என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.
உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு ககழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.
என் மனத்திருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.
என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?
வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?
அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?
ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?
ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?
என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.
ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!
3 comments:
முதல் பின்னூட்டம் நானே போட்டுர்றேன்! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் எனக்கு தலைல எதும் அடி படல! நான் நல்லாத்தான் இருக்கேன்!
சீரியஸா எழுதுறவங்களெல்லாம் தலையில அடிபட்டவங்களா காயத்ரி?:) நல்ல ஒரு கவிதையை வாசிக்கத் தந்துவிட்டு 'அச்சச்சோ அது ஒண்ணுமில்லை போங்க'என்கிற மாதிரி இருக்கிறது. நல்ல தெரிவு இந்தக் கவிதை.
//சீரியஸா எழுதுறவங்களெல்லாம் தலையில அடிபட்டவங்களா காயத்ரி?:)//
அச்சோ.. நான் உங்கள சொல்லல மேடம்! வழக்கமா எதாச்சும் மொக்க பதிவ எதிர்பார்த்து வர்ற நம்ம மக்கள்ஸ் தப்பா நினச்சுடக் கூடாதேன்னு தான்! :)
Post a Comment