Monday, August 6, 2007




பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

25 comments:

Arvinth said...

Mind blowing...

-Arvinth

Enbee said...

Azhagu

manasu said...

ஈரோட்ல மழ கிழ பெய்யுதா? கவித சின்னதாருக்கு!?

இது பெரிதிலும் பெரிதாய் குற்றம் செய்ய வழிவகுக்காது??

(காலேஜ் லீவா இல்ல டீ மாஸ்டர் லீவா?)

G3 said...

யாரு அது கவிதாயினி பேர்ல இத போட்டது? இது அவங்களோடது மாதிரி இல்லயே :(

LakshmanaRaja said...

உண்மை.

MP said...

Nothing can be better than this

கையேடு said...

unmai...

ungal padaippuhalukkaana puhaippadath thervuhalum sirappaaha ullathu. - ranjith

த.அகிலன் said...

ம்... புது வீடு மாத்தியிருக்கிறீங்க போல ஆனா இதேபோல வேறு ஆட்களும் வைச்சிருக்கிறாங்க இல்லையா?..

Dreamzz said...

கவிதை அருமை!

sakthin said...

wonderful

Letchu said...

Really awesome.

You really feel what you write, You really write what you feel.

Bravo..

I dont have much words to describe this kavithai. ....Just keep going

-Letchu

காயத்ரி சித்தார்த் said...

//manasu said...
ஈரோட்ல மழ கிழ பெய்யுதா?//

மழை பெய்யுதாவா? இதுக்கு முந்தின பதிவ பாத்துமா இப்டி கேக்கறீங்க?

காயத்ரி சித்தார்த் said...

அரவிந்த். என்பீ, வேதா, லட்ஷ்மண், மோஹனபிரியா, ரஞ்சித், ட்ரீம்ஸ், லெட்சு, சக்தி..... நன்றி!!

காயத்ரி சித்தார்த் said...

ஆமா அகிலன்.. நல்லாருக்கா? நம்மளை மாதிரி மத்தவங்க பண்ணினா அதுக்கு பேர் ஜி3 பண்றது! (சுடறது!!)மத்தவங்களை மாதிரியே நாம பண்ணினா அது நல்ல விஷயங்களைப் பின்பற்றுதல் அல்லது பின்தொடர்தல்!! க்ரெக்ட் தானே!!

காயத்ரி சித்தார்த் said...

//யாரு அது கவிதாயினி பேர்ல இத போட்டது? இது அவங்களோடது மாதிரி இல்லயே :( //

அடிப்பாவி அழுவாச்சி கவிதை வேணாம்னு மூக்கால அழுதுப்புட்டு இப்ப சந்தேகப்படறியே? :(

Veerakumar said...

r u a professional writer?

Veerakumar said...

Your lyrics are really good. You have got that kind of telling the message in a subtle way... yet with some impact. It’s an incredible skill only few possess. I have been a silent admirer of your lyrics for quite some time. You are classic when you write lyrics, but very comic when you write the stuffs like "mokkai". You might be quite an interesting character. I wish you All the very best. Keep writing. Keep entertaining people.

Regards,
veerakumar.

அனுசுயா said...

அம்மா கவிதாயினி உருப்படியா சோகம் இல்லாத முதல் கவிதை வாழ்த்துக்கள். இனியும் இப்டியே தொடர்ந்தா சந்தோசம் :)
(அப்டியே படத்துக்கு பாட்டு எழுதிடுங்க ரிக்கார்டிங்காக வெயிட்டிங்)

Dreamzz said...

பிரிவில் தான் எத்தணை மாற்றம்!

Usualla podra comment illaingov!

Dreamzz said...

20

Veerakumar said...

I did frequent your blog a number of times.And I would like to mention some of the phrases which impressed me the most.

//மனதின்
இனிப்புப் பிரதேசம் ஒன்றில்
வசிக்கிறாய் நீ!

//உனக்கான என் கடிதங்களில்
முற்றுப்புள்ளிகளின் அருகே
தேங்கி நிற்கும் மெளனத்தை
படித்ததுண்டா நீ?

//பேசுவதற்கென
சேகரித்த வார்த்தைகள்
எதிர்பாராத வேளையில்
திருடு போகின்றன....

//என் சேலைப்பூக்கள்
தினமும் விரிகின்றன
நறுமணத்தோடு...

//முரண்பாடுகளுக்கிடையே
முகிழ்த்திருக்கின்றன
நம் பிரியங்கள்
கள்ளிப் பூக்களாய்...

//தேவைகள் தீர்ந்த வேளையில்
முன்னெப்போதோ
தேடப்பட்டவைகள் கிடைக்கின்றன!

//சந்திக்கும் போதெல்லாம்
சிந்திப்போகிறாய் காதலை...
இன்றாவது விட்டுப் போ
உன்னிடம் கோபிப்பதற்கான
ஓரிரு தவறுகளை!

//மண்டியிடுதல்களும்
சரணடைதல்களும்
ஒருபோதும்
புரிதல்களைத் தருவதில்லை

//அன்பின் அர்த்தங்கள்
சிலநேரங்களில் பிரிதலிலும்
இருக்கக் கூடும்..

//நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
காதலும்
எல்லாக் கர்மங்களும்

//'கவனிக்கப்படாத துயரங்கள்
எப்போதும்
கனம் மிகுந்தவையாய்
இருக்கின்றன.'

//மேகங்கள் வெகு சோகமாய் ஒன்றுகூடி கருமையாய் திரண்டிருந்தன, அழப்போவதன் அறிகுறியாய் உதடு பிதுக்கும் குழந்தை போல. உப்பிய மேகங்களின் உள்ளே தளும்பிக் கொண்டிருந்தது வானத்தின் கண்ணீர்!

//சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தவிர.

//பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

சுப.செந்தில் said...

இப்ப தான் உங்களோட எல்லா போஸ்ட்டையும் படிச்சிட்டு வர்ரேன்!உங்களைப் பாராட்ட எனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகள் போதவில்லை!அனைத்தும் உள்ளத்தைப் பிசையும் கவிதை வரிகள்!அதிலும் மழையுடன் ஒப்பிட்டதை.....
What to say As Arvinth said My mind starts to blow
Thanks for maintaining such a Rhythmic Blog!
Hope you will continue in your same path....வாழ்த்துக்கள்!!!!

MP said...

I read these lines some 100 times this week

MP said...

These lines r so expressive .. Coult not resist reading again and again ..

ராதா செந்தில் said...

சிறிய கவிதையென்றாலும் ஆழமான கவிதை. வாழ்த்துக்கள்.