Saturday, May 5, 2007

புலம்ப வெச்சிட்டியே பரட்டை!


உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா? எனக்கு முந்தாநேத்து வரை லேசா தான் இருந்துச்சு.. "மாசற்ற உள்ளம் கொண்ட மகர ராசி நேயர்களே!" அப்டினு ஆரம்பிச்சா.. "உனக்காச்சும் தெரியுதே"னு சந்தோஷமா படிப்பேன். "சனி சைடுல பாக்கறான்.. குரு கோணையா பாக்கறான்..ராகு வீட்ல கேது பால் காய்ச்சிட்டான்.. தொட்டது துலங்காது.. வெச்சது வெளங்காது"னு எவனாச்சும் சொன்னா "சர்தான் போய்யா"னு போய்டுவேன். அப்டிதாங்க.. முந்தாநேத்து.."உங்களுக்கு நேரம் சரியில்ல.. ஜாக்கிரதையா இருங்க.. குஷ்டம்.. ச்சே.. கஷ்டம் வரப் போகுது"னு போட்டிருந்தான். கேட்டேனா நான்? மாங்கு மாங்குனு படிச்சு, 10th எழுதி முடிச்சு வீட்ல சிவனேனு ரெஸ்ட் எடுத்திட்டிருந்த தங்கச்சிய வேற தர தரனு இழுத்திட்டு... "பரட்டை என்கிற அழகு சுந்தரத்த" பாக்க போய்ட்டேன்!


பேர பாருங்களேன்.. தனுஷுக்கு ஆகாதவங்க யாரோ தான் டைட்டில் செலெக்ட் பண்ணிருப்பாங்க போல! ஆனா..சும்மா சொல்லக்கூடாது.. சூப்பர் படம்ங்க. பக்கத்து சீட்காரர் அப்டியே லயிச்சுப் போய்..மெய் மறந்து.. தூங்க ஆரம்பிச்சுட்டார்!! ( படம் பேர் "குறட்டை"னு நினைச்சுட்டாரோ என்னவோ?)

சரி என்ன கதைனு கேக்கறிங்களா? ஒண்ணும் இல்லங்க.. தனுஷ் ஒரு கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்து சந்தானத்த தேடறார்.. அர்ச்சனா பின்னாடியே கிளம்பி வந்து தனுஷ தேடறாங்க.. அவங்களோட சேர்ந்து நம்ம மீரா ஜாஸ்மினும் தேடறாங்க... கூடவே ஒரு ரவுடி கும்பலும் அவர தேடுது...அப்றம் தனுஷ் அவங்கம்மாவ தேடறார்.... மறுபடி எல்லாரும் தனுஷ தேடறாங்க..இப்டி surf excel விளம்பரம் மாதிரி, எல்லாரும் தேடறாங்க.. தேடறாங்க.. தேடிட்டே இருக்காங்க!! ( யாராச்சும் யாரையாச்சும் கண்டுபிடித்தார்களா? முடிவை வெள்ளித்திரையில் காண்க.)


படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல என் தங்கச்சி என்னை பாத்து ஒரு 'லுக்' விட்டா பாருங்க..கேவலமாப் போய்டுச்சு! ஆனா....தனுஷ்.. 'சின்னதம்பி' பிரபுவையும்..'பதினாறு வயதினிலே' கமலையும்.. திருப்பாச்சி விஜயையும் சேர்த்து செஞ்ச மாதிரி ஒரு வித்தியாசமான கேரக்டர் -ல கலக்கியிருக்காருங்க! என்ன.. நான்தான் ' இவர் கேரக்டரயே புரிஞ்சுக்க முடிலயே' னு சத்யராஜ் ஸ்டைல்ல புலம்பிட்டிருந்தேன். படம் முடியும் போது..

இது என்ன கதை? தனுஷ் எதுக்கு ரவுடி ஆகறார்? நாசர் போலீஸ்க்கு ஃப்ரண்டா? ரவுடிங்களுக்கு ஃப்ரண்டா? அவர் சொல்றத எப்டி எல்லாரும் கேக்கறாங்க? மீரா ஜாஸ்மின் யாரு? ஸ்டூடெண்ட்டா.. ரிப்போர்ட்டரா? ஒரு ரவுடிகிட்ட எதுக்கு பேட்டி எடுக்கணும்? பேட்டி எடுக்க வந்தவங்க எதுக்கு பாட்டு பாடணும்? தனுஷ காணோம்னு அவர்கிட்டயே சொல்றாங்களே.. இவங்க கண்ணு என்ன நொள்ளையா? நடு ரோட்டுல ஒருத்தன வெட்டிக் கொன்னுட்டு.. தனுஷ் பாட்டுக்கு டீக்கடைல டீ போடறாரே அதெப்படி? க்ளைமாக்ஸ் ல தனுஷ கொல்ல வந்த ரவுடி கத்திய கீழ போட்டுடறாரே ஏன்? திருந்திட்டாங்களா?

இப்டி 'காயத்ரி ஒரு கேள்விக்குறி' யா தியேட்டர விட்டு வெளில வந்தேன். என்ன சொன்னாங்க.. என்ன சொல்ல வர்றாங்க னு ஒண்ணுமே புரியலிங்க!

தனுஷ்.. மீரா ஜாஸ்மின்..அர்ச்சனா.. சுரேஷ்கிருஷ்ணா..அந்த குருகிரண்.. (மீஸிக் டைரடக்கரு!) எல்லாரும் பேசி வெச்சிகிட்டு நம்மள பழிவாங்கிட்டாய்ங்க. அர்ச்சனா நடிக்கிறது போதாதுனு டான்ஸ் வேற ஆடறாங்க! பாசக்கார ஆத்தாவும்.. மவனும் ஜஸ்ட் மிஸ் ல பாக்காம போற சிச்சுவேஷன கேட்டு குருகிரணுக்கு அழுவாச்சி வந்துடுச்சு போல.. பி.ஜி.எம்லயே அழறார் மனுஷன்! விக்ரமன் படம் மாதிரி 'ஆஆஆ'னு கோரஸ் வேற! (கொல்ராங்கப்பா!)


ஆக மொத்தம் moral என்னான்னு கேட்டிங்கன்னா...
மின்னறதெல்லாம் பொன்னாக முடியாது....ரஜினி மருமகனெல்லாம் ரஜினி ஆக முடியாது.! படம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் வூட்டுக்குப் போங்க!

9 comments:

MyFriend said...

நானும் நேத்துதாங்க பார்த்தேன்.. துப்பி துப்பி எச்சிலே தீர்ந்து போச்சு.. ரீமேக்காம் ரீமேக்கு..

MyFriend said...

ஒல்லி குச்சி தனுஷ் இதே ரேஞ்சுல நடிச்சா கோவிந்தா கோவிந்தாதான்.. :-P

//மின்னறதெல்லாம் பொன்னாக முடியாது....ரஜினி மருமகனெல்லாம் ரஜினி ஆக முடியாது.!//

சூப்பரா சொன்னீங்கோ காயத்ரி..

Santhosh said...

haha Good Ones. Nengalum antha padatha pathingala. 30 mins ku mela paka mudiyala yebba sami.

Ayyanar Viswanath said...

கண்மணி,இம்சை யெல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க வந்தாச்சி காயத்ரி :)

வாங்க! வாங்க!!

நல்லவேளை படம் இன்னும் பார்க்கல

ராதா செந்தில் said...

இன்று (06.05.07) பார்க்கலாம் என்று நினைத்தேன். நன்றி காயத்ரி.

கதிர் said...

இருவது வருசத்துக்கு முந்தி எடுத்திருந்தா கூடா இந்த படமெல்லாம் ஓடியிருக்காது. எனக்கென்னவோ சுரேஷ் கிருஷ்ணா பாத்தாதான் பரிதாபமா இருக்கு. வேற எவனோ ஒருத்தன் டைரக்ட் பண்ணிட்டு அவர் பேர போட்டாமாதிரி ஒரு பீலிங்.

Anonymous said...

நல்ல விமர்சனம் காயத்ரி! இந்த படம் பட மோசமுனு தெரிஞ்சே நான் இத பார்க்கல்ல. ஆனா, ஒரு ஆச்சிரியம் என்னன்னா...என் அக்காவும் தங்கச்சியும் படத்த பார்த்துவிட்டு வந்து 'சூப்பர்' படமுனு சொன்னாங்க. எதவச்சு இப்படி சொன்னாங்குனு தெரியுல. இதுல வேற கடைசி 20 நிமிடம் படம் இவங்கல கண் கலங்க வச்சுடுச்சாம்!! என்ன கொடுமை இது!

Anonymous said...

:-).. very good review..

Unknown said...

செம விமர்சனம் :D

//மாசற்ற உள்ளம் கொண்ட மகர ராசி நேயர்களே!" அப்டினு ஆரம்பிச்சா.. "உனக்காச்சும் தெரியுதே"னு சந்தோஷமா படிப்பேன்//

//ஆக மொத்தம் moral என்னான்னு கேட்டிங்கன்னா... மின்னறதெல்லாம் பொன்னாக முடியாது....ரஜினி மருமகனெல்லாம் ரஜினி ஆக முடியாது.! படம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் வூட்டுக்குப் போங்க!//

கலக்கல் :)