Thursday, January 29, 2009

பின்பனிக்காலத்திலோர் விடியல்..பயணங்கள் மட்டுமே வாழ்வாயிருந்த தினங்களை, என்னிடம் அவையேற்படுத்தியிருந்த ஆழ்ந்த சலிப்பினை இப்போது வாய்த்திருக்கும் இந்த அபூர்வ பயணத்தில் நீண்ட பெருமூச்சுகளினூடே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். வெளியில் இன்னமும் தீர்ந்து போய்விடாத இரவையும் கனத்த இருளையும் ஊடுருவி பகலை நோக்கி விரைகிறது பேருந்து. தவிட்டு நிற, ஒளி குன்றிய கண்ணாடி சன்னல்களின் பின்னாலிருந்து ஓர் மொட்டவிழ்வது போல மெல்ல விரிந்து கொண்டிருக்கும் இன்றைய நாள், மெலிதாய் கண்களுக்குத் தட்டுப்படுகிறது. இது வரை நான் கண்டுவந்திருக்கும் விடியல்களைப் போன்றே அதே ரம்மியங்களோடு, அதே நிறங்களோடு, அதே நிதானங்களோடு, அதே புன்னகையோடு... அனைத்திலும் அதுவே போன்ற, ஆனால் இதுவரை கண்டேயிராத இந்த விடியல் புதியதோர் பரவசத்திலாழ்த்துகிறது!

வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு.

ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன... ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னால் இயன்றதும், இயல்வதும்.. எனக்கென்று பணிக்கப்பட்டிருப்பதும் கூட வெறுமனே பார்த்திருத்தலாகத் தான் இருக்கக் கூடுமோ? தெரியவில்லை. என்றாலும் பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா? நம் சந்திப்பு முதலாய் இந்நாள் வரையிலும் நம் நாட்களை கையெடுக்காமல் வரையப்பட்ட கோட்டோவியமாய்த் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கும் அற்புத விரல்களை, இக்கணத்தில் நன்றியின் பொங்குதல்களோடு நினைத்துக் கொள்கிறேன்.

முத்துக்களின் நுண்ணிய துளைகளின் வழி மெல்லிய இழையொன்று புகுந்து புறப்படுவதையொத்து நினைவுகளை கண்களுக்குப் புலப்படாத கண்ணியால் கோர்க்க விழைகிறதென் இதயம். என் வாழ்வின் துயரங்கள், பிறழ்வுகள், இழப்புகள் ஆகியவற்றின் துவக்கத்தைப் போன்றே பூபாளத்தின் முதல் ஸ்வரத்தை, பரிவினால் சுரந்து காற்றில் கலந்து வந்த அன்பின் கதகதத்த வெம்மையை இதே போன்றதோர் விடியல் தான் என்வசம் கொணர்ந்து சேர்த்தது. அப்போது அல்லிகள் மலர்ந்து, வெயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த குளக்கரையின் விளிம்பிலமர்ந்தபடி, தளும்பும் நீரலைகளில் பார்வையைப் பதித்த வண்ணம், நிறைய தயக்கங்களோடு மெல்ல விரிந்த விரல்களை, அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும், உறுதியும் மிக்க விரல்கள் மிக உரிமையாய் கோர்த்துக் கொண்டன. வெயில் வேகமாய் நகர்ந்து அவ்விரல்களின் மீது வெளிச்சமிட்டது. அவ்விடத்தில் வெயிலோடு தானும் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், உறக்கத்தில் ஒரு முறை கண்விழித்துப் பார்த்த பூனைக் குட்டியும் அப்புனித நிகழ்விற்கு சாட்சியங்களாகின!

உனக்குத் தெரியுமா? அந்த நாளை, அந்த விடியலை, இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை, எத்தனை பெரிய அந்தகாரத்தின் நடுவிலும் பிரகாசமாய் ஒளிரும் அதன் வசீகர அழகை, எவரும் எதுவும் நெருங்கவியலாத ஆழத்தில் இதயத்தின் ரகசிய அறையில் நான் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நானறியாப் பொழுதில் அது திறந்து கொள்கையில் அதன் அற்புதப் பிரவாகத்தில் நான் மூழ்கிவிட நேர்கிறது. நான், என் என்பது ஏதுமற்று நெருப்பில் கரையும் கற்பூரமாகி விடுகிறது மனது. என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அந்த நாளுக்குப் பின்னாக வந்த வேறெந்த நாளும் அதனுடைய வனப்பில் பாதியைக் கூடப் பெற்றுவிட முடியவில்லை.

இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய். என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....

இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.

98 comments:

gayathri said...

hey methey first ta

ராமலக்ஷ்மி said...

உணர்வுகளை வெகு அற்புதமாய் பதிந்திருக்கிறீர்கள் காயத்ரி.

அபி அப்பா said...

என்ன காயத்ரி! என்ன பிரச்சன, ஏன்(எப்போதும் போல) புரியாத மாதிரி எழுதி இருக்கப்பா! நோ பிராப்ளம் சீக்கிரம் குவைத் போகலாம்!ஓக்கே!

அபி அப்பா said...

// ராமலக்ஷ்மி said...
உணர்வுகளை வெகு அற்புதமாய் பதிந்திருக்கிறீர்கள் காயத்ரி.//

என்ன பிரண்ட்! உங்களுக்கு புரிஞ்சுடுச்சா அப்ப நான் தான் லூசா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட்டகாசமடிப் பெண்ணே!... :)

நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

// ராமலக்ஷ்மி said...
உணர்வுகளை வெகு அற்புதமாய் பதிந்திருக்கிறீர்கள் காயத்ரி.//

என்ன பிரண்ட்! உங்களுக்கு புரிஞ்சுடுச்சா அப்ப நான் தான் லூசா /

கேட்டு வேற தெரிஞ்சுக்குறாங்க....என்ன கொடுமை சார் இது????

பாச மலர் said...

வழக்கமான காயத்ரி முத்திரைகளுடன்ன்..இழைத்துக் குழைத்து இயற்றியிருக்கிறீர்கள்..சபாஷ்!

Muthusamy said...

என்ன சொல்ல வருகீறீர்கள் என்பதை எட்டாவது முறையாகப் படித்தும் இன்னமும் புரியவில்லை...

நல்ல தமிழ் எழுத்துக்கள்

Jeeves said...

நோ பிராப்ளம் சீக்கிரம் குவைத் போகலாம்!ஓக்கே!

G3 said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட்டகாசமடிப் பெண்ணே!... :)//

Repeattae :))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

மாம்ஸ்,

”அக்கா இனி சோகக்கவிதை எழுதவிடாமல் பார்த்துக்கோங்க.. ஒன்னும் புரியலை”ன்னு அன்னைக்கு சொன்னேன். இப்போ இவங்க சோகக்கட்டுறை எழுத ஆறம்பிச்சுட்டாங்க..
இதுவும் ஒரு மண்ணும் புரியல..

என்ன பண்றீங்க நீங்க???? கொஞ்சம் மிரட்டி வைங்க அக்காவை! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அக்கா,

மாம்ஸ் ஊருக்கு போயிட்டாரா?
அதான் இந்த ஃபீலிங்ஸ் ஆஃப் ஈரோடா??

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆண்டவா,

இந்த பேதைப்பெண்ணை நீதானப்பா காப்பாத்தணும்.. பிதற்ற ஆரம்பிச்சுட்டா பாருங்க.. _/\_

.:: மை ஃபிரண்ட் ::. said...

ப்ளாக்கர் ஆண்டவா,,

//"பின்பனிக்காலத்திலோர் விடியல்.."//
புரியாத தலைப்பில் எந்த பதிவு வந்தாலும் filter பண்ணனும்ன்னு உனக்கு தெரியாதா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

பாசக்கார குடும்பமே,

இன்னுமா தெரியல.. இங்க ஒரு கும்மி ஓடுது.. தங்கச்சி தனியா ஆடுறாளே.. ஹெல்புக்கு ஒரு கைக்கொடுக்கனுமேனு தோணலையா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

காயத்ரி,

காயத்ரி போட்ட போஸ்டுக்கு இன்னொரு காயத்ரி முதல் கமேண்டா?
வாழ்க காயத்ரி முன்னேற்ற சங்கம். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கவிதாயினி பாட்டி,

என்னுடைய கமேண்டுகள் வெளியாக விடாமல் நீங்க சதி பண்ணீங்கன்னா இங்க ஒரு ரத்த கலவையே உருவாகும்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ராமலட்சுமியக்கா,

அட.. பதிவு உங்களுக்கு புரிஞ்சிடுச்சா?
(சரி.. நீங்களும் புரியாம ஸ்டண்டர்ட் பின்னூட்டம் போட்டிருக்கீங்கன்னு வெளியே சொல்ல மாட்டேன்.. பீ ஹேப்பி. :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அபி அப்பா,

அண்ணே,, நீங்களும் நானும் ஒரே ட்ராக்ல.. எனக்கும் புரியல..

புரியாத இடத்து கும்மி!

இதுதானே நமது ப்ரின்சிப்.:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

முத்துக்கா,

உண்மையை சொல்லுங்க...
உங்களுக்கும் புரியலதானே? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

விளம்பர இடைவேளை:


ஜி3 கவிதாயினி மேலே கோபமா இருக்காங்களாம்.. இதுதான் அவங்க சொன்ன மேசேஜ்:

“Gayathri: :))))
ava mela kovathula irukken naan.. so no gummi.. phone panna attend pandradhillae.. mail potta reply illae.. periya manushangalaayitaanga”

.:: மை ஃபிரண்ட் ::. said...

நல்லவனன்னே,

அபி அப்பா மட்டுமில்ல.. நீங்களும் நானும் கூட இதே கேட்டகரிதான். :-)
கவிதாயினி போஸ்ட் போட்ருக்காங்கன்னு படிக்க வந்தோம்ல..

.:: மை ஃபிரண்ட் ::. said...

@பாசமலரக்கா,

என்ன இன்னைக்கு பாசமா பொழியிறீங்க இந்த பதிவுல?
ஈரோட்டுல பழத்த மழைன்னு வானிலை அறிக்கைல சொன்னது நிஜம்தான் போல. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

முத்துசாமின்னே,

நீங்க சொன்னீங்க பாருங்க.. இதுதான் கவிதை.. 4 வரி சொன்னாலும்.. அப்படியே பச்சக்க்னு சொல்லியிருக்கீங்க.. உங்களுக்கு போடலாம் ஒரு ஜே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ஜீவ்ஸ் அண்ணே,

இப்பவே தினமும் கனவுல குவைத்துல இருக்கிற மாதிரிதான் இருக்காங்கலாம். சொல்ல மறந்துட்டேன் அவங்க தினம் 24 மணி நேரம் மட்டும்தான் கனவு காணுவாங்கலாம்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ஜி3யக்கா:

ரிப்பீட்டே போட்டா சரியா வருமா? நீங்கதான் அவங்க மேலே கோபத்துல இருக்கீங்களே..

(ஹப்பா.. ஞாபகப்படுத்தியாச்சு. நாராயணா நாராயணா.. ) ;-)

Jeeves said...

nan indha gayathri appadingaravanga kitta ( Erode la irundhu kavuja ellam ezuthuvaangalE ) sandai pottirukkarathaala
no gummis

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ஜீவ்ஸ் அண்ணே,

இது என்ன “கவிதாயினி சண்டை போடும் வாரம்”-ஆ?

எல்லாரும் இன்னைக்கு கவிதாயினியோட எதிர் அணில நிக்குறாங்க?

சரி.. சரி..
ரெண்டு அணிலேயும் ஆள் இருந்தாதான் ஆட்டம் சூடு பிடிக்கும்..

நான் நடுவர்.. நடுவுல நிக்கிறதுனால.. ஆனா, சமாதனம் பேசி வைக்க மாட்டேன்.. சண்டையை பார்த்து எஞ்சாய் பன்ணுவேன்..
ஓக்கே? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

மக்கா,

போர் அடிக்குது..

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி.. ரொம்ப நாளாச்சே..

வாங்க விளையாடலாம்ன்னு யாரும் கண்ணுல அகப்பட மாட்றாங்களே..

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி.. வண்டியை நாமளே ஓட்டிடவேண்டியதுதான்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

முருகனுக்கு ஒரு நமஸ்காரம்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்பா சிவனுக்கு ஒரு நமஸ்காரம்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஸ்டார்ட் தி மியூஸிக்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அக்கா, 100 வந்ததும் டான்னு சொல்லுங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா.. ரீலீஸ் பண்ணுங்க என் கமேண்ட்.. ரொம்ப நேரமா 28லேயே நிக்குது..

.:: மை ஃபிரண்ட் ::. said...

போங்க..இப்படி பண்ணீங்கன்னா நான் விளையாட்டு வரலை..

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா said...
// என்ன பிரண்ட்! உங்களுக்கு புரிஞ்சுடுச்சா அப்ப நான் தான் லூசா //

ச்சேச்சே! அப்படியெல்லாம் விட்டுக் கொடுப்பேனா:))?

.:: மை ஃபிரண்ட் ::. said...

வோக்கே>>

வந்தாச்சு கமேண்டு..

அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் ம்யூஜிக்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அக்கா.. கட்டுறை எழுதியிருக்கீங்களே..

.:: மை ஃபிரண்ட் ::. said...

மாமுக்கு போன் போட்டு சொல்லியாச்சா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

அவர் ஓடி வந்து பதிவு படிச்சுட்டாரா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

படிச்சுட்டு கமேண்ட் போட்டுட்டாரா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

மாம்ஸ்,

படிக்கும்போது புரியலைன்னா பரவாயில்லை..

.:: மை ஃபிரண்ட் ::. said...

”நல்லா எழுதியிருக்கம்மா.. வாழ்த்துக்கள்”ன்னு ஒரு பிட்டு போடுங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அம்மணி ஹேப்பியாயிடுவாங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்படி பின்னூட்டம் போடலைன்னா கூட பரவாயில்லை..

.:: மை ஃபிரண்ட் ::. said...

எங்களோட கும்மி ஜோதில ஐக்கியமாயிடுங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)

ராமலக்ஷ்மி said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ராமலட்சுமியக்கா,

அட.. பதிவு உங்களுக்கு புரிஞ்சிடுச்சா?
(சரி.. நீங்களும் புரியாம ஸ்டண்டர்ட் பின்னூட்டம் போட்டிருக்கீங்கன்னு வெளியே சொல்ல மாட்டேன்.. பீ ஹேப்பி. :-))//

மை ஃப்ரெண்ட், மை டியர் ஃப்ரெண்ட்,
வேணுமான உங்களுக்கு பத்திக்கு பத்தி விவரமா பொழிப்புரை தரட்டுமா:)? காயத்ரியுடன் ஓர் நாள் பேசி சிரித்திருக்க வாய்த்தது பெங்களூரில். முகம் படிக்க முடிந்த என்னால் மனம் படிக்க முடியாதா என்ன?

ராமலக்ஷ்மி said...

காயத்ரி,
ஜீவ்ஸுக்கு ‘கா’ விடுவது ‘டூ’ விடுவது ரொம்பப் பிடிக்கும். விட்ட மறுகணமே மறந்தும் போகும். கண்டுக்காதீங்க:)))!

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ராமலக்ஷ்மியக்கா

// மை ஃப்ரெண்ட், மை டியர் ஃப்ரெண்ட்,//

:-)

// வேணுமான உங்களுக்கு பத்திக்கு பத்தி விவரமா பொழிப்புரை தரட்டுமா:)? //

ரிஸ்க் எடுக்கு விரும்புறீங்களா? கவுஜ எழுத கவிதாயினியே எனக்கு விளக்கவுரை கொடுக்க எத்தனையோ முறை முயன்று தோற்றுவிட்டார்.. நீங்களும் முயற்சிக்கிறீங்கள் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை. :-)

//காயத்ரியுடன் ஓர் நாள் பேசி சிரித்திருக்க வாய்த்தது பெங்களூரில். முகம் படிக்க முடிந்த என்னால் மனம் படிக்க முடியாதா என்ன? //

அடடே.. ஒரு நாள் பேசி சிரித்ததின் அவங்க மனம் படிக்க முடியுதா?

நான் ரெண்டு நாள் மீட் பண்ணியும் என்னால முடியலையே. :-)

by the way..நீங்க அம்பதாவது கமேண்டு போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள் :-)

இராம்/Raam said...

அட்டகாசம்.... மிகவும் ரசித்தேன்.... :)

இராம்/Raam said...

//என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....
///


வாய்ப்பே இல்லே... ரொம்பவே ரசித்த வரிகள்...

கலக்கல் பதிவு கவிதாயினி... :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிக அருமையான மொழி நடை காயத்ரி.
//இப்போது நீ எங்கிருப்பாய்? எங்கோ தொலைவில்... வெகு தொலைவில்.. பசியால் அழுது ஓய்ந்த குழந்தையின் சாயல்களோடு, எனக்கான மிச்ச ஏக்கங்களோடு, முகத்தில் எப்போதும் ததும்பும் கருணையோடு, அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருப்பாய்.//

மனதுக்கு நெருக்கமாகிவிட்டது இப்பதிவு.
பாராட்டுக்கள்.
தொடருங்கள் சகோதரி.

துரியோதனன் said...

//நோ பிராப்ளம் சீக்கிரம் குவைத் போகலாம்!ஓக்கே!//

ரிப்பீட்டேய்.....

குப்பன்_யாஹூ said...

கவிதாயினி காயத்ரி - முதற்கண் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள், மிக அருமையான பதிவர்க்கு, தமிழ் எழுத்திற்கு.

மணி ரத்னம் , கமல் ஹாசன், பாலு மகேந்திரா சினிமாக்கள் போல முதல் முறை படித்ததும் அவ்வளாவாக புரிய வில்லை. நான்காம் முறை படித்த பிறகே புரிய தொடங்கியது, ரசிக்க தொடங்கியது.

தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று உள்ளீர்கள். பாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை.

என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை,

ஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளி போல உன்னிலிருந்து தொடங்கும் என் அனைத்தும் உன்னிலேயே வந்து முடிவதை வெகு ஆச்சரியங்களோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பங்கேற்றிருத்தலும் நாமாய், பார்த்திருத்தலும் நாமாய் இருப்பதில் அனேக சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன


ஈடு இணை இல்லாத வரிகள்.

என் வருத்தம் , பாரதியும், சுஜாதாவும் இல்லையே இன்று, இந்த பதிவை படித்து இருந்தால் அந்த முண்டாசு கவிஞன் பொறாமையுடன் பாராட்டி இருப்பான்

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களுடன்

குப்பன்_யாஹூ
.

காயத்ரி said...

//gayathri said...
hey methey first ta//

அம்மா தாயே.. நீயுமா? :(

ராமலக்ஷ்மிக்கா நன்றி.. அந்த வாலு (மைஃப்ரண்ட்) சொல்றதெல்லாம் காதுல வாங்கிட்டு பொறுப்பா பதில் சொல்றீங்களே! நீங்க விடிய விடிய பொழிப்புரை சொன்னாலும் அவ புரிலன்னு தான் சொல்லுவா.. ஃப்ரீயா விடுங்க. :)

காயத்ரி said...

அபி அப்பா said...

//நோ பிராப்ளம் சீக்கிரம் குவைத் போகலாம்!ஓக்கே!//

அண்ணா என்னை வெச்சு காமெடி கீமடி பண்ணலயே?? அடப்பாவிகளா.. இதை இத்தனை பேரு ரிப்பீட்டியிருக்காங்களே? :(

காயத்ரி said...

முத்துக்கா.. ரொம்ப நன்னி!

// அட்டகாசமடிப் பெண்ணே!... :)

Thu Jan 29, 03:47:00 PM
Delete
Blogger நிஜமா நல்லவன் said...

/அபி அப்பா said...

// ராமலக்ஷ்மி said...
உணர்வுகளை வெகு அற்புதமாய் பதிந்திருக்கிறீர்கள் காயத்ரி.//

என்ன பிரண்ட்! உங்களுக்கு புரிஞ்சுடுச்சா அப்ப நான் தான் லூசா /

கேட்டு வேற தெரிஞ்சுக்குறாங்க....என்ன கொடுமை சார் இது????//

நான் எதும் பாக்கல.. நான் எதும் கேக்கல.. எனக்கு எதுமே தெரியாது!!! :)

காயத்ரி said...

பாசமலர் நன்றி!

முத்துசாமி.. எதற்கும் ஒன்பதாவது முறை படித்துப் பார்த்து விடுங்களேன். ஒருவேளை புரிந்தாலும் புரியலாம். :)

ஜி3 தேங்க்ஸ்டா.. கோபமா இருந்தும் கமெண்ட் + மடல் போட்டதுக்கு!

மைஃப்ரண்ட்.. வழக்கம் போல ஒன்னும் சொல்றதுக்கில்ல! :(

காயத்ரி said...

ராம்.. ரிஷான் மிக்க நன்றி!

குப்பன்.. ரொம்பவும் மிகையான சொற்களால் பின்னூட்டமிடுகிறீர்கள். இயல்பான விமர்சனம் போதுமானது. நன்றி!

நந்து f/o நிலா said...

ஆஹா!!!

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டத்தில் எந்த மிகை படுத்தலும் இல்லை. ஒரு நாளைக்கு அறுபது பதிவுகளை படிக்கிறேன் . அந்த அனுபவத்தில் பின்னூட்டம் இடுகிறேன்.

உங்கள் பதிவு ஆயிரம் கிளிஞ்சல்களுக்கு இடையே கிடைக்கும் நான் முத்து போன்றது.

பாராட்டுவதில் பணக்காரத்தனம் வேண்டும் என்று அறிவுறுத்திய பேரறிஞர் அண்ணா வழி வந்தவர்கள் நாங்கள்.


குப்பன்_யாஹூ

Anonymous said...

காயத்ரி 20 முறை வாசித்து விட்டேன். ஆனால் ஒருமுறைக் கூடப்புரியவில்லை. அய்யோ கோபிச்சுக்காதிங்கப்பா.

காயத்ரி said...

// நந்து f/o நிலா said...

ஆஹா!!!//

அண்ணா இது எந்த ஆஹா? இதுக்கென்ன அர்த்தம்? பதிவு புரியலன்னு பழிவாங்கறீங்களோ?

நந்து f/o நிலா said...

அட நிஜமாவே ரீடர்ல படிச்சுட்டு இந்த புள்ள எப்படி எழுதுதுன்னு ஃபீலாகி கமெண்ட் போட வந்தேன். இங்க அனு அடிச்சிருந்த லூட்டில ரெண்டு எழுத்துதான் வந்துச்சு :P

அதான் குப்பன் யாஹூ மொத்தமா எழுதிட்டாரே.

நந்து f/o நிலா said...

இத படிச்சுட்டு மச்சான் செமையா மெல்ட்டாயிருக்கனுமே?

sollarasan said...

கவிதை நடை,வாழ்த்துகள்.

சூர்யா said...

Manikkanum, en arivirku idhu puriyavillai... But neenga nalla ezhudhirkeengannu mattum puriyudhu. ennai pol pamaranukkum purigira mathiri oru pathivu podungalaen(unga pazhaiya styla)...Pleaseeeeeeeeee
ethirpaarpugaludan

நட்புடன் ஜமால் said...

\\இயலாமையின் தோற்கடிப்பில் விழிசோர்கிறதெனக்கு. சன்னல்களின் கண்ணாடித் திரை விலக்கி கொட்டும் பனியை கைகளில் ஏந்துகிறேன். மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது.. வெட்டப்படாத என் சிறகுகளை பெருமையாய்ப் பார்த்த வண்ணம் நீயிருக்கும் திசை நோக்கிப் பறக்கத் தீர்மானிக்கிறேன் நான்.\\

சிறந்த கவிதை போல் உள்ளது.


அருமை.

நட்புடன் ஜமால் said...

எங்க G3 மிஸ்ஸிங்க

இனியவள் புனிதா said...

//வியப்பாயிருக்கிறது.. என் நாட்களும் கூட இப்படியாகத்தான் மிக நீண்டதோர் இரவை, அதன் மீது வழிந்து கொண்டிருக்கும் அடர்கருமையை, அதன் மெளனத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிபயங்கரங்களைக் கடந்து, கடந்து, இப்போது தான்.. இதோ இந்த புலர்காலையைப் போன்றே மென்மையாய் விடிந்து கொண்டிருப்பதாய்த் தோன்றுகிறதெனக்கு//

Wow! Awesome!!!

thurka said...

மொழி இல்லாத ஒரு இசையின் பின்னணியில் மெதுவான வாசிப்புகள் தரும் பரவசங்களுக்கு சில படைப்புகளே உட்படுவதாக உணர்கிறேன். "எல்லாப் பிரிவிலும் ஒரு தன்னிரக்கம் மரணபயம் இருக்கிறது" என்று சுஜாதா சொன்னது ஒருவகையில் இங்கே பொருந்துகிறது. நாகரீகமே அதை இசையாய், கவிதையாய், கண்ணீராய் இதுபோன்ற படைப்பாய் வெளிப்படுத்துகிறது. சுகமான சோகத்தை தழுவி வாழ்க்கை தன்னை சொல்கிறது.

(அல்லது "நன்றாக இருக்கிறது" என்றும் சொல்லலாம் -:)

குப்பன்_யாஹூ said...

me the 75 th comment (platinum jubiless ) comment

கெக்கே பிக்குணி said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

//இறுக மூடியிருக்கும் சிசுவின் உள்ளங்கைகளைப் போன்று கண் கூசச் செய்யும் அதன் தூய்மையை// எனக்கெல்லாம் தூய்மைபோய் சினிக் ஆகி நாளாச்சு, அதனால், வெண்பனியின் குளிராய் நெஞ்சில் தங்கும் கவிதை எழுத்துகளுக்கும், எழுத்துகளின் (மெல்ட் ஆனாரா?) பெறுநருக்குமாய் வாழ்த்துகள்.

சித்தாந்தன் said...

கயத்திரி
நல்லா இருக்கு
அற்புதமான மொழி
மனதை நெருக்கமாக்கிறது

ஆதவா said...

இல்லக்கியச் சிற்றிதழ்களுக்கு ஏற்ற சிறந்த நடை.. நல்ல மொழியாளுமை. பாராட்டுக்கள் காயத்திரி. உணர்வுகளைக் கொட்டியெழுதி, அதைப் படிப்பவர்களைக் கட்டியழச் செய்திருக்கிறீர்கள்.

சூர்யா said...

Innoru murai padithaen porumaiyaga, enakku pidatha varigal,
உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய்,
chance illanga ,arumaiyana varigal....

Anonymous said...

hi gayathiri eppa parunga en blogla ungan comment display akkum. kavalaipadaathinga unga kan nalla than erukku. eppo nan geepoomba seithu varavachiten
http://mahawebsite.blogspot.com/

அபி அப்பா said...

கிளம்பிட்டியா கிலம்பிட்டியா! குவைத் வந்த பின்னே கமெந்த் எல்லாம் ரிலீஸ்! ஆண்டவா!!!

குப்பன்_யாஹூ said...

ஆஹா, குவைத் வந்தாச்சா, அப்போ அதிக பதிவுகளை எதிர் பார்க்கலாம்.அரபு நாட்டு போர் (bore) வாழ்க்கைக்கு பதிவுலகம் மிக சரியான வடிகால்.

குப்பன்_யாஹூ

Lenin Annamalai said...

I read ur blogs for the past one year. I was crying lonely in late nights after reading ur blogs.

News Paanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

LakshmanaRaja said...

//மழையைப் போல் விரல்களினூடே வழிந்து விடாமல் ஏந்திய கரங்களில் தேங்குகிறது பனி. //

ம்ம்ம்ம்ம்ம்

//அன்றோர் நாள் அடிபட்ட பறவையாய் உன் மடியில் நான் வீழ்கையில் பறக்கவியலாதவென் சிறகுகளை ஆதுரத்துடன் வருடிய உன் கரங்களின் குளுமையை நினைவூட்டிக் கொண்டே உள்ளங்கைக் குழிவில் படிந்து கொண்டிருக்கிறது//

ம்.அழகான பதிவு காயத்திரி.

ராஜா said...

லேடி ஜெயமோகன் ஆகும் முயற்சியா?

//ஒருவர் பின்னொருவராய் முன்னிருப்பவரின் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகளைப் போல உன் நினைவுகள் கூச்சலிட்டபடி ஓடி வருகின்றன...//

very nice

சாணக்கியன் said...

முதல் முறை உங்கள் பதிவினை படிக்கிறேன்... நண்பன் பரிந்துரையின் பேரில்...

நல்ல உவமைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு...

என் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் எழுத்து எனும்போது பெருமையாக இருக்கிறது.

வாழ்த்துகள்!
http://vurathasindanai.blogspot.com/

GOWRI said...

காயத்ரி....
என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு...
அற்புதமான மொழியாளுமை உங்களுக்கு...
உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓடி வரும் சிறுபிள்ளைகள், அந்த அழகிய முத்துக்களாலான மாலை, அல்லிகள் மலர்ந்திருந்த குளம், ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகள், உறங்கி விழித்த அந்த பூனைக்குட்டி, கை மூடியிருந்த பச்சிளங்குழந்தை- இவைகள் யாவற்றுடனும் சேர்த்து உங்களின் எழுத்துகளும் எனக்கு சிநேகமாகி விட்டன தோழி....
சில நொடிகள் கண் மூடி அசை போட்டு அமர்ந்திருக்கத் தூண்டுகின்றன பல வரிகள்.... வாழ்த்துக்கள் கோடி....

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

குவைத் போனதும் வேற பாஷைல எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்ட போல. தமிழ்ல மொழி பெயர்த்து மெயில் அனுப்பு. படிச்சிட்டு கருத்து சொல்றேன்.

susi said...

unga eluthin sumaiyin baatam thaangaamal en manam kanakkirathu sahothati. meendum meendum vaasithen mullai mullaal mattume edukka mudiyum enbathaal.
vaalthukkal!!!

ivingobi said...

//என் மனம், இப்போது வெளியே பொழிந்து கொண்டிருக்கும், புற்களிலும், பூக்களிலும், வயல்களிலும், மரங்களிலும், துயில் கலைந்து பறக்கத் துவங்கியிருக்கும் பறவைகளின் சிறகுகளிலும் படிந்து கொண்டிருக்கும், மெல்லிய பனியாய் மாறிவிடத் துடிக்கிறது. உறங்கும் உன் சிப்பியிமைகளில் மிருதுவாய்ப் படிந்து, அவை மெல்லத் திறக்கையில் உன் பார்வை தொடும் முதல் உணர்வாய், முதல் குளிராய் உள்நுழைந்து குழந்தைமைகளை கொஞ்சமும் இழந்து விடாத உன் தூய இதயம் முழுவதிலும், ஒவ்வொரு அணுவிலும் நிரம்பி விடத் தவிக்கிறது. உனக்கும் எனக்குமான தூரங்களை நிறைத்திருக்கும் வெளி முழுவதும் தானேயாகப் படர்ந்து உன்னை அடைந்துவிட விழைகிறது....
///


Sathiyama sethutten......
perumaiyaga Pin thodargiren(Follow ).....

Annam said...

supera iruku gayatri akka

Anonymous said...

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சிந்தனைகளை விதைப்பதற்கும் எழுதுவதைத் தொடருங்கள். நல்ல கருத்துக்களையும்,சிந்தனைகளையும் இந்த உலகிற்கு தாருங்கள். நீங்கள் வீட்டில் அமைதியாக இருக்கும் நேரங்களில் வலைப்பதிவில் பேசுங்கள்.

OSAI Chella said...

As usual "Topclass" Gayathri! Three Cheers 2 u!

புனிதா||Punitha said...

Nice write-up!

வண்ணத்துபூச்சியார் said...

Xlent... Great ...

செல்வநாயகி said...

காயத்ரி எழுதுவதைத் தொடருங்கள்.

ஷிஜூசிதம்பரம் said...

nice nice nice