், தம்பி மாதிரி உயர்ந்த மனிதர் ஒருத்தர்னு மொத்தமே 6 பேர் தேமேன்னு உக்காந்திருக்கோம்.
நாட்டாம மறுபடி வந்து பாத்துட்டு "ஷோ கேன்சல்" ன்னு தீர்ப்ப மாத்தி சொல்லிட்டு போய்ட்டார். ஹ்ம்ம்! நாங்க நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெர்மிஸிலி ஆகி.... 7.30 க்கு (நேரத்தை பாத்தீங்களா!) பணத்தை வாங்கிட்டு வெளில வந்து அண்ணா பார்க், கெவீஸ் ரெஸ்டாரண்ட்னு சுத்தி புண்பட்ட மனசை ஆத்திகிட்டு நல்ல புள்ளைங்களா 8.30 க்குள்ள ஹாஸ்டல் வந்து எங்க பேரை காப்பாத்திகிட்டோம்.
ஆனாலும் விடாப்பிடியா மறுநாள் "பாட்டி செத்துப்போச்சின்னு" காலேஜுக்கு லீவ் சொல்லிட்டு போய் படத்தை பாத்துட்டு அதுக்கடுத்த நாள் காலேஜ் போனதும் வழில எங்க ஹெச்.ஓ.டி "என்னாச்சி பாட்டிக்கு" ன்னு விசாரிக்க நான் "எந்தப் பாட்டி?" ன்னு மொதல்ல தடுமாறி அப்புறம் சுதாரிச்சி "ஆமாம் மேம்... பாட்டி செத்துப்போய்ட்டாங்க.. பாவம் ரொம்ப சின்ன வயசு வேற..." ன்னு சோகமா உளறிக்கொட்டினது தனிக்கதை! இதெல்லாம் கலைச் சேவைக்காக நான் பட்ட கஷ்டங்கள்... தெரிஞ்சுக்கோங்க!
பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!
பி.குக்கு.பி.கு: பின் குறிப்பு தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!!
44 comments:
//நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு பார்த்தால் கோடி நன்மை'ன்னும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன... //
அய்யோ மம்மி... பொம்பள சாமியாரு...
//'குரு' ன்னு ஒரு படம்ங்க.//
ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க.. இனி படம் வழக்கமான படம். வந்தாங்க காதலிச்சாங்க.. அழுதாங்க. சண்டை போட்டாங்க.. பிரிஞாங்க.. சேர்ந்தாங்க.. சுபம்ன்னு சொல்ல போறாங்க பாருங்க.
//அப்போ நான் சேலத்துல ஹாஸ்டல்ல தங்கி கலைச்சேவையோட சேர்த்து தமிழ்த்துறை விரிவுரையாளரா 'கல்விப்பணியும்' செஞ்சுட்டிருந்தேன்.//
அப்போதானே அந்த கோழி காலு சாப்டீங்க??
//ஆனந்தி ஆனந்தின்னு//
உங்க பிரண்ட் ஆனந்தி ஆனந்தி எப்படி இருக்காங்க??
//"ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும். //
அப்படின்னா?
//பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!//
இதையல்லவோ முன்குறிப்பா போட்டிருக்கனும். இருந்தாலும் நீங்க குரு பட விமர்சனத்தை சொல்லவே இல்ல.
vootukku auto bull dozer ellam ekka chakkama vandhuduchu pola.. pada vimarsanam podaama padam paatha anubavam posta vadhirukku :P
குரு பார்த்தால் கோடி நன்மையா ?
தலைப்பு நல்லாயிருக்குங்க.
மொக்க படத்துக்கெல்லாம் பக்கம் பக்கமா விமர்சனம் எழுதிப்புட்டு மனிரத்னம் படத்துக்கு அவர் டயலாக் மாதிரியே ஒரு வரிலயே சொல்றிங்க நல்லா இருக்குனு.
நல்லா இரும்மா!
//இப்டியெல்லாம் எழுத நானென்ன டிவில ராசிபலனா சொல்றேன்?
//
ROFL!
//''நமக்காக கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கறாங்க.. அதை முதல் நாளே பாக்கறது தான் அவங்களுக்கு நாம பண்ற முதல் மரியாதை''ன்னு கண்கலங்க உணர்ச்சிபூர்வமா சொல்லுவா! அதை கேட்டு கேட்டு எனக்கும் அது சரிதானேன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு//
அட! நம்ம பாலிஸி..
//அது தமிழா, ஹிந்தியா, இங்கிலீஷான்னே புரியல. ரொம்ப நேரமா கஷ்டப்பட்டு கேட்ட பின்னாடி "நான் ச்ச்சீனியில் செய்த கடல்ல்ல்" னு //
அந்த படம் அப்படி தானுங்க!! ஆனா ஐஷ்க்காக மன்னிச்சிடலாம்!!
//பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!//
இத பத்தி என்ன கமெண்ட் அடிக்கலாம்?
சேலத்தில மல்டிப்லெக்ஸா எனக்கு தெரிஞ்சு ஒரு மூணு தியேட்டர் இருக்கு அவ்ளோதான்
மங்களூர் சிவா
hi..first timer here... G3 blog la irunthu varen
meyyalume solraenungo..unga post title paarthu than vanthaen.... nakkal ah oru comment pannalame nu :) aana nakkalukke nakkal panna maathiri post ah pinni pedal eduthirukeenga... nalla narrate paniruntheenga.... of course anganga konjam thoivu irunthathu...but first timer ngrathunala naan athellam sola padathu :p
athu sari nga.. .Guru padam paarthathula erpattta antha kodi nanmaigal ennana nu neenga kadaisi varaikkum sollave illiyae :)
குருபார்வை வந்தாச்சுன்னா கல்யாணம் ஆகுன்னு சொல்லிக்கேட்டிருக்கேன்...
:-P
குருவில் நடிச்சதும் பாருங்க அபிஷேக் ஐய்ஸ் கல்யாணம் கட்டிக்கிட்டாங்க..
குருப்பார்வை வந்துடுச்சா உங்களுக்கு..?
எனக்கு வேற ஹிந்தில.. "ஏக் கவ் மே ஏக் கிஸான் ரகதாத்தா" மட்டும் தான் தெரியும்
"ஹாங் ஜி" ..
"ஜி ஹாங்"...
"அச்சா அச்சா" ...
"குச் குச் ஹோத்தா ஹை" ன்னு
தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தையும் சொல்லிப்பாத்தேன்.
நல்ல பதிவு :)
உங்களுக்கு
நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி
நன்றாக வருகிறது இதையே தொடருங்க :)
அப்பாடா இனி கவிதை வந்து கொல்லாது :)
காயத்ரி அக்கோவ்... தமிழ் படிக்க வந்தீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ஆனா HOD-ய மேம்-ன்னு கூப்பிடுவீங்களா? எங்க காலேஜில ஆசிரியைன்னு தானே கூப்பிடுவாங்க. தமிழம்மாக்களும் மேமுக்கு மாறிட்டாங்களா?
\\என்னை மாதிரி அமைதி எல்லாம் இல்ல (?!) ... வாயாடின்னா வாயாடி அப்படி ஒரு வாயாடி. \\
யாரு யாரை சொல்லறது...இந்த அனியாயத்தை கேட்க யாருமே இல்லையா :)
\\பி.கு: இதுவரை எந்த படத்துக்கும் சொல்லாதத இப்ப சொல்றேன்.. படம் நல்லாருந்துச்சி!\\
என்ன சவுண்டு கம்மியாக இருக்கு..அடி பலமோ? :)
குரு உண்மையிலேயே நல்ல படமுங்க. அப்பாலிக்கா வேறஎங்கியாச்சுமாவது படத்தை முழுசா பாத்தீங்களா. பார்த்துட்டு உங்க ஸ்டைல்ல ஒரு விமர்சனம் எழுதுங்க :)
//அய்யோ மம்மி... பொம்பள சாமியாரு... //
சொல்றது மலேஷியா மாரியாத்தா!!
//ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க.. //
அவசரக்குடுக்கை... படிக்காம கமெண்ட் போடற பழக்கத்தை மாத்தவே மாட்டியா நீ?
//அப்போதானே அந்த கோழி காலு சாப்டீங்க??
//
//உங்க பிரண்ட் ஆனந்தி ஆனந்தி எப்படி இருக்காங்க?? //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//vootukku auto bull dozer ellam ekka chakkama vandhuduchu pola.//
சேச்சே! ஹெலிகாப்டர், ஏரோப்ளேன் வந்தாலும் நான் விமர்சனம் எழுதறத நிப்பாட்ட மாட்டேனாக்கும்! :)
//மனிரத்னம் படத்துக்கு அவர் டயலாக் மாதிரியே ஒரு வரிலயே சொல்றிங்க நல்லா இருக்குனு.
//
ஹிஹி!! அவர் படத்துல வர்ற மாதிரி 'ரகசியமா' சொன்னேன்! கேட்டுச்சா உங்களுக்கு!
//இத பத்தி என்ன கமெண்ட் அடிக்கலாம்?
//
ட்ரீம்ஸ்.. எதை செய்யாதன்னு சொல்றனோ அதைத்தான் செய்வீங்களா? வரவர ஜி3 மாதிரியே ஆகிட்டு வர்றாங்கப்பா எல்லாரும். :(
(கடவுளே! என்னை மட்டும் காப்பாத்து!)
மங்களூர் சிவா.. நீங்க சொல்றது 1960 லன்னு நினைக்கிறேன்! இப்ப நிஜமாவே மல்டிப்ளக்ஸ் இருக்கு அங்க.. :) நியூ பஸ் ஸ்டாண்ட்ல இருந்து த்ரீ ரோட்ஸ் போற வழில இருக்கு. ஊரு பக்கம் போய் ரொம்ம்ம்ம்ப நாள் ஆச்சோ?
//aana nakkalukke nakkal panna maathiri post ah pinni pedal eduthirukeenga!!//
தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்
//குருப்பார்வை வந்துடுச்சா உங்களுக்கு..?
//
யக்கா!! ஏன்க்கா நீங்க ட்ராக்க மாத்தி விடறீங்க? போஸ்ட் எப்டி இருக்குன்னு சொல்லுங்க!
//அப்பாடா இனி கவிதை வந்து கொல்லாது :) //
அடப்பாவமே! மின்னல் நீங்க இவ்ளோ அப்பாவியா? இதோ வர்றேன்.. எங்க அந்த சோகக்கவிதை.. எழுதி இங்க தானே வெச்சேன்? :)
//தமிழம்மாக்களும் மேமுக்கு மாறிட்டாங்களா?
//
ம்ம்.. ஆமா காட்டாறு! மேம் இப்ப தமிழாய்டுச்சி.. உங்ககிட்ட சொல்லலயா யாரும்?
//இந்த அனியாயத்தை கேட்க யாருமே இல்லையா :)
//
என்னாச்சு கோபி.. இங்கன எதுனாச்சும் பிரச்சினையா? சாரி.. எதுவா இருந்தாலும் ஜி3 கிட்ட சொல்லுங்க..
நான் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன்.. 'வீட்டுக்கு திருடன் வந்தாக்கூட சத்தம் போடாம மெல்லமா தான் கத்துவேன்! அம்புட்டு அமைதி!'
//குரு உண்மையிலேயே நல்ல படமுங்க//
அரைபிளேடு போஸ்ட முழுசா படிக்கலயா நீங்க? மறுநாள் லீவ் போட்டுட்டு போய் படம் பாத்தேன்! படம் நல்லாருக்குன்னு பி.கு ல சொல்லிருக்கேன் பாருங்க!
சத்தம் போட்டு சிரிக்க வைச்சிட்டிங்க... :)
!
//மங்களூர் சிவா.. நீங்க சொல்றது 1960 லன்னு நினைக்கிறேன்! இப்ப நிஜமாவே மல்டிப்ளக்ஸ் இருக்கு அங்க.. :) நியூ பஸ் ஸ்டாண்ட்ல இருந்து த்ரீ ரோட்ஸ் போற வழில இருக்கு. ஊரு பக்கம் போய் ரொம்ம்ம்ம்ப நாள் ஆச்சோ?
//
ஊருக்கெல்லாம் அடிக்கடி போறதுண்டு ஆனா சேலத்தில படித்த (தெரு தெருவா பொறுக்கி திரிந்த) காலங்கள் எல்லாம் நினைவில் மட்டுமே.
ஈரோடுக்காரங்களுக்கு ரெண்டு தியேட்டரே மல்டிப்லெக்ஸ்தானே?
ஈரோட்டிலும் கொஞ்ச காலம் குப்பை கொட்டியதுண்டு
மங்களூர் சிவா
nalla postunga. padichuttu unmayileye sirippu vanthathu. sila malarum ninaivugal vera munnadi vanthu tortoise suttuchu. vazthukkal,continue pannunga.
oru uthavi.... ANBU THOZI vimarsanam ezuthungalen...pls...
sorry for english or tanglish.
unicode prob.so pls post my comment in tamiz.
உங்க அழுவாச்சி கவுஜைக்கு பதிலா இது மாதிரி பதிவு போடுங்க யக்கோவ்!!!
சூப்பர் நகைச்சுவை!!! :-)
வாழ்த்துக்கள்!! :-)
//சத்தம் போட்டு சிரிக்க வைச்சிட்டிங்க... :) //
எதுக்கு ராம்? உங்கள பச்சப்புள்ளன்னு சொன்னதுக்கு தானே சிரிச்சீங்க? :)
சிவா.. நீங்க சேலத்துல படிச்சது நிசமாவே 1960 ல தானா?!
//ஈரோடுக்காரங்களுக்கு ரெண்டு தியேட்டரே மல்டிப்லெக்ஸ்தானே?//
ஹ்ம்ம்.. ஆமாங்க சிவா.. அபிராமி.. தேவி அபிராமி மட்டும் தான் இருக்கு. பாவமில்ல நாங்க. :(
//ஈரோட்டிலும் கொஞ்ச காலம் குப்பை கொட்டியதுண்டு//
ஊர் ஊரா போய் கொட்ற அளவுக்கு அத்தனை குப்பையா இருந்திச்சு உங்ககிட்ட? :)
சுகுணா.. வர வர அபிஅப்பா மாதிரி ஆகிட்டு வரீங்க நீங்களும். இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன். :(
//oru uthavi.... ANBU THOZI vimarsanam ezuthungalen...pls... //
ஆர்.வி.சி.. என்னா இது? அதும் மொக்கப்படமா? எதாச்சும் ப்ளான் பண்ணிருக்கீங்களா என்ன? லிங்க் இருந்தா அனுப்புங்க.
நன்றி சி.வி.ஆர்!
ஆமா இதென்ன ரெண்டு பேரும் ஒருத்தர் தானா? ரிவர்ஸ்ல இருக்கே பேரு?!
யக்கோவ்!!
நானே இப்போ தான் கவனிச்சேன்!!
நான் அவன/ள் இல்ல!!!! :-ஸ்
Post a Comment