Wednesday, May 30, 2007

புதிராய் ஒரு விடை!

என் பிரயத்தனங்களை எல்லாம்
அலட்சியப்படுத்துவதில்
உனக்கு என்ன மகிழ்ச்சியோ
புரியவில்லை.

இப்போதும் பார்!
உனக்கென்றே கட்டப்பட்ட
இந்த வீட்டை விடவும்
ஜன்னலோர மரத்தில்
தவ்விக்குதிக்கும்
அந்த அணில் குட்டியே
உன்னை
மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது!

16 comments:

ப்ரியன் said...

முதல் வாசிப்பில்:

அவன் அவளிடம் சொல்வதாய் தோன்றியது.

இரண்டாம் வாசிப்பில்:

அவன் அவனின் குழந்தையிடம் சொல்வதாய் தோன்றியது.

எவ்வகையில் வாசிப்பினும் கவிதை நன்றாகவே இருக்கிறது.வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

நன்றி பிரியன். தொடர் வருகைக்கும்.. விமர்சனங்களுக்கும்!

நளாயினி said...

குழந்தை மனசுடைய ஒருவருக்கு சொல்வதாய்ப்படுகிறது. அது யாராக இருநற்தால் என்ன. கவிதை நன்று

குருத்து said...

நல்ல கவிதை.

இங்கு, கொஞ்சம் உற்றுக் கவனித்தால், எல்லோருடைய அன்பிலும், கொஞ்சம் ஆதிக்கம் கலந்து இருப்பதாக எனக்குப்படுகிறது.

இராம்/Raam said...

யக்கோவ்,

கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா திங் பண்ணுறீங்க?? ;-)

கவிதை பிரமாதம்... :)

காயத்ரி சித்தார்த் said...

//கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா திங் பண்ணுறீங்க?? ;-)//

பிடுங்கறதுக்கு ஆணி எதும் இல்லீங்க! அதான்!!

G3 said...

Kavidhai super..

Un kavidhaiya padichittu profilea padicha modhal line poinu theliiiiiiva theriyudhu.. appo adhula irukkara meedhi linesum poi dhaano ;-)))

வெட்டிப்பயல் said...

கவிதை சூப்பர்ங்க.. கலக்கலா இருக்கு

காயத்ரி சித்தார்த் said...

//appo adhula irukkara meedhi linesum poi dhaano ;-))) //

அடிப்பாவி!! விவகாரமான ஆளா இருப்ப போலிருக்கே!

தேங்க்ஸ் வெட்டி!

selventhiran said...

நன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்ல

காயத்ரி சித்தார்த் said...

//நன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்ல //

என்னங்க இது? இப்டி சொன்னா நான் சொல்லிக்குடுத்து தான் நீங்க சொல்றீங்கன்னு எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? என்ன தோணுதோ அதை தைரியமா சொல்லுங்க!!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே வருதா? நானும் உங்களைப் போல கவிதை எழுத விரும்புகிறேன். ஒண்ணும் நடக்க மாட்டேன் என்கிறதே?

கவிதை வாசிக்கும் போது ஒரு மெல்லிய இசையலை மனதில் அடிக்கிறது. வாழ்த்துகள்!

காயத்ரி சித்தார்த் said...

//இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே வருதா//

விவகாரமா பின்னூட்டம் போடறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு! நான் அதயோ பாத்து ஜி3 பண்ணி (ஜி3 சாரிடா கண்ணு!) பதிவு போடற மாதிரி கேக்கறீங்களே? :) தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு!

ACE !! said...

நல்ல கவிதை :D

AKV said...

எதிர்பார்ப்புகளற்ற நட்பே நிலைத்து நிற்கும் என்பதை அறிந்திருந்தாலும், அதை நடைமுறையில் கடைபிடிப்பது கஷ்டமாகவே இருக்கிறது.

ரசனை நன்றாக வெளிப்படுகிறது.

:-)

Enbee said...

Cha, what an observation.