இறுகச் சார்த்தப்பட்ட கதவுகள்
உன் சமீபத்திய முகபாவனைகளை
நினைவூட்டுகின்றன..
கற்களை நீரில் கரைப்பதையொத்து
அன்பைப்பெறும் முயற்சிகளில்
ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன..
என்றாலும்
என் அன்பை மறுதலித்தல்
அத்தனை எளிதாயிராது
உனக்கு..
எவருக்கென்றில்லாமல்
நிறமும் மணமுமாய்
பூத்துதிரும் பூக்களைப் போன்றே
தினமும் உன் வாசலில்
பூத்திருக்கின்றன
உனக்கான என் நேசங்கள்!
20 comments:
//கற்களை நீரில் கரைப்பதையொத்து
அன்பைப்பெறும் முயற்சிகளில்
ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன..//
உண்மையான அன்பு
எதிர்பார்க்கும் பொழுது
எளிதில் கிடைப்பதும் இல்லை.
தறப்படும் பொழுது
கவனிக்க படுவதும் இல்லை. சரியா?
உணர்ந்து எழுதியதாய் கருதுகிறேன். வாழ்த்துக்கள் எழுத்துகளுக்கு மட்டும்.
// எவருக்கென்றில்லாமல்நிறமும் மணமுமாய்பூத்துதிரும் பூக்களைப் போன்றே
தினமும் உன் வாசலில்பூத்திருக்கின்றனஉனக்கான என் நேசங்கள்! //
சான்ஸே இல்லைங்க First Class Imagination...
உங்கள் நேசப் பூக்களை கவிதையின் நாயகன் சூடிக்கொள்ள என் வாழ்த்துக்கள்..
//கற்களை நீரில் கரைப்பதையொத்துஅன்பைப்பெறும் முயற்சிகளில்ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன..
//
காத்திருந்தால், பொறுமை இருந்தால், துனிவு இருந்தால்,
நீரும் கரைக்கும் கல்லை!
காயத்ரி முதல்ல
டெம்லேட்டை மாத்துங்க ;-(((
//எவருக்கென்றில்லாமல்
நிறமும் மணமுமாய்
பூத்துதிரும் பூக்களைப் போன்றே
தினமும் உன் வாசலில்
பூத்திருக்கின்றன
உனக்கான என் நேசங்கள்!
//
சூப்பர்!
லக்ஷ்மண், செந்தில், ட்ரீம்ஸ், நன்றி.
கோபி.. உங்க கோரிக்கையை நிறைவேத்த முயற்சி பண்றேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க.
//கற்களை நீரில் கரைப்பதையொத்துஅன்பைப்பெறும் முயற்சிகளில்ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன..//
எவ்வளோ சாதாரணமாக சொல்லிட்டிங்க காயத்ரி, ஆனால் வரிகளை அசை போட்டு பார்த்தால் மனசு கனமாயிடுதுங்க.
//இறுகச் சார்த்தப்பட்ட கதவுகள்உன் சமீபத்திய முகபாவனைகளை நினைவூட்டுகின்றன..
சாத்தப்பட்ட கதவுகள்
மனசை நினைவுபடுத்தலாம்.
முக பாவனைகளை நினைவுபடுத்துமோ?
May be you are refering to "the expressionless face"
vazhakkam pola nalla kavithai
__________
thalaippukku munnadi oru star - typo erroraa illa yethaavathu solla vareengala - pin kurippu maathiri. - ranjith
மெல்ல உடைபடும் மெளனம் - கவிதை
முன்குறிப்பு : காதலை, அதன் பிரிவின் வலியை உருகி, உருகி எழுதும் காயத்ரி அக்கா தான், இந்த 'கவிதை' எழுத ஊக்கம் தந்தவர். ஏன்னா! அவங்க சொல்கிற மாதிரி, எனக்கும் கவிதை எழுத தெரியாது. காயத்ரி அக்கா தன்னடக்கமாக அப்படி சொல்கிறார். அதை, நாம் எல்லொரும் அறிவோம். நான் தன்னடக்கமில்லாமல் (!) உள்ளது உள்ளவாறு, பச்சையாய் உண்மையை சொல்கிறேன்.
ஒரு 'கவிதை' எழுதுவதற்கே, வற்றாத மணற்கேணி மாதிரி, சோகம் பொங்கி என்னை வாட்டி வதைத்து விட்டது. காயத்ரி அக்கா தினம் ஒரு கவிதை எழுதுகிறாரென்றால், அவரின் வலியை என்னால் உணரமுடிகிறது. இனி அவர் எழுதுகிற ஒவ்வொரு கவிதையும் எனக்கும் வலிக்கும். அழுகை வரும்.
கவிதை படிக்க என் பிளாக்குக்கு வாருங்கள் காயத்ரி. இந்த கவிதைக்கு உங்கள் பின்னூட்டம் வேண்டும்.
ஏதும் பிழையிருந்தால், பொறுத்தருள்க!
அப்படியா மோகன்! அதுக்கு தானே கவிதை!
//May be you are refering to "the expressionless face" //
ம்ம்.. ஆமாங்க வீரக்குமார்.. சரியான புரிதல். நன்றி!
//thalaippukku munnadi oru star - typo erroraa illa yethaavathu solla vareengala - pin kurippu maathiri. - ranjith
//
இல்லீங்க ரஞ்சித்.. அந்த டெம்ப்ளேட் படுத்தின பாடு. பின்குறிப்பெல்லாம் இல்ல. :)
//கவிதை படிக்க என் பிளாக்குக்கு வாருங்கள் காயத்ரி. இந்த கவிதைக்கு உங்கள் பின்னூட்டம் வேண்டும்.//
வந்தாச்சு.. போட்டாச்சு..
(என் கவிதைக்கு இப்படியெல்லாம் பின்விளைவுகளா!)
:))
//கோபிநாத் said...
காயத்ரி முதல்ல
டெம்லேட்டை மாத்துங்க ;-((( //
கோபி இது ஓக்கேவா?
\\காயத்ரி said...
//கோபிநாத் said...
காயத்ரி முதல்ல
டெம்லேட்டை மாத்துங்க ;-((( //
கோபி இது ஓக்கேவா? \\
ம்..ஓகே ;)
காயத்ரி,
உங்களுடைய பக்கம் முன்னை விட மிகப் பொலிவுடன் மிளிர்கிறது..
Great choice with that Photo !!!.
It goes well with the Blog's theme.
ஓரு பெண்ணின் மனதை, உணர்வுகளை உங்களுடைய எழுத்துக்கள் நன்கு பிரதிபலிக்கின்றன..
Right words.. Delivered !!! :-)
நித்திய காதல்...
அவ்வளவு எளிதன்று புறக்கணிப்பின் வலியை உணர்வது.அழகான ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் வலிமையான வரிகள்.தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் உங்களைப் போல் கவிதைகள் எழுதக்கூடும்
//*எவருக்கென்றில்லாமல்
நிறமும் மணமுமாய்
பூத்துதிரும் பூக்களைப் போன்றே*//
இது சரியான உவமையா...
பூக்கள்...எவருக்கென்றில்லாமல் ப்பூத்திருக்கலாம்...
ஆனால் நேசம் இவருக்கென்று தானே வரும்...விளக்குங்களேன்...
கவிதன்னா..ஆராயக்கூடாது..அனுபவிக்கனும்..அப்படின்னு. டயலாக் அடிச்சா..நான் எஸ்கேப்...
ஏ.கேவி.. ஆர்.வி.சி.. என்னை ரொம்ப புகழறீங்களோ? என்ன சொல்றது.. நன்றி!! :))
ம்ம்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நிறமும் மணமும் வழங்கும் பூக்களைப் போலன்னு எதிர்பார்ப்புகளற்ற நேசம்னு சொல்லிருக்கேன் டிபிசிடி. புரிஞ்சுதா?
Post a Comment