Tuesday, March 25, 2008



நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.

15 comments:

TBCD said...

நேற்றைக்கு முந்தா நாள் வராதா..

ஒன்றோடு ஒன்று தொடர்பு இருந்தே தீரும்..

இன்னைக்கு மொக்கைப் போட்டா, அதை வைச்சு அடுத்த வருடம் வரை ஓட்டுவோம்... :P

மலைவாசி said...

ஆமாங்க... இறந்த காலத்தின் நினைவு.. சில வேளைகளில் பிரச்சினைதான்...

நிலா said...

ஹோம்வொர்க்லாம் அப்பப்ப பண்ணிடனும். நாளைக்குன்னு தள்ளி போடகூடாதுன்னு சொல்றீங்களா?

Bee'morgan said...

ரத்தினச்சுருக்கம்.. அருமை.

கும்பா said...

நாளையின் சலனமும்
நேற்றின் சோகமும்
நிகழ்வின் இன்பத்தை
தின்று தீர்த்தது

நிஜமா நல்லவன் said...

பாலைத் திணை போகவேண்டாம்னு சொன்னாங்க. கேட்காம வந்துட்டேன்.

இன்றே வருகையை
மறந்திட நினைத்தாலும்
நாளையின் விளிம்பிலும்
பாலைத் திணை யில்
நானிருப்பேனோ?

நிஜமா நல்லவன் said...

இது என்ன சோதனை? என்னோட கமெண்ட காணோம்?!?!?!?!?!?!?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நாளையின் விளிம்பின் இன்றும் நேற்றும் ஏற்கனவே குந்தியிருக்குன்னா, இன்றின் விளிம்பில் நேற்றும் முந்தநாளும் குந்தியிருக்கணுமே; நேற்றின் விளிம்பில் முந்தநாளும் முந்தநாளுக்கு முதல்நாளும் குந்தியிருந்திருக்கணுமே.

குழப்புறனா அல்லது நானே குழம்பிட்டனா?

:-p

(கவிதை நிஜமா நல்லாருக்கு. சின்னக் கவிதையில ஒரு யாதார்த்தத்தையே சொல்லிட்டுப் போய்ட்டீங்க போங்க)

KARTHIK said...

//நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.//

சரிதான்.

கண்ணாமூசான் said...

காயத்ரி..

வாழ்வில் நேற்றைய துயரங்களும் வேண்டாம்

நாளைய கனவுகளும் வேண்டாம்

இன்றைய மகிழ்ச்சிக்காக மட்டும் வாழ்வொம்

- என் நண்பன் எனக்கு சொன்னது

மூர்த்தி

தமிழன் said...

"இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?"

அந்த ரசித்த வரிகள் சூப்பர்

மனுஷம் said...

cLass..!

Venkat

priyamudanprabu said...

நேற்றும் இன்றும் இல்லாமல் நாளை ஏதுங்க????????

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நேற்றும், நாளையும் மிகவும் தேவை தான், இன்றின் சுமை அறிந்தவர்களுக்கு.

- இன்றின் சுமை அறியாதவன்

ny said...

வியப்பூட்டுகிறீர்கள்.....

(வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே)