"அடப்பாவமே!"
"தெரியுமா விஷயம்?"
"எப்ப இருந்து?"
"இப்ப தான்.. நாலஞ்சு நாளா!"
"ச்சே! நல்லா இருந்த பொண்ணு.. யார் கண்ணு பட்டுச்சோ!"
"ம்ஹூம்.. நாமென்ன பண்ண முடியும்"
டுபுக்கு அண்ணா, சென்ஷி, ஜி3, தங்கச்சி, அபிஅப்பா இப்டி நிறைய பேர் என்னை பத்தி கவலை தெரிவிச்சிருக்காங்கன்னு தகவல்!! ஆளாளுக்கு "என்ன ஈரோட்டுல வெயில் ஜாஸ்தியா"ன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நம்ம தலைவர்.."என்னங்க என்னாச்சு.. ஏன் இப்டி"னு துக்கம் கேட்டவர் தான்.. அதுக்கப்புறம் ஆளயே காணல. தங்கச்சி (மை ஃப்ரண்ட்) என் ஸ்டூடென்ட்ஸ் மாதிரியே வந்தமா.. அட்டெண்டென்ஸ் குடுத்தமான்னு உடனே எஸ்கேப் ஆயிடறா! எல்லாம் திடீர்னு சீரியஸா பதிவு போட ஆரம்பிச்சதோட விளைவுகள்!
எல்லாருக்கும் அந்த ரகசியத்த சத்தமா சொல்லப் போறேன் இப்போ! நம்ம அய்யனார் இருக்காரே! அதாங்க துபாய்ல இருந்து அப்பாவித் தமிழர்களை இம்சை பண்ணிட்டிருக்காரே அவர்தான்! தெரியாத்தனமா அவரோட தனிமையின் இசை பக்கம் ஒரு நாள் தனியா போய்ட்டேங்க! அன்னிலருந்து 'வேட்டயபுரம் அரண்மனைக்கு மிட்நைட்ல போய்ட்டு வந்த மாதிரி' பேஸ்தடிச்சு உக்காந்திட்டிருக்கேன்! மனுஷன்.. புலிங்கிறாரு.. நீலிங்கிறாரு... அடர் கானகம், அரூபதர்ஷினினு... ஒரு சின்ன பொண்ண இப்டியா பயமுறுத்துவாங்க? (இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லயா?) அதுக்கப்புறம் 'என்னனு தெரில.. என்ன மாயம்னு புரில' ஒரே கவித கவிதையா கொட்டுது. (கவுஜ?) (தமிழ்நதி அடிக்க வரப்போறாங்க!!)
சரி இன்னிக்கு நம்ம மக்கள்ஸ்க்கு எதாச்சும் கத சொல்லலாமான்னு ஒரு யோசனை. கத சொல்றது.. கேக்கறது ரெண்டுமே ஒரு சுகானுபவம் இல்ல? சின்ன வயசுல கிராமத்துல இருந்தப்போ அப்பா நிறைய கத சொல்வார். அம்மாவும் சொல்வாங்கன்னாலும் அப்பா தான் அதிகம்.
அப்போ எனக்கு 5 வயசு இருக்கலாம். வசதியான குடும்பத்துல பிறப்பு.. ஊர்லயே பெரிய கான்வெண்ட்ல எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிப்புன்னு என் கதைய எழுத ஆரம்பிச்ச விதி.. திடீர்ன்னு "இந்த ஆட்டம் செல்லாது.. செல்லாது"ன்னு எல்லாத்தயும் எச்சில் தொட்டு அழிச்சிட்டு மொதல்ல இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்னு ஒரு சின்ன கிராமத்துல ஓட்டு வீட்ல கொண்டு போய் விட்ருச்சு. நானும் ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்துட்டேன். ஸ்கூல்ல ராஜமரியாதை எனக்கு! (ஏற்கனவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிச்ச சீனியராச்சே!!) புத்தக மூட்டை இல்ல.. கை ஒடிய எழுத ஹோம்வொர்க் இல்ல.. செம ஜாலியான அற்புதமான லைஃப்ங்க அது! எல்லாத்த விட அம்மா, அப்பாவோட அருகாமை அதிகம் கிடச்சுது.
டெய்லி 8 மணியானா கதை நேரம் ஆரம்பிக்கும் எங்க வீட்ல. 7 மணில இருந்தே நானும் தம்பியும், "ப்பா...ப்பா.. கதப்பா... சொல்லுங்கப்பா" னு நான்ஸ்டாப்பா கேட்டுட்டே இருப்போம். அவரும் 'சாப்டாத்தான் சொல்வேன்', 'இந்த பால குடி சொல்றேன்'னு பிளாக்மெயில் பண்ணி காரியம் சாதிச்சுக்குவார்! சரியா 8 மணிக்கு.."ம்ம்.. என்ன கத வேனும் இன்னிக்கு"ம்பார். எங்களுக்கு என்னமோ கடவுள் வந்து என்ன வரம் வேனும்னு கேட்ட மாதிரி டென்ஷன் ஆய்டும்.
''அப்பா சிங்கம் கத சொல்லுங்க.. இல்லன்னா முயல் கத.. வேணாம் யான கத சொல்லுங்க" ன்னு சாய்ஸ் குடுப்பேன் நான்!
"வேணாம்ப்பா கொரங்கு கத சொல்லுங்க... யான வேணாம்" னு அழ ஆரம்பிக்கும் எங்க வீட்டு குட்டிக்குரங்கு. (என் தம்பி.. ஹி ஹி)
"போடா கொரங்கு.. அதான் நீ இருக்கியே? ப்பா..யான கத தான் சொல்லனும்"
"பாருங்கப்பா என்ன கொரங்குன்னு சொல்றா.. நீ தான் கொரங்கு..போ"
ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிக்கறதுக்குள்ள அவசர அவசரமா.. "இப்ப என்ன உனக்கு யான.. உனக்கு கொரங்கு... அவ்ளோதானே.. சொல்றேன் பேசாம இருங்க"ன்னு ரெண்டும் சேர்ந்து வர்ற மாதிரி கத சொல்வார் அப்பா. ஆனா.. இந்த மெகா சீரியல்காரங்க மாதிரி கதைக்கு சம்பந்தமே இல்லாம நாங்க கேட்ட கேரக்டர சேர்த்து எங்கள ஏமாத்திருக்காருன்னு ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு தாங்க தெரிஞ்சுது!!!
எந்த கதயா இருந்தாலும் "ஒரு ஊர்ல" ன்னு ஆரம்பிச்சா தான் சுவாரஸ்யமாவே இருக்கும். அது இல்லன்னா கத கேக்குற சுகமே போய்டும்! இப்டி தினம் தினம் நிறய்ய கதைகள்!! அரக்கர்கள்.. தேவதைகள்.. மாயாஜாலங்கள்.. பேசும் விலங்குகள்... யப்பா! தனி உலகம்ங்க! எல்லாக் கதைகள்ளயும் கெட்டது தோத்து நல்லது ஜெயிச்சதாவே க்ளைமாக்ஸ் இருக்கும்.
"உனக்கு என்ன வரம் வேனும் மைதாஸ்னு கடவுள் கேட்டாரா ... நான் தொட்டதெல்லாம் தங்கமாகனும்னு வரம் வாங்கிட்டான்"
அப்பா.. சொல்லும்போது வியப்பில் எங்கள் கண்கள் விரியும். ஏதோ நாங்களே வரம் வாங்குனது மாதிரி ரெண்டு பேரும் ஆச்சரியமா பாத்துப்போம்! அவன் வாங்கினது வரமில்லன்னு தெரியும்போதும் அதே ரியாக்சன் தான்!!
ஆண்டாளோட காதல், மீராவோட பக்தி, கர்ணனோட கொடை, குசேலரோட நட்பு, மைதாஸோட பேராசை, கண்ணப்பரோட அன்பு, அலிபாபாவோட அதிர்ஷ்டம், சிந்துபாதோட பயணம், ராமனோட பிதா பக்தி, அரிச்சந்திரனோட உண்மை, நளன், நந்தன், அனுமன், பரதன்,சிண்ட்ரெல்லா, ஸ்நோ ஒய்ட்...னு எல்லாரும் அறிமுகமானது அந்த காலகட்டத்துல தான்.
இந்த கதாபாத்திரங்களை எல்லாம் வேறு வேறு பெயர்களோட வாழ்க்கைல அங்கங்க சந்திக்க நேரும்போது தான் கதைகள் வெறும் கதைகள் இல்லன்னு புரிஞ்சுக்க முடியுது.
கத முடியும்போது.. பெரும்பாலும் தம்பி தூங்கியிருப்பான். அல்லது.. "விடிய விடிய மகாபாரதம் கேட்டு குந்திக்கு கர்ணன் பெரியப்பா புள்ள"ன்ன மாதிரி (ஹி ஹி.. புதுசா ட்ரை பண்ணலாமேன்னு!!) என் பக்கம் திரும்பி "ஏய் உனக்கு புரிஞ்சுதா? எனக்கு புரியவேஏஏ இல்ல"ம்பான் ராகத்தோட!
அதுக்கப்புறம் அப்பாட்ட இருந்து இந்த பழக்கம் எனக்கும் தொத்திகிச்சு. ஸ்கூல்ல என்கிட்ட கத கேக்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துச்சு. வீட்லயும் சித்தி பசங்கள கூப்ட்டு வெச்சு சொல்வேன். சித்தி பையன் குரு.. கதை பிரியன் இல்ல.. கதை வெறியன்!! இவன்கிட்ட ஒரே இம்சை என்னன்னா வரிக்கு நாலு சந்தேகம் கேப்பான். சாக்ரடீஸ் ஆவி தான் தம்பியா பொறந்துடுச்சோன்னு அடிக்கடி டவுட்டு பட்ருக்கேன் நான்!
" திரும்பி பாத்தா பெரிய யான ஒன்னு நின்னுச்சு"- இது நான்
"எவ்ளோ பெரிய யான?"-இது அவன்!!
கைகளை விரித்து..'இம்மாம் பெரிசு' ன்னு சொல்லனும் அவனுக்கு. உடனே..
"நாம அன்னிக்கு கோயில்ல பாத்தமே அத விட பெரிசா?"ம்பான்!
ஒருவழியா அது எவ்ளோ பெரிசுன்னு சொல்லி முடிச்சு.."அது கால்ல முள்ளு குத்திடுச்சு" ன்னு சொன்னா "ஏன்?" ன்னு கேப்பான் சுருக்கமா!
"ஏன்னா? என்னடா கேள்வி இது? அது என்ன நம்மள மாதிரி செருப்பா போட்ருக்கு? இல்ல மொசைக் தரைல நடக்குதா? சும்மா தொனதொனன்னு கேள்வி கேட்டின்னா கதையும் கிடயாது ஒன்னும் கிடயாது" ன்னு டென்ஷன் ஆவேன் நான்! அவனுக்கு பிறகு காலேஜிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது எனக்கு. (ரொமான்ஸ் கதைக்கு மாறிட்டேன்!) அப்றம் க்ளாஸ்ல என் ஸ்டூடன்ஸ்க்கு சொல்ல ஆரம்பிச்சு இப்ப பதிவு வரைக்கும் வந்தாச்சு!
போன மாசம் சேலத்தில் அண்ணா வீட்டிற்கு போனப்போ, அண்ணி சீரியல் பாக்க, அண்ணா பையன் (யூ.கே.ஜி. படிக்கிறார்) தனியா ரூம்ல கார்ட்டூன் பாத்துட்டிருந்தான். 6 மணிக்கே சாப்பாடு ஊட்டிட்டாங்களாம்! திடிர்ன்னு எனக்கு, பாவம் இப்டி தனியா தேமேன்னு டிவி பாக்கறானே.. கூப்பிட்டு வெச்சு கத சொன்னா என்னனு ஒரு யோசனை. மெதுவா தாஜா பண்ணி தூக்கி மடில உக்காத்தி வெச்சு.. "அத்த கத சொல்றேன் உனக்கு! என்ன கத வேனும்?"னு கேட்டா.. "பவர் ரேஞ்சர்ஸ் தெரியுமா?"ங்கிறான்! நான் என்னமோ சிவில் சர்வீஸ் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் பாத்த மாதிரி திருதிருன்னு முழிச்சேன்! "அது கார்ட்டூன் கேரக்டர்ஸ் காயத்ரி"ன்னு அண்ணி ஹால்ல இருந்து குரல் குடுத்து காப்பாத்தினாங்க! சரின்னு ரொம்ப யோசிச்சு அவனுக்கு பிடிக்கிற மாதிரி ஸ்டண்ட் ஸ்டோரியா சொல்ல ஆரம்பிச்சேன். ரெண்டு நிமிஷம் கூட இருக்காது.. பயபுள்ள தூங்கி விழறான்! என்ன பண்ணி தொலயறது சொல்லுங்க? "ச்சே 11 மணி வரை தூங்காம அடம் பண்ணுவான்.. இப்ப சமத்தா தூங்கிட்டானே"ன்னு அண்ணி பாராட்டு வேற. அவன் முழுக்கத.. வேணாம்.. அரைக்கதை கேட்டுட்டு தூங்கிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். 2 வரிலயே தூங்கி ரொம்ப அவமானப்படுத்திட்டான்!
நீங்களாச்சும் முழுசாப் படிச்சீங்களா? ரொம்போ டேங்க்ஸ்ப்பா!!
29 comments:
Startinglae kaamedy 1st gearla aarambichu endingla top gearla vandhu ninuduchu :-))
// என் ஸ்டூடென்ட்ஸ் மாதிரியே வந்தமா.. அட்டெண்டென்ஸ் குடுத்தமான்னு உடனே எஸ்கேப் ஆயிடறா!//
Naamalum avanga malay classla idhayae panniduvom :-))
//சாக்ரடீஸ் ஆவி தான் தம்பியா பொறந்துடுச்சோன்னு அடிக்கடி டவுட்டு பட்ருக்கேன் நான்!//
//நான் என்னமோ சிவில் சர்வீஸ் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் பாத்த மாதிரி திருதிருன்னு முழிச்சேன்! //
ROTFL :-))
//அரைக்கதை கேட்டுட்டு தூங்கிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். 2 வரிலயே தூங்கி ரொம்ப அவமானப்படுத்திட்டான்//
2 line muzhusaa kettana? Paiyanukku stamina konjam jaasthi pola ;-))
வெகுஅருமை!!எனக்கும் அப்பா,ஊர் ஞாபகம் வந்துடுச்சி!!
வாழ்த்துக்கள்!!
//Naamalum avanga malay classla idhayae panniduvom :-)) //
அதப்பண்ணுங்க மொதல்ல!!
//குட்டிபிசாசு said...
வெகுஅருமை!!//
நல்லா யோசிச்சு சொல்லுங்க!அருமை தானே? அப்றம் கோவத்துல 'அறுவை' னு பல்டி அடிக்க மாட்டிங்களே?
சாரி!! தெரியாமே ஆக்கம் போட்டுட்டேன், எனக்கு கதை கேட்டால் தூக்கம் தான் வந்தது (உங்க அண்ணன் பையன் மாதிரி), போனால்போகட்டும்னு உங்கல ஊக்கப்படுத்தலாம்னு நெனச்சேன்!!
சும்மா சொன்னேன்!! கோவிச்சுக்கதிங்க!! கவிதையாகட்டும் மொக்கையாகட்டும் நல்ல எழுதிரீங்க!!
//போனால்போகட்டும்னு உங்கல ஊக்கப்படுத்தலாம்னு நெனச்சேன்!!//
பார்றா!! எவ்ளோ நல்ல மனசு!!
ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா, இந்த கவிதை ஜூரம் விட்டுச்சா? வந்தோமா மொக்கை போட்டோமா போனோமான்னு இருக்கனும்ப்பா...நல்ல எழுத்து நடை!!
நம்ம குடும்ப மெம்பர்ஸ் எங்கப்பா, தங்கச்சி ஒரு மொக்கை போட்டிருக்கா..வந்து குமுறுங்கப்பா:-)))
மொக்க போட்டா தான் எட்டி பாக்கறதுன்னு கங்கணம் ஏதாச்சும் கட்டிருக்கிங்களா அபி அப்பா? ரொம்ப மண்ட காய வுட்டுட்டனோ? ஏதோ என்னால முடிஞ்சது.
// தங்கச்சி ஒரு மொக்கை போட்டிருக்கா..வந்து குமுறுங்கப்பா:-))) //
வாங்க வாங்க! கதவெல்லாம் திறந்து தான் வெச்சிருக்கேன்.!!
அப்பாடா சாமி கிட்ட வேண்டிக்கிட்டேன்..இந்தப் புள்ள காத்து கருப்பு அடிச்ச மாதிரி கவிதெ எளுதுதேன்னு...ஹப்பாடா கவிதெயெ விட்டுட்டீங்க...
நல்லாத்தான் எழுதுறீங்கோ
//அப்பாடா சாமி கிட்ட வேண்டிக்கிட்டேன்..//
மொட்ட போட்டு அலகு குத்தி காவடி எடுக்கிறேன்னு தானே? சீக்கிரம் செஞ்சுடுங்க! சாமி கண்ண குத்திட போகுது!!
//நல்லாத்தான் எழுதுறீங்கோ//
வாய் பாராட்டுது.. காதுல புஸ்ஸுனு புகை வருதே? சாரிங்க! நிஜமாவே உங்க கவித எல்லாம் பாத்து பயந்து போய்ருக்கேன்!
//ஹப்பாடா கவிதெயெ விட்டுட்டீங்க... //
நான் கவித எழுதறத நிறுத்தினா நாட்ல இப்டியெல்லாம் சந்தோஷப்பட ஆள் இருக்கா? ம்ம்.. :(
நல்ல எழுத்து நடை, நீங்களும் இங்க கதை சொல்லாமே? ராத்திரி ஆனா சரியா தூக்கமே வர மாட்டேங்குது.
eppidi ippidiyellam superungo
//ரெண்டு நிமிஷம் கூட இருக்காது.. பயபுள்ள தூங்கி விழறான்! என்ன பண்ணி தொலயறது சொல்லுங்க?//
Intha Kalathu Pullaingalukku IQ jasthi!
Easyya Escape agura techniqu ellam finger tips la vechi irukkanga!
// Paiyanukku stamina konjam jaasthi pola ;-))
//
Repeatu!
நல்ல வேளை பையன் 2 வரியோட தூங்கிட்டான். இல்லனா எங்கள மாதிரி கஷ்டப்பட்டிருப்பான்.
சும்மாகாட்டி ஹிஹிஹ்ஹி
அடிக்கடி எங்களுக்கும் கதை சொல்லுங்க
என்னக்கா!
மொக்கையா? அதும் நம்ம காயத்ரி ஆண்ட்டி கும்மி அடிக்க விட்ருக்காங்களா? எனக்கு தெரியாம போயிடுச்சே
இது தெரியாம மத்தியானத்துல இருந்து மங்களூர் சிவா மாமா அய்யனார் மாமா பதிவுலாம் படிச்சு மண்ட காஞ்சு உக்காந்திருந்தேனே.
அய்யோ இது பழய பதிவா? தமிழ்மனம் பாத்துட்டு வந்துட்டேன். ஏமாத்திட்டிங்க ஆண்ட்டி
//நீங்களாச்சும் முழுசாப் படிச்சீங்களா? ரொம்போ டேங்க்ஸ்ப்பா!!//
படிச்சமுங்க. நல்லாருக்குங்க.
testing !!!
வாங்க வாங்க! கதவெல்லாம் திறந்து தான் வெச்சிருக்கேன்.!!
//
:(
ஆசானே, ஊங்கள் பார்வைக்கு
http://surveysan.blogspot.com/2007/10/blog-post_06.html
அய்யோ தாங்க முடியலை
கூட்டுக்குடும்பங்கள் உடைந்த பின்னர்
குழ்ந்தைகளுக்கு கதைசொல்லும் பழக்கமும் போச்சு
நான் எழுதிய வரிகள பிடிச்சிருக்குனு சொன்னத பாக்கும்போது பாவமா இருக்கு.
Post a Comment