வாரத்தின்
ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...
நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.
பகலில் தொடங்கி
இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..
தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும்
சில நம்பிக்கைகளும்..
என்றாலும்..
யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...
31 comments:
கவிதைக்கு பொருத்தமா படம் செலக்ட் செய்யறீங்களா, இல்ல படத்த பார்த்து கவிதைஎழுதறீங்களா? அந்த படமே பாதி கவிதைய சொல்லிடுது,
கவிதை எழுத எடுத்துகொள்ளும் நேரம் அளவு பொருத்தமான படம் தேடுவதற்கும் நேரம் எடுக்கும் என நினைக்கிரேன்,
வெகு பொருத்தம் கவிதையும் படமும்
//
வாரத்தின்
ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...
நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.
//
படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரே ரூம்ல அடைஞ்சு கிடக்கிறீங்களா??
இல்லை 'கோமா'வா
அளவில் மாற்றமில்லை சரி
நிறத்தில், வடிவில் மாற்றமில்லைங்கிறது சரியாக படலை.
//
பகலில் தொடங்கி
இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..
//
:-)
//
யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...
//
குப்பை பொறுக்குறவன் எப்படி நம்பிக்கையா குப்பைய கிளறுறான் அதுமாதிரியா??
//யாரேனும் எழுதிய கடிதமோகைவிட்டுப் போன உறவோதொலைந்து போன பொருளோநிச்சயம் கிடைக்கலாம்இன்றைக்காவது...//
மறந்து போன ஞாபகங்கள் கூட...
நல்லா இருக்கு...
//வாரத்தின்
ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...
நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.///
..நாட்களின் பெயரைத் தவிற.
///பகலில் தொடங்கி
இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..///
... ஆதலினால் தான் இதற்கு காதல் என்று பெயர்.
///தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும்
சில நம்பிக்கைகளும்..//
அளவுக்கடந்த நம்பிக்கையின் அடையாளம். :)
//என்றாலும்..
யாரேனும் எழுதிய கடிதமோ///
இது இந்த கவிதைக்கு சரியாக பொருந்தவில்லையே. காத்திருப்பது யாரேனும் எழுதும் கவிதைக்கா என்ன?
//கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...//
காத்திருத்தல் அல்லது நம்பிக்கைத் திணை. ( காயத்ரி ஆண்டிக்கே திணையா? :P )
வாவ்!!! அற்புதம்...
///யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...///
நம்பிக்கையுடன் தொடர்வோம்....
//யாரேனும் எழுதிய
கடிதமோ...//
போஸ்ட்மேனை தீபாவளிக்கு கொஞ்சம் கவனிங்க, கடிதம் அப்பப்பவே கிடைச்சுடும்...
இந்த கவிதையை எங்க ஆயாவுக்கு டெடிகேட் பண்றேன். அவங்க எங்க தாத்தாவ விட்டு பிரிஞ்சி இருக்காங்க.
எங்க தாத்தா டிக்கெட் வாங்கும்போது பாட்டிக்கும் சேத்து வாங்க மறந்துட்டார். :(
இந்த கவிதையை எங்க ஆயாவுக்கு டெடிகேட் பண்றேன். அவங்க எங்க தாத்தாவ விட்டு பிரிஞ்சி இருக்காங்க.
எங்க தாத்தா டிக்கெட் வாங்கும்போது பாட்டிக்கும் சேத்து வாங்க மறந்துட்டார். :(
//போஸ்ட்மேனை தீபாவளிக்கு கொஞ்சம் கவனிங்க, கடிதம் அப்பப்பவே கிடைச்சுடும்...//
விட்டத்த பாத்து யோசிப்பாங்களோ?
//யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...//
ம். தீபாவளிக்கு வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பீங்களா?
நிச்சயம் ஏதாவது கிடைக்கும். நம்பிக்கையோட தேடிப் பாருங்க!
//யாரேனும் எழுதிய கடிதமோகை விட்டுப் போன உறவோ தொலைந்து போன பொருளோ நிச்சயம் கிடைக்கலாம் இன்றைக்காவது...//
நல்லாயிருக்கு.... ஆனா இதிலே ஏதோ அழுத்தம் குறைந்தமாதிரி தோணுது.... :-S
//யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...//
அழகான வார்த்தைகள்.
தலைப்பு மிக அருமை.
வழக்கமான டச்சோட நல்ல கவிதை.
தினம் புதியதாய் துளிர்க்கும் நாளோடு புதியதாய் மீண்டும் மீண்டும் நம்பிக்கையும் துளிர்க்கிறது போல... :)
வழக்கம் போல கதாநாயகன் டயலாக் சூப்பர் அம்மணி:-))
Yakka, epdi ipdi ellam. Vikatan la ungala pathi padichathum google senju epdiyo kandu pidichitten. Nalla ezhutharinga. All the best. Keep it up.
//தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும்
சில நம்பிக்கைகளும்..//
அருமை!
//Vikatan la ungala pathi padichathum google senju epdiyo kandu pidichitten. Nalla ezhutharinga. All the best. Keep it up.
//
சொல்லவே இல்ல! என்ன மேட்டர் இது?
நிலா சொன்னது போல் , எனக்கும் அதே சந்தேகம்தான்..
நீங்கள் படம் பார்த்து கவிதை எழுதுறீங்களா? எழுதிவிட்டு படம் தேர்ந்தெடுக்குறீர்களா?...
very nice...
நல்ல இருக்கு as usual..
//
யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...
//
சூப்பர்
ம்ம்ம்... ம்... ஏதோ குறையுது...
:)))))
எப்போதும் போல ஒன்னும் பிரியல.. ஆனால், படிக்க நல்லா இருக்கு. :-)
கவிதை 70 வந்துடுச்சா? இன்னும் 5 போடுங்க.. பவள விழா கொண்டாடிடுவோம் அக்கா. :-)
பல நாள் கழிச்சு,
திடீர்ன்னு வந்து..
எல்லா பதிவுகளுக்கும்
பின்னூட்டம் போட்டுட்டேன்.
;-)
இப்படிக்கு,
.:: மை ஃபிரண்ட் ::.
தேங்க்ஸ் நிலா!
//கவிதை எழுத எடுத்துகொள்ளும் நேரம் அளவு பொருத்தமான படம் தேடுவதற்கும் நேரம் எடுக்கும் என நினைக்கிரேன்,
//
அதை விட ரொம்ப அதிக நேரம் எடுக்க வேண்டியிருக்குங்க. :(
//படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரே ரூம்ல அடைஞ்சு கிடக்கிறீங்களா??
இல்லை 'கோமா'வா//
சிவா.. கிர்ர்ர்ர்ர்ர்ர்
நாகை சிவா பாலைத்திணைக்கு சலிக்காம வர்றீங்க போல? நன்றி!
யார் இந்த பொடியன் புதுசா?
கையேடு, வித்யா நன்றி.
//யார் இந்த பொடியன் புதுசா?//
ஆமா காயத்ரி ஆண்ட்டி..
புதுசா இருக்கிறதால தான் பொடியன்.. பழசா இருந்தா தடியன்.. :P
... நோ..நோ.. அழக்கூடாது..
//~பொடியன்~ said...
//யார் இந்த பொடியன் புதுசா?//
ஆமா காயத்ரி ஆண்ட்டி..
புதுசா இருக்கிறதால தான் பொடியன்.. பழசா இருந்தா தடியன்.. :P
... நோ..நோ.. அழக்கூடாது..
//
பொடியன் அங்கிள், எங்க அக்காவையும் நீங்க விட்டு வைக்கல போல?
//.:: மை ஃபிரண்ட் ::. said...
பொடியன் அங்கிள், எங்க அக்காவையும் நீங்க விட்டு வைக்கல போல?//
ஒரு குட்டிப் பையனை அங்கிள் என்று அவமதித்துக் கொண்டிருக்கும் மை ஃபிரண்ட( பேர் என்ன? ;P ) ஆண்ட்டியை பொடியன் நிலா பவன் அபி ஆகியோர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((
Post a Comment