Saturday, May 5, 2007

அண்ணாந்து பார்க்கிறேன்!

ஒண்ணுமில்லங்க! புலம்பறத விட்டு புதுசா என்ன எழுதலாம்னு 2 நாளா கம்ப்யூட்டர முறைச்சு முறைச்சு பாத்துட்டு இருக்கேன். அதுக்கு மட்டும் வாய் இருந்தா.. " உங்கக்கா என்னை படுத்தறா டா" னு என் தம்பிட்ட போய் மூக்கால அழுதிருக்கும்!

சரி எத எழுத? பொறந்து வளர்ந்து 25 வருஷம் முடியப் போகுது. இத்தன நாளா நாம என்ன கிழிச்சிருக்கோம்னு எழுதலாமானு ஒரு யோசனை. இந்த..'திரும்பி பார்க்கிறேன்' 'சைடுல பாக்கரேன்'னெல்லாம் நிறைய பேர் டைட்டில் வெச்சுட்டதால..கொஞ்சம் புதுமையா இருக்கட்டுமேனு இப்டி தலைப்பு வெச்சிட்டேன்!

சரி உள்ளார எத எழுத? அடிக்கடி சவுண்டு உட்டு நம்மள டார்ச்சர் பண்ணுவாளே ஒருத்தி.. அதாங்க என் மனசாட்சி.. அவகிட்ட கேட்டேன். அவ்ளோதான்...ஒண்ணாங் கிளாஸ்-ல முதலும் கடைசியுமா கணக்குல 100 க்கு 100 வாங்கி சாதனை (!) படைச்சேனே அதச் சொல்லவா? அஞ்சாங்கிளாஸ்-ல கிளாஸ் லீடரா பதவி உயர்வு கிடச்சுதே அத சொல்லவா? எட்டாவது -ல அவன் பேரென்ன?.. ம்ம்.. ஜெயக்குமார். அவன் என் நோட்டுல கோணல் மாணலா ஐ லவ் யூ.. னு எழுதி வெச்சத பாத்து..ஐயோ அம்மானு கத்தி கூப்பாடு போட்டு ஹெச்.எம் ரூம் வாசல்ல அவன முட்டி போட்டு நிக்க வெச்சனே அந்த வீர சாகசத்த சொல்லவா? தமிழ் படிக்கிறேன் பேர்வழினு ஒரு சாமியார் காலேஜ் ல சேர்ந்து.. மொத வருஷமே பற்றறுத்து துறவறம் போகவிருந்தனே அந்த சோகத்த சொல்லவா? வேலைக்கு போன ஒரே வாரத்துல.. ஒருத்தன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்க.. கிடுகிடுனு கால் நடுங்க ஓடி வந்து அம்மாவ மொட்டை மாடிக்கு இழுத்துட்டு போய்.. எல்லாத்தயும் உளறிக் கொட்டி.."நான் எதுமே பண்ணலமா.. அவன் தான் கேட்டான்"னு சொதப்பினேனே அத சொல்லவா? னு பேஜார் பண்ண ஆரம்பிச்சுட்டா. நானும் யோசிச்சு யோசிச்சு கடைசில ஒன்னும் சொல்லப் போறதில்லனு முடிவு பண்ணிட்டேன்.

இதுல நான் எதாச்சும் சொன்னேனா?சொல்லலயா? அத நீங்க தான் சொல்லணும். :)

5 comments:

அபி அப்பா said...

காயத்ரி பொண்ணே!

வாங்கிக்கோ இந்த அண்ணாச்சி வாழ்த்துக்களை!

நல்லா எழுத அண்ணனின் ஆசிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காமெடி ன வுடனே ஓடி வந்துட்டீங்களா? அபி அப்பா...

காயத்ரி சும்மா சூப்பரா எழுதறீங்க.. வாழ்த்துக்கள்.ஒரு விஷயத்தையும் சொல்லாம ரகசியமா வச்சுக்கிட்டு எப்படிம்மா பதிவு போடற நீ...பிரமாதம்.

காயத்ரி சித்தார்த் said...

அபி அப்பாவ சித்தப்பானு கூப்பிட்டு தான் பழக்கம் எனக்கு! ( அட! என் சித்தி பொண்ணு பேரு அபிங்க!) இங்க ஒரு அண்ணனா? ரொம்ப டேங்ஸ் அண்ணா! அப்டியே நம்ம லட்சுமி அக்காவுக்கும் ஒரு நமஸ்காரம்!

MyFriend said...

என்னுடைய கமேண்ட் பப்ளிஷ் ஆகலையே! :-(

அண்ணே, இதை கொஞ்சம் கேளுங்க...

ராதா செந்தில் said...

முன் வெச்ச கால பின் வைக்காதீங்க மேடம்.