Sunday, May 6, 2007

அழகு!! ஏ புள்ள முத்தழகு..!!!

"அம்மாடி.. ஆத்தாடி.. உன்ன எனக்கு தரியாடி..! யம்மா.. யம்மா..யம்மா.. யம்மம்மா..!

இப்டி ஏதாவது ஒரு குத்து பாட்டுக்கு கண்ணு மண்ணு தெரியாம ஆடற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் நான்! பின்ன? பாசக்கார குடும்பத்துல நாமளும் சேர்ந்துட்டமுல்ல..சேர்ந்துட்டமுல்ல..சேர்ந்துட்டமுல்ல..!

எல்லாரும் கூடி கும்மியடிக்கிறத பாத்து.. சோகமா.. சோலோவா.. பெர்ஃபார்மன்ஸ் குடுத்திட்டிருந்த என்னை.. நம்ம தங்கச்சி.." வாங்க.. நீங்களும் அழகு பத்தி எழுதுங்க.." னு கூப்பிட்டு ஆட்டத்துல சேர்த்துகிச்சு.. ("தங்கச்சி.. இந்த உதவிய நான் எப்ப்ப்டிமா மறப்பேன்.. எப்டி மறப்பேன்!)

சொல்ல கொஞ்சம் கூச்சமா தாங்க இருக்கு.. இருந்தாலும் ஒரே குடும்பம்னு ஆன பின்னால என்ன மானம் ரோஷம் எல்லாம் பாத்துகிட்டு? எல்லாரும் எழுதறாங்களே.. நாம அழக பத்தி என்ன எழுதலாம்னு முன்னமே யோசிச்சு வெச்சுகிட்டு.. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களானு தேவுடு காத்துட்டு உக்காந்துட்டு இருந்தேன்! ( ஹலோ.. யாரது சத்தமா சிரிக்கிறது?) மை ஃப்ரண்ட்..இந்த குறைய தீர்த்து வெச்சிடுச்சு. (பாசக்கார பய புள்ள!)

சரி ஆட்டத்துக்கு வருவோம்! பொதுவா இந்த 'அழகு'ங்கிறது நாம பாக்கற பார்வைல இருக்கு. அதாவது..என்னனா.. ம்ம் நான் என்ன சொல்ல வரேன்னா..வேணாம்.. முறைக்கப்படாது! அலம்பல் பண்ணாம விஷயத்துக்கு வந்துடரேன்.!

1. குட்டீஸ் குறும்பு:


நான்: விஷ்ணு.. அங்க என்ன பண்றே? வா இங்க..

விஷ்ணு: வத மாத்தேன் போ..

நான்: ஏண்டா? அங்க என்ன பண்ணிட்ருக்கே?

விஷ்ணு: சத்த (சட்டை) மேல தண்ணி ஊத்திகித்தேன்..!

நான்: ஏய்.. தண்ணில விளையாட போய்ட்டியா..வாடா இங்க!

விஷ்ணு: மாத்தேன்.. நா.. நான்.. டாமிக்கு.. ஈஈ.. தேச்சி.. தன்ணி ஊத்தறேன்!

( அழுக்கு நாய் பொம்மை என் டூத் ப்ரஷ் புண்ணியத்தில் சுத்தமாகிக் கொண்டிருக்கிறது!)

இதுக்கு விளக்கம் வேற சொல்லணுமா சொல்லுங்க?

என்னைப் பொறுத்தவரை குட்டீஸ் நின்னா.. நடந்தா.. சிரிச்சா.. அழுதா.. அடம்பிடிச்சா.. தூங்கினா.. எல்லாமே அழகு..அழகு கொள்ளை அழகு!


சாம்பிள்ஸ்!


2. காத்திருப்பு:


"இடக்கை மணலை

வலக்கைக்கு மாற்றி

நகக்கண்ணெல்லாம் வலிக்கிறது..

அடியே நாளையேனும் வா!"


எங்கியோ எப்பவோ படிச்சு... கடற்கரை மணல் மாதிரியே இந்த கவிதையும் மனசுல ஒட்டிகிட்டே வந்துடுச்சு! காதல் தான்னு இல்ல.. மேடு தட்டின வயித்த பாசத்தோட தடவிகிட்டே.. குழந்தை முகத்துக்காக காத்திருக்கிற அம்மா, ஸ்கூல் வாசல்ல.. அம்மாவுக்கோ.. அப்பாவுக்கோ.. கன்னத்துல கை வெச்சு காத்திட்டிருக்கிற குழந்தை, வேலைக்குப் போன கணவன் திரும்பி வர்ற நேரத்துக்காக காத்திட்டிருக்கிற புது பொண்டாட்டி! வெளிநாடு போன பையன் திரும்பி வர்ற நாளுக்காக காத்துகிட்டிருக்கிற வயசான அப்பாம்மா!.. இப்டி நேசம் இருக்கிற எல்லா இடத்திலயும் காத்திருத்தல் அழகு தாங்க!


"உன்னை எதிரில் பார்த்த நாட்களை விடவும் எதிர்பார்த்த நாட்களே அதிகம்!"3. அறிவு!

அவருக்கு வயசாகிடுச்சு.. அப்டி ஒன்னும் அழகான முகம் இல்ல. முகமெல்லாம் சுருக்கம்.. முடி எல்லாம் நரைச்சுப் போச்சு! அவர் ஹேர் ஸ்டைல் வித்தியாசமா கொஞ்சம் பைத்தியக்காரத்தனமா கூட இருக்கும்.! ஆனா.. அவர் தான் கோடிக்கணக்கான இளைஞர்களோட லட்சிய நாயகன்! அந்த அழகன்(ர்) யாருனு தெரியனுமா?

மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்!


அறிவும் ஆளுமையும் தர்ற கம்பீரமான அழகு இருக்கே!.. அடடா! அது எப்பவும் ஸ்பெஷல் தான்!4. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!

பொண்ணுங்கன்னாலே அழகு தான்! இதுக்கு எந்த தரப்புல இருந்தும் எதிர்ப்பு வராது னு நினைக்கிறேன்! ஆனா என்ன தான் வித விதமா உடைகள் வந்தாலும் இந்த பாவாடை தாவணியும்... புடவையும் தர்ற அழகு இருக்கே.. அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்க! ப்ரிட்னி ஸ்பியர்ஸ்-ஸா இருந்தா கூட புடவை கட்டினா.. நம்ம 'மஹாலட்சுமி' கெட்டப் -க்கு வந்துடுவாங்க! அதுக்கு நான் கேரண்டி!

நானெல்லாம் பாவாடை தாவணில பாவனா -வ விட சூப்பரா இருப்பேன்! கண்ணு பட்ருமேனு தான் என் போட்டோ போடல!5. தனிமை!


சோகம் கலக்காத தனிமை தான் என்னை பொறுத்தவரை இனிமையான.. அழகான நேரம் -னு சொல்வேன். டி.வி வேனாம்.. பாட்டு வேனாம்.. புக் வேனாம்.. யாரும் என்கிட்ட பேச வேனாம்..னு மாடிக்கு போய்.. தூரத்துல தெரியற கோவில் கோபுரத்த...பளிச்னு இருக்குற வானத்த..சூரியன் மறையறத.. நிலா தேஞ்சுகிட்டோ.. வளர்ந்துகிட்டோ இருக்கிறத.. மேகத்துக்குள்ள மறைஞ்சுகிட்டு கண்ணாமூச்சி ஆடறத... மெல்லிசா தூறல் போடறத..ரசிக்கிற நேரம்..அழகான சொர்க்கம்! மனசு காத்துல பறக்குற பேப்பர் மாதிரி லேசா ஆகி.."எதுனாச்சும் எழுதலாமா.. வேணாமா னு பரபரன்னு இருக்கும்.. அந்த தனிமை.. ஹையோ! ரொம்ப அழகுங்க..

வெளியே பெய்கிறது மழை!.. உள்ளே நனைகிறது மனசு!

6. காதல்!


உலகத்துல எதெல்லாம் அழகில்லயோ அதயெல்லாம் கூட அழகா காட்ர சக்தி காதலுக்கு இருக்குங்க! காதலோட அருமை பெருமை எல்லாம் பூவே உனக்காக ல இருந்து.. படத்துக்கு படம் விஜய் விரிவா விளக்கமா சொல்லிட்டு வர்றாரு.. இதுல உங்களுக்கு எதுனா டவுட்டுனா அவருக்கு எப்ப வேணா போன் போட்டு க்ளியர் பன்ணிக்கலாம்!"கடல் கடல் சார்ந்த இடம்

நெய்தல்.

நீ உன் சார்ந்த நினைவு

காதல்!"


-கென்


இது தவிர.. அம்மாவோட அக்கறை கலந்த கோபம், காதலியோட வெட்கம், ஊடல் உடைகின்ற நிமிடம், நம்ம அபி பாப்பா, ஜோதிகாவோட துள்ளல், ரஜினி ஸ்டைல், பாவனாவோட குறும்பு, காயத்ரியோட புன்னகை (கண்டுக்காதீங்க!) லேட்டஸ்ட்டா 'உன்னாலே உன்னாலே' விநய் வரைக்கும் எல்லாமே அழகு தான் போதுமா!

7 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்க அழகு டேக்கை படிக்க இந்த தங்கச்சி வந்தாச்சு! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நாம அழக பத்தி என்ன எழுதலாம்னு முன்னமே யோசிச்சு வெச்சுகிட்டு.. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களானு தேவுடு காத்துட்டு உக்காந்துட்டு இருந்தேன்! //

இப்படி ஒருத்தி இருக்காங்கன்னு முன்னவே தெரிஞ்சிருந்தா என் பதிவிலேயே உங்க லிங்கை கொடுத்து டேக் பண்ணிருப்பேன். பரவாயில்லை.. பின்னூட்டத்திலும் டேக் பண்ற கிக்கு தனிதான். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!
//

சரி... நீங்க பாவாடை தாவணியில் ஒரு ரவுண்டு வந்தால் நல்லாத்தன் இருக்கும்.. :-)

காயத்ரி said...

ஆத்தி.. வந்துட்டியா.. வந்தது தான் வந்தே.. நம்ம சொந்த பந்தங்கள எல்லாம் கூட்டிட்டு வரப்படாதா? "நானும் பதிவ போட்டுட்டு அத கண்டுக்காத மாதிரி எவ்ளோ நேரம் தான் நடிக்கிறது?"

வருத்தப்படாத வாலிபன். said...

//நானெல்லாம் பாவாடை தாவணில பாவனா -வ விட சூப்பரா இருப்பேன்!//

தங்கத்தலைவி பாவனா ரசிகர்களின் சார்பில் இதை எதிர்த்தாலும் பதிவில கடைசியில் "பாவனாவோட குறும்பு அழகு"-னு சொன்னதுனால அகில இந்திய போராட்டம் கைவிடப்பட்டபது.:-).

நல்ல பதிவு காயத்ரி.

காயத்ரி said...

வ.வா கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதம்னு எதாச்சும் பண்ணி 3 பஸ் கண்ணாடிய ஒடச்சு சங்கத்து ஆளுங்க 2 பேர உசுரோட கொளுத்தியிருந்திங்கன்னா.. நானும் பெரிய ஆள்னு ஊரு உலகத்துக்கு தெரிஞ்சிருக்குமே! இப்டி பண்ணிட்டிங்களே! (ஐயோ நான் அரசியல் பேசலீங்கோ!)

தேங்க்ஸ்ங்க!

Visaagan said...

//வெளியே பெய்கிறது மழை!.. உள்ளே நனைகிறது மனசு!//

//அறிவும் ஆளுமையும் தர்ற கம்பீரமான அழகு இருக்கே!.. அடடா! அது எப்பவும் ஸ்பெஷல் தான்!
//

//உன்னை எதிரில் பார்த்த நாட்களை விடவும் எதிர்பார்த்த நாட்களே அதிகம்!//

அனைத்து தலைப்புகளிலும் உள்ள “short notes” சிறு குறிப்புகள் தலைப்புக்கு வலிமை சேர்க்கிறது.

அழகுக்கு அழகு சேர்த்த நீங்களூம் ஒரு பாலு ஜீவல்லரி தான்

வாழ்த்துக்கள்

Nizam