குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

45 Comments:
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
இன்னும் பட்டியல்களில் நீண்டு கொண்டே தான் செல்லும்... மகிழ்வுகளுடன்... வாழ்த்துக்கள்!
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?
நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டு வந்திருக்கீங்க.. :) தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்..
குழந்தையின் சுவர்க்கிறுக்கல் அழகான உவமை..
கவுஜ எழுதினா தலைப்பு வைங்க அக்கா! இப்படியா தமிழ் மணத்தில் இருந்து எப்படி வருவாங்க?.... ;)
யப்பா! சாமிகளா.. கும்மறதுக்குன்னே காத்துகிட்டிருப்பீங்களா.. :(
நன்றி தமிழ்ப்பிரியன்..
//இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//
:)
//தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்..
குழந்தையின் சுவர்க்கிறுக்கல் அழகான உவமை..//
நன்றி Bee'morgan! :)
//Untitled//
யக்கா.. பெயர் வைக்க டைம் இல்லையா?
ஹீஹீ
சரி சரி.. தலைப்புல என்ன இருக்கு கவிதைதான் முக்கியம்ங்குறீங்களா? அதுசரி!
ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்னை ஓட ஓட துரத்துவீங்க. அதனால எப்போதும் போல புரியல புரியல புரியல..
:-))))))
//நிலா said...
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//
அவங்களே மறந்து இருக்காங்க.. நீ ஏன்ம்மா ஞாபகப்படுத்துற.. பாரு.. இப்பவே கையில பேனா எடுத்துக்கிட்டு ஒரு அழுகாச்சி காவியம் எழுதுறேன்னு நிக்குறாங்க. :-(
//தமிழ் பிரியன் said...
கவுஜ எழுதினா தலைப்பு வைங்க அக்கா! இப்படியா தமிழ் மணத்தில் இருந்து எப்படி வருவாங்க?.... ;)//
ரிப்பீட்டேய்... ;-)
//காயத்ரி said...
யப்பா! சாமிகளா.. கும்மறதுக்குன்னே காத்துகிட்டிருப்பீங்களா.. :( //
நாங்க கும்முறதுக்குதானே நீங்க எழுதுறீங்க? இல்லையா? :-))
//குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....//
ரொம்ப அருமையான உவமை! நச்சுன்னு இருக்கு.
யக்கோவ்!
பேரு வைக்கிறத்துக்கு டைம் இல்லியா??????
//நீளத்துவங்குகிறது என்ஆச்சரியங்களின் பட்டியல்!//
பட்டியல் வாசியுங்கள் :)
:)
//என்
ஆச்சரியங்களின் பட்டியல்!//
அவ்வளவு தானா பட்டியல்!
சிறுசா போச்சே!
அப்புறம், அந்த படத்துக்கு இந்த கவிதையா, இல்ல கவிதைக்கப்புறம் இந்த படம் கிடைச்சதா
:)
இதுதாங்க.. இதைப் போன்ற கவிதையை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன்..
அருமையான கவிதை..
உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது..
good to see ur post....welcome back..hope everything is fine..
Wow really superb... After a long break...I've read all your post!
நல்ல கவிதை, ஏன் பாதியோடு முடித்து விட்டீர்கள்.
ஆச்சரியங்களின் பட்டியலில், கும்மிகள் இல்லாத பதிவும் உண்டா.
வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ
இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.
அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).
i POSTED FOR JOLLY PLEASE, NOT WITH THE INTENTION TO HURT ANY PERSON PLS.
குப்பன்_யாஹூ
நல்ல கவிதை, ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே......Google readerல் title unknown என்று வருகிறது.
எழுதியதில் மகிழ்ச்சி...:)
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!
..............
ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா
நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க
//ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்னை ஓட ஓட துரத்துவீங்க. அதனால எப்போதும் போல புரியல புரியல புரியல..//
:)) சமத்துப் பொண்ணு..
சுந்தர், ஆயில்யன் நன்றி!
ராம் இந்த புன்னகைக்கு பொருள் என்னவோ?
வால்பையன்...
//அப்புறம், அந்த படத்துக்கு இந்த கவிதையா, இல்ல கவிதைக்கப்புறம் இந்த படம் கிடைச்சதா//
கவிதைக்கு தேடின படம் தான். கூகுளாண்டவர் அருள்!
தாரணிப்பிரியா, சரவணன், இனியவள்புனிதா (பேர் அழகா இருக்குங்க) நன்றி அன்பிற்கும் பாராட்டுதலுக்கும். :)
குப்பன்..
//இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.
அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).//
நான் அவளில்லை.. என் கைட் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். என் மாணவியைக் காணவில்லைன்னு செய்தித்தாள்ல அறிவிப்பு கொடுக்க இருக்கறதா கேள்விப்பட்டேன். ஒத்துழைப்பு குடுக்கலன்னு எனக்கு தான் கல்தா குடுக்கப் போறார். :(
Kannan Seetharamn said...
good to see ur post....welcome back..hope everything is fine..
நன்றிங்க. ரொம்பவே நல்லாருக்கேன்.
நன்றி ராஜா மற்றும் கிங்! (நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரே தானா??)
பிரபு...
//ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா
நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க//
உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா? நல்லாருங்கப்பா. :)
ஹேப்பி மதர்ஸ் டே:))))
உங்களுக்குதான் கவிதாயினி அவர்களே!!!
நிலா said...
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//
அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))
சமீபகாலமாக ஏன் புது படம் ஏதும் பார்க்கவில்லையா?மொக்கை படங்களை மட்டும் தேடி தேடி பார்ப்பேன் என்று மாரியம்மனுக்கு நீங்க வேண்டிக்கிட்ட வேண்டுதல் என்ன ஆச்சு?
போய் குசேலன் பாருங்க, சத்யம் பாருங்க. இல்லை உம்மாச்சு மண்டையில் குட்டும்.
//குசும்பன் said...
அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))//
ரிப்பீட்டேய். ;-)
திரும்ப படத்தில் நடிக்க வந்த சிம்ரனுக்கு கூட இம்புட்டு வரவேற்பு இல்லை பாலிமர் டீவி நியுஸ் வாசிப்பவருக்கு எம்புட்டு வரவேற்ப்பு.
மை ஃபிரண்ட் ::. said...
சரி சரி.. தலைப்புல என்ன இருக்கு கவிதைதான் முக்கியம்ங்குறீங்களா? அதுசரி!//
என்ன கொடுமைங்க இது தலைப்புதான் உள்ளே இருக்கு, கவிதைய காணும்?
///குசும்பன் said...
நிலா said...
ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//
அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)
டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))///
'அங்கும், இங்கும்' பராக்கு பார்க்காமல் குசும்பனே திருமதி குசும்பனிடம் இதை எழுதச் சொல்லலாம்... அங்க திருவாளர் தானே சீப் குக்.. ;)))))
அது எப்படிங்க கோபம் ஆச்சரியக் குறியானது... ஆனாலும் வித்தியாசமான கற்பனைதான்...நம் அன்புக்குரியவர்கள் கோபப்பட்டால் ஆச்சரியம் தோன்றுமோ? அல்லது கோபமே வந்ததில்லையோ!
Marubadi unnoda kavithaigal and comments reply paaka [padikkavum dhaan ;) ] sandhoshama irukku da chellam.. :))))
sory,dis post s not up to ur standrds.
:( eamathitinga :(
//உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது..
//
விதி வலியதுன்னு வாத்தியாரய்யா சொன்னப்போ நான் நம்பவே இல்லை!
இப்பத்தான் நம்புறேன்!
அழகான கவிதை. ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்
கவிதையில் 'காலம்' சரியாகப் பதியப்படவில்லை என நினைக்கிறேன்.
"முன்னொரு முறை நினைத்திருக்கிறேன்" என்று இருந்திருக்க வேண்டும்.
-ஞானசேகர்
குழந்தைகளின் செயல்கள் யாவும் அழகு.. அதை கோபத்துடன் நீங்கள் ஒப்பிட்டது பேரழகு.. படிச்சதும் சந்தோஷமா இருந்தது.. வாழ்த்துகள்
Post a Comment