Wednesday, May 16, 2007

நிசப்தத்தின் சப்தம்...





இப்போதெல்லாம் பதிவு எழுத பயமாயிருக்கிறது. ஆடை கிழிந்திருப்பதை அறியாமல் சபை ஏறிவிட்டதைப் போன்று குன்றிப் போகிறேன். தடம் புரண்ட கடலாய் தளும்பும் இதயம் வார்த்தைகளில் சிந்தி விடாதிருக்கத் தவிக்கிறேன். மூலம் மறந்து அந்தம் தவிர்த்து உயிர்த்த்லுக்கும் உதிர்தலுக்கும் இடையிலான முடிவற்ற வெளியில் வழி தவறி அலைகிறது என் சுயம். விருப்பங்கள் பாராமல், சம்மதம் கேளாமல் இயலாமையின் விரலிடுக்குகளில் வழிகிறது வாழ்க்கை. வார்த்தைகளின் பாரம் தாங்காமல் பிதுங்கித் தவிக்கும் கவிதை விடுபடலை நோக்கி யாசிக்கிறது என்னைப் போலவே. எது நிகழ்ந்த போதிலும் பாம்பின் சீறலாய்..உஷ்ணப் பெருமூச்சுக்களுடன் என்னிலிருந்து பிரியாமல் அருகே சுருண்டு படுத்திருக்கிறது என் தனிமை!

5 comments:

Anonymous said...

என்னங்க என்ன ஆச்சு...ஏன் இப்படி?

காயத்ரி சித்தார்த் said...

ஒண்ணும் இல்லங்க! சீரியஸா ஒரு பதிவு போடலாமேனு தோணுச்சு.. அவ்ளோ தான். நீங்க பயப்படாதீங்க!!

சென்ஷி said...

:)

நான்கூட பயந்துட்டேன்.
அய்யனாருக்கு இன்னொரு போட்டியான்னு...

சென்ஷி

தமிழ்நதி said...

நல்லா எழுதுறீங்க காயத்ரி. ஆனா, தனிமையை எழுத இன்னொருவர் வந்தாச்சு என்று சந்தோசப்பட முடியவில்லை. வாழ்க்கை விரலிடுக்கில் சொரியும் மணலாய்த்தானிருக்கிறது.

பங்காளி... said...

இதான் மொத தடவயா உங்க ஏரியாவுக்குள்ள வர்றேன்....கத்தி மாதிரி வார்த்தைய வீசிருக்கீங்க

நெறய எளுதுங்க தாயே...