நீயோ அல்லது நானோ
சில கணங்களேனும்
தாமதித்திருந்தால்
நிச்சயம் தவிர்த்திருக்கலாம்
எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட
நம் சந்திப்பை....
எனக்கான பார்வைகள் எதுவும்
உன்னிடமோ
உனக்கான வார்த்தைகள் ஏதும்
என்னிடமோ
மிச்சமிருக்கவில்லை அப்போது..
தப்பித்தல்களின் அவசரத்தோடு
நொடியொன்று இறக்கும்
அவகாசத்திற்குள்
விரைந்து கடந்தாய் என்னை..
உன் முதுகில் பட்டுத்தெறித்த
என் பார்வைகள்
முனை மழுங்கி
மண்ணில் விழ....
ஒப்பனைகள் கலைந்து
விகாரமாய்ப் பல்லிளிக்கிறது
என்றோ
வெகு புனிதமென
நான் கொண்டாடிய
உன் நட்பு...
49 comments:
attendance..
//ஒப்பனைகள் கலைந்து
விகாரமாய்ப் பல்லிளிக்கிறது
என்றோ
வெகு புனிதமென
நான் கொண்டாடிய
உன் நட்பு...//
மிக அழகான ஆழமான எதார்தத்தின் பதிவு!
ரொம்பவே விகாரமாத்தான் இருக்கு -அந்த படத்தை சொன்னேன் :-). ஒருவேளை புனிதமென நீங்கள் மட்டும் கொண்டாடியதால் அப்படியாகியிருக்கும். நல்லதொரு புரிதலுடன் புதிய நட்பு கிடைக்காமலா போய்விடும்? Cheer up! :-)
நல்ல பதிவு அருமை
//ஒப்பனைகள் கலைந்து
விகாரமாய்ப் பல்லிளிக்கிறது
என்றோ
வெகு புனிதமென
நான் கொண்டாடிய
உன் நட்பு...//
நல்ல இலக்கிய தரமிக்க வரிகள்!!!!
:))))
இப்படி பயமுறுத்தற மாதிரி ஒரு முகத்தை காமிச்சா அவரு பயந்து ஓடாம என்ன பண்ணுவாராம்??
அறுந்து போன அன்பின்
எதிர்பாராத சந்திப்பு,
விளக்கமுடியாத உணர்வுகளைத் தரும்போது
அதனை விளங்கிக் கொள்ளாமல் இருத்தலே நலம்!
( ரொம்ப கொழ(ம்)ப்பிட்டனோ? ;) )
//எனக்கான பார்வைகள் எதுவும்உன்னிடமோஉனக்கான வார்த்தைகள் ஏதும் என்னிடமோமிச்சமிருக்கவில்லை//
இந்த மாதிரி கணங்களில் மௌனம் மட்டும் தான் பாதுகாப்பு
நட்பு முகம் இது ரெண்டுமே சில சமயம் கொஞ்ச நாட்களில் எதிர்பதமாய் மாறிவிடுவதாக எனக்கு தோன்றுவது உண்டு...அழகான ஒரு முகம் அல்லது அழகான ஒரு நட்பு என்று நினைப்பது பழக பழக ஒரு நாள் நட்புஅதன் எதிர்மறைஇயல்பை , முகம் அதன் அழகின்மையை காண்பிக்க தொடங்கிவிடுவதாக....
இதுக்குத்தான் குசும்பன் விளக்கம் போட்டிருந்தாரே!
காய்த்ரி இந்த பிடித்த வரிகள்ன்னு
நம்ம பதிவர்கள் எழுதுவதை கோட் செய்வது ரொம்ப நல்லாருக்கு...
வெகு புனிதமென
நான் கொண்டாடிய
உன் நட்பு...
ஹ்ம், இதெல்லாம் நெசமா எழுதறதா இல்லே கறபனையா? கற்பனைன்னு பதில் சொன்னா உங்களுக்கு பெரிய கற்பனா சக்தி உண்டு
ம்ம்..
ஆழமான கவிதை
சோகமான கவிதைய நல்லா இருக்குனு சொன்னா அந்த சோக உணர்வை மதிக்கும் படியா இருக்கும்??
Just remember, Time heals... everything.
ஏதோ என் பங்குக்கு ஒண்ணு
இந்த கவிதை படித்தேன் என்பதற்கு சாட்சிக்காக தள பதிவில் பின்னூட்டமிட்டுள்ளேன்... :))
// .:: மை ஃபிரண்ட் ::. said...
attendance..
//
எப்டி செல்லம் பதிவு போட்ட உடனே ஓடி வந்துடறே?
நன்றி லக்ஷ்மண்!
//ஒருவேளை புனிதமென நீங்கள் மட்டும் கொண்டாடியதால் அப்படியாகியிருக்கும். //
ஜெசிலா என்னாங்க உள்குத்து இது? :(
வாழ்த்துக்கு நன்றி!
ஸ்ரீ, நாடோடி இலக்கியன், நன்றி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
அகிலன் சும்மாங்காட்டி சிரிச்சா என்ன அர்த்தம்?
// G3 said...
இப்படி பயமுறுத்தற மாதிரி ஒரு முகத்தை காமிச்சா அவரு பயந்து ஓடாம என்ன பண்ணுவாராம்??
//
ஆத்தி.. உன்னால மட்டும் தான் முடியும். :)
//விளக்கமுடியாத உணர்வுகளைத் தரும்போது
அதனை விளங்கிக் கொள்ளாமல் இருத்தலே நலம்!
//
அப்டி இருக்க முடிஞ்சா நல்லது தான் அருள்.. ஆனா.. :(
//இந்த மாதிரி கணங்களில் மௌனம் மட்டும் தான் பாதுகாப்பு //
ஆமாங்க தமிழன்.
முத்துக்கா அதான் சொல்லிருக்கேன் நானும்.
//காய்த்ரி இந்த பிடித்த வரிகள்ன்னு
நம்ம பதிவர்கள் எழுதுவதை கோட் செய்வது ரொம்ப நல்லாருக்கு... //
தேங்க்ஸ்கா.. உங்க கவிதை போட்டிருந்தப்ப கவனிக்கல நீங்க!
// நாமக்கல் சிபி said...
இதுக்குத்தான் குசும்பன் விளக்கம் போட்டிருந்தாரே
//
//ஏதோ என் பங்குக்கு ஒண்ணு //
ஏன்ணே ஏன்? எத்தனை பேர் கிளம்பிருக்கீங்க இப்டி? :(
//ஹ்ம், இதெல்லாம் நெசமா எழுதறதா இல்லே கறபனையா? //
:)
நன்றி ட்ரீம்ஸ்!
//இந்த கவிதை படித்தேன் என்பதற்கு சாட்சிக்காக தள பதிவில் பின்னூட்டமிட்டுள்ளேன்... :)) //
இங்க ஒரு கொலை நடக்க போகுது...
அழகான கவிதை!!
நல்லா இருக்கு!! :-)
நல்ல கவிதை. ரசிச்சேன். தரமாக இருக்கிறது.
Brilliant!
நல்ல கவிதை. ஒரு தோழியிடம் நான் உணர்ந்த அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது!
ஆனால் உண்மையிலேயே துணிச்சலான பதிவர்தான் நீங்கள், உங்கள் கவிதைகளைப் படிக்கும் வாசகர்களும் கூட..... உங்கள் கவிதைக்கு உங்கள் படத்தையே போட்டிருக்கிறீர்களே, வாழ்த்துக்கள்.
வந்துட்டேன் என்ன சொல்லறது...???
//தவிர்த்திருக்கலாம்எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டநம் சந்திப்பை.... //
இப்படியொரு அருமையான!? கவிதை கிடைக்காமல் போயிருக்குமே.
:-((
eptingka
ithellaam aptiye varrathuthaan illa?
முன்னாள் நண்பனுக்கு - இறந்தகாலம் கவிதை
இன்னாள் நண்பனுக்கு -நிகழ்கால கவிதை
http://kusumbuonly.blogspot.com/2007/08/blog-post_16.html
நாளைய நண்பனுக்கு! - தள
http://kalaaythal.blogspot.com/2007/08/88.html
கவிதை வரலாற்றிலேயே என்னே ஒரு ஆச்சர்யம் ஒரு கவிதைக்கு மூன்றுகாலங்கள்.
நாமக்கல் சிபி said...
ஏதோ என் பங்குக்கு ஒண்ணு
என்னா தள நம் பங்குக்கு இரண்டு என்று அல்(ல)வா சொல்லி இருக்கவேண்டும். ஆனாலும் இரண்டு போதாதது இன்னும் எழுதவேண்டும் தள:(
சூப்பர் கவிதை.,
காயத்ரி அக்கா, என்னையும் உங்க ஆட்டத்துல சேத்துக்கோங்களேன்.
கவிதை.. கவிதை...
// ஒப்பனைகள் கலைந்துவிகாரமாய்ப் பல்லிளிக்கிறதுஎன்றோ வெகு புனிதமெனநான் கொண்டாடியஉன் நட்பு... //
சூப்பருங்க..
நல்லா கவிதை வளம்.ஆனாலும் கவிதை நாயகனை இதயதுள் வைத்துப் பூசிக்காமல் ஐந்திணை இயற்க்கை உலகில், பிர்ரபஞ்சட்துள் நடமாடவிட்டிருந்தால் சங்க கவ்விதையின் அழகு பெற்றிருக்குமே. உங்கள் பாலைத் திணையிலேயே உயிர் வற்றும் நிலையிலும் சருகுகளின் கீழ் கசியும் நீரை கலைக்காக பிடியும் பிடிக்காக கலையும் விட்டுக் கொடுக்குமே
வ.ஐ.ச.ஜெயபாலன்
(visjayapalan@gmail.com)
சிவிஆர், ஜான், கோபாலன், அருள், நன்றி!
சுகுணா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
//இப்படியொரு அருமையான!? கவிதை கிடைக்காமல் போயிருக்குமே.
//
மனசு?!!! சொன்னது நீதானா சொல்.. சொல்.. சொல்ல்ல்ல்!! கலாய்க்காம நல்ல புள்ளையா கமெண்ட் போட்டிருக்கறத பாத்தா டவுட்டா இருக்கே? நீங்க போலி மனசா?
//கோபிநாத் said...
வந்துட்டேன் என்ன சொல்லறது...???
//
ம்ம்.. ஒன்னாங்க்ளாஸ்ல படிச்ச திருக்குறள் சொல்லுங்க.. கிர்ர்ர்
பாரி என்னாது இது? ஃபீலிங்க்ஸா?
ஆமாங்க உமையணன்! :)
குசும்பா.. உன் குசும்புக்கு ஒரு எல்லையில்லையா? :(
//காயத்ரி அக்கா, என்னையும் உங்க ஆட்டத்துல சேத்துக்கோங்களேன்.
//
ஹலோ.. இங்கன கும்மி அடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா எல்லாம்? பாருங்க.. தம்பி தப்பா நினைச்சிட்டார். :(
கே4கே.. உங்களுக்கு புரியுதா? :) நன்றி!!
ஜெயபாலன் என்னாங்க சொல்றீங்க? ஏற்கனவே இப்டியா? இல்ல கவிதை படிச்சதோட விளைவா?
கருத்து தெரிவித்தமைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்
Sorry for my comments. Please kindly remove it.
V.I.S.Jayapalan
ஜெயபாலன்.. தமிழ்ல, இங்கிலீஷ்லன்னு மாத்தி மாத்தி மன்னிப்பு கேக்கறீங்களே? என்னாச்சு! கலாய்த்தலும் கலாய்க்கப்படுதலும் அரசியல்ல சகஜம்! ஃபிரீயா விடுங்க! :)
Post a Comment