Sunday, May 13, 2007

முதல் நாள் இன்று!

வழக்கத்தை விட சீக்கிரமாய்
விடிந்து விட்டது இன்று!

மனசு மொட்டு விட்டிருக்கிறது..

பக்கத்து வீட்டுப் பொடியன்...
பூ விற்கும் பாட்டி...
தினமும் பார்க்கும்
எதிர்வீட்டு மனிதர்கள்...
எல்லார் முகத்திலும்
அழகு கூடியிருக்கிறது!

மெலிதாய் புன்னகை ஒன்று
அடிக்கடி பூத்து உதிர்கிறது
இதழோரத்தில்!

பேருந்து நெரிசலில்
கால் மிதித்த பெண்ணை
பெருந்தன்மையாய் மன்னிக்க முடிகிறது!

மற்றபடி...
மாற்றங்கள் ஏதும்
நிகழவில்லையென்றே
நம்ப வைத்திருக்கிறேன் மனதை!

8 comments:

அபி அப்பா said...

Gayathri!nalla irukkuppa intha kavithai!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க மனசு வேணா நம்பினா நம்பிக்கட்டும் ஆனா நான் நம்ப மாட்டேன்...எதோ விஷய்ம் இருக்கு.
மொட்ட்டு எப்ப விரிஞ்சு மலரும்...
மொட்டுக்கே இத்தனை சந்தோஷம்ன்னா
மலர்ந்து பூவானா ?

MyFriend said...

//வழக்கத்தை விட சீக்கிரமாய்
விடிந்து விட்டது இன்று!//

12 மணிக்கு எழுந்திரிச்சுட்டு சீக்கிரமா எழுந்திரிச்சிட்டீங்கன்னு கதையா விடுறீங்க? :-P

Ayyanar Viswanath said...

:)

நல்லாருக்கு

G3 said...

மனசு நம்பிடுச்சா?? சரி பரவாயில்ல.. எங்களுக்கு மட்டும் உண்மைய சொல்லிடுமா சமத்து பொண்ணில்ல :-))

//மெலிதாய் புன்னகை ஒன்று
அடிக்கடி பூத்து உதிர்கிறது
இதழோரத்தில்!//
பூம்.. வந்துடுச்சோ?? (சோர்ஸ் : அழகிய தீயே:-)))

கவிதை எப்பவும் போல டாப்.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.. (சந்தோஷமான கவிதைகள் :-)))

காயத்ரி சித்தார்த் said...

வாங்க அபி அப்பா! இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுதே! தேங்க்ஸ்!

மை ஃப்ரண்ட் உன் அறிவே அறிவுடி தங்கம்! விடிஞ்சது சீக்கிரம்.. எந்திரிச்சது 12 மணிக்கு. ஓகே வா!

முத்துலட்சுமி.. ஜி3 ரெண்டு பேரும் அடக்கி வாசிங்க! இந்த கவிதை கற்பனை தான்னு நான் சொல்வேன்.. நீங்க நம்பித்தான் ஆகனும்!!

தேங்க்ஸ் அய்யனார்! :)

G3 said...

//இந்த கவிதை கற்பனை தான்னு நான் சொல்வேன்.. நீங்க நம்பித்தான் ஆகனும்!!//

ஆசை.. தோசை.. அதுக்கு வேற ஆள பாருங்க.. :P

Nizam Khan said...

//மெலிதாய் புன்னகை ஒன்று
அடிக்கடி பூத்து உதிர்கிறது
இதழோரத்தில்!//

அழகான வரிகள்
"Smile" என்ற வார்த்தைக்கு இதர்க்கு மேல் எந்த அகராதியிலும் ஒரு விளக்கம் பார்த்த ஓர்மை என்னக்கு இல்லை

from KSA