Thursday, May 3, 2007

SMS

என்றாவது ஒருநாள் தோன்றும்
வால்நட்சத்திரம் போல
எப்போதாவது ஒரு முறை
உன்னிடமிருந்து
குறுந்தகவல் வந்திருப்பதாய்
என் அலைபேசி அழைக்கிறது.

புதையலைத் திறப்பவள் போல்
ஒவ்வொரு முறையும் பேராசையாய்த்
திறக்கிறேன்.

பெரிதாய் ஒன்றும் இல்லையென்றாலும்
பத்திரமாய் சேமித்து வைக்கிறேன்.

அதில்...
நீ என்னை
நினைத்த நிமிடம்
சிறைப்பட்டிருக்கிறது!

4 comments:

Ayyanar Viswanath said...

ம்..தலைப்பையும் மாத்துங்க..நிறைய எழுதுங்க

கதிரவன் said...

உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக்கவிதை. அருமை !!

பாரதி தம்பி said...

//நீ என்னை
நினைத்த நிமிடம்
சிறைப்பட்டிருக்கிறது!//

சூப்பர்..!

MSK / Saravana said...

""என்றாவது ஒருநாள் தோன்றும்
வால்நட்சத்திரம் போல
எப்போதாவது ஒரு முறை
உன்னிடமிருந்து
குறுந்தகவல் வந்திருப்பதாய்
என் அலைபேசி அழைக்கிறது.

புதையலைத் "திறப்பவன்" போல்
ஒவ்வொரு முறையும் பேராசையாய்த்
திறக்கிறேன்.

பெரிதாய் ஒன்றும் இல்லையென்றாலும்
பத்திரமாய் சேமித்து வைக்கிறேன்.

அதில்...
நீ என்னை
நினைத்த நிமிடம்
சிறைப்பட்டிருக்கிறது!"


எனக்கு இப்படியாகிறது..