Tuesday, May 8, 2007

வலி சொல்லும் வார்த்தைகள்!

"யேய் யாருடா அவ?"

"எவ?"

"ம்ம் இன்னிக்கு உனக்கு போன் பண்ணினப்ப அட்டெண்ட் பண்ணி பேசினாளே? அவதான்."

"என்னடி உளர்றே? யாரு பேசினா? நீ எப்ப போன் பண்ணினே?"

"யாருனு எனக்கென்ன தெரியும்? அவ தான் எப்ப கூப்டாலும் போன் எடுத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்" னு சொல்லிட்டே இருந்தா!"

".....................?!?"

"சொல்லி வை அவகிட்ட! நீ என் தொடர்பு எல்லைய விட்டு எங்கயும் போக முடியாதுனு!!"

நீ சிரித்தாய்! என் குறும்பு புரிந்து.. என் ஆதங்கம் புரிந்து.. என் அன்பு புரிந்து.. பெருமையாய்...கர்வமாய் சிரித்துக் கொண்டிருந்தாய்!!

இன்று என் எல்லைகள் உன் வசதிக்கேற்ப விஸ்த்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க நீயோ உன் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேயிருக்கிறாய்!

9 comments:

MyFriend said...

இது கதையா? கவிதையா? காமெடியா?

எந்த பிரிவில் சேர்ப்பது? ;-)

காயத்ரி சித்தார்த் said...

ஏண்டிம்மா தங்கச்சி என் சோகம் உனக்கு சிரிப்பா இருக்கா?

CVR said...

இதயத்தை சிரிக்கவைத்து ஒத்தடம் கொடுத்து லேசாக்கி மிருதுவாக்கிவிட்டு இப்படி சுருக்கென்று முள் தைப்பது ஞாயமா?? :-(

காயத்ரி சித்தார்த் said...

நான் என்ன செய்ய சி.வி.ஆர்? அனுபவம் அப்படி!

சோமி said...

நன்னாயிருக்குங்க.

Anonymous said...

ஊடலாக இருக்கும்!

Mani - மணிமொழியன் said...

//இன்று என் எல்லைகள் உன் வசதிக்கேற்ப விஸ்த்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க நீயோ உன் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேயிருக்கிறாய்! //

//கவிதை பிடிக்கும்.. ஆனா எழுத தெரியாது//

அழகான பொய்கள்...

அபி அப்பா said...

.

குசும்பன் said...

"இன்று என் எல்லைகள் உன் வசதிக்கேற்ப விஸ்த்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க நீயோ உன் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேயிருக்கிறாய்!"

உங்கள் எல்லைக்குள் வர தடையாக இருக்கும் அவரின்
தொடர்புகளை துண்டிக்கிறார் என்று எடுத்துகலாமா?