Thursday, September 10, 2009

யுவன் கவிதை

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 87 பக்கங்களைக் கடந்தாயிற்று. சென்று சேருமிடம் குறித்த முன்முடிவுகள் / யூகங்கள் ஏதுமின்றி, தொடர்ந்து பாதைகளை மாற்றிக் கொண்டேயிருக்கும் கதையின் பாதச்சுவடுகளை அடியொற்றிச் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த ஜனவரிக்குப் பிறகு நாளை, நாளை என்று நான் ஒத்திப் போட்டுக் கொண்டே வந்த, 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை இன்றென நிர்ணயித்திருக்கிறது போல. கதையை, இன்று இதற்கு மேல் தொடர முடியாதெனத் தோன்றுகிறது. கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.


"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது

சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

புத்தகத்தை மூடிவிட்டு, சிட்டுக்குருவிகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிட்டுக் குருவியாய் இருந்த தருணங்களையும்.

39 comments:

Unknown said...

me the first போடலாம்னு தான் வந்தேன். ஆனா கவிதை என்னமோ செஞ்சிடுச்சு...

ஆயில்யன் said...

கவிதை டெரராகவே இருக்கிறது - இருந்தும் இந்த வரிகளில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது

//சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்//

வாழ்த்துக்கள் ரீ-எண்ட்ரீக்கு :)

க.பாலாசி said...

//சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"//

வலிக்கக்கூடிய வார்த்தைகள்...முதல்முறை உணர்கிறேன்...

நீண்ட நாட்களுக்குபிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கவிதை படிச்ச பிறகு, ஒரு பயம் கலந்த உணர்வு... அருமையான கவிதை...

குசும்பன் said...

ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்-- உங்களோட பழய கவிதைகளை நீங்கள் சத்தம் போட்டு பாடினால் சிட்டுக்குருவி என்ன கழுகே சுருண்டு விழுந்து செத்து போகும்:)))

குசும்பன் said...

//கவிதை படிச்ச பிறகு, ஒரு பயம் கலந்த உணர்வு//

ஆமாங்க எனக்கும், திரும்ப கவிதை எழுத ஆரம்பிச்சுடுவீங்களோ கும்மி அடிக்க நேரம் இல்லை என்றால் என்ன செய்வது என்ற பயம்:))

புதுபடம் ஏதும் பார்த்துவிட்டு காமெடி விமர்சனம் எழுதுவீங்களே அதுமாதிரி ஒன்னு எழுதுங்களேன்:) புலவரே!

நேசமித்ரன் said...

கவிதை அற்புதம்
ஆனால் இந்த வடிவத்தை அல்லது இந்த சொல்லும் முறையை ஒரு டேம்பிலட் போல எல்லோரும் கைக்கொள்வது ஏன் ?

மனுஷ்ய புத்திரன் துவங்கி கவிதா ,யுவன் இவர்களால் பாதிக்கப்பட்ட எல்லோரும்
மனுஷ்ய புத்திரனின் மரம் பற்றுய கவிதை உட்பட பல கவிதைகளில் இதே வடிவம்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் சகோதரி

என் கருத்துகளில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்க

சூர்யா said...

அக்காவிற்கு,
எப்படி இருக்கீங்க...ஒவ்வொரு முறையும் தாங்கள் பதிவு ஏதாவது எழுதி இருப்பீர்களா என ஆவலோடு வந்து பார்பேன். பின்னோட்டமும் இட்டேன். இதனை மாதங்கள் கழிந்த பின் இப்படி ஒரு பதிவு...ரொம்ப சந்தோசம் திரும்பவும் வந்ததற்கு ........நிறைய எழுதுங்க pleaaaaaaaaaseeeeeeeeeee

இப்படிக்கு..
சூர்யா..

குப்பன்.யாஹூ said...

மீண்டும் புத்துணர்ச்சியோடு பதிவு இட்டதற்கு நன்றிகள்,

நானும் நூறு கவிதை படிக்கிறேன், இந்த மாதிரி உணர்வு மிக்க கவிதை கண்ணில் படுவதே இல்லை. எப்படித்தான் உங்க கண்ணுல கறேக்ட்ட மாட்டுதோ.

கவிதையின் கடைசி பாரா (நட்பையோ ஆன்மாவையோ முறிப்பது போல..) வரிகள், தலையில் இருந்து கால் வரை உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய வரிகள்.

பாராட்டுக்கள் கவிஞருக்கு.

குப்பன்_யாஹூ

இராம்/Raam said...

கவிதை அருமை.... புத்தகம் சிங்கை நூலகத்திலே இருக்கான்னு பார்க்கனும்.. :)

சென்ஷி said...

மீள் வருகைக்கு நன்றி!

வால்பையன் said...

//புத்தகத்தை மூடிவிட்டு, சிட்டுக்குருவிகள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிட்டுக் குருவியாய் இருந்த தருணங்களையும்.//

எல்லோரும் சில நாட்கள் சிட்டுகுருவிகளாய் தான் வாழ்ந்திருப்போம்!
அதன் நினைவுகள் உதிர்ந்த சிறகுகளாய் சிதறி கிடக்கின்றன!

வால்பையன் said...

///சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்//

வாழ்த்துக்கள் ரீ-எண்ட்ரீக்கு :)//


இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஆயில்யன்!

நேத்து தான்
”கவிதையால் கொல்லாதிங்கன்னு” ஜிமெயில் ஸ்டேட்டஸ் வச்சிருந்திங்க!

வால்பையன் said...

//பழய கவிதைகளை நீங்கள் சத்தம் போட்டு பாடினால் சிட்டுக்குருவி என்ன கழுகே சுருண்டு விழுந்து செத்து போகும்:)))//

சித்தார்த் உங்க கழுத்துக்கு ஒன்னும் ஆபத்தில்லையே!

வால்பையன் said...

//புதுபடம் ஏதும் பார்த்துவிட்டு காமெடி விமர்சனம் எழுதுவீங்களே அதுமாதிரி ஒன்னு எழுதுங்களேன்:) புலவரே!//

இப்போது வெளியாகும் புதுபடங்களை பார்ப்பதற்கு சிட்டுகுருவியாக உருமாறி விடலாம்!, சில நொடிகளில் உயிர் போய்விடும்!

வால்பையன் said...

//ஒவ்வொரு முறையும் தாங்கள் பதிவு ஏதாவது எழுதி இருப்பீர்களா என ஆவலோடு வந்து பார்பேன். //

இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குறவரைக்கும் உன்னைய ஒண்ணும் பண்ணமுடியாது!(சகோதரி)

வால்பையன் said...

/நானும் நூறு கவிதை படிக்கிறேன்,//

யாரு நம்ம நூர் முகமது எழுதுன கவிதைகளா?

ஆயில்யன் said...

//வால்பையன் said...

///சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்//

வாழ்த்துக்கள் ரீ-எண்ட்ரீக்கு :)//


இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஆயில்யன்!

நேத்து தான்
”கவிதையால் கொல்லாதிங்கன்னு” ஜிமெயில் ஸ்டேட்டஸ் வச்சிருந்திங்க!
//

நோ வாலு நோ அது வேறு இது வேறு :)

காயத்ரிக்கா நான் சொல்வது உண்மை உண்மையை தவிர வேறில்லை ! :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காயத்ரி,

எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காயத்ரி,

எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(

-மதி

கோபிநாத் said...

அருமையான கவிதை...;)

சரிதா said...

//சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்//

உண்மைத்தான்.. நீண்ட நாட்களுக்குப் பின் பாலையில் மழைக் கால மேகங்களின் ஆலாபனை!

☀நான் ஆதவன்☀ said...

ரொம்ப நாள் கழிச்சு வரும்போதே ஒரு டெரரான கவிதையோட வந்திருக்கீங்க.

கவிதை அருமையா இருக்கு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இந்தக் கவிதையை நானும் வாசித்திருக்கிறேன் காயத்ரி. எத்தனை இலகுவாக இந்த வலியை இவரால் எழுதி விட முடிகிறது? வலியுணர்ந்தவனைத் தவிர வேறு யாருக்கு வாய்த்துவிடும் இப்படியொரு மொழி?

பின்குறிப்பு : பல மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கும் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது ஒரு ரசிகனின் விருப்பம் :)

-ப்ரியமுடன்
சேரல்

காயத்ரி சித்தார்த் said...

@ஆயில்யன், பாலாஜி, அக்கிலீஸ்.. நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

@குசும்பன்..

@#$%^&*

//ஆமாங்க எனக்கும், திரும்ப கவிதை எழுத ஆரம்பிச்சுடுவீங்களோ கும்மி அடிக்க நேரம் இல்லை என்றால் என்ன செய்வது என்ற பயம்:))
//

ஆரம்பிச்சிட்டோமில்ல! :)

காயத்ரி சித்தார்த் said...

//ஆனால் இந்த வடிவத்தை அல்லது இந்த சொல்லும் முறையை ஒரு டேம்பிலட் போல எல்லோரும் கைக்கொள்வது ஏன் ?//

மித்ரன், கவிதையோட வடிவம் இது தான்.. அல்லது இப்டித்தான் இருக்கனும்னு யாராலும் வரையறுத்து சொல்ல முடியாதில்லையா? சொல்ல நினைக்கற / சொல்லப்படிருக்கிற விஷயம் தான நமக்கு முக்கியம்? அதோட வடிவத்தை பெரும்பாலும் அந்த விஷயமே தான் நிர்ணயிச்சுக்குது. சில சமயம் எழுதறவங்களும் அதை தீர்மாணிக்கலாம். சில கவிதைகள் உரையாடல்/உரைநடை போலவும், சில சிறுகதைகள் கொஞ்சம் நீளமான கவிதை போலவும் இருக்கறது இந்த வித்தியாசத்தால தான். (சொல்ல நினைச்சதை சரியா சொன்னனான்னு தெரியல.. குழப்பிட்டனோ?) :)

காயத்ரி சித்தார்த் said...

//ரொம்ப சந்தோசம் திரும்பவும் வந்ததற்கு ........நிறைய எழுதுங்க pleaaaaaaaaaseeeeeeeeeee//

சூர்யா.. கிட்டத்தட்ட 8 மாசமா என்னை மறக்காம இருக்கறதுக்கு நான் தான் இவ்ளோ சந்தோஷப்படனும். கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கறேன்.

காயத்ரி சித்தார்த் said...

@ராம்ஜி.யாஹூ.. நன்றிங்க.

@ராம்.. கானல்நதி படிச்சிட்டிங்களா? பகடையாட்டம் இன்னும் முடிக்கல நான்.

காயத்ரி சித்தார்த் said...

சென்ஷி நன்றி!

வாலு அண்ணா.. ஒன்னியும் சொல்றதுக்கில்ல. :)

//இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குறவரைக்கும் உன்னைய ஒண்ணும் பண்ணமுடியாது!(சகோதரி)//

இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... :)

காயத்ரி சித்தார்த் said...

//காயத்ரிக்கா நான் சொல்வது உண்மை உண்மையை தவிர வேறில்லை ! :)//

நம்பறேன் ஆயில்யன்.. :)

காயத்ரி சித்தார்த் said...

//எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(
//

சாரி மதி.. கதையிலும் கூட போரின் குரூரங்களை முன்னிறுத்தும் விதமாகத்தான் இந்தக் கவிதை வருகிறது. :(

கோபி, புனிதா, ஆதவன், நன்றி..

காயத்ரி சித்தார்த் said...

//பல மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கும் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது ஒரு ரசிகனின் விருப்பம் :)
//

முயற்சிக்கிறேன் சேரல்.. :)

சரிதா said...

superb!!

நேசமித்ரன் said...

இல்லை நீங்கள் தெளிவாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்
ஆனால் நவீனக் கவிதை என்று சொல்லிக் கொண்டு நாம் மீண்டும் மரபைப் போன்ற வடிவங்களை வலிந்து கைக் கொள்கிறோமோ என்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வாங்க..
வரும்போதே பாலைத்திணைக்கேத்த சோகக்கவிதையோட வந்தீங்களா? :)

கவிதை என்னவோ செய்யுது தான் :(

Bee'morgan said...

வருக வருக.. இத்தனை நாள் கழிச்சு திரும்பி வந்திருக்கீங்க, டிபிகல் பாலைத்திணை கவிதையோட..

ஆழமான கவிதை.. பகிர்ந்தமைக்கு நன்றி..

Rajan said...

அழகு!

Gayathri Chandrashekar said...

nice poem!