Saturday, May 26, 2007

எழுதாக்கவிதை

அடித்துத் திருத்தி
மீண்டும் எழுதி
ஒரு கவிதையை நிறைவுசெய்த
திருப்தியோடு நிமிர்கிறேன்..
அடிபட்ட வார்த்தைகளுக்குள்
மற்றுமோர் கவிதை
மெளனமாய் அழுது கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் வலியோடு!

16 comments:

G3 said...

Simply superb :-)

குருத்து said...

நம்மை நேசிப்பவர்களின்
நிராகரிப்பு
கொடுமையானது.

தன்னை படைத்தவனின்
நிராகரிப்போ
மிக மிக
கொடுமையானது.

குறிப்பு: எல்லாம் feelings.

Raji said...

Really remba nalla irukkunga gayathri:)

அபி அப்பா said...

//Raji said...
Really remba nalla irukkunga gayathri:) //

எங்க ஊர்காரங்க நெம்ப நல்லா பொய் சொல்லுவாங்க காயத்தி:-))

காயத்ரி சித்தார்த் said...

அண்ணாச்சி ஏன் இப்டி உங்க காதுல புகை புகையா வருது? :(

அபி அப்பா said...

வேற என்ன எனக்கு கவுஜ வரமாட்டங்குதேப்பா அதான் காதில் புகை:-))நல்லாயிருக்கு கவிதை(இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-))

காயத்ரி சித்தார்த் said...

//இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-)) //

ஹ்ம்ம்...நல்ல மனசோட வாழ்த்த மாட்டிங்களா?

ப்ரியன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

ஜி said...

அட்டகாசமான கவிதைங்க.... சூப்பரா யோசிச்சிருக்கீங்க...

காயத்ரி சித்தார்த் said...

ப்ரியன்.. ஜி நன்றிங்க. (அபி அப்பா கேட்டுக்குங்க நல்லா!!)

நந்தா said...

//அடிபட்ட வார்த்தைகளுக்குள்
மற்றுமோர் கவிதை
மெளனமாய் அழுது கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் வலியோடு!///

என்ன அழகான வரிகள். 4 வரிகள் சொல்லும் அர்த்தங்கள் பல.ரொம்ப அருமையா இருக்கு.

காயத்ரி சித்தார்த் said...

நன்றி நந்தா..

Guna said...

கவிதை நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.

CVR said...

Beautiful!!

வெட்டிப்பயல் said...

அக்கா,
கவிதை அருமை...

எப்படித்தான் யோசிக்கறீங்களோ!!!

காயத்ரி சித்தார்த் said...

சி.வி.ஆர்.. வெட்டி நன்றிங்கப்பா!