Tuesday, September 30, 2008

காதலில் விழுந்தேன் - விமர்சனம்


நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.

அதிலும் சித்தப்பாக்கள், சித்திகள், குழந்தைகள், மாமா, அத்தை, பாட்டி, தம்பி, தங்கை என குடும்ப சகிதமாய் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த படமல்ல. நேற்று முன்தினம் மாலை சொந்தங்கள் சந்தித்துக் கொண்ட அபூர்வ நாளை கொண்டாடுவதென முடிவெடுத்து இந்த திரைக்காவியத்தைப் பார்க்கப் போய் பாரபட்சமின்றி எல்லோரும் ஒருசேர துயரத்தில் விழுந்தோம். பட்ட காலிலே படும் என்பார்கள். எனக்கு பட்ட தியேட்டரிலேயே படுகிறது.

கடந்த 11 வருடங்களுக்கும் மேலாய் திரையரங்கு பக்கம் வந்திராத எங்கள் தாத்தி (பாட்டி) படத்தின் நடுவே என்னை அழைத்து 'என்னைக் கூட்டிட்டு வர வேற நல்ல படமே கிடைக்கலயா உங்களுக்கு?' என்றார்கள் பரிதாபமாய். என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்... நிறுத்தி நிறுத்தி படம் முழுக்க அழுது கொண்டேயிருந்தாள். இரவுக் காட்சி என்பதால் பாதுகாப்பின் அவசியமுணர்ந்து, எழுந்துபோக வழியின்றி சித்தப்பாக்கள் சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

சரி கதைக்கு வருவோம்.. யாரோ 4, 5 பலவான்கள் துரத்தி வர அவர்களிடமிருந்து காதலியை காப்பாற்றி புகைவண்டியிலேறி காதலர்கள் உடன்போக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது படம். கதைகளில், திரைப்படங்களில் வரும் காதலுக்கு எப்போதும் நாமெல்லோருமே முழு ஆதரவாளர்கள் தான் என்பதால் 'அப்பாடா தப்பியாச்சு' என்ற ஆசுவாசமும் 'அவனுங்க ஃபாலோ பண்ணாமஇருக்கனுமே' என்ற பதற்றமும் ஒருமித்து எழுகிறது. காதலியை படுக்க வைத்துவிட்டு டிக்கெட் பரிசோதகர் லிவிங்ஸ்டனிடம் தங்கள் கதையை சொல்லவாரம்பிக்கிறார் நாயகன். (வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அல்ல)

ஏழை நாயகன் நகுலன், செல்வந்த நாயகி சுனேனா. ஓர் நாள் சுனேனாவின் துப்பட்டா மிக அழகாய் காற்றில் பறந்து சென்று நகுலனின் முகத்தை மூட, தமிழ் சினிமா நியதிப்படி காதல் வந்திருக்க வேண்டிய காட்சியில் எதிர்பாராத விதமாய் விபத்து வந்துவிடுகிறது. (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா!) தன்னால் தான் விபத்து நேர்ந்தது என்ற குற்ற உணர்வின் நீட்சியில் நகுலனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பணிவிடைகளும் செய்கிறார் சுனேனா. விபத்து நட்பாகி, நட்பு காதலாகிறது. திடீரென விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் சென்று திரும்பும் நகுலனிடம் சுனேனா இறந்து விட்டதாக சொல்கிறார்கள் நண்பர்கள். அதை நம்ப மறுக்கும் நகுலன் மார்ச்சுவரிலிருந்து காதலியின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார். முதல் காட்சியில் ரயிலில் அவர் படுக்க வைத்ததும் அதைத்தான் என்பது தெரிய வரும்போது 'ஏப்ரல் ஃபூல்' ஆனது போல் முகத்தில் அசடு தட்டுகிறது நமக்கு. சுனேனாவைக் கொன்றது நகுலன் தான் என்று காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, கொன்றது யாராயிருக்குமென நம்மையும் தீவிரமாய் யோசிக்க வைத்து 'அட..இது கூடவா தெரில? சொத்துக்காக அவங்க சித்தப்பா தான் கொன்னுட்டார்' என்று பாரம்பரியமிக்க புராதன முடிவையே சொல்லி அசத்தியிருக்கிறார்கள்!

காதலர்கள் பைக்கில் சுற்றுதல், ஹோட்டலில் சந்தித்தல், மேசையினடியில் காலுரசிக் கொள்ளுதல், பூக்கள் சிதறிக்கிடக்கும் சாலையில் கைகோர்த்து நடத்தல், தனியறையில் அரைகுறை ஆடையில் நடனமாடுதல், இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட வழமையான தமிழ்த்திரையம்சங்கள் எதற்கும் குறைவின்றி, காட்சிக்குக் காட்சி ஏதோவோர் படத்தை நினைவூட்டியபடி நகர்கிறது முற்பாதி.

முற்பாதி தான் இப்படி நிறைய படங்களை ஞாபகப்படுத்துகிறதே தவிர பிற்பாதி படம் அப்படியில்லை. அது சந்தேகத்திற்கிடமில்லாமல் முழுமையாய் கமல்ஹாசனின் 'குணா'வை மட்டுமே நினைவில் நிறுத்துகிறது! படம் ஆரம்பித்ததிலிருந்தே இறந்து போன காதலியின் உடலைத்தான் நகுலன் தூக்கிக் கொண்டு அலைகிறார், 'எங்களை வாழ விடுங்கள்' என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டு திரிகிறார் என்பதை இடைவேளை முடிந்ததுமே இயக்குனர் சொல்லி விடுவதால், படம் முடிந்துவிட்ட திருப்தியோடு பார்வையாளர்கள் அப்போதே கிளம்பி விட ஏதுவாயிருக்கிறது! இதன் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு நேரம் வெகுவாய் மிச்சமாகிறது!!

நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! ஆனால் எப்போது சாவார், எப்போது பிழைத்தெழுந்து நடனமாடுவார் என்பது இயக்குனருக்கே புரியாத புதிராயிருந்திருக்க வேண்டும். தோழிக்கு காதல் கடிதம் கொடுத்த நண்பனுக்கு "இது படிக்கற வயசு.. நீ எவ்ளோ கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றன்னு எனக்கு தெரியும். படிப்பை கவனிடா" என்று அட்வைசிக் கொண்டிருந்த நாயகி, வீட்டை விட்டு துரத்தப்பட்டு தன்னிடமே அடைக்கலமாகியிருக்கும் நகுலன் தன்னைக் காதலிப்பது தெரிந்ததும், தன் கல்லூரியிலிருந்து விலகி அவர் வகுப்பிலேயே சேர்ந்து பயில்கிறார். காதலித்தாலும் கல்லூரி மாறியாவது கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் போலிருக்கிறது. காதல் புகினும் கற்கை நன்றே!

படம் முழுக்க கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று தீர்க்கிறார் நகுலன். இறுதிக்காட்சி கொடூரம்.

சரி... ஒட்டுமொத்தமாய் குறை மட்டும் சொல்வானேன்?

1. நகுலனின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பாய்ஸில் பார்த்த நகுலனில் கால்வாசி நகுலன் தான் இருக்கிறார் இப்போது! நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் மின்னல் வேகம். கோபமும் குழந்தைத்தனமும் மாறி மாறி பிரதிபலிக்கிறது முகத்தில்.

2. படத்தின் மற்றுமோர் நாயகன் 'நாக்க முக்க' பாடல். அரங்கம் அதிருகிறது. படத்தில் 2 முறை இடம் பெற்றிருந்தபோதும் ஒவ்வொரு முறையும் ஒன்ஸ்மோர் கேட்டபடி குத்தாட்டம் போடுகிறார்கள் இளைஞர்கள்.

3. விஜய் ஆண்டனியின் இசையும் தாமரையின் வரிகளும் பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஒன்றையொன்று விஞ்சத் துடிக்கின்றன.

4. மலைப்பிரதேசத்தில் தொலைவில் நடக்கும் சண்டைக்காட்சி அருமை.

5. படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமோர் நபர் காவல்துறை அதிகாரியாய் வரும் சம்பத். சரோஜாவிலேயே கலக்கியிருந்தார் மனிதர். இதிலும் குறை வைக்கவில்லை.

தன்னால் இயன்றவரை திரைக்கதையை வைத்து சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத். அத்தனை முயற்சிகளும் கதையிலிருக்கும் மாபெரும் ஓட்டையில் விழுந்து விடுவது தான் பரிதாபம்.

பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!

60 comments:

தமிழ் பிரியன் said...

படத்தின் தலைப்பு மட்டும் நல்லா இருந்திருக்கும் போல... :)

மின்னுது மின்னல் said...

மறுபடியும் மொக்க படம் பார்த்து சொன்னதற்கு நன்றி :)

rams said...

இந்த மாதிரி படம் தேடி போய் பார்ப்பது தான் உங்க வழக்கமா? :)

ஆயில்யன் said...

//நாயகி சுனேனா அழகாக இருக்கிறார்.///

நான் அப்பவே சொன்னேன் :)))))

ஆயில்யன் said...

//மின்னுது மின்னல் said...
மறுபடியும் மொக்க படம் பார்த்து சொன்னதற்கு நன்றி :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

வர வர உங்க விமர்சனமெல்லாம்!
டேய்ய்ய்ய் ! வேணாம்டா தப்பி தவறி ஆன்லைன்ல ஃபீரியா கூட பார்த்துராதீங்க அப்படின்னு எங்களை பாசமா சொல்ற மாதிரியே இருக்கு!

கப்பி | Kappi said...

//சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!//

முதல்முறையா நீங்க ஒரு படம் நல்லாருக்குன்னு சொல்லி கேட்கறேன்..என்ன அதிசயம்!! :)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

விமர்சனம் எழுதுறதுகுன்னே போயிருக்கீங்க. அதானே? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!//

இப்பட் ஒரு டுவீஸ்ட்டா? ஆஆஆஆஆஆஆ..........

rangudu said...

//"நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்!"//

ஆனாலும் இது கொஞ்சம் ஓவரப்பு.

Bee'morgan said...

அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க.. இந்தப்படத்திற்கு குடும்ப சகிதம் போய் குத்து வாங்கியவர்களில் நானும் ஒருவன்.. என் தோழிகள் இருவர், அவர்கள் தாயார், நண்பர்கள் வட்டத்திலிருந்து மூன்று பேர் என்று, போய் மொத்தமாய், மூச்சு முட்ட முட்ட படம் பார்த்துத் திரும்பினோம்.

உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.. மனசாட்சியைத் தொட்டு இப்போ சொல்லுங்க.. ஜெயம் கொண்டான் நல்ல படமா? இல்லையா..?

குப்பன்_யாஹூ said...

வலை பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சினிமா விமர்சனத்தை தவிர்க்கவும்.

உங்களின் நேரம் மட்டும் இன்றி எங்களின் நேரமும், சர்வர் இன் SPACE உம் தேவை இன்றி வீண் அடிக்கிறோம்.

அதுவும் லக்கி லுக் எல்லாம் ஒரு நாளிக்கு 2 சினிமா பார்த்து 3 வலை பதிவு போடுகிறார்.

உங்களுக்கு முன்னெச்சரிக்கை: தவிர்க்க வேண்டிய படங்கள்: சுல்தான் த WARRIOR , கந்தசாமி, பரத் நடிக்கும் விக்ரமன் படம்..

saran said...

maaruthalaana
thiraippadangalukku
uagakitta irunthu
vimarsanam varaathaa..
subramaniyaburam ponra
padangal kuriththu
ungal paarvai enna..
athai pathivu
senjinganaa
engalukkellaam nalla
padam kudukkalaamgira
nambikkai
varum...

குப்பன்_யாஹூ said...

மன்னிக்கவும், , எனது முந்தைய பினூட்டம் சற்று கடுமையாக இருந்தால். மனதை புண் படுத்துவது போல இருந்தால் மன்னிக்கவும்.

மங்களூர் சிவா said...

படம் பாத்த எனக்கும் என் வய்ப்புக்கும் கண்ணு காது மூக்குல ரத்தம் வந்துச்சே உங்களுக்கு வரல!?!?

மங்களூர் சிவா said...

நாக்க முக்க பாட்டு படத்துல 2 தரம் வருதே எதுக்கு !?!? அந்த பாட்டே படத்துக்கு தேவையில்லாதது :((

மங்களூர் சிவா said...

//"நாயகி சுனேனா பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்!"//

என் பொண்டாட்டியும் இதேதான் சொன்னா படம் பாத்துகிட்டிருக்கப்பவே!!

மங்களூர் சிவா said...

மொத்தத்தில் படம் :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

அறிவன்#11802717200764379909 said...

மொக்கைப் படமா தேடிப் பாத்து விமர்சனம் எழுதறத வழக்கமா வச்சுருக்கீங்களா என்ன?

>> என் 3 வயது குட்டித் தங்கை திரையில் ரத்தத்தைப் பார்த்ததும் வீறிட்டு அழத் தொடங்கியவள்...>>

உங்களுக்கே 3 வயசுதான் இருக்கும்னு நெனச்சுகிட்டு இருக்கோம்..தங்கைக்கும் 3 வயசா????

:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தங்கம்..

நல்லாவே எழுதறம்மா.. தொடர்ந்து நான் பார்க்காத, விரும்பாத படங்களின் விமர்சனங்களையெல்லாம் இதே போல் எழுதவும்..

Bleachingpowder said...

நீங்கள் படம் பார்த்து கொண்டிருக்கும் போது பின்னால் அமர்ந்திருப்பவர், அடுத்து வரும் காட்சிகளை சொல்லிக் கொண்டே வந்தால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாய் இருக்கும்.

விமர்சணம் எழுதும் போது நாயகி இறந்து விடுகிறார், கொன்றது அவர் சித்தப்பா போன்றவற்றை எல்லாம் தவிர்திருக்கலாம். இது படம் பார்க்க இருக்கும் பலரின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும். விமர்சணம் வேறு, கதை சுருக்கம் வேறு.

saran said...

உங்களுக்கு முன்னெச்சரிக்கை: தவிர்க்க வேண்டிய படங்கள்: சுல்தான் த WARRIOR , கந்தசாமி, பரத் நடிக்கும் விக்ரமன் படம்..

intha padangalai
yen thavirkka vendum
enru therinthu
kollalaama
mr.kuppan_yahoo

காயத்ரி said...

//படத்தின் தலைப்பு மட்டும் நல்லா இருந்திருக்கும் போல... :)
//

இல்லீங்க தமிழ்ப்பிரியன்... சுனேனா ரொம்ப நல்லாருக்காங்க! :)

ஆஹா! மின்னல் ரொம்ப நாளா ஆளக் காணமே? வருக! வருக!

காயத்ரி said...

ராம்ஸ்.. காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதாமே? சிவனேன்னு இருந்த புள்ளய இழுத்துகிட்டு போய்ட்டாங்க. என்ன செய்ய? :(

காயத்ரி said...

// ஆயில்யன் said...
//நாயகி சுனேனா அழகாக இருக்கிறார்.///

நான் அப்பவே சொன்னேன் :)))))

//

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணாச்சி! :)

காயத்ரி said...

//முதல்முறையா நீங்க ஒரு படம் நல்லாருக்குன்னு சொல்லி கேட்கறேன்..என்ன அதிசயம்!! :)))
//

:)) கப்பி.. நல்ல படங்களுக்கு நான் விமர்சனம் எழுதறதில்ல. அஞ்சாதே, சந்தோஷ் சுப்ரமணியம் வரிசைல இப்ப சரோஜாவும்.

(உங்க விமர்சனமும் படிச்சேன் சார்!)

காயத்ரி said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
விமர்சனம் எழுதுறதுகுன்னே போயிருக்கீங்க. அதானே? ;-)
//

ஏண்டிம்மா விமர்சனம் எழுத குடும்பத்தையேவா கூட்டிகிட்டு போவாங்க? பாவம்.. நான் தான் இங்க பலிகடாவாக்கும்.. :(

காயத்ரி said...

// rangudu said...
//"நாயகி சுனேனா அழகாக இருக்கிறார். பிரேதம் போலவே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்!"//

ஆனாலும் இது கொஞ்சம் ஓவரப்பு.

//

திரு. ரங்குடு.. நான் சொன்னா ஓவரு. மங்களூர் சிவா வூட்டுக்காரம்மா சொன்னா சரியா? எந்த ஊரு நியாயம் இது? :)

காயத்ரி said...

Bee'morgan said...
//உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.. மனசாட்சியைத் தொட்டு இப்போ சொல்லுங்க.. ஜெயம் கொண்டான் நல்ல படமா? இல்லையா..?//

வள்ளுவர் பாணில குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்ளச் சொல்றீங்களா? இந்தக் குழில விழுந்ததுக்கு அது தேவலை தான். ஒத்துக்கறேங்க. :)

காயத்ரி said...

குப்பன்.. நன்றி! :)


சரண்..
//subramaniyaburam ponra
padangal kuriththu
ungal paarvai enna..//

இப்ப தான் அந்த படத்தப் பார்த்துப்புட்டு நெத்தில திருநீறு பூசிட்டு உக்காந்திருக்கேன். கெட்ட கனா எதும் வரக்கூடாதேன்னு. :( நல்ல படம்.. ஆனா இத்தனை வன்முறையா... பயமா இருக்குங்க.
:(

காயத்ரி said...

// மங்களூர் சிவா said...
படம் பாத்த எனக்கும் என் வய்ப்புக்கும் கண்ணு காது மூக்குல ரத்தம் வந்துச்சே உங்களுக்கு வரல!?!?
//

ஹ்ம்ம்ம்.. சேம் ப்ளட். :(

//நாக்க முக்க பாட்டு படத்துல 2 தரம் வருதே எதுக்கு !?!? அந்த பாட்டே படத்துக்கு தேவையில்லாதது :((
//

சிவா, நான் இந்த படமே தேவையில்லாததுன்றேன். என்னது இது சின்னப்புள்ளத்தனமா.. :)

காயத்ரி said...

//உங்களுக்கே 3 வயசுதான் இருக்கும்னு நெனச்சுகிட்டு இருக்கோம்..தங்கைக்கும் 3 வயசா????
//

அறிவன்.. சத்தம் போட்டு சொல்லாதீங்க. கேக்கறவங்க ஈரோட்ல பால்ய விவாகம் நடக்கப் போகுதுன்னு நினைச்சிக்கப் போறாங்க. :)

காயத்ரி said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தங்கம்..

நல்லாவே எழுதறம்மா.. தொடர்ந்து நான் பார்க்காத, விரும்பாத படங்களின் விமர்சனங்களையெல்லாம் இதே போல் எழுதவும்..
//

சரிங்க அண்ணாச்சி. :) ரொம்ப நன்னி வந்ததுக்கும் கமெண்டினதுக்கும்!!

காயத்ரி said...

// Bleachingpowder said...
விமர்சணம் எழுதும் போது நாயகி இறந்து விடுகிறார், கொன்றது அவர் சித்தப்பா போன்றவற்றை எல்லாம் தவிர்திருக்கலாம். இது படம் பார்க்க இருக்கும் பலரின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும்.//

பிரியத்திற்குரிய ப்ளீச்சிங் பவுடர்..

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? நான் விமர்சனம் எழுதுவதே அந்த படத்தை பார்க்க இருப்பவர்கள் பார்க்காமல் இருக்கத்தானே??!

காயத்ரி said...

// saran said...
உங்களுக்கு முன்னெச்சரிக்கை: தவிர்க்க வேண்டிய படங்கள்: சுல்தான் த WARRIOR , கந்தசாமி, பரத் நடிக்கும் விக்ரமன் படம்..

intha padangalai
yen thavirkka vendum
enru therinthu
kollalaama
mr.kuppan_yahoo
//

இவ்விடத்தில் அரசியல் பேசுவதை தவிர்க்கவும். :)

ஜி said...

இன்னுமா?? இனிமேலாவது யாராவது விமர்சனம் போட்டதுக்கு அப்புறம் எந்த படம் பாக்கலாம்னு டிசைட் பண்ணுங்க :))

ஜி said...

//இவ்விடத்தில் அரசியல் பேசுவதை தவிர்க்கவும். :)//

:)))

saran said...

// saran said...
உங்களுக்கு முன்னெச்சரிக்கை: தவிர்க்க வேண்டிய படங்கள்: சுல்தான் த WARRIOR , கந்தசாமி, பரத் நடிக்கும் விக்ரமன் படம்..

intha padangalai
yen thavirkka vendum
enru therinthu
kollalaama
mr.kuppan_yahoo
//

இவ்விடத்தில் அரசியல் பேசுவதை தவிர்க்கவும். :)

ithu arasiyal illinga..
athula oru padaththula
work panravanoda
padhaipadhaippu..
yen apdi sollirukkaanga..
namma padaththula
enna pirachinai nu
therinjikalaamenu thaan..

குப்பன்_யாஹூ said...

தவிர்க்க வேண்டிய படம் சேவல்

தயவு செய்து அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதி உங்களின் பொன்னான நேரத்தை வீண் அடிக்காதீர்கள்.

அந்த 3 மணி நேரத்திற்கு வாஸந்தி / கனிமொழி/ வண்ண நிலவன்/ எஸ் ராமகிருஷ்ணNAI (அலைவோம் திரிவோம் புத்தகம்) படிக்கவும்.

கோபிநாத் said...

;-))))))))))

நீங்க ஒரு சிரிப்பு பதிவர் ;)

Suriya said...

Ungalin thirai vimarsanam miga arumai, vidupattavai blogin vasaganaga irunthu yethatchaiyaga thangalin "blogukul nuzhainthaen"...vimarsanam super.thangalodaiya ezhudhum style superb.Note: neengal ezhuthiya athanai blogayum padithaen , mukiyamaga thangaludaiya pei anubavathai padithi vitu officel ellar munnnilayilum naan mattum vizhunthu vizhunthu sirithu pin ennodaiya project lead enakku pei otinadhu vera kathai...

vaazhthukkal thamizh thamakkaiyae
ippadiku
Suriya

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் சொன்னியே எந்திரிச்சுபோகாம இருந்ததுக்கு .. உனக்கான காரணம் ,பத்தவச்சிட்ட பரட்டை மாதிரி இன்னொரு விமர்சனம் எழுததானே.. சரி சரி..:)

manasu said...

//பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!//


அதுக்கு விமரிசனம் எழுதமாட்டிங்களே!!!

யார்ட்டயாவது கேட்டு படம் நல்லா இல்லன்னு சொன்ன உடனே கிளம்பிருவிங்களோ, யப்பா அடுத்த படம் கிடைச்சிருச்சு விமரிசனம் எழுதன்னு...

லேகா said...

பரட்டை என்கின்ற அழகு சுந்தரம்,ஆரியா,கிரீடம்,காதலில் விழுந்தேன் - சிறந்த படங்களின் விமர்சனம் ஏதேனும் இருக்கும் என்கிற ஆர்வத்தில் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே!!

இனி மொக்கை திரைப்படங்களின் விமர்சனத்தை தவிர்க்கலாமே??

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

குப்பன்_யாஹூ said...

மேடம் , பதிவு உலகம்னு 1 இருக்கு, மறந்து விட்டீர்களா.
15 நாட்கள் ஆகி விட்டது, பதிவு போட்டு.

எனக்கு போர் அடிக்குது, பின்னூட்டம் எழுதாம. பதிவு போடுங்க.

நம்பிக்கையுடன்

குப்பன்_யாஹூ

புகழன் said...

தாமரையின் பாடல் வரிகளுக்காக படம் பார்க்கலாம் என்கிறீர்களா?

surya said...

சப்பை படத்திற்கு மொக்கை விமர்சனம்...

சூர்யா
சென்னை

வால்பையன் said...

//பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர் நாளாக' மட்டுமே பாவிக்கும் யதார்த்தவாதி எனில், 'காதலில் விழுந்தேன்' உங்களுக்குரிய படமல்ல.//

நன்றி
தப்பித்தேன்
பிழைத்தேன்

இப்படியும் சொல்லலாம்

படித்ததால் பிழைத்தேன்

வால்பையன் said...

//பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!//

அப்படினா உங்களுக்கு நல்ல படங்களுக்கு விமர்சனம் எழுத தெரியாதா?

வால்பையன் said...

//தவிர்க்க வேண்டிய படம் சேவல்
தயவு செய்து அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதி உங்களின் பொன்னான நேரத்தை வீண் அடிக்காதீர்கள்.//

கூடுதல் தகவலுக்கு நன்றி
ஆனால் கண்டிப்பாக எழுதுவார்
பாருங்களேன்.

பாலராஜன்கீதா said...

//பி.கு: சரோஜா படம் ரொம்ப நல்லாருக்கு!//

காதலில் விழுந்தேன் படம் ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது என்று எழுத இன்னோரு படம் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடவேண்டாம்.
;-)

madyy said...

என்னது.... ரொம்ப busy 'யா ? post எதுவும் போடவே இல்ல..... comments எதுவும் போடாம தலையே வெடுச்சுரும் போல இருக்குது....

http://madydreamz.blogspot.com/

பொடியன்-|-SanJai said...

//என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?/
எச்சுச் மீ.. உன்னை பற்றி சொல்ல எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா ப்ளீஸ்..? :)))

குப்பன்_யாஹூ said...

best wishees for your happy married life.

madyy said...

அம்முனி, நீ கண்ணாலத்துக்கு கூப்புடுலனாலும் பரவால்ல சாமி ...... மறக்காம treat வெச்சுபுடோனும் .....ஆமா சொல்லிபோட்டன்.....................

இப்படிக்கு,

சொம்பு கழுவாத நாட்டாம,
ஈரோடு.

துளசி கோபால் said...

19 முடிஞ்சு கனகாலமானது தெரியாம நானும் பார்த்துட்டேன் இந்தப் படத்தை.

விதியாகப்பட்டது வலியது. அதை 'யாராலும்' வெல்ல முடியாது.

VIKNESHWARAN said...

விமர்சனம் அருமை...

thurka said...

"ஓயாமல் நானோ உங்களில் இலக்கியம் தேட...
இயக்கம் இன்றி நீங்கள் ஒதுங்கியே போக,
கடப்பது சுலபம் படைப்பது கடினம் என்பதாய்
பேசும் உங்கள் மௌனம் முடிய
அடுத்த பதிவு நோக்கி பார்த்திருக்கிறேன்.......!

சூர்யா said...

pathivu potu athiga naatkal aagivitadhu....ethavadhu ezhuthungalaen...pllllllllllllleaseeeeeeeeee

Anonymous said...

:)