Tuesday, September 18, 2007

பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?

தலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன்.

"பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா? அது வர்றத எப்பிடி தெரிஞ்சிக்கறது?"

ஏன் கேட்கறேன்னா... எனக்கு பேய், பிசாசுன்னா ரொம்ம்ம்ம்ப பயம்ங்க. நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டும்போது "ரெண்டுகண்ணன்" வர்றான்.. சீக்கிரம் சாப்பிட்ரு" ன்னு டி.டி.எஸ் எபக்ட்ல சொல்லி பயமுறுத்துவாங்க. நானும் ஏதோ பேயோ பிசாசோன்னு பயந்தடிச்சு மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன். ரொம்ப நாள் கழிச்சி திடீர்னு ஞானோதயம் (ஒளிவட்டம்?) வந்து கோபமா அம்மாட்ட போய் "ஏம்மா எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தானே இரூக்கு? அத சொல்லி பயமுறுத்தியிருக்கீங்க.. நானும் பயந்திருக்கேன்.. இது என்ன கொடுமை? இது நியாயமா அடுக்குமா" ன்னு நியாயம் கேட்டேன். அம்மா ரொம்ப சாவதானமா "எல்லாருக்கும் ரெண்டு கண்ணு தான்.. ஆனா உனக்குதான் ரெண்டுன்னா எத்தனைன்னு தெரியாதே" ன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிட்டாங்க.

இவங்க தான் இப்படின்னா, எங்க பாட்டி வீட்டுக்கு போகும்போது ஒரு சித்தி சாப்பாடு ஊட்டுவாங்க.. என்னை சாப்பிட வைக்க இன்னொரு சித்தி முழுசா கறுப்பு பெட்ஷீட் போர்த்திகிட்டு திடீர்னு எங்காச்சும் இருந்து "ஊஊஊஊ ஹா ஹ்ஹா" ன்னு கத்திகிட்டே குதிப்பாங்க. "பச்சப்புள்ள.. எப்படி பயப்படும்? இப்படியெல்லாம் பண்ணினா உள்ள இருக்கற இன்னொரு ஜான்சிராணி (ஹிஹி நாந்தான்!) வளராமயே போய்டுவாளே?" அப்படின்னெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படறதில்ல..

ஆனா நான் இதுக்கெல்லாம் அசரல.. வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை" ன்னு பட்டம் தரலாமான்னு கார்ப்பரேஷன்ல இருந்து செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வரை யோசிச்சாங்க.. நாந்தான் பெருந்தன்மையா "அதெல்லாம் வேணாம்.. 'பரம் வீர் சக்ரா' மட்டும் குடுத்துடுங்க போதும்" னு சொல்லி அவங்க ஆர்வத்தை தணிச்சிட்டேன்.

எலி மாதிரியே புலியையும் தூக்கற ஐடியா கூட இருந்துச்சு.. "அது எலி மாதிரி கிடையாது. உசிரோட இருந்தா கடிச்சிரும்.. செத்துப் போச்சின்னா ரொம்ப வெயிட்டா இருக்கும்" னு தகவல் தெரிஞ்சதால அந்த ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்.

சரி அது இருக்கட்டும், சொல்ல வந்ததயே மறந்துட்டேன் பாருங்க. அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன். முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு போய்டுவேன். அங்க எந்த வேலையும் செய்யத் தேவை இல்ல.. ஜாலியா இருக்கலாம்! சாப்பிட்டு வெளில கிளம்பினா எங்க வேணா ஊர் சுத்தலாம்.. அவ்ளோ சின்ன ஊர்ல எங்கயும் நான் தொலைஞ்சு போய்ட முடியாதுன்ற தைரியத்துல சாயந்திரம் வரைக்கும் தேட மாட்டாங்க.

அப்டி ஒரு நாள், என்கூட 3 வருஷம் ஒண்ணா படிச்ச ஃப்ரண்ட் மைதிலிய தேடிட்டு போனேன். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா "நண்பியே.. நண்ண்ண்பியே.. நன்றி சொல்வேன் நண்பியே" ன்னு பாடிகிட்டு ஊர் முழுக்க சுத்திட்டிருந்தோம். உச்சி வெயில்ல அலைஞ்சி களைச்சு ரொம்ப பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நடக்கவே முடில. அப்பதான் அந்தப்பக்கமா ஒரு கோவில் கண்ல பட்டுச்சு..

"ஹேய் மைத்தி.. அங்க போனா எதுனா பிரசாதம் தருவாங்க.. அட்லீஸ்ட் சுண்டலாச்சும் தருவாங்க. சாப்டு தெம்பா வீட்டுக்கு போய்டலாம்" னு நான்
சொன்னேன். என் அறிவோட 'தீட்சண்யத்தைப்' பாத்து ஆனந்தத்துல அவளுக்கு கண்ணே கலங்கிடுச்சி.. சிவாஜி கணேசன் மாதிரி குரல் தழுதழுக்க "நீ இன்னும் மாறவே இல்லயாம்மா? மாறவே இல்லியா?" னு ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா ஆய்ட்டா!

சரின்னு ரெண்டு பேரும் கோவிலுக்கு போனோம். கோவில் முன்னால பெரிசா ரெண்டு அரச மரம், வேப்ப மரமெல்லாம் இருந்திச்சு.. அதில நிறைய ஆணி வேற அடிச்சு வெச்சுருக்காங்க.. ஆணி அடிக்க வேற இடமா இல்ல? இந்த லூசுப் பயப்புள்ளகளுக்கு ன்னு யோச்சிட்டே உள்ள போனா ரெண்டு க்யூ நின்னுச்சு. ஒரு க்யூவுல நிறைய கூட்டம்.. இன்னொன்னுல ஒரு 5 பேரு நின்னாங்க. சின்னக் க்யூவுல நின்னா சீக்கிரம் பிரசாதம் வாங்கிக்கலாம்னு
ரெண்டு பேரும் அடிச்சி பிடிச்சி ஓடிப்போய் நின்னோம்.

க்யூவுல எனக்கு முன்னால செவப்பு தாவணி போட்டுகிட்டு அழகா ஒரு பொண்ணு (அக்கா!) நின்னுகிட்டிருந்திச்சு. தல மட்டும் ரொம்ப கலைஞ்சிருந்துச்சு. அந்தக்கா திரும்பி எங்கள பாத்து ரொம்ப சினேகமா சிரிச்சிது. நானும் "ச்சே.. கிராமம்னா கிராமம் தான்..என்னா எளிமையான மனுஷங்க" ன்னு சந்தோசப்பட்டுகிட்டே பதிலுக்கு சிரிச்சி வெச்சேன். உடனே அந்தக்கா திரும்பி.. என்கிட்ட பேச ஆரம்பிச்சிடுச்சு.

"உன் பேரு என்ன?"

"பி.காயத்ரி... இவ எல். மைதிலி"

" எத்தனாவது படிக்கறே?

"8த் ஸ்டேண்டர்ட் பி"

"ஓ.. எந்தூரு நீங்க?"

"இவ இங்க பக்கத்துல தான் இருக்கா.. நான் ஈரோட்ல இருந்து லீவுக்கு வந்திருக்கேன், உங்களுக்கு தெரியாதா என்னய? திருச்செங்கோட்டார் வீட்டு மொதப் பேத்தி"

என்னமோ நாட்டாமை பொண்ணே நாந்தான்ற மாதிரி நான் கேக்கறேன்.. அது சுரத்தே இல்லாம..

"ஓஹோ.." அப்படின்னுச்சு.

இந்த ஊர்ல நமக்கு பப்ளிசிட்டி போதல போலிருக்கேன்னு நான் ஃபீல் பண்ணிட்டிருக்கும் போதே,

"ஈரோட்ல எங்க இருக்கீங்க?" ன்னு கேட்டுச்சு!

நான் ரொம்ப குஷியாகி..

"ஹை ஈரோடு வந்திருக்கீங்களா நீங்க? அங்க காரைவாய்க்கால் பக்கத்துல தான் குடியிருக்கோம், ராதாகிருஷ்ணன் வீதி, ஏழாம் நம்பர் வீடு,
பச்ச பெயிண்ட் அடிச்சிருக்கும், வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"

ன்னு லேண்ட் மார்க்கெல்லாம் சொல்லி அட்ரெஸ் சொல்லிட்ருக்கும் போது எங்க க்யூவுல இருந்தவங்க எல்லாம் முன்னால போய் ஒரு மண்டபத்துல
வரிசையா தரைல உக்காந்துகிட்டாங்க. நாங்களும் பின்னாடியே போனோம். நான் ரொம்ப பிரியமா செவப்பு தாவணி அக்கா பக்கத்துல உக்காந்துகிட்டேன்.
ஒரு அம்மா வந்து எல்லாருக்கும் ஒரு தட்டும் எலுமிச்சம் பழமும் குடுத்திட்டு போனாங்க.

"ஆஹா இம்புட்டு நல்லவங்களா இவிங்க? பூஜை பண்றதுக்கு முன்னாடியே பிரசாதம் தர்றாங்களே? அதும் தட்டுல போடுவாய்ங்க போலிருக்கு.. ஆமா என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது கூட இருக்கறவங்க எல்லாம் தட்டுல எலுமிச்சம்பழத்தை வெச்சு தட்டத் தூக்கி தலை மேல வெச்சிகிட்டாங்க. எங்களுக்கு ஒரு எழவும் புரியல.. இப்படி பண்ணினா தான் சாப்பாடு போடுவாங்க போலன்னு நாங்களும் தட்டத் தூக்கி தலைல வெச்சிட்டு 'தேமே' ன்னு உக்காந்திருந்தோம்.

அப்புறம் ஒரு தட்டு பூரா விபூதிய எடுத்துகிட்டு, கைல வேப்பிலை வெச்சிகிட்டு ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒரு பூசாரி வந்தார். வந்தவரு
என் பக்கத்துல தட்ட கீழ வெச்சிட்டு கைல உடுக்கை எடுத்துகிட்டு திடீர்னு சத்தமா " ஏய்ய்ய்ய் கருப்புசாமி முனுசாமி.." ன்னு வரிசையா சாமி பேர்
சொல்லி "வந்துடு வந்துடு" ன்னு ஆடிகிட்டே பாட ஆரம்பிச்சிட்டார். திடீர்னு உடுக்கை அடிச்சதுல மைதிலி 'விருக்'னு பயந்துட்டா. அவ தலைல
இருந்த தட்டு 'டமால்' னு கீழ விழுந்துடுச்சு. நானும் பயத்துல தான் இருந்தேன்னாலும் அவ மூஞ்சிய பாத்து "ஹெஹ்ஹே" ன்னு சத்தமா சிரிச்சிட்டேன்.

உடனே பூசாரி உடுக்கை அடிக்கறத நிறுத்திட்டு என் பக்கத்துல வந்து என் கண்ணை உத்த்த்த்துப் பாத்து.. "யாரு நீ? சொல்லு யாரு நீ" ன்றாரு.
நான் நொந்து போய்ட்டேன். "யோவ்.. என்ன பயோடேட்டா சொன்னா தான் பிரசாதம் தருவீங்களா?" ன்னு உள்ளார கொந்தளிக்கறேன்... ஆனா வாய்ல இருந்து வார்த்தையே வரல.

நான் பேசலன்னதும் அவரு இன்னும் சத்தமா உடுக்கை அடிச்சிட்டு நாராசமா பாட ஆரம்பிச்சிட்டாரு. அப்ப தான்.. பக்கத்துல "ஹ்ஹ்ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்ம்" னு
யாரோ உறுமற மாதிரி சத்தம். திரும்பிப்பாத்தா செவப்பு தாவணி அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ப கோபமா பூசாரிய பாத்து மொறச்சிட்டிருக்கு. பூசாரி உடனே
என்னை விட்டு அக்கா பக்கத்துல ஷிப்ட் ஆகி.. "யேய்.. யாரு நீ? சொல்லு யாரு நீ?" ன்றாரு. (இந்தாளுக்கு வேற வேலயே இல்லியா?)

உடனே அந்தக்கா.. " நானா?.. நாஆஆனா?" ன்னு கத்திட்டு முன்னயும் பின்னயுமா சாமியாடுச்சு. அப்புறம் "நானு செல்வராசு.. மேலத்தெரு செல்வராசு" ன்னு ஆம்பளக் குரல்ல அட்ரெஸ் சொல்லுது.. யம்மே! எனக்கு கொல நடுங்கிடுச்சு.

அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? இந்த புள்ளய எங்க வெச்சி புடிச்சே" ன்னு டீடெய்லா விசாரிக்க, அதுவும்
"நானு புளியமரத்தாண்ட இருந்தேன்.. இந்த புள்ள உச்சில கறிக்கொழம்பு கொண்டு போச்சி.. ஏறிகிட்டேன்" ன்னு பொறுப்பா பதில் சொல்லுது.

அடுத்தாப்பல "சரி.. நீ போய்டனும்.. என்ன வாங்கிட்டு போறேன்னு சொல்லு? நாட்டுக்கோழியும் நாலுகட்டு பீடியும் போதுமா?" ன்னு டீலிங் பேசறாரு
பூசாரி. அது "இல்ல.. சாராயம் குடு.. சாராயம் குடு" ன்னு கத்துது.

நான் வெலவெலத்து திரும்பிப் பாத்தா மைதிலிய ஆளயே காணோம்.. பாவி.. எப்ப எஸ்கேப் ஆனான்னு தெரியல.. எனக்குள்ள இருந்த ஜான்சிராணியும்
பர்மனெண்டா லீவ் போட்டுட்டு போய்ட்டா. அவ்ளோ தான்.. நானும் 'கபால்'னு கிளம்பி கண்ணு மண்ணு தெரியாம ஓடறேன். பின்னாடியே யாரோ துரத்தறாப்பல வேற இருக்கேன்னு பயந்து நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "ஏய் நில்லுடி, நில்லுடி" ன்னு அந்த துரோகி மைதிலியோட குரல் கேட்டுச்சு. கோவில் பக்கத்துல ஒளிஞ்சிருந்து நான் ஓடும் போது அவ தான் பின்னால ஓடி வந்தாளாம். நாசமா போக..

வீட்டுக்கு வந்தும் நான் யார்கிட்டயும் எதும் மூச்சு விடல. அடுத்த நாளே "ச்சே... கிராமம் ரொம்ப போர் அடிக்குது" ன்னு பந்தா பண்ணிகிட்டு
ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து, "ஆத்தி அவ்ளோ நேரம் பேய்கிட்டயா பேசிட்டிருந்தோம்? அட்ரஸ் எல்லாம் சொன்னமே? முருங்கை மரம் இருக்குன்னு வேற சொல்லிட்டோமே? ரொம்ம்ப முக்கியமா இதெல்லாம்? அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்துடுமோ" ன்னு ராத்திரி பகலா ஷிப்ட் போட்டு பயப்பட்டுகிட்டே இருந்தேன்.

ரெண்டு நாள் கழிச்சு அக்கம் பக்கத்து ஃப்ரண்ட்ஸ்கிட்ட இந்த பிரச்சினை பத்தி சொல்லி டிஸ்கஸ் பண்ணினேன். உடனே எல்லாரும் "பேய்க்கு வெள்ளைப் பூண்டுன்னா பயம்.. இல்லல்ல.. வெங்காயம்னா தான் பயம்" னு ஆளாளுக்கு பேயறிவுத் தகவல்களா சொன்னாங்க.

நான் ரொம்ப குழம்பிப் போய்.. எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்ச நாள் ஸ்கூல் பேக்ல வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..

அப்புறம் ஜான்சிராணி மறுபடி லீவ் முடிஞ்சி வந்துட்டதாலயும் நாங்க புதுசா குடி மாறுன வீட்டோட அட்ரெஸ் மிஸ்டர். செல்வராசுக்கு
தெரியாதுன்ற தைரியத்துலயும் அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்!

......ரமேஷ் அண்ணாவிற்கு

223 comments:

1 – 200 of 223   Newer›   Newest»
குசும்பன் said...

"நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப "

இப்பயும் அதுமாதிரியே தானம்மா இருக்க...

குசும்பன் said...

"'பரம் வீர் சக்ரா' " டீ என்கிற ஒரு எழுத்து மிஸ்ஸிங்!!!

குசும்பன் said...

"அப்ப நான் 8 த் படிச்சிட்டிருந்தேன்."

இப்பவரைக்கும் அதுதான் படிச்சிருக்கேன் என்கிற உண்மைய மறச்சுட்டீங்களே ஆன்டி

குசும்பன் said...

"பக்கத்துல உக்காந்துகிட்டேன்.
ஒரு அம்மா வந்து எல்லாருக்கும் ஒரு தட்டும் எலுமிச்சம் பழமும் குடுத்திட்டு போனாங்க."

இன்னொரு ஊர் ஒன்னு இருக்கு வரிசையா உட்கார வச்சு கையில் தேங்கா கொடுப்பாங்க, அங்க போங்க.:))
(அத மண்டையில் அடிச்சு உடைப்பாங்க அத யாரும் ஆன்டிக்கிட்ட சொல்ல வேண்டாம்:))

குசும்பன் said...

"அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? "

அய்யனார் கவிதையையும் , உங்க கவிதையையும் சேர்த்து ஒரே நேரத்தில் படிச்சி இருப்பாரு...

குசும்பன் said...

"ஆணி அடிக்க வேற இடமா இல்ல? "
ஆமாம் அப்பயே ஒரு ஆணிய உங்க மண்டையில் அடுச்சு இருந்தா, இந்த சோதனை எங்களுக்கு வந்திருக்காது:(((

குசும்பன் said...

"சரி அது இருக்கட்டும், சொல்ல வந்ததயே மறந்துட்டேன் பாருங்க."

முருகா ஆண்டவா புள்ளையாரப்பா இதே போல் எழுத நினைக்கும் கவிதையும் மறந்துபோக

nagoreismail said...

சரியான சிரிப்பு, சூரியன் படத்தில் கவுண்டமணி பூ மிதிக்க போவாங்க, அத மாதிரி இருந்தது - நட்சத்திரத்தை அடையாளம் கண்டு கொண்ட தமிழ்மண குழந்தைக்கு வாழ்த்துக்கள்- நாகூர் இஸ்மாயில்

குசும்பன் said...

"அப்டி ஒரு நாள், என்கூட 3 வருஷம் ஒண்ணா படிச்ச ஃப்ரண்ட் மைதிலிய தேடிட்டு போனேன்."

எந்த கிளாஸ் 3 வருசம் படிச்சிங்க? ரெண்டுபேரும்...

Anonymous said...

//வீட்டுக்கு முன்னால முருங்கை மரம் ஒன்னு இருக்கும் அதான் அடையாளம்,"//
வீட்டுக்குப்பின்னாடி தானே முருங்கை மரம் வைப்பாங்க. இப்ப யாரு பேய்னு எனக்கு சந்தேகமாருக்கு.

Anonymous said...

குசும்பர் அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டாரு போல இருக்கே

குசும்பன் said...

8.7.2007 அன்னைக்கு காலையில் போன் போட்டு பேசியதாக நினைவு...

இராம்/Raam said...

//"பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?"//

அதுக்கூட அடிக்கடி போனிலே பேசிருக்கேன்.... ஆனா அதுதான் பேசுற எல்லாரையும் பிசாசு'ன்னு திட்டும்.... ;-)

குசும்பன் said...

சின்ன அம்மிணி said...
குசும்பர் அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டாரு போல இருக்கே??

அனானி ஆப்பசன் இல்ல அம்மிணி இல்ல வெளுத்து வாங்கி இருக்கலாம்:(((((

Anonymous said...

குசும்பர் உங்க பேய்க்கதைக்கும் ஏதாவது விளக்கப்பதிவு போடுவாரா??

குசும்பன் said...

"முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு போய்டுவேன். "

உங்க பாட்டிக்கு லீவ் விட்டா நீங்க ஏன் அங்க போகனும்????

Anonymous said...

தங்கச்சி காயத்ரி. குசும்பருக்கு அனானி ஆப்சன் இல்லாம கையொடிஞ்ச மாதிரி இருக்காம்.

குசும்பன் said...

"நான் ரொம்ப குஷியாகி.."

டக்சசுக்கு டக்க ஜும் டக்கசுக்கு டக்க ஜும் என்று குஷி பாட்டு பாட வேண்டியதுதானே!!!

குசும்பன் said...

"பேயோ பிசாசோன்னு பயந்தடிச்சு மந்திரம் கேட்ட அலிபாபா குகை மாதிரி வாய திறந்து வேக வேகமா சாப்பிட்ருவேன். "

இல்லேன்னா மட்டும் ஸ்லோவா சாப்பிட்டு விடுவீங்களாக்கும்...இத நாங்க நம்பனும்.

குசும்பன் said...

"நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "

அஞ்சு ஜார்ஜும் ஓடாது நாலு ஜார்ஜும் ஓடாது ....

சைனி குட்டிதான் ஓடும்... அஞ்சு ஜார்ஜ் தாண்டும்...:)))

குசும்பன் said...

மேலே இருக்கும் அனைத்து கமெண்டுகளும் என் பெயரில் செல்வராசு வந்து போட்டு இருக்கிறார் என்பதை இங்க சொல்லிக்கிறேன்..

அபிட்..:)))

ramachandranusha(உஷா) said...

:-)))))))))))))))

குசும்பன் said...

"என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது "

என்னத்துக்குன்னு தெரியாதா? அத அப்படியே ரெண்டா வெட்டி நல்லா உச்சந்தலையில் வெச்சு சவ சவ.... சவ சவன்னு தேச்சு குளிக்கதான்( இப்படிதான் செந்தில் செல்வார் ஒரு படத்தில்)

maruthamooran said...

அக்கோவ் காயத்திரி,
என்னங்க பேயோட இப்படியெல்லாம் பேசியிருக்கிறீங்க…
எப்படீங்க உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது….
நட்சத்திரமாக தொடர்ந்து பிரகாசியுங்கள். வாழ்த்துக்கள்…

குசும்பன் said...

சின்ன அம்மிணி said...

தங்கச்சி காயத்ரி. குசும்பருக்கு அனானி ஆப்சன் இல்லாம கையொடிஞ்ச மாதிரி இருக்காம்."

ஆமாங்க செல்வராசக, சிகப்பு கலர் தாவணி பெண்ணாக எல்லாம் வர முடியவில்லை:)) என் பேர்லேயே வர வேண்டி இருக்கு....

இப்படி இருந்த நல்லாவா? இருக்கு பின்னூட்டம் படிக்கிறவுங்களுக்கு ஒரு வெரைட்டி வேண்டாம்?:))))

காயத்ரி சித்தார்த் said...

பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு "உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு" ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா.. :(

காயத்ரி சித்தார்த் said...

இராம் @

//அதுக்கூட அடிக்கடி போனிலே பேசிருக்கேன்.... ஆனா அதுதான் பேசுற எல்லாரையும் பிசாசு'ன்னு திட்டும்.... ;-)
//

ஹ்ம்ம்.. பிசாசு!

காயத்ரி சித்தார்த் said...

சின்ன அம்மிணி..

//குசும்பர் உங்க பேய்க்கதைக்கும் ஏதாவது விளக்கப்பதிவு போடுவாரா??
//


ஐய்யோ இன்னமுமா?

காயத்ரி சித்தார்த் said...

இஸ்மாயில், மருதமூரான் நன்றி!

குசும்பன் said...

காயத்ரி said...
இராம் @

//அதுக்கூட அடிக்கடி போனிலே பேசிருக்கேன்.... ஆனா அதுதான் பேசுற எல்லாரையும் பிசாசு'ன்னு திட்டும்.... ;-)
//

"ஹ்ம்ம். பிசாசு!"

இது என்னா "ஹ்ம்ம்" பிசாசுக்கு இன்ஸியலா?

குசும்பன் said...

காயத்ரி said...
பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு "உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு" ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா.. :(

நல்லா இருப்பேங்க பெரியவங்க ஆசிர்வாதம்!!!

காயத்ரி சித்தார்த் said...

//இது என்னா "ஹ்ம்ம்" பிசாசுக்கு இன்ஸியலா?
//

இல்ல.. அது பெருமூச்சு.. பிசாசோட இன்சியல் "ஏ" :)

குசும்பன் said...

காயத்ரி said...

இஸ்மாயில், மருதமூரான் நன்றி!"

ஒரெ ஒரு கமெண்ட் போட்ட அவுங்களுக்கு நன்றி, அப்ப எங்களுக்கு கிடையாதா? இத கேட்க யாருமே இல்லையா?

மங்களூர் சிவா said...

@குசும்பன்
//
"நான் அஞ்சு ஜார்ஜ் கணக்கா ஓடும்போது "

அஞ்சு ஜார்ஜும் ஓடாது நாலு ஜார்ஜும் ஓடாது ....

சைனி குட்டிதான் ஓடும்... அஞ்சு ஜார்ஜ் தாண்டும்...:)))

//

அடிச்சு ஆடினாலும் பாயிண்ட் கரிக்டா புடிக்கிரியேப்பா.

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

//
தங்கச்சி காயத்ரி. குசும்பருக்கு அனானி ஆப்சன் இல்லாம கையொடிஞ்ச மாதிரி இருக்காம்."

ஆமாங்க செல்வராசக, சிகப்பு கலர் தாவணி பெண்ணாக எல்லாம் வர முடியவில்லை:)) என் பேர்லேயே வர வேண்டி இருக்கு....

இப்படி இருந்த நல்லாவா? இருக்கு பின்னூட்டம் படிக்கிறவுங்களுக்கு ஒரு வெரைட்டி வேண்டாம்?:))))
//

அனானி ஆப்சன் குடுத்திருந்தால் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

எல்லாத்தயும் குசும்பன் சொல்லிட்டதுனால நான் என்னத்த சொல்ல??

தப்பித்து ஓட விட்ட பூசாரிக்கு பேய் பிடிக்க

கிர்ர்ர்ர்ர்ர்

மங்களூர் சிவா

Unknown said...

thank you gayatri
superb post
i enjoyed a lot
oru sirukathai padiththa unarvu
excellant writing

மங்களூர் சிவா said...

//
பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு "உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு" ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா.. :(
//

உண்மைய சொன்னா இன்சல்ட்னு தப்பா புரிஞ்சிகிட்டா எப்படி???

மங்களூர் சிவா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்னங்க காயத்ரி,குசும்பன் இப்படி வாண்டுப் பசங்க டயர் வண்டி ஓட்டுர கணக்குல ஓஓஓஓஓஓட்டுராரு????????

நாகை சிவா said...

//ஒரெ ஒரு கமெண்ட் போட்ட அவுங்களுக்கு நன்றி, அப்ப எங்களுக்கு கிடையாதா? இத கேட்க யாருமே இல்லையா?//

நான் இருக்கேண்ணா... கமெண்ட் எல்லாம் அருமை.....

அடிச்சு ஆடுங்க...

நிலா said...

தப்பு பண்ணீட்டீங்க காயத்ரி தப்பு பண்ணீட்டீங்க. கொஞ்சம் பொறுமையா இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்திரிந்தா அந்த பூசாரி அன்னிக்கே பேய ஓட்டிருப்பாரு

ஹ்ம்ம் இப்போ இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது. மறுபடியும் எப்போ அந்த பூசாரிய தேடி போயி மறுபடியும் பேய ஓட்ரது?

(தெரியாமத்தான் கேக்கரேன். என்ன மாதிரி குட்டி பாப்பாலாம் உங்கள வேற எப்டி கூப்பிடுவாங்க)

காயத்ரி சித்தார்த் said...

மங்களூர் சிவா நீங்களும் கூட்டணி சேர்ந்தாச்சா? குசும்பா நீ போட்ட கமெண்ட்ஸ்க்கு உனக்கு நன்றின்னு சொன்னா பத்தாது.. நன்றியறிவிப்பு கூட்டமே நடத்தனும். இந்தியா வரும்போது சொல்லு ஏற்பாடு பண்ணிடலாம்..

நாகை சிவா நீங்களுமா? (அவ்வ்வ்)

எனக்கு ஆதரவா குரல் குடுக்க யாருமே இல்லியா? :(

அறிவன் நீங்களாச்சும் என்னான்னு கேளுங்க இவிங்கள..

காயத்ரி சித்தார்த் said...

//ஹ்ம்ம் இப்போ இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது. மறுபடியும் எப்போ அந்த பூசாரிய தேடி போயி மறுபடியும் பேய ஓட்ரது?
//

அடிங்க! பாப்பா நீயி ஓவரா வாய் பேசறே.. ரெண்டுகண்ணன் கிட்ட புடிச்சு குடுக்கறேன் இரு.. :)

Unknown said...

ஏனுங்க காயத்திரி நம்மூருலே,நாட்றாயன் கோவில்னு ஒன்னு இருக்கு. நேரங்கெடைச்சா ஒரு தடவை போயிப்பாத்துட்டு வாங்க. நிறையப் பேய்களைப் பார்க்கலாம்.

பாரதி தம்பி said...

அது எப்படிங்க காயத்ரி.. காலையில 10 மணிக்கு பதிவைப் போட்டா பன்னிரண்டு மணிக்குள்ள 40, 50 கமெண்ட்ஸ் போட்டுர்றாங்க.. ஒரு பின்னூட்டப் போர்ப்படையே வச்சிருப்பீங்க போல..?

(நிஜமாவே உங்களோட சட்டையர் ரைட் அப் ஜோரா இருக்கு. வலிஞ்சு எழுதாம இயல்பா இருக்குறதால, படக்குன்னு சிரிப்பு வருது.

இதுல அந்த சேப்புத் தாவணியை விட்டுட்டு, சாமியாடி 'நீ யார்ன்னு கேக்கும்போது, 'பி.காயத்ரி, எய்ட்த் ஸ்டாண்டர்டு பி..' அப்படின்னு பதில் சொல்றமாதிரியிருந்தா பிரமாதமான சினிமா ஸ்கிரிப்ட்..)

மங்களூர் சிவா said...

//மங்களூர் சிவா நீங்களும் கூட்டணி சேர்ந்தாச்சா? //

நேத்துலருந்து புல் பார்ம்ல இருக்கேன் அதுனாலதான் எதிர் கவுஜ. இந்த வாரம் புல்லா இப்டிதான்.

ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் சொல்லிகிட்டிருந்தா எப்படி நாளைக்கு எதாவது நாலு வரி கவிஜ போட்டு ஏமாத்தபிடாது.

//எனக்கு ஆதரவா குரல் குடுக்க யாருமே இல்லியா? :(
//

ஒவ்வொரு கமெண்டும் கொடுக்கப்படும் ஆதரவு தான். (யாருய்யா அது ஆப்புன்னு சத்தமா சொல்றது)

மங்களூர் சிவா

குசும்பன் said...

நாகை சிவா said...
"நான் இருக்கேண்ணா... கமெண்ட் எல்லாம் அருமை....."

அடிச்சு ஆடுங்க...

நன்றி புலி நீங்க எல்லாம் இருக்குறீங்க தைரியத்தில்தான் அடுச்சு ஆடுகிறேன்.:)))

குசும்பன் said...

"அனானி ஆப்சன் குடுத்திருந்தால் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

மங்களூர் சிவா"

ஆமாம் சிவா, நம் உணர்வுகளை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க!!!:(((

குசும்பன் said...

"சைனி குட்டிதான் ஓடும்... அஞ்சு ஜார்ஜ் தாண்டும்...:)))

//

அடிச்சு ஆடினாலும் பாயிண்ட் கரிக்டா புடிக்கிரியேப்பா.

மங்களூர் சிவா"

தொழில் சுத்தம் வேணும்ல்ல!!! :))

குசும்பன் said...

நிலா said...
"(தெரியாமத்தான் கேக்கரேன். என்ன மாதிரி குட்டி பாப்பாலாம் உங்கள வேற எப்டி கூப்பிடுவாங்க)"

நிலா தெரிஞ்சும் கேட்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை...இங்க பாரு அண்ணன் சொல்வது எங்க திருப்பி சொல்லு பார்கலாம்..

பா

நிலா: பா

மீ: ட்

நிலா: ட்

மீ: டி

நிலா:டி

மீ: பாட்டி

நிலா: பாட்டி..

ம்ம்ம் அப்படிதான் இதயே திருப்பி 50 முறை தவறு இல்லாம திரும்ப திரும்ப சொல்லி பார்கனும் சரியா..

போய் சமத்தா அங்க அங்க பின்னூட்டம் இடு பார்கலாம்..:)

குசும்பன் said...

"எனக்கு ஆதரவா குரல் குடுக்க யாருமே இல்லியா? :( "

குரல் கொடுப்பவன் said:

கூஊஊஊஊஊஊஊஊஊ

டப்பிங் ஆர்டிஸ்ட் said:

குக்க்கூ குக்க்கூ

வேற எப்படி குரல் கொடுக்கனும்???

(அனானி ஆப்ஸன் இல்லை அதனால் எப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு?):(

குசும்பன் said...

"அறிவன் நீங்களாச்சும் என்னான்னு கேளுங்க இவிங்கள.."

அறிவன் Asked (இங்கு அறிவன் said என்று வராது வந்தால் இலக்கண பிழை)

என்னா?

(கேட்டுவிட்டேன் கவிதாயினி)

ஜே கே | J K said...

//குசும்பன் said...

இல்லேன்னா மட்டும் ஸ்லோவா சாப்பிட்டு விடுவீங்களாக்கும்...இத நாங்க நம்பனும்.//

அவங்களுக்கு நல்லா, டீ குடிக்கவும், பிஸ்கட் சாப்பிடவும் தெரியும்.

நிலா said...

பா

ட்

டி

பாட்டி

ஹையா சரியா சொல்லிட்டேனே

சொல்லிகொடுத்ததுக்கு தாக்ஸ் குசும்பன் தாத்தா.

குசும்பன் தாத்தா இன்னும் நிறய குசும்பு சொல்லி கொடுங்க தாத்தா.

குசும்பன் said...

"ஆழியூரான். said...
அது எப்படிங்க காயத்ரி.. காலையில 10 மணிக்கு பதிவைப் போட்டா பன்னிரண்டு மணிக்குள்ள 40, 50 கமெண்ட்ஸ் போட்டுர்றாங்க.. ஒரு பின்னூட்டப் போர்ப்படையே வச்சிருப்பீங்க போல..?"

ஆழியூரான் இது எனக்கு கிரேட் இன்ஸல்ட், என்னது 40 கமெண்டுக்கு இரண்டு மணி நேரமா?

10.15க்குள்ள 40 தாண்டிட்டு.

எத்தனை நாள் கொலவெறி தெரியுமா? எங்க கைகலை கும்மி அடிக்க கூடாது என்று 144 போட்டு விட்டாங்க.. அதான் இப்ப பழி தீர்த்துக்குறோம்.

நிலா said...

தாமோதர் சந்துரு மாமா, நாட்ராயன் எங்க கொலசாமி. சாமி உங்க கண்ண குத்திருவாரு ஜாக்கிரதை :)

குசும்பன் said...

"சொல்லிகொடுத்ததுக்கு தாக்ஸ் குசும்பன் தாத்தா."

என்ன கொடுமைங்க இது நான் சொல்லி கொடுத்தா எனக்கு நன்றி சொல்லாம என் தாத்தாவுக்க நன்றியா:(

குசும்பன் தாத்தா said

ப் பொவ் வ் கா பா

(தாத்தாவுக்கு பல் இல்லையா அதான் இப்படி சொல்கிறார்)

குசும்பன் said...

தாயத்து விற்பவன் said

ஜெய் ஜக்கம்மா நீங்க இந்த தாயத்த கட்டிக்கிட்டா பயப்படாம நடுராத்திர் சுடுகாட்டுக்கு போகலாம்....

வடிவேலு said
நான் ஏன் டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக போறேன்...
நான் பகல்லேயே கவிதாயின் வீட்ட கிராஸ் செய்யமாட்டேன்.

குசும்பன் said...

" "பேய்க்கு வெள்ளைப் பூண்டுன்னா பயம்.. இல்லல்ல.. வெங்காயம்னா தான் பயம்"


நிஜமா சொல்லவேண்டும் என்றால்
பேய்க்கு உடைந்த பல்லு என்றால் பயம் , வேண்டும் என்றால் சிபி பல்லை ரொண்டு மூனு உடைச்சு வச்சுக்கவும்...

இராம்/Raam said...

/"'பரம் வீர் சக்ரா' " டீ என்கிற ஒரு எழுத்து மிஸ்ஸிங்!!!///


குசும்பா பின்னுறீயே!! :)

/"அப்றம் பூசாரி பாட்டுக்கு ரொம்ப சகஜமா.. "எப்ப செத்தே? எப்பிடி செத்தே? "

அய்யனார் கவிதையையும் , உங்க கவிதையையும் சேர்த்து ஒரே நேரத்தில் படிச்சி இருப்பாரு...//

இதே படிச்சி சத்தம் போட்டு சிரிச்சி பக்கத்திலே இருந்த இந்திகாரன் எதாவது ஒனக்கு பேய்'கீயி பிடிச்சிருச்சான்னு கேட்கிறான்.. :)

குசும்பன் said...

ஆழியூரான். said...
"இதுல அந்த சேப்புத் தாவணியை விட்டுட்டு"

அந்த சிவப்புத் தாவணிய விட்டு விட்டா சென்ஸார் போர்டில் கட் செஞ்சுடுவாங்க ஆழியூரான் :)

இராம்/Raam said...

//"என்னத்துக்கு எலுமிச்சம் பழம்?" ன்னு நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கும் போது "

என்னத்துக்குன்னு தெரியாதா? அத அப்படியே ரெண்டா வெட்டி நல்லா உச்சந்தலையில் வெச்சு சவ சவ.... சவ சவன்னு தேச்சு குளிக்கதான்( இப்படிதான் செந்தில் செல்வார் ஒரு படத்தில்)///


அல்டிமேட் டைமிங் காமெடி... :)

கையேடு said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.. கலக்குங்க..

குசும்பன் said...

"இதே படிச்சி சத்தம் போட்டு சிரிச்சி பக்கத்திலே இருந்த இந்திகாரன் எதாவது ஒனக்கு பேய்'கீயி பிடிச்சிருச்சான்னு கேட்கிறான்.. :)"

எல்லோரும் சிரிக்கனும் அதுதான் நம்ம கொள்கை, நன்றி ராம் :)))

குசும்பன் said...

வாங்க தல உங்க பங்குக்கு ஏதும் சொல்லுங்க...

தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்:(
அப்புறம் சாப்பிட்டீங்களா? வீட்டுல எல்லோரும் சுகமா?

இராம்/Raam said...

//தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்:(
அப்புறம் சாப்பிட்டீங்களா? வீட்டுல எல்லோரும் சுகமா?//

இன்னும் சாப்பிடலை... :(

வீட்டுலே எல்லாரும் நலமே... விசாரிச்சதுக்கு மிக்க நன்றி....

குசும்பன் said...

"குசும்பன் said...
அந்த சிவப்புத் தாவணிய விட்டு விட்டா சென்ஸார் போர்டில் கட் செஞ்சுடுவாங்க ஆழியூரான் :)"

டெய்லர் said

பரவாயில்லை சென்ஸார் போர்ட் கட் செஞ்சா அத ஜாக்கெட்டா தைத்து தாரே!!!

(என்ன கொடுமைங்க இது என் கமெண்டுக்கு நானே இப்படி போட வேண்டி இருக்கு இத கேட்க யாருமே இல்லையா?)

நிலா said...

தாத்தா தனியாவா ஆடரிங்க? தப்பாச்சே. எதாச்சும் பூசாரி வேப்பிலைய அடிக்கனும் நீங்க ஆடனும் அதாம் முறை. எதாச்சும் டவுட்டுன்னா காயத்ரி ஆன்ட்டிகிட்ட கேட்டுக்கோங்க.

குசும்பன் said...

நிலா said...
" பூசாரி வேப்பிலைய அடிக்கனும் நீங்க ஆடனும் அதாம் முறை. "

பூசாரி said

ஞான் வேப்பில்லை அடிக்காது ஞார் சுருட்டுதான் அடிக்கும்:))

மங்களூர் சிவா said...

@நிலா
//தாத்தா தனியாவா ஆடரிங்க? தப்பாச்சே. எதாச்சும் பூசாரி வேப்பிலைய அடிக்கனும் நீங்க ஆடனும் அதாம் முறை. எதாச்சும் டவுட்டுன்னா காயத்ரி ஆன்ட்டிகிட்ட கேட்டுக்கோங்க//

என்ன பாட்டி திரும்ப ஆன்டி ஆயிட்டாங்க

குசும்பன் சொல்லிகுடுத்ததை மறக்கப்பிடாது.

மங்களூர் சிவா

kulo said...

appuram neenga yaanaya thookki iduppula vachchukaradu otagaththu mela eari ottadai adikkaradu nalla(?)paambai eduththu kattikiradu idellaam kooda seiveengale maranduttengala(enna idellaam seththirakkanum avvalavudaan) pei paththi vaariyaar ippadi sonnada suki sivam sonnaar:

pinam+pei = manithan
manithan - pinam = pei

eppadip paarththalum nammalla paadidaan pei adu logic evvalu sonnaalum iruttinaa saththamaa paadikitte illa poga vendi irukku vera onnulla namma paattu naarasam thaangama pei innoruthara saagumnu oru nambikkaithaan hi hi
pathivu arumai pinnoottam miga arumai thodarga

மங்களூர் சிவா said...

//
என்ன பாட்டி திரும்ப ஆன்ட்டி ஆயிட்டாங்க
//
ஆன்ட்டியா இருக்கிறவங்கதான் பாட்டி ஆவாங்க

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

@kulo
//
pinnoottam miga arumai thodarga
//

நன்றி தொடர்ந்திடுவோம்

மங்களூர் சிவா

மங்களூர் சிவா said...

//
தொழில் சுத்தம் வேணும்ல்ல!!! :))
//

யே ஐயா புல்லரிக்க வெக்கிறிரீரே

மங்களூர் சிவா

குசும்பன் said...

"pathivu arumai pinnoottam miga arumai thodarga"

சிவா நீங்க இங்க ஒன்ன கவனிக்கனும்
பதிவு அருமை

பின்னூட்டம் மிக அருமை:)))

நமக்கு ஊக்கம் கொடுக்க இதே போல் இரண்டு மூன்று ஆள் இருந்தா போதும், நாம அசால்ட்டா 200 அடிக்கலாம்:))

குசும்பன் said...

mglrssr said...
@நிலா
//தாத்தா தனியாவா ஆடரிங்க? தப்பாச்சே.//

ஆமாங்க ஷகிரா கூட ஆடனும் என்கிற ஆசை இருக்கு என்ன செய்ய???:(

மங்களூர் சிவா said...

//
"குசும்பன் said...
அந்த சிவப்புத் தாவணிய விட்டு விட்டா சென்ஸார் போர்டில் கட் செஞ்சுடுவாங்க ஆழியூரான் :)"

S.J. சூர்யா said

சென்ஸார் போர்ட் கட் செஞ்சா அவன் தலைய செல் போனால உடைப்பேன்!!

இராம்/Raam said...

//வாங்க தல உங்க பங்குக்கு ஏதும் சொல்லுங்க...//

ஹிம் அம்மணி கவிஜ எதாவது ஒன்னே போடட்டும்.....

எதிர்கவிஜ ஒன்னே போட்டு விட்டுறலாம்... :)

மங்களூர் சிவா said...

//
ஆமாங்க ஷகிரா கூட ஆடனும் என்கிற ஆசை இருக்கு என்ன செய்ய???:(
//
நாளைக்கு என் வீட்டுக்கு அவ வரப்ப ஒரு வார்த்தை சொல்றேன்

மங்களூர் சிவா said...

//
ஹிம் அம்மணி கவிஜ எதாவது ஒன்னே போடட்டும்.....

எதிர்கவிஜ ஒன்னே போட்டு விட்டுறலாம்... :)
//

ஒரு கவிஜ போட்டா ஒரு 20 - 25 எதிர் கவுஜ தேறும்னு நெனைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

சிவா நீங்க இங்க ஒன்ன கவனிக்கனும்
பதிவு அருமை

பின்னூட்டம் மிக அருமை:)))

நமக்கு ஊக்கம் கொடுக்க இதே போல் இரண்டு மூன்று ஆள் இருந்தா போதும், நாம அசால்ட்டா 200 அடிக்கலாம்:))
//

கவனிச்சிட்டேன்.
அடிச்சிருவோம்

Jazeela said...

நல்ல பேய் கதை :-) //நான் ரொம்ப குழம்பிப் போய்.. எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்ச நாள் ஸ்கூல் பேக்ல வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..// இதெல்லாம் எதுக்கு?

kuppusamy said...

நான் 7வது படிக்கும் போது என் அப்பா ஒரு பெண்ணுக்குப் பேய்ஓட்டினார் உடுக்கை அடிப்பதற்கு வேறு ஆள் உண்டு. கேள்வி கேட்ட போது படிக்காத அந்தப்பெண் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள் இது எப்படி சாத்தியம்?

Unknown said...

//பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு 'உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு' ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா//

உங்க போஸ்ட் சிரிப்போ சிரிப்பு -அருமை. குசும்பன் கமெண்ட் அதற்கிணையான அருமை.
சே. எனக்கு முன்னே உங்க அம்மா சொல்லிட்டாங்களே.
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காமெடி குயின் காயத்ரி!!! செல்வராசு ப்ளாக் எழுதற பேயா இருந்தா இப்ப உங்க ப்ளாக்கை படிச்சிட்டு மெயில் போடுவார் கவலைப்ப்டாதீங்க காயத்ரி...இப்பத்தான் ப்ளாக் அட்ரஸ் தெரிஞ்சிடுச்சே... :)))))

ஆவி அண்ணாச்சி said...

வந்துட்டம்ல!

ஆவி அண்ணாச்சி said...

ஓ! அன்னிக்குக் கோயில்ல பார்த்தமே! அந்தப் பொண்ணா நீயி!

அட அட அட! பார்த்து எவ்வளவு வருஷமாச்சு!

நல்லா இருக்கியாடா கண்ணு!

அப்போ நான் கூட நீயும் ஆவின்னுதான் நினைச்சேன்!

ILA (a) இளா said...

அப்பாடா பாலையில கூட கொஞ்சம் தண்ணி இருக்கும் போல இருக்கு. சங்கத்து பேரையும், நம்ம ஊர்ப்பேரையும் காப்பாத்திட்டீங்க.
ஆமா நீங்க செவப்பு தாவணி இரண்டு வெச்சி இருக்கீங்களாமே

ஆவி அண்ணாச்சி said...

நான் சொல்ல நெனச்சதெல்லாம் குசும்பன்னு ஒருத்தரு ஏற்கனவே சொல்லிப்புட்டாரு!

நான் எப்படிச் செத்தேன்னு அந்த பூசாரிகிட்ட கூட உண்மையச் சொல்லலை!

இந்த வார நட்சத்திரம் காயத்ரி அக்காவுக்காக சொல்றேன்!

அப்ப எனக்கு 40 வயசு!
(முந்தின ரெண்டு லைனை திருப்பிப் படிச்சிக்குங்க)

அப்ப ஒரு நாள் காயத்ரி அக்கா எனக்கு மெயில் அனுப்பி தம்பி செல்வராசு செல்வராசு! பாலைத் திணைன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சி இருக்கேன் வந்து படிச்சிட்டு கருத்தைச் சொல்லுன்னு சொல்லி இருந்தாங்க!

அட்ரா சக்கை! அப்படின்னு போயி படிச்சவன்! சோகத்துல வாழ்க்கையை வெறுத்துப் போயி கையில கிடைச்ச பால் டாயில் பாட்டிலை அப்படியே வாயில கவுத்துகிட்டேன்! ஊறுகா கூட தொட்டுக்கலை!

:(

ஆவி அண்ணாச்சி said...

அந்தப் பூசாரி என்னை விரட்டப் பார்த்தும் முடியலை!

கடைசில ஒரு பிரவுசிங் செண்டருக்குக் கூட்டிட்டுப் போயி பாலைத் திணை பிளாக்கைப் படிக்க வெச்சான் பாருங்க!

அப்ப பிடிச்ச ஓட்டம்தான்!

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் காயத்ரி.
அருமை.
பின்னூட்டங்கள் வெகு அருமை.இப்படி நல்லா சிரிச்சு ரொம்ப நாளாச்சு.
நன்றி நன்றி நன்றி.:)))
@ முத்துலட்சுமி!!
செல்வராசுவைக் கூப்பிட்டுச் சொல்லிக் கொடுப்பீங்க பொலிருக்கே.
பயப்பட வேண்டாம் காயத்ரி...எதுக்கும் வேப்பமரம் பக்கத்திலயே குடியிருக்கவும்...:))))

CVR said...

ROFL post!! :-)
வாழ்த்துக்கள்!! :-)

ஜே கே | J K said...

//தப்பித்து ஓட விட்ட பூசாரிக்கு பேய் பிடிக்க//

ரிப்பிட்டேய்!

ஜே கே | J K said...

//செல்வராசு (ஆவி) said...
அந்தப் பூசாரி என்னை விரட்டப் பார்த்தும் முடியலை!

கடைசில ஒரு பிரவுசிங் செண்டருக்குக் கூட்டிட்டுப் போயி பாலைத் திணை பிளாக்கைப் படிக்க வெச்சான் பாருங்க!

அப்ப பிடிச்ச ஓட்டம்தான்!//

உங்க பிளாக படிச்சாலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்யுது.:(

ஜே கே | J K said...

//வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம் னு பிரியாணி செய்ற அளவுக்கு மசாலா சாமானெல்லாம் தூக்கிட்டு
திரிஞ்சேன்..// இதெல்லாம் எதுக்கு?//

பிரியாணி செய்யத்தான்!

வேற எதுக்கு....

ஆவி நெம்பர்1 said...

அக்கா! நானும் வந்துட்டேன்!

நானும் "இதனால் சகலமானவர்களுக்கு" பதிவு போட்டு அறிமுகப் படுத்திகிட்டேன்!

http://avinumber1.blogspot.com/2007/09/blog-post.html

ஆவி நெம்பர்1 said...

நாங்க இனிமே இங்கெயே குடியிருப்போமே!

அதர் ஆப்ஷன் இல்லாட்டி என்ன?

பிளாக்கர் ஐடி நிறைய கிரியேட் பண்ண வேண்டியதுதான்!

ஆவி நெம்பர் 1,2,3,4,5,6,.....1000 வரைக்கும் கிரியேட் பண்ணி ரெடியா இருக்கோம்!

இனி எல்லாருக்கும் ஒவ்வொரு பேர் வைக்கணும்!

பேர் சூட்டு விழாவுக்கு காயத்ரி அக்காதான் தலைமை தாங்குறாங்களாம்!

ஆவி நெம்பர்1 said...

//உங்க பிளாக படிச்சாலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்யுது.:(//

:))

இதுக்கெல்லாம் நாங்க அசற மாட்டோமாக்கும்!

ஆவி நெம்பர்1 said...

100 நான்தான்!

ஜே கே | J K said...

//ஆவி நெம்பர்1 said...
அக்கா! நானும் வந்துட்டேன்!

நானும் "இதனால் சகலமானவர்களுக்கு" பதிவு போட்டு அறிமுகப் படுத்திகிட்டேன்!

http://avinumber1.blogspot.com/2007/09/blog-post.html//

கவிதாயினி மேலே ரொம்ப பாசமோ.....

ஆவி நெம்பர்1 said...

100 நான் தான்!

ஜே கே | J K said...

100 வது அடிச்சுட்டோம்ல

ஜே கே | J K said...

//ஆவி நெம்பர்1 said...
100 நான் தான்!///

ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ......

நான் தான் 100-வது.

ஆவி நெம்பர்1 said...

ச்சே ஜஸ்ட்ல மிஸ்ஸு!

இருந்தாலும் ஆவி நெ 1 மாடரேட்டர்தான அடிச்சாரு! அதனால எல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுதான்!

:)

ஜே கே | J K said...

//செல்வராசு (ஆவி) said...
வந்துட்டம்ல!//

அப்படியே அனானி ஆப்சனுக்கு ரெக்கமண்ட் பண்ணுங்க...

ஜே கே | J K said...

100 ஐ கடந்த நட்சத்திர கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்....

ஜே கே | J K said...

சரி சரி....

ஹலோ ஹலோ கவிதாயினி இதுல போதுமா?

சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க...

அங்க டார்கெட் சுமார் 1000. ஓ கே வா?

இராம்/Raam said...

ஏலேய் மக்கா,

ஆவிகள் உலகத்திலே என் பேரு இருந்தா அது நாந்தானா????


செல்வராஜ் (ஆவி) நான் இல்லய்யா.... :(

நம்புங்க...

இராம்/Raam said...

/சரி சரி....

ஹலோ ஹலோ கவிதாயினி இதுல போதுமா?

சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க...

அங்க டார்கெட் சுமார் 1000. ஓ கே வா?//

JK,

அநியாத்துக்கு கொலைவெறியோட இருக்கீங்க போலே??

ஜே கே | J K said...

//இராம்/Raam said...
/சரி சரி....
ஹலோ ஹலோ கவிதாயினி இதுல போதுமா?
சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க...

அங்க டார்கெட் சுமார் 1000. ஓ கே வா?//

JK,

அநியாத்துக்கு கொலைவெறியோட இருக்கீங்க போலே??//

நம்ம பக்கத்து ஊர் காரங்க வேற..

அதான் ஏதோ நம்மால முடிஞ்சது....

MyFriend said...

அய்யோ பேயி...

MyFriend said...

யக்க்கா... சூப்பய் ஸ்டோரி. :-)))

துரியோதனன் said...

//"'பரம் வீர் சக்ரா' " டீ என்கிற ஒரு எழுத்து மிஸ்ஸிங்!!!//

ஓ! இந்த டீ குடிக்கற பழக்கம் அப்பவே ஆரம்பிச்சுடுச்சோ?

ok

ok

டீ மாஸ்ட்டர் நல்லா இருக்காறா ?

நாமக்கல் சிபி said...

/நிஜமா சொல்லவேண்டும் என்றால்
பேய்க்கு உடைந்த பல்லு என்றால் பயம் , வேண்டும் என்றால் சிபி பல்லை ரொண்டு மூனு உடைச்சு வச்சுக்கவும்...//

குசும்பா! ஏம்பா என் மேல இம்புட்டு பாசம்!

வெணும்னு கேட்டா நானே எடுத்து கொடுத்துட்டுப் போறேன்!

அதெதுக்குப்பா உடைக்குறதெல்லாம்!

புறாவுக்காக தொடைக் கறி கொடுத்ததும் சிபிதான்!

குசும்பனுக்காக பல்லை(பல் செட்டைக்) கழட்டி கொடுப்பதும் சிபிதான்!

நாமக்கல் சிபி said...

//அய்யனார் கவிதையையும் , உங்க கவிதையையும் சேர்த்து ஒரே நேரத்தில் படிச்சி இருப்பாரு...//

:)

நாமக்கல் சிபி said...

/முழுப்பரீட்சை லீவு விட்டா கிராமத்துல இருக்கற பாட்டி, வீட்டுக்கு போய்டுவேன்//

அப்ப லீவு முடிஞா டவுனுல இருப்பாங்களா உங்க பாட்டி!

நாமக்கல் சிபி said...

//அதுக்கூட அடிக்கடி போனிலே பேசிருக்கேன்.... //

நாங்கள்ளாம் நேர்லயே ஒரு தபா பாத்திருக்கோம்!

எங்க தங்கமணி அடிக்கமணி டிவில வேற பார்ப்பாங்களாம்!

என்கிட்டே ஃபோன் பண்ணி சொல்லுவாங்க!

ஆவி அண்ணாச்சி said...

(என்ன கொடுமைங்க இது என் கமெண்டுக்கு நானே இப்படி போட வேண்டி இருக்கு இத கேட்க யாருமே இல்லையா?)

நான் எதுக்கு இருக்கேன்!

மங்களூர் சிவா said...

கண்ணு செல்வராசு

எப்டிபா இருக்க?

ஆவி அண்ணாச்சி said...

//செல்வராஜ் (ஆவி) நான் இல்லய்யா....//

எந்த ஆவியாவது தான்தான் அந்த ஆவின்னு சொல்லிக்குமா!

எல்லாம் நாமளேதான் புரிஞ்சிக்கணும்!

நான் இராம் இல்லை!

(ஓக்கேவா இராம்! நீங்க நினைச்ச(!?) மாதிரியே போட்டுட்டேன்)

ஆவி அண்ணாச்சி said...

ஐ! சிவா அண்ணாத்தே!

நல்லாத்தேன் இருக்கேன்!

நீங்க எப்படி இருக்கீங்க?

10 வருஷத்துக்கு முன்னாடி கள்ளுக் கடைல பார்த்தது! ம்ஹூம்!

அப்போ கொடுத்த 5 ரூவா இன்னும் திரும்ப வரலை!

மங்களூர் சிவா said...

//
பயப்பட வேண்டாம் காயத்ரி...எதுக்கும் வேப்பமரம் பக்கத்திலயே குடியிருக்கவும்...:))))
//

இப்ப இருக்கும் முருங்கை மரத்தை என்ன செய்வது??

மங்களூர் சிவா said...

//
ஐ! சிவா அண்ணாத்தே!

நல்லாத்தேன் இருக்கேன்!

நீங்க எப்படி இருக்கீங்க?

10 வருஷத்துக்கு முன்னாடி கள்ளுக் கடைல பார்த்தது! ம்ஹூம்!

அப்போ கொடுத்த 5 ரூவா இன்னும் திரும்ப வரலை!

//
ஆவிகள் உலகத்துல க்ரெடிட் கார்ட் அக்ஸப்டட்டா?

பே(ய்) பண்ணிடுவோம்

ஆவி அண்ணாச்சி said...

//நமக்கு ஊக்கம் கொடுக்க இதே போல் இரண்டு மூன்று ஆள் இருந்தா போதும், நாம அசால்ட்டா 200 அடிக்கலாம்:))//

ஐ லைக் குசும்பன் வெரி மச்!

கண்ணா! எங்க ஊருக்கு வந்துடறியா? போரடிக்குது இங்கே!

மங்களூர் சிவா said...

//
ஐ லைக் குசும்பன் வெரி மச்!

கண்ணா! எங்க ஊருக்கு வந்துடறியா? போரடிக்குது இங்கே!

//

சீக்கிரம் கூட்டினு போய்யா

நேத்து பெப்ஸி உமா அழுத அழுவாச்சி எனக்குதான் தெரியும்

ஆவி அண்ணாச்சி said...

//பே(ய்) பண்ணிடுவோம்//

குட் டைமிங்க் சென்ஸ்!

சூப்பர்ப்!

தாசன் said...

கவனம் இரவில் விபூதி புசிக்கொண்டு படுங்கோ.

ஆவி அண்ணாச்சி said...

ஐ லைக் மங்களூரு ஃபிரண்டு ஆல்சோ!

மங்களூர் சிவா said...

//
10 வருஷத்துக்கு முன்னாடி கள்ளுக் கடைல பார்த்தது! ம்ஹூம்!

//

அந்த மோந்து பாத்துட்டு மட்டயான ஆள் நீ தானே??

ஆவி அண்ணாச்சி said...

//கவனம் இரவில் விபூதி புசிக்கொண்டு படுங்கோ.//


ஆமாம்! இல்லாட்டி கண்ணாடி பார்த்து பயந்துடுவீங்க!

ஆவி அண்ணாச்சி said...

/அந்த மோந்து பாத்துட்டு மட்டயான ஆள் நீ தானே??//

ஐயாம் யுவர் பெஸ்ட் பிரண்ட் ஐ சே!

மங்களூர் சிவா said...

//
ஐ லைக் மங்களூரு ஃபிரண்டு ஆல்சோ!

//

ஹலோ என்னய விட்டுபுடுபா வாழ்க்கைல பாக்க வேண்டியது நெறைய இருக்கு

ஆவி அண்ணாச்சி said...

//வடிவேலு said
நான் ஏன் டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக போறேன்...
நான் பகல்லேயே கவிதாயின் வீட்ட கிராஸ் செய்யமாட்டேன்.//

:) சூப்பரப்பூ!

மங்களூர் சிவா said...

//
ஐயாம் யுவர் பெஸ்ட் பிரண்ட் ஐ சே!

//
கொஞ்சம் உதறலாதான் இருக்கு

ஆவி அண்ணாச்சி said...

அட! சும்மா! வாய்யா! செத்து செத்து வெளையாடலாம்!

மங்களூர் சிவா said...

//வடிவேலு said
நான் ஏன் டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக போறேன்...
நான் பகல்லேயே கவிதாயின் வீட்ட கிராஸ் செய்யமாட்டேன்.//

அந்த கோட்டை தாண்டி அவரும் வரமாட்டார் நீயும் வர கூடாது

பேச்சு பேச்சா இருக்கனும்

மங்களூர் சிவா said...

//
அட! சும்மா! வாய்யா! செத்து செத்து வெளையாடலாம்!

//

'இந்த' ஆட்டைக்கு நான் இப்ப வரல

மங்களூர் சிவா said...

ஹலோ மைக் டெஸ்டிங்

மங்களூர் சிவா said...

ஒண்
டூ
த்ரீ

ஆவி அண்ணாச்சி said...

கல்லறைக் கனவுகள்
-----------------

கல்லறைக்குள் உறங்கினாலும்
எங்கள்
கனவுகள் உறங்குவதில்லை!

மரித்துப் போகும் முன்னால்
எங்கள் மனதில்
ஓடிய ஆசைகள்
இறஙந்த பின்னும்
கனவுகளாய்
எங்களோடு கல்லறைக்குள்!

- செல்வராசு.

(ஐய்யோ! இவங்க பிளாக் படிச்சி எனக்கும் இப்படி கவிதை எழுதுற மூடு வந்துடுச்சே)

ஆவி அண்ணாச்சி said...

//ஒண்
டூ
த்ரீ

//

இப்போ நீ குதி!

அடுத்து நான் குதிப்பேன்!

சரியா!

மங்களூர் சிவா said...

//
ஐய்யோ! இவங்க பிளாக் படிச்சி எனக்கும் இப்படி கவிதை எழுதுற மூடு வந்துடுச்சே
//

விதி வலியது

மங்களூர் சிவா said...

//
கல்லறைக்குள் உறங்கினாலும்
எங்கள்
கனவுகள் உறங்குவதில்லை
//

தலை கீழாதானே தொங்குவீங்க. இப்பல்லாம் கல்லறைல தூங்கறீங்களா??

Dreamzz said...

rofl! nalla comedya irukku!
appo ketta comedynu onnu unda appadinu ellam ketka koodathu!

ஆவி அண்ணாச்சி said...

//எல்லோரும் சிரிக்கனும் அதுதான் நம்ம கொள்கை, நன்றி ராம் :)))//

ஆவியாக இருந்தாலும் சிரிக்கணும் என்ற கொள்கைக் குன்று! நல்ல மனசுக்காரன் குசும்பன் அவர்கள் வாழ்க! வாழ்க!

மங்களூர் சிவா said...

//
rofl! nalla comedya irukku!
appo ketta comedynu onnu unda appadinu ellam ketka koodathu!

//
ஹலோ ட்ரீம்ஸ் நீங்க காயத்ரிய வெச்சு காமெடி கிமெடி பண்ணலயே

ஆவி அண்ணாச்சி said...

//தலை கீழாதானே தொங்குவீங்க. இப்பல்லாம் கல்லறைல தூங்கறீங்களா??//

என்னதான் இருந்தாலும் பெட் ரூமுன்னு ஒண்ணு இருக்குதுல்ல!

மங்களூர் சிவா said...

//
rofl! nalla comedya irukku!
appo ketta comedynu onnu unda appadinu ellam ketka koodathu!

//

ஏன் கெட்ட காமெடியானு கேக்க கூடாது??

ஏன் ஏன் ஏன்???

ஆவி அண்ணாச்சி said...

ஒய்ஜா போர்டு மெத்தேட் எங்களுக்கு கஷ்டமா இருந்தது!

இப்ப கீ போர்டு மெத்தேட் ஈஸியா இருக்கு!

சொல்லிக் கொடுத்து கமெண்ட் எழுதப் பழக்கிய கவிதாயிணி வாழ்க!

ஆவி அண்ணாச்சி said...

150 நான்தான் அடிப்பேன்!

மங்களூர் சிவா said...

//
என்னதான் இருந்தாலும் பெட் ரூமுன்னு ஒண்ணு இருக்குதுல்ல!

//

தலகாணியெல்லாம் வெச்சு தூங்குவிங்களா??

இல்ல ??

ஆவி அண்ணாச்சி said...

ஏன் கெட்ட காமெடியானு கேக்க கூடாது??

ஏன் ஏன் ஏன்???


அதானே! ஏன் ஏன் ஏன்?

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?

அதில் சாம்பாரை வாங்குகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?

மங்களூர் சிவா said...

நீ தான் கண்ணு 150 நான் 151 தான்

மங்களூர் சிவா said...

//
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?

அதில் சாம்பாரை வாங்குகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?
//

வேற எதுக்கு கழனி பானைல ஊத்தத்தான்

ஆவி நெம்பர்1 said...

யோவ் செல்வராசு!

நீ ராப்பிச்சை ஆவின்னு புரூஃப் பண்ணிட்டே பாத்தியா?

மங்களூர் சிவா said...

//
rofl! nalla comedya irukku!
appo ketta comedynu onnu unda appadinu ellam ketka koodathu!
//
விழுந்து உருண்டு பொறண்டு சிரிச்சீங்களா? அடி கிடி ஒண்ணும் படலயே??

மங்களூர் சிவா said...

//
யோவ் செல்வராசு!

நீ ராப்பிச்சை ஆவின்னு புரூஃப் பண்ணிட்டே பாத்தியா?

//
இங்க ஏது ஏரியா தகறாரா? இன்னொரு ஆவி வந்திருக்கு

மங்களூர் சிவா said...

சீக்கிரம் அடிச்சி ஆடுங்க ஒரு 200 அடிச்சிட்டு சாப்பிட போவனும்

மங்களூர் சிவா said...

//
ஒய்ஜா போர்டு மெத்தேட் எங்களுக்கு கஷ்டமா இருந்தது!

இப்ப கீ போர்டு மெத்தேட் ஈஸியா இருக்கு!

சொல்லிக் கொடுத்து கமெண்ட் எழுதப் பழக்கிய கவிதாயிணி வாழ்க!

//
ஒரு எழவும் புரியல

மங்களூர் சிவா said...

//
ஒண்
டூ
த்ரீ

இப்போ நீ குதி!

அடுத்து நான் குதிப்பேன்!

சரியா!
//
வில்லங்கமான ஆவியாதான் இருப்ப போல

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?//

பேசலை ஆனால் பின்னூட்டம் தந்திருக்கின்றேன்.. :)

மங்களூர் சிவா said...

நிலவு நண்பன் இன்னைக்கு உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டேன் பாத்திங்களா?

மங்களூர் சிவா said...

சாப்டு வந்து தெம்பா பின்னூட்டம் போடறேன். ஏற்கனவே ஒரு கட்டு கட்டுனவங்க பாத்துக்கங்க

மங்களூர் சிவா said...

அதுக்குள்ள 200 - 250 னு போயிடாதிங்க

ஜே கே | J K said...

அய்யோ மக்காஸ்,

என்னது இப்படி போயிட்டிருக்கு....

நான் அடுத்த போஸ்ட்டுல பாத்துக்கலாம்னு நினைச்சா இப்படி பின்னுறீங்களே!....

ஜே கே | J K said...

//செல்வராசு (ஆவி) said...
ஏன் கெட்ட காமெடியானு கேக்க கூடாது??

ஏன் ஏன் ஏன்???


அதானே! ஏன் ஏன் ஏன்?

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?

அதில் சாம்பாரை வாங்குகின்றேன்!

ஏன் ஏன் ஏன்?//

உனக்கும் சாம்பார்தானா?...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//குசும்பன் said...

"அறிவன் நீங்களாச்சும் என்னான்னு கேளுங்க இவிங்கள.."

அறிவன் Asked (இங்கு அறிவன் said என்று வராது வந்தால் இலக்கண பிழை)

என்னா?

(கேட்டுவிட்டேன் கவிதாயினி)//
ஏம்பா பசங்களா,ஏம்பா குழந்தைக்கு அழுவாச்சி காட்டுரிங்க? குழந்தை வெருண்டு போயி அடுத்த பதிவுல கவிதையில திட்டப் போகுது ... :-(

நிலா said...

போற போக்க பாத்தா நான் காயத்ரி ஆன்ட்டின்னு கூப்புடாம காயத்ரி ஆவின்னு தான் கூப்டனும் போல


(ஆன்ட்டி என் மெயில் ஐடி nandhuu@gmail.com)

காயத்ரி சித்தார்த் said...

முக்கிய அறிவிப்பு:

அன்பர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நேற்றும் இன்றும் மொக்கை பதிவோடு கும்மியும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. (வெகுவாய் ரசித்தேன் நன்றி!!)

நாளை முதல் வழக்கம் போல அழுவாச்சி கவிதைகள் மட்டுமே பதிவிடப்படும் என்றும் கும்மியர்கள் கர்சீப் அல்லது பெட்ஷீட் சகிதம் பாலைத்திணைக்கு வரும் படியும் அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்! எதிர்கவுஜைகள் மற்றும் பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

பின்னூட்டத்திற்கு பி.கு:

நாளை முதல் மீண்டும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யப்படும் என்றும் இதன் மூலம் அறிவிக்கலாகிறது!!

கும்மி இன்றே கடைசி!!!

ஜே கே | J K said...

//காயத்ரி said...
முக்கிய அறிவிப்பு:
நாளை முதல் மீண்டும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யப்படும் என்றும் இதன் மூலம் அறிவிக்கலாகிறது!!

கும்மி இன்றே கடைசி!!!//

அய்யயோ!

என்ன இது வம்பா போச்சு....

இன்னிக்கு தான் எல்லோருக்கு தெரியும்...

ஜே கே | J K said...

அப்ப உங்களுக்கு 1000 கமெண்ட் வேண்டாமா?

ஆபிஸ் லீவ் போட்டுட்டு கும்மி அடிக்கலாம்னு நினைச்சோமே!...

ஜே கே | J K said...

அழுகாச்சி அழகாச்சியா வருது.....

ஜே கே | J K said...

நட்சத்திர வாரம் முழுதும் கமெண்ட் மாடுரேசன் வேண்டாம்

ஜே கே | J K said...

இன்னும் ஒன்னு..

ஜே கே | J K said...

நான் தான் 175....

ஜே கே | J K said...

ஹா ஹா ஹா....

ஜே கே | J K said...

பை பை பை....

குட் நைட் மக்காஸ்.....

ILA (a) இளா said...

எல்லாருமே அந்த டீ மேட்டரை மறந்துட்டீங்களே!
என்ன தமிழ் மக்களோ?

மங்களூர் சிவா said...

//
அன்பர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நேற்றும் இன்றும் மொக்கை பதிவோடு கும்மியும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
//

அது

மங்களூர் சிவா said...

//
நாளை முதல் வழக்கம் போல அழுவாச்சி கவிதைகள் மட்டுமே பதிவிடப்படும்
//

இதுவும் எதிர் பார்த்ததுதான்.

மங்களூர் சிவா said...

//
கும்மியர்கள் கர்சீப் அல்லது பெட்ஷீட் சகிதம் பாலைத்திணைக்கு வரும் படியும் அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்!
//

இதுக்கெல்லாம் பயந்தா ஆவுமா??

மங்களூர் சிவா said...

//
எதிர்கவுஜைகள் மற்றும் பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
//
நாங்க ரெடி
கவுஜ ரெடியா

மங்களூர் சிவா said...

//
நாளை முதல் மீண்டும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யப்படும் என்றும் இதன் மூலம் அறிவிக்கலாகிறது!!
//

திஸ் இஸ் டூ மச்சி

மங்களூர் சிவா said...

//
அப்ப உங்களுக்கு 1000 கமெண்ட் வேண்டாமா?

ஆபிஸ் லீவ் போட்டுட்டு கும்மி அடிக்கலாம்னு நினைச்சோமே!...

//
நான் லீவ் போட்டது என்ன ஆவறது

மங்களூர் சிவா said...

இது 187

மங்களூர் சிவா said...

இன்னும் ஒரு 13

மங்களூர் சிவா said...

அடிச்சா வரும் 200

மங்களூர் சிவா said...

@புள்ளிராஜா
//
நள்ளிரவு வந்திட்டா குசும்பு ஜாஸ்தி. லவ்வு மட்டும் கொஞ்ச ஓவரு.
ஒட்டு துணியில்லாம கூட்டமா ஆடுறத பார்க்க கோடி கண்ணு வேணும்.
//

என்ன சூப்பர் மேட்டரா இருக்கும் போல

மங்களூர் சிவா said...

//
வர்றீங்களா ஒரு தடவை பேய் வீட்டுக்கு போய் வருவமா?
//

என்னமோ ஊட்டி கொடைகானல் போலாமானு கேக்குறமாதிரி கேக்குறீயே ஐயா

மங்களூர் சிவா said...

To மேனேஜர்

நான் லீவுல இருக்கும்போது போன் பன்ன கூடாது. எவ்வளோ அர்ஜன்ட் வேலயா இருந்தாலும்

மங்களூர் சிவா said...

Manager Said
நீ வராம இருக்கறதுதான் ஆபிஸ்க்கும் நல்லது

மங்களூர் சிவா said...

இன்னும் 200 ஆவலியே

மங்களூர் சிவா said...

போய் தூங்கலாம்னு பாத்தா

மங்களூர் சிவா said...

என்ன பண்ணலாம்

மங்களூர் சிவா said...

இன்னும் ஒரு 4

மங்களூர் சிவா said...

நான் தான் 200 அடிக்க போறேன்

மங்களூர் சிவா said...

நான் தான் 200 அடிக்க போறேன்

மங்களூர் சிவா said...

நான் தான் 200

G3 said...

நானும் வரேன் 200 அடிக்க :)

G3 said...

ஜஸ்ட் மிஸ் :(

«Oldest ‹Older   1 – 200 of 223   Newer› Newest»