Friday, May 18, 2007

விட்டு விடுதலையாகி...

காலத்தின் அடர்கிளையிலிருந்து
விடைபெற்ற இலை ஒன்று
நிதானமாய் தரையிறங்கிக் கொண்டிருக்கிறது
மரத்திடம் நன்றி சொல்லியபடி..

இருத்தலின் உணர்வையும்
விடுபடலின் களிப்பையும்
தன் அசைவால் உரைத்தபடி
அது இறங்குகிறது கீழே....

காலம் தன் கடைசி வர்ணத்தை
அதன் உடலில் பூசியிருக்கிறது...

அனுபவத்தின் நீட்சியாய்
புடைத்திருக்கின்றன அதன் நரம்புகள்...

அவசர அவசியங்கள் ஏதுமின்றி..
காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு..
வெறுமனே
தரையிறங்கிக் கொண்டிருக்கிறது அது
கற்பித்தலுக்கான பிரக்ஞை ஏதுமின்றி!

12 comments:

G3 said...

eppavum pola asathal kavidhai.. indha speedla posta?? :-))

enakkellam 4 naalaikku oru post podavae netti thalludhu :-((

Seri front pagela koranjadhu 3 postaavadhu irukkara maadiri veikkalaamae.. nee podara speedukku sometimes we miss few posts.. edhechaiya sidela previous post lista paatha dhaan miss pannadhey theriyudhu..

MyFriend said...

கடந்த சில பதிவுகளை படிக்க முடியவில்லை.. ஒரே இரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன். பின்னர் சாவகாசமா வந்து படிக்கிறேன்.. டாட்டா! :-)

தமிழ்நதி said...

காயத்ரி! நீங்க ஒண்ணு பண்ணுங்க. 'கவிதை பிடிக்கும்; ஆனா எழுதத் தெரியாது'என்ற வரியை உங்கள் 'புறொபைல்'இல் இருந்து நீக்கிவிடுங்கள். பிதாமகர்கள் என்ன சொல்கிறார்களோ தெரியாது எனக்கு உங்கள் கவிதைககள் பிடித்திருக்கின்றன. ஒரு தடவை கூட கடந்துபோக முடியவில்லை.

பாரதி தம்பி said...

சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வாழ்க்கையை காற்றில் எழுதிச் செல்கிறது....
-ஷெல்லி..

----உங்கள் கவிதையைப் படித்த விநாடியில் சட்டென்று மனதிற்குள் சிட்டுக்குருவி போல இந்த வரிகள் பறந்து சென்றன.
நன்றாக எழுதுகிறீர்கள்..தமிழ்நதி சொன்னதுபோல, புரொஃபைலை திருத்தி எழுதுவதே நியாயம்.

காயத்ரி சித்தார்த் said...

//Seri front pagela koranjadhu 3 postaavadhu irukkara maadiri veikkalaamae..//

தோழியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

//ஒரே இரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன். பின்னர் சாவகாசமா வந்து படிக்கிறேன்.. //

தங்கச்சி இது நல்லதுக்கு இல்ல! எனக்கு கோபம் வராது...

//எனக்கு உங்கள் கவிதைககள் பிடித்திருக்கின்றன. ஒரு தடவை கூட கடந்துபோக முடியவில்லை//

தமிழ்நதி நீங்க பாராட்டாதீங்க என்னை. தலை கழுத்துல நிக்க மாட்டிங்குது. அவ்ளோ கனம் ஏறிக்குது!! நன்றி

//நன்றாக எழுதுகிறீர்கள்..//

நன்றி ஆழியூரான்.

குருத்து said...

நல்ல கவிதை. மரணம் பற்றிய நினைவுகள்தான் மனதில் எழுகிறது.

நம்நாட்டில் மரணம் துக்கமாக தான் பார்க்கப்படுகிறது. பேரன், பேத்தி என நன்றாக 80வயது வரை வாழ்ந்தவர்கள், இறந்தால்கூட இங்கு ஒப்பாரி தான்.

உங்கள் கவிதை, ஜென் தத்துவ வழியிலான வாழ்வை, இறப்பை எனக்கு சொல்கிறது.

Vaa.Manikandan said...

சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வாழ்க்கையை காற்றில் எழுதிச் செல்கிறது....
-ஷெல்லி..


//ஷெல்லி..//

????

கையேடு said...

good writing with profound thought

காயத்ரி சித்தார்த் said...

//ஷெல்லி..//

????//

மணிகண்டன் சார் அது ஷெல்லி எழுதிருந்தா என்ன? பிரமிள் எழுதினா என்ன? கவிதை தானே முக்கியம் நமக்கு!! விட்ருங்க...

manasu said...

//காலம் தன் கடைசி வர்ணத்தை//

அது என்ன கலரு?

saran said...

ungal kavithaigal yeliyathaagavum, aazhntha porutcherivaiyum kondullathu.nalla kavithai yenpathu nalla vaasippanubavaththai yerppaduthum.
ungal kavithai athai seygirathu.
nanri.
saravanan.
saran_cinema@yahoo.com

MSK / Saravana said...

எங்கோ படித்த ஒரு கவிதையின் ஞாபகம்..