Tuesday, May 29, 2007

நீர்வழிப்படூஉம் புணை...

ஆயத்தங்கள்
மதிப்பீடுகள்
சாதுரியமான திட்டமிடல்கள்
அனைத்தையும் அலட்சியப்படுத்தி
தன் போக்கில் நகர்கிறது வாழ்க்கை
வெகு இயல்பாய்....

நிர்மாணிக்கப்படாத மேடைகளில்
ஒத்திகை பாராத காட்சிகள்
சுவாரஸ்யம் கூட்டுகின்றன
அடி நாவில்!

நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர் வரிசையில்
நானும் இருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து
நகம் கடித்தபடி...

6 comments:

குருத்து said...

//அலட்சியப்படுத்தி
தன் போக்கில் நகர்கிறது வாழ்க்கை
வெகு இயல்பாய்....//

ஆற்றில் போக்கில் தக்கையாய் மாறிவிடு என்கிறார்கள் சாமியார்கள்

வாழ்க்கையை உங்களால் தள்ளி நின்று பார்க்கமுடிகிறது.

சென்னை மாதிரி பெருநகர வாழ்க்கை சூழலில்

"ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்"

இதுதான் எங்களால் முடிகிறது

G3 said...

//அதோ பார்வையாளர் வரிசையில்
நானும் இருக்கிறேன்//

Pakkathulayae naanum okkandhirukkaenae.. gavanichiyama?

Super kavidhai..

//அனைத்தையும் அலட்சியப்படுத்தி
தன் போக்கில் நகர்கிறது வாழ்க்கை
வெகு இயல்பாய்....//
Naama correcta aayatham pannoma madhipeedu pannomannu kanakku paathey paadhi vaazhkai veena pogudhu :-(( vaazhkaiya adhan pokkula rasikkara pakkuvam silarukku mattumae varama amanjirukku :-))

இராம்/Raam said...

அட்டகாசமா இருக்கு காயத்ரி.... :)

//நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர் வரிசையில்
நானும் இருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து
நகம் கடித்தபடி...//

Super....

காயத்ரி சித்தார்த் said...

Socrates... என் கவிதைய படிச்சிட்டு ரொம்ம்ம்ப யோசிப்பிங்க போல!! நன்றி.

பார்றா!! நம்ம ஜி3 கூட சீரியஸா பேசறா!! பக்கத்துல உக்காந்து இம்சை பண்றது நீதானா?

தேங்க்ஸ் ராம்..

ப்ரியன் said...

அருமையான கவிதை காயத்ரி...நல்ல எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

CVR said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக அருமை!!!
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்!!

வாழ்த்துக்கள்!! :-)