Thursday, May 24, 2007

எனக்கு உடம்பு சரியில்ல... :(

ஹலோ மக்கள்ஸ்!! வணக்கம்ப்பா! எல்லாருக்கும் ஒரு வருத்தமான செய்தி சொல்ல போறேன். எனக்கு 2 நாளா உடம்பு சரியில்ல. (யாரது சந்தோஷமா விசிலடிக்கிறது? குட்டிபிசாசா தான் இருக்கனும்.. வரவர எதிரிங்க ஜாஸ்தி ஆய்ட்டே போறாங்க) :( அடடா.. ஜி3 நீ அழாதடா.. எனக்கு ஒன்னும் ஆகல..

2 நாளா நடந்தா உடம்பு கூட கூட வருது.. தூங்கும் போது கண்ணு தெரிய மாட்டிங்குது.. அப்பாவ பாத்தா டாடி மாதிரியே தெரியுது.. மூஞ்சி வேற ரொம்ப அழகாய்ட்டே வருது!!! என்ன பண்றதுன்னே தெரில. என்னம்மோ ஏதோன்னு எங்க ஏரியால இருக்கிற எம்.காம் படிச்ச கைராசிக்கார டாக்டர்ட்ட போனேன். என்னத்த சொல்ல? ஐயகோ.. இது எதையும் குணப்படுத்தவே முடியாதாமே?! அவர் சோகமா கண்ணாடிய கழட்டிட்டே.. "எதயுமே இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்லமுடியும்" னு சொன்னாரு. "பரவால்ல டாக்டர் நான் நேத்தே கேட்டதா நினச்சுட்டு பதில் சொல்லுங்களேன்.. எனக்கு என்ன ஆச்சு" ன்னு கேட்டேன். மனுஷன் கடுப்பாகி, "மனச தேத்திக்குங்க.. எங்க கைல எதும் இல்ல" ன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அதோட இன்னொன்னும் சொன்னார்.. "உங்களுக்கு மல்ட்டிபிள் பர்ஸனாலிட்டி டிஸார்டர், ஷார்ட் டைம் மெமரி லாஸ், 'கவுஜோ'மேனியா ன்னு 3 விதமான, வித்யாசமான, வினோதமான.. அற்புதமான, ஆச்சரியமான.. அதிசயமான...(ஸ்ஸ்..அபா இப்பவே கண்ண கட்டுதே!) பாதிப்புகள் எல்லாம் பேசி வெச்சிகிட்டு சேர்ந்து ஒன்னா கிளம்பி வந்திருக்கு. இதுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல அதனால நீங்க எப்ப கவித எழுதுவிங்க.. எப்ப மொக்க போடுவிங்கன்னு உங்களுக்கு மட்டுமில்ல.. அந்த அய்யனாருக்கே தெரியாது.." (சாமிங்க! யாரது சிண்டு முடியறது? அவர் ஏற்கனவே என் மேல கடுப்புல இருக்கார்!!) அப்டின்னு சொன்னார்.

மக்களே! இப்ப நான் என்ன பண்றது சொல்லுங்க? என் மேல எதுனா தப்பிருக்கா? இந்த பக்கம் நாலு பேரு.. அந்த பக்கம் நாலு பேரு நின்னுட்டு "நீ கவித எழுது" "இல்லல்ல நீ மொக்க போடு"ன்னு இழுத்தா ஒரு சின்ன பொண்ணு என்ன பண்ணும்? இருந்தாலும் நான் விடறதா இல்ல.

எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா என் 'கலை தாகம்' அடங்குற வரைக்கும் இப்டி தான் எல்லாரையும் இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. இம்சை பண்ணுவேன்.. (இது எக்கோ கண்டுக்காதீங்க!!) இது அந்த அய்யனார் மேல.. :) வேனாம் காடுவெட்டி கருப்புசாமி மேல சத்தியம்.!! :)))

ஏன்னா.. கவித பாதி.. மொக்க பாதி கலந்து செய்த கலவை நான்!! உள்ளே கவித வெளியே மொக்கை.. விளங்க முடியா இம்சை நான்!

இப்போதைக்கு அப்பீட்டு.. வருவேண்டா ரிப்பீட்டு!!

(டி.ஆர் எஃபக்ட்ல டிரை பண்ணினேன்! சாரி)

14 comments:

நாமக்கல் சிபி said...

கவுஜை எழுதப் போறீங்களா?

நான் என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன்!

செந்தழல் ரவி said...

மொக்கை ஏரியாவை மொத்த குத்தகைக்கு எடுத்துட்ட மாதிரி தெரியுது மக்கா !!!

என்சாய்....வெய்யில் அதிகமோ - ஈ-ரோட்ல ?

ப்ரியன் said...

ரசித்தேன்...சிரித்தேன்... :)

அபி அப்பா said...

ஏன் ஏன் ஏன் இத்தன பில்டப்பு கவிதை எழுத போறேன்ன்னு சொல்ல வேண்டியதுதானே:-)))

காயத்ரி said...

சிபி, அபிஅப்பா :

இல்ல.. மறுபடி கவித எழுதினா எல்லாரும் ரவுண்டு கட்டி அடிப்பீங்களோன்னு ஒரு பயம்!! அதான்.. உடம்பு சரியில்லாத புள்ளய அடிக்க மனசு வராதில்ல?

//வெய்யில் அதிகமோ - ஈ-ரோட்ல ? //

நான் பெனாத்துறதுல இருந்தே தெரிலயா?

நன்றி ப்ரியன்.. ரொம்ப சிக்கனமா பாராட்டினதுக்கு!! :)))

இராம் said...

யக்கோவ்,


எப்பிடிக்கா இப்பிடியெல்லாம் காமெடி பண்ணுறீங்க???

:)

G3 said...

என்னடா கண்ணம்மா ஆச்சு உனக்கு?? யாராவது சூனியம் கீனியம் வெச்சிட்டாங்களா?? இந்த அளவுக்கு மொக்கை போட ஆரம்பிச்சிட்ட.. வர வர காயத்ரி (ஜி3) அண்ட் மொக்கை பிரிக்க முடியாத சொற்களாயிடும் போல இருக்கே :-))

//அந்த பக்கம் நாலு பேரு நின்னுட்டு "நீ கவித எழுது" "இல்லல்ல நீ மொக்க போடு"ன்னு இழுத்தா ஒரு சின்ன பொண்ணு என்ன பண்ணும்?//
தினமும் காலைல ஒரு மொக்கையும் சாயந்திரம் ஒரு கவிதையும் போட்டா நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம்?? இல்ல சொன்னா தான் நீ விட்டுட போறியா.. நீ அடிச்சு ஆடுடா என் செல்லம் :-))

Socrates said...

ஏற்கனவே மொக்கைப் போடுகிறவர்கள் தொல்லைத் தாங்க முடியவில்லை. அந்தக் கோஷ்டியில் நீங்களும் சேராதீர்கள்.

சில நல்ல பதிவாளர்கள் எல்லாம், இந்த கும்மியடிப்பவர்கள், ஜல்லியடிப்பவர்களேயே சில நாள்களில் காணாமல் போயிருக்கிறார்கள்.

வெட்டிப்பயல் said...

சூப்பர்... இந்த மாதிரி நிறைய எழுதுங்க ;)

குட்டிபிசாசு said...

இப்படியெல்லாம் சொல்லப்பிடாது!! உங்களுக்கு உடம்பு சரி இல்லாட்டி நான் விசில் அடிப்பேனா? நான் ரொம்ப நல்ல பையங்க.

Divya said...

மிகவும் ரசித்து உங்கள் பதிவுகளை இன்று படித்தேன் காயத்ரி,
நேர்த்தியான நடை, ரசிக்கும் படியான குறும்பு.......அனைத்தையும் ரசித்தேன் உங்கள் பதிவுகளில்!

நாகை சிவா said...

வெட்டிண்ணனே.. எப்படிண்ணனே இப்படி... இந்த பதிவை விட உங்க கமெண்ட் தான் டாப்.. எப்படிண்ணே இப்படி எல்லாம்.. ரொம்ப மெனக்கெட்ட.. கஷ்டப்பட்ட அவங்க ஒரு பதிவு போட்டு இருக்காங்க.. இப்படி சும்மா ஒரு கமெண்ட் போட்டு சர்னு இழுத்திட்டீங்களே.. உங்க திறமையே திறமை தான்...

நாகை சிவா said...

காய்த்ரி நோ ஹார்ட் பீலிங்ஸ்... உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு.. அதான் வெட்டி அண்ணனுக்கு ஒத்து ஒத வேண்டியது ஆயிடுச்சு... :)

M.Saravana Kumar said...

"பரவால்ல டாக்டர் நான் நேத்தே கேட்டதா நினச்சுட்டு பதில் சொல்லுங்களேன்.. எனக்கு என்ன ஆச்சு" ன்னு கேட்டேன்..

கலக்கல் :)