Thursday, May 3, 2007

..................

நடைபாதைக் கடையில்...
லாரிகளின் முகப்பில்........
பேருந்துப் பயணத்தில்.....
திருமண அழைப்பிதழில்...
சுவற்றுக் கிறுக்கல்களில்...
யாரோ அழைக்கையில்...
எதிர்பாராத விதமாய்
சந்திக்க நேர்ந்து விடுகிறது...

உன் பெயரை!

10 comments:

Anonymous said...

நல்லதொரு கவிதை....என் அனுபவ நிகழ்வென கூட கொள்ளலாமோ !!

காயத்ரி சித்தார்த் said...

அனுபவம் தான் ரவி சார்.. காதலிக்காம காதல் கவிதைகள் எழுதலாம்.. பிரியாம பிரிவுக்கவிதைகள் எழுத முடியாது. நன்றி

தென்றல் said...

/காதலிக்காம காதல் கவிதைகள் எழுதலாம்.. பிரியாம பிரிவுக்கவிதைகள் எழுத முடியாது. /

பன்ச் டயலாக் ஆ? இரண்டுமே நல்லா இருக்கு!

AKV said...

நானும் இதை பல முறை அனுபவித்திருக்கிறேன்.. நினைவுகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க எந்த பெயரை மறக்க வேண்டும் என நினைக்கிறோமோ அந்த பெயர் மட்டும் அடிக்கடி நம் கண்ணில் பட்டு வாட்டி வதைக்கும்.. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விசயமிது..

காயத்ரி சித்தார்த் said...

ஆமாங்க! ஏ.கே.வி.. என் பதிவு எல்லாம் மெனக்கெட்டு படிச்சிட்டிருக்கீங்க போல! நன்றி :)

நாமக்கல் சிபி said...

//காதலிக்காம காதல் கவிதைகள் எழுதலாம்.. பிரியாம பிரிவுக்கவிதைகள் எழுத முடியாது//

காதலிக்காமலும்
எழுதி விடலும்
காதல் கவிதைகள்!

பிரிந்து பார்க்காமல்
எழுத இயலுமோ
பிரிவுக் கவிதைகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா பின்னூட்டத்தில் என்ன ஒரு தத்துவம் காயத்ரி...
:))

அழுகையா வருது ...ஒரே ஃப்லிங்ஸ்..பா...

ILA (a) இளா said...

ஆஹா, கவிதை நல்லா இருக்கே. அதுவும் சுருக்கமா மனசுல பதியற மாதிரி இருக்குங்க.

காதல் பிரிவதும் இல்லை,
சேர்வதும் இல்லை!
பிரிதல் உடல்களேயன்றி
உள்ளங்களல்ல!
காதல் வாழும்!

G.Ragavan said...

அருமை. அருமை.

பாலைத்திணையை சோலைத்திணையாக்க கண்ணீர் வெள்ளாமை செய்ய வைக்கின்ற கவிதை. மிகவும் ரசித்தேன்.

Krishna said...

எனக்கும் இந்த துயரங்கள் ஏற்படுவது உண்டு. மீண்டும் என் நினைவு குளத்தில் கல் எறித்தது உங்கள் கவிதை வரிகள் :-(