Saturday, May 12, 2007

பப்ளிக் எக்'ஜாம்' - டிப்ஸ்!

நம்ம தலைவரோட இந்த பதிவ படிச்சுட்டு எனக்கும் டார்ட்டாய்ஸ் சுத்த ஆரம்பிச்சிடுச்சுங்க! இருங்க.. இருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி ஃப்ர்ஸ்ட் லவ்வு, நெக்ஸ்ட் லவ்வு னு என் லைஃப்-ல எந்த 'காமெடி'யும் இதுவரை நடக்கல. ஆனா அவர் அந்த 'டிராயர் வெச்ச டேபிள்' பத்தி எழுதியிருந்தாரே? படிச்சிட்டு ஒரே சிரிப்பு! நானும் ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கறேன்னு இப்டி எல்லாம் நிறைய அழும்பு பண்ணிருக்கேன்! ஒகே.. Over to Flashback!

நான் அப்போ +2 படிச்சிட்டிருந்தேன்! பப்ளிக் எக்ஸாம்-னாலே நமக்கு வீட்ல ஓவர் மரியாதை இருக்கும். தம்பி கிரிக்கெட் மேட்ச் பாத்தா தைரியமா போய் 'நான் படிக்கனும் போடா' னு தலைல தட்டி டிவிய ஆஃப் பண்ணலாம்! இல்லனா எதாச்சும் 'கில்மா' (தமிழில் லஞ்சம் அல்லது கையூட்டு என்று அழைக்கப்படுவது!) வாங்கிகிட்டு allow பண்ணலாம்! யாராச்சும் கொஞ்சம் சத்தமா பேசினாலும் "புள்ளைங்கள peaceful ஆ படிக்க விடுங்க" னு கில்லி ஸ்டைல்ல சவுண்ட் விடலாம்! சொந்தக்காரங்க யாராச்சும் வரும்போது 'குவாண்டம் தியரி'.. 'கெப்ளர்'ஸ் லா' னு எந்த கர்மத்தையாவது சின்சியரா படிச்சு ஃபிலிம் காட்டலாம்! குறிப்பா எல்லார் வீட்டுக்கும் தெரியற மாதிரி மொட்ட மாடில குறுக்க நெடுக்க நடந்துகிட்டே கொஞ்ச நேரம் படிச்சுட்டு..' நைட் எல்லாம் படிச்சேன்.. கண்ணு எரியுதுமா'னு காலைல 7 மணி வரை தூங்கலாம்! இப்டி நிறய அட்வான்டேஜஸ் இருக்கும்!!

அதுலயும் நான் 10 th- ல எடுக்காம விட்ட 'ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' ட +2 ல எடுத்தே தீருவேன்னு சரஸ்வதி சபதம் போட்டிருந்ததால மரியாத கொஞ்சம் தூக்கலாவே இருந்துச்சு! நானும் ரூம்ல.. கிழக்கு பார்த்து வீணை வாசிக்கிற சரஸ்வதி படம் எல்லாம் மாட்டி வெச்சு, நம்ம தலைவர் மாதிரியே டேபிள், சேர் எல்லாம் வாங்கிப் போட்டு.. வாஸ்துப் படி (!) ஈசானி மூலைல உக்காந்து அவர மாதிரியே "மண்டய கவுத்தி" படிப்பேன்! சுவத்தில வேற, எந்த பக்கம் திரும்பினாலும்..."Success is yours", "எங்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்", "இப்போது இல்லாவிட்டால் எப்போது ஜெயிக்கப் போகிறோம்.. நாம் ஜெயிக்காவிட்டால் (?!) வேறு யார் ஜெயிக்கப் போகிறார்கள்" னு தன்னம்பிக்கை வாசகமெல்லாம் வேற ஒட்டி வெச்சிருந்தேன். ஸ்கூல் விட்டு வந்ததும் தட்டுல சாப்பாடு போட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு (படிக்கிற புள்ள! தெம்பு வேனாமா?) ரூமுக்குள்ளார போவேன்.. 'சக்திமான்' மாதிரி ஒரு என்ர்ஜி வரும்.. வீராவேசமா போய்..பிசிக்ஸ் புக்கயோ..கெமிஸ்ட்ரி புக்கயோ எடுத்து பிரிப்பேன். அவ்ளோதான்.. சார்ஜ் போடாத செல்போன் மாதிரி பேட்டரி குறைஞ்சிட்டே வந்து 1 மணி நேரத்துல 'ஸ்விட்ச் ஆஃப்' ஆய்டுவேன்! சிலநேரம்.. இந்த பாடமெல்லாம் கண்டுபிடிக்காத காலத்துல.. ஒரு ஆதிவாசியாவோ.. கற்கால மனுஷியாவோ பொறந்திருக்க கூடாதானு ஃபீல் பண்ணிட்டு உக்காந்திட்டிருப்பேன்!

இப்டிபோய்ட்டிருந்த வாழ்க்கைல.. ஒரு நாள் ஸ்கூல்ல திடிர்னு 'மெமரி பவர் & பெர்ஸனாலிட்டி டெவெலப்மென்ட்' கிளாஸ்க்கு ஏற்பாடு பண்ணினாங்க. எங்களுக்கு ஒரே சந்தோஷம்! (கெமிஸ்ட்ரி பீரியட் கட் ஆகுதே!) வந்தவரும் சீரியஸா என்னென்னமோ டிப்ஸ் குடுத்தாரு.. நாங்களும், யாரு பெத்த புள்ளயோ இப்டி தனியா புலம்புதேனு பரிதாபப் பட்டு.. எந்த சேட்டையும் பண்ணாம தேமேன்னு கேட்டுட்டு இருந்தோம்.

"டெய்லி கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்க.. மைண்ட் சுறுசுறுப்பாகும்"

(தியானமா? உக்காந்துட்டே தூங்கறேன்னு வீட்ல இருக்கிற குட்டிச்சாத்தான் கலாய்க்குமே!?)

"தினம் 4 அல்லது 5 மணிக்கு எந்திரிச்சு படிங்க! பாடம் மனசுல நல்லா பதியும்"

(அடப்பாவி மக்கா! நடுராத்திரில எந்திரிச்சு படிக்கிறதா?)

"ஆனா விடிகாலைல படிக்கும் போது பசிக்கும்"

(ஆமா! பசிக்காதா பின்ன?)

"அதனால வீட்ல சொல்லி பிஸ்கட், பிரெட், ஜாம் எதாவது வாங்கி வெச்சிட்டு சாப்பிட்டு படிக்க ஆரம்பிங்க!

(அட! இது நல்லாருக்கே!)

வீட்டுக்கு வந்ததும் மொத வேலயா 'பிரெட், ஜாம் வந்தா தான்.. ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்' னு அம்மாட்ட கறாரா சொல்லிட்டேன். அம்மாவும்... அப்பாக்கு போன போட்டு "வந்தா ஜாமோட வாங்க.. இல்லன்னா வராதிங்க"னு சொல்லிட்டாங்க!

அப்பாக்கு எப்பாவுமே என் மேல பாசம் ஜாஸ்தி! உடனே கடைக்கு போயிருக்கார். அங்க 'ஸ்டாக் கிளியரன்ஸ்' போட்டிருந்தான் போல! ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீனு 3+3 ஜாம் பாட்டில்களோட வீட்டுக்கு வந்துட்டார்! உண்மைய சொல்றேங்க! அதுநாள் வரைக்கும்.. ஜாம்னு கேட்டா எங்கம்மா பாழாப்போன சாஷே ல வாங்கிட்டு வந்து, பிரெட்டுகிட்ட "இதான் ஜாம்" னு கண்ணுல காமிச்சுட்டு குடுப்பாங்க! இப்ப என்னடான்னா..எனக்கே எனக்குனு இத்தன பாட்டில் ஜாம்! ஆனா.. காலைல படிக்கும் போது தான் சாப்பிடணும்னு கண்டிஷன்! சரினு 5 மணிக்கு அலாரம் வெச்சுட்டு படுத்தா.. கனவுல ஜாம் பாட்டில் எல்லாம் என்ன சுத்தி நின்னு "ரிங்கா ரிங்கா ரோஸஸ்"னு டான்ஸ் ஆடுதுங்க!

மறுநாள்.. அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சி.. அவசரமா பல் தேச்சு.. வேகமா ஓடி வந்து பிரெட்.. ஜாம எடுத்து.. பெட் மேலயே உக்காந்து..பிரெட் ல ஜாம தேய் தேய்னு தேச்சு ஆச தீர சாப்ட்டேன்! அப்புறம் தான்.. புக்கு எங்கனு தேடினேன்! கைக்கு கிடச்ச புக்க எடுத்து வெச்சிட்டு ஈசானி மூலைல சேர் போட்டு உக்காந்தா.. சரியா 5 நிமிஷம் தான்..உடனே 'அருள் வாக்கு' சொல்லப் போற மாதிரி உடம்பு சாமியாட ஆரம்பிச்சிடுச்சு. சரின்னு பெட்லயே.. தலகாணிய சுவத்தில சாய்ச்சு வெச்சு படிச்சேன்.. முதுகு வலிச்சுது...அப்புறம் குப்புறப் படுத்து கன்னத்துல கை வெச்சிட்டு படிச்சேன்! திடீர்ன்னு முழிச்சா..( தூங்கிட்டமுல்ல!) புக்கு தலகாணி ஆய்ருக்கு! சரஸ்வதி தேவி சபிச்சுட்டா என்ன பண்றதுனு.. கட்டிலுக்கு வெளில தல நீட்டி புக்க கைல வெச்சிகிட்டு மறுபடி ஃப்ர்ஸ்ட்டுல இருந்து ஆரம்பிச்சேன்! சரியா 2 நிமிஷத்துல புக்கு கீழ விழுந்துடுச்சு பாவம்! இப்டி நான் படிக்க ஆரம்பிகிறதுக்குள்ளார விடிஞ்சே போய்டுச்சு!

அம்மா.. காலைல ஜாம் பாட்டில் எடுத்து திறந்து.. 'இடி விழுந்த மாதிரி' ஜாம்ல பள்ளம் இருக்கறத பாத்து ஷாக் ஆய்ட்டாங்க! இப்டியே.. எல்லா ஜாமும் தீருர வரைக்கும் என்னோட 'நைட் ஸ்டடி' கண்டின்யூ ஆச்சு. அப்புறமா அந்த பழக்கத்த நிப்பாட்டிட்டேன்!

என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? அத வழக்கம் போல ஒரு கண்ணாடி போட்ட பொண்ணோ, பையனோ வாங்கிருப்பாங்க! அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர் நமக்கெதுக்குங்க?

12 comments:

G3 said...

ROTFL :-)) Super post.. Nalla flowla unna neeyae kalaaichikkara.. aduthavanga kaalaikka chancae kudukkala ;-))

//நாங்களும் யாரு பெத்த புள்ளயோ இப்டி தனியா புலம்புதேனு பரிதாபப் பட்டு.. எந்த சேட்டையும் பண்ணாம தேமேன்னு கேட்டுட்டு இருந்தோம்.
//
//(தியானமா? உக்காந்துட்டே தூங்கறேன்னு வீட்ல இருக்கிற குட்டிச்சாத்தான் கலாய்க்குமே!?)//
ROTFL :-)))

G3 said...

//என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? //

evlo azhaga nee padichirukkanu therinjappuramum ippadi oru kelviya naanga keppoma enna??? :-))

prakash said...

//என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? அத வழக்கம் போல ஒரு கண்ணாடி போட்ட பொண்ணோ, பையனோ வாங்கிருப்பாங்க! அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர் நமக்கெதுக்குங்க//

சூப்ப்பர்ர்ர்.. நீங்க டுபுக்கு ஃபேன் க்ளப்பா? அதான் இந்தப் போடு போடறீங்க?

வருத்தப்படாத வாலிபன். said...

ஹி..ஹி.ரொம்ப அருமையா
படிச்சிருக்கீங்க காயத்ரி.:-)

காயத்ரி said...

வாம்மா ஜி3! இல்லன்னா மட்டும் நீ கலாய்க்காம விடப் போறியா!

ஆமா! பிரகாஷ் சார், டுபுக்கு நற்பணி மன்றத்தோட தமிழ்மாநில செயலாளர் நானு!

வ.வா உங்களுக்காவது நான் படிச்சேன்னு புரிஞ்சிருக்கே! தேங்க்ஸ்!

எல்லாருக்கும் டேங்க்ஸ்பா! ஒருத்தரும் டிப்ஸ் எங்கனு கேக்கலயே! பொழச்சேன்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

படிக்க டைம் கிடைக்கலை.. இப்போ ஒரு அட்டெண்டண்ஸ் போட்டுட்டு போறேன்.. பிறகு வர்றேன். :-)

Dubukku said...

அடி போடு சூப்பர்...:))) லெவல் காட்டியிருக்கீங்க...

//நீங்க டுபுக்கு ஃபேன் க்ளப்பா?//

அண்ணே பிரகாஷ் அண்ணே...ஏன்ணே..ஏன்ணே..:)

சென்ஷி said...

ஏற்கனவே உங்கள பத்தி டெல்லியில பேசுனோம்..

படிப்புக்காக உண்மையிலேயே நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியுது :)

இப்படியே எக்-ஜாம்-க்காக கடைசி வரைக்கும் கண்டினியு பன்-னுங்க.

சென்ஷி

காயத்ரி said...

அண்ணே பிரகாஷ் அண்ணே...ஏன்ணே..ஏன்ணே..:)//

தலைவருக்கு புகழ்ச்சியே பிடிக்காது பிரகாஷ் சார்! நீங்க கண்டுக்காதீங்க!


//ஏற்கனவே உங்கள பத்தி டெல்லியில பேசுனோம்//

என் புகழ் டெல்லி வரை பரவிடுச்சா? அடுத்த எலெக்ஷன்ல நிக்கலாமா சென்ஷி?!!

Divya said...

அட்டகாசம்!சூப்பர்!
ரொம்ப ரசிச்சு சிரித்தேன் காயத்ரி!

ஜமாலன் said...

//என்னது ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்தனானு கேக்கறிங்களா? அத வழக்கம் போல ஒரு கண்ணாடி போட்ட பொண்ணோ, பையனோ வாங்கிருப்பாங்க! அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர் நமக்கெதுக்குங்க?//

excellant

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

எக் எங்கன்னு தேடினேன்... ஜாம் நல்லா இருந்தது;-)))) எக் ஜலன்டு!!

//அடுத்தவங்க பர்ஸனல் மேட்டர்// ஐ விழுந்து விழுந்து சிரிச்சுப் படிச்சேன்!