Monday, September 17, 2007

அம்முவாகிய நான்

நடிப்பு : பார்த்திபன், பாரதி, மகாதேவன்...

இயக்கம் : பத்மா மகன்

இசை : சபேஷ் - முரளி

ஒளிப்பதிவு : எம்.எஸ்.பிரபு


அம்முவாகிய நான்... ஆகஸ்ட் 31 ம் தேதியே தியேட்டர்களுக்கு வந்து விட்டாள். போய்ப் பார்க்கத்தான் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. வந்த ஒரு வாரத்திலேயே 'அத்திப் பூத்தாற் போல ஒரு அபூர்வமான படம்' என்ற வாசகத்துடன் விளம்பரங்கள்! அத்தி பூத்தாலும் ஆலமரம் பூத்தாலும் இனி மொக்கைப்படம் பார்க்க தியேட்டருக்குப் போவதில்லையென சங்கல்பம் எடுத்திருந்ததால் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

போதாக்குறைக்கு தவறாமல் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் 'புண்ணியவதி' இந்த படத்திற்கு மட்டும், 'படம் பார்த்தாலோ விமர்சனம் எழுதினாலோ குத்துவேன் கொல்லுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம்!

என்றாலும் வெகுவாய் போரடித்த நாளொன்றில் என்ன செய்வதென்று தெரியாமல் துணிந்து கிளம்பிப் போய் படத்தைப் பார்த்தே விட்டேன்! ஏற்கனவே நாயகன், மூன்றாம் பிறை, மகாநதி போன்ற படங்களில் கமல் கோடிட்டுக் காட்டிய விஷயம் தான் என்றாலும் கற்பு, கண்ணகி, விபச்சாரி போன்ற வார்த்தைகளை தொட்டாலே தீப்பற்றிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு விபரீதமான கதைக்களத்தில் படம் எடுக்க கொஞ்சம் அசாத்தியத் துணிச்சல் தேவை.

படம் முடிந்த பின்பும் கூட இது பார்த்திபன் இயக்கம் என்றே தான் நினைத்திருந்தேன். இயக்குனர் பெயர் பார்த்த பின்பு தான் 'யாரிந்த பத்மா மகன்' என்று யோசிக்கத் தோன்றியது.

படத்தின் துவக்கத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையிரவில் பிரசவக் காட்சியைப் பார்த்ததும் "அய்யோ மறுபடி மாட்டிக்கிட்டோம் போலிருக்கே" என்று அதிர்ச்சி வந்தது. (அது ஏன் தமிழ்ப்படங்களில் மட்டும் பிரசவ நேரங்களில் மழை பெய்கிறது?) இடி மின்னல்களுக்கிடையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டு தாய் இறந்து போய் விட தகப்பன் அதை ஒரு பாலியல் தொழிலாளியிடம் விற்றுவிட்டுப் போகிறான். அந்த வீட்டுச் சூழலை பார்த்தும் பழகியும் வளர்ந்து வரும் 'அம்மு' என்ற அப்பெண் பெரியவளானதும் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவளாய் இருக்கிறாள்.

எழுத்தாளர் கெளரிசங்கராய் பார்த்திபன். இந்திய இலக்கியக் கழகத்தின் விருது பெற்றுவிடும் லட்சியத்தோடு வித்தியாசமான கதைக்களம் தேடி விபச்சார விடுதிக்கு வரும் பார்த்திபன் தன் அறையை பொம்மைகளால் நிறைத்திருக்கும் அம்முவால் கவரப்பட்டு, அவளை தன் கதைக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்குமான கதாநாயகியாய் சுவீகரித்துக் கொள்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் நாட்டமில்லாத அம்மு படிப்படியாய் அதன் சுகங்களை, அர்த்தங்களை உணரத் தொடங்குகையில் இலக்கிய கழகத்தின் தலைவராய் வரும் வில்லன் மகாதேவன், விருதுக்கு விலையாக அவளின் உடலைக் கேட்க பார்த்திபனுக்கு நன்றி(?) செலுத்தும் விதமாய் நிபந்தனைக்கு சம்மதிக்கும் அம்மு வில்லன் தொட்டதும் திடீரென சீறி நிமிர்ந்து அவனை அடித்தே கொல்கிறாள்! (கொலையும் செய்வாள் பத்தினி?!) "பிரார்த்திப்பது என்பது எதையும் நோக்கியல்ல.. அன்பாய் இருப்பதே" என்று ஓஷோவின் வார்த்தைகளோடு முடித்திருக்கிறார்கள் படத்தை!

இது என்ன கதை? இதை ஏன் இவள் பாராட்டுகிறாள் என்று சிலர் நினைக்கக் கூடும். படத்தின் மிகப்பெரிய பலம் பார்த்திபன். 'அழகி' போல கண்ணியமான கதாபாத்திரம். 'கற்பு கன்னிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத' ஒருவனாய் வலம் வருகிறார். ஒரு விபச்சாரிக்கு 'வாழ்க்கை கொடுத்தவனாய்' இல்லாமல் அவளிடமிருந்து வாழ்க்கையைப் பெற்றவனாய் தன்னை வரித்துக் கொண்டிருப்பது அற்புதம்! மிகைப்படுத்தல் இல்லாமல் மென்மையாய் ஆழமாய் இழையும் காதல், அம்மு காணாமல் போகையில் வரும் தவிப்பு, அழுகை, பரிவு, கோபம், ஆக்ரோஷம் என படம் முழுக்க உணர்ச்சிகளால் நிறைத்(ந்)திருக்கிறார்.

அம்முவாய் அறிமுகமாகும் பாரதிக்கு ஆழமான கண்கள், நேர்த்தியான நாசி. என்றாலும் முகம் மனதில் பதியவில்லை. படம் முழுக்க தன்னை மையமாய்க் கொண்டிருப்பதால் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு விலைமகள் குடும்பப் பெண்ணாய் பரிணமித்த பின்பாய், கணவனின் முன்னால் செயற்கைத்தனங்களின்றி அவள் முகத்தில் தோன்றும் 'உண்மையான' நாணம் ஆச்சரியமாய் ரசிக்க வைக்கிறது! வெகு அழகாய் பிரதிபலித்திருக்கிறார். குடும்பம் என்ற கட்டுக்கோப்பான அமைப்பிற்கு சமூகம் வழங்கும் கெளரவத்தை அம்மு உணர்ந்து கொள்ளும் காட்சிகள் 'புதிய பாதையை' நினைவூட்டுகின்றன.

அம்மு, கெளரி என இணக்கமான பெயர்களும் அதிர்வில்லாத வசனங்களும் அமைதியாய் நகரும் காட்சிகளும் மனதிற்கு இதமாயிருக்கின்றன.

திருமணத்தின் போது எங்கோ திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அம்முவின் மோவாயைப் பிடித்து தன் புறமாய்த் திருப்பி, தலையை தாழ்த்தி கழுத்தில் தாலி கட்டுவதிலும்,

கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஆரத்தி எடுத்துக் கொள்வதிலும்,

"இது என் அம்மு.. பேரு பொண்டாட்டி" என்று அறிமுகப்படுத்துவதிலும்

படுக்கையை அலங்கரித்து "இது மொத ராத்திரி.. நீ தனியா தூங்கப் போற முதல் ராத்திரி" என்று சொல்வதிலும்


பார்த்திபன் 'டச்' தெரிகிறது.


இசை சபேஷ் - முரளியாம். கல்யாணி, ஹரீஸ் ராகவேந்திராவின் குரலில் "உன்னைச் சரணடைந்தேன் மன்னவா" பாடல் மட்டும் மயக்கியெடுக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு பயணங்களில் கேட்கவும் அடிக்கடி முணுமுணுத்துக் கொள்ளவும் வசதியாய் இருக்குமென்று தோன்றியது.


கண்களுக்கு குளுமையாய் ஒளிப்பதிவு. பார்த்திபன் வீடு கொள்ளை அழகு!

மொத்தத்தில், சில இடங்களில் உறுத்தலாய் நிற்கும் கமர்ஷியல் சினிமாத்தனங்கள், முன்பே யூகிக்கும்படியான அழுத்தமில்லாத க்ளைமாக்ஸ் மற்றும் லாஜிக் குறைபாடுகளைத் தவிர்த்து விட்டு (அல்லது சகித்துக் கொண்டு) பார்த்தால் அம்முவாகிய நான் நன்றாகவே இருக்கிறாள்!!

என்றாலும் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணீப் பெண்கள் மற்றும் இருதயம் பலஹீனமாவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்! (ஜி3 நீ இதுல எந்த கேட்டகிரி?)

71 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

என் கமேண்டுகளை வெளியிடாத வரை எந்த ஒரு பதிவையும் படிக்கமாட்டேன் என்றூ இங்கே சொல்லிக்கொள்கிறேன். :@

Thamizh said...

மொத மொத ஒரு படத்தை நல்ல படம்னு சொல்லிருக்கிங்க


அடுத்த படம் மொக்கை படமாக வாழ்த்துக்கள்

வேதா said...

நானும் இந்த படத்தை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். உங்க கிட்ட பார்க்காதன்னு சொன்ன அந்த புண்ணியவதி என் கிட்டயும் அத தான் சொன்னா அதனால கண்டிப்பா பார்க்கலாம்னு இருக்கேன் :)

காயத்ரி said...

//எந்த ஒரு பதிவையும் படிக்கமாட்டேன் என்றூ இங்கே சொல்லிக்கொள்கிறேன். :@//

இது ரொம்ப ஓவரு! இல்லன்னா மட்டும் படிச்சிட்டு தான் போடுவியா நீ?

காயத்ரி said...

//அடுத்த படம் மொக்கை படமாக வாழ்த்துக்கள்//

ஆஹா! இம்புட்டு நல்லவங்களா நீங்க? அடுத்த படம் 'சத்தம் போடாதே'

போலாமா வேணாமா?

காயத்ரி said...

அவ கிடக்கறா.. நீங்க பாருங்க வேதா! ஆமா நான் சொன்னதுல அவ எந்த கேட்டகிரி? :)

ஆழியூரான். said...

படம் முழுக்க ஒரே பொண்ணுங்களா வர்றாங்களா.. அதனால படம் போறதே தெரியலை..அப்படி ஒரு ஸ்பீடு.

Thamizh said...

//
ஆஹா! இம்புட்டு நல்லவங்களா நீங்க? அடுத்த படம் 'சத்தம் போடாதே'

போலாமா வேணாமா?
//

படம் மொக்கையா இருந்தாதான் உங்க விமர்சனம் சூப்பரா இருக்கும்...

வேதா said...

ஏனிந்த கொலவெறி? நான் உயிரோட இருக்கறது உங்களுக்கு பிடிக்கலியா?:)

காயத்ரி said...

ஆழியூரான்.. பிடிச்சிருந்ததா? படத்தை தான் கேக்கறேன்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்தப் படம் பார்க்கணும்னு இருக்கேன்.

//அத்தி பூத்தாலும் ஆலமரம் பூத்தாலும் இனி மொக்கைப்படம் பார்க்க தியேட்டருக்குப் போவதில்லையென சங்கல்பம் எடுத்திருந்ததால் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.//

இனி மொக்கைப்படம் பார்க்க மாட்டீங்களா? :((( ஏனுங்க இந்த விபரீத சங்கல்பமெல்லாம். நீங்க மொக்கைப்படமா பார்க்கணும்னு இல்ல இங்க நான் கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டிருக்கேன். கொஞ்சம் கருணை ப்ளீஸ்!

மக்களே கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பா. இவங்க மொக்கைப் படம் பார்க்கணும். இடுகை போடணும். நாம படிக்கணும். பொரண்டு பொரண்டு சிரிக்கணும். இதெல்லாம் உலகம் இயங்குவதற்கு வேண்டிய விசயங்களில்லையா. இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாங்க.

இனி நான் கே.எஃப்.சி. சிக்கன் லெக் பீஸை அர்ச்சனைத் தட்டுல வைச்சுப் பிரார்த்தனை செய்யப்போறேன். பலன் கிடைக்குதான்னு பாப்பம். :D :D :D

-மதி

காயத்ரி said...

மதி... வராதவங்கள்ளாம் வந்திருக்கீங்களேன்னு சந்தோஷப்படறதா? உங்க கொலை வெறிய நினைச்சு துக்கப்படறதா?

நானு மொக்கப்படம் பாத்து கஷ்டப்படறது உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கா? அவ்வ்வ்வ் :(

காயத்ரி said...

//படம் மொக்கையா இருந்தாதான் உங்க விமர்சனம் சூப்பரா இருக்கும்...//

அடப்பாவிகளா! :(

தம்பி said...

//படம் முழுக்க ஒரே பொண்ணுங்களா வர்றாங்களா.. அதனால படம் போறதே தெரியலை..அப்படி ஒரு ஸ்பீடு.//

மிஸ்டர் ஆழி!

அந்த ஒரே பொண்ணு எந்த பொண்ணுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

தம்பி said...

//ஆஹா! இம்புட்டு நல்லவங்களா நீங்க? அடுத்த படம் 'சத்தம் போடாதே'

போலாமா வேணாமா?//

சத்தம் போடாம போயிட்டு வரணும்.

nikky said...

Thozhi gayathri,
Indha valaimanaikku nan pudiyavan..
Indru thangalin thiraivimarsanamum, adarku palarudaiya vimarsanangalaiyum kandu magilden...vimarsanam arumai..
tamil-l yeludave viruppam...manniyungal..yenakku theriyavillai..yeppadi yengu tamil yeluthukalai peruvadu yendru..

natpudan
arun

முத்துலெட்சுமி said...

படம் பாக்கணும் இனிமே தான் அதனால பதிவை படிக்கலப்பா முழுசா...மன்னிக்கனும் . ஆமா நட்சத்திரவாரத்தில் எழுதறதுக்காகத்தானே லேட்டா வ்ந்தது இந்த படத்தோட விமர்சனம்... அப்பறம் ஏன் அறியாப்பிள்ளையை காரணமா சொல்லிக்கிட்டு.... :)

காயத்ரி said...

//சத்தம் போடாம போயிட்டு வரணும்.
//

போயிட்டு வந்து சத்தம் போட்டா பரவால்லயா?

ப்ரியன் said...

ஒரு நல்லபடத்துக்கு போயிட்டு வந்துட்டீங்க போல , ஏங்க எந்த மொக்கைபடத்துக்கும் சீட்டு கிடைக்கலியா?

காயத்ரி said...

//tamil-l yeludave viruppam...manniyungal..yenakku theriyavillai..yeppadi yengu tamil yeluthukalai peruvadu yendru..//

வாங்க அருண்! தமிழா.காம் ல போய்.. ஈ-கலப்பைன்னு ஒரு கீபோர்டை இன்ஸ்டால் பண்ணுங்க. நான் புதுசா வர்றச்சே.. அததான் பண்ணினேன்! :)

காயத்ரி said...

//ஏங்க எந்த மொக்கைபடத்துக்கும் சீட்டு கிடைக்கலியா?
//

ஏங்க இதுவரை பட்டது பத்தாதா? யாருக்குமே என் மேல இரக்கமே வர மாட்டிங்குதே.. :(

ஆழியூரான். said...

சத்தம் போடாதே நல்லாயிருக்கு..பார்த்துட்டு வந்து இன்னொரு மொக்கை எழுதுங்க..

ramachandranusha(உஷா) said...

கும்மு கும்முன்னு கும்முவீங்கன்னு ஆவலுடன் ஓடி வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே காயத்ரி! கொடுத்த காசு படத்தின் முதல் பாதிக்கே போதும் என்று அவன் அவன் கிளுகிளுத்துப் போயிருக்கான். என்னமோ போங்க,இந்த நவீன நளாயினின்னு பட டைரக்டர்
கில்லாடின்னு விமர்சனங்களைப் பார்த்தா தோணுது :-)

Thamizh said...

//
சத்தம் போடாதே நல்லாயிருக்கு..பார்த்துட்டு வந்து இன்னொரு மொக்கை எழுதுங்க..
//

அய்யனார் கவிதகள படிச்சு கன்பியூஸ்ட் ஆய்டிங்களா

இது கலக்கல் திரை விமர்சனம்க மொக்கைகள்னு லேபிலே போடுவாங்க பாருங்க அது கலக்கல் மொக்கைகள்

இராம் said...

கவிதாயினி,

உங்க பதிவு அழகோட மதி'க்கா போட்ட கமெண்ட் தான் சூப்பரு..... :))

Sridhar Venkat said...

ஹ்ம்ம்... இந்த படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். அதிலும் ஆ.வி.யில் 43 மதிப்பெண்கள் என்று படித்துவிட்டு போனதால் அதிகபட்ச ஏமாற்றம்.

ராணி மடம், போலிஸ் ரெய்ட், வில்லனின் ஸாடிஸம், பார்த்திபன் முதன்முதலில் அம்முவை சந்திப்பது போன்ற பல சம்பவங்கள் exaggarated-ஆகத்தான் இருந்த்து. மிகுந்த ஆயாசமாகத்தான் இருந்தது படத்தை பார்க்க.

மிகப் பெரிய சொதப்பல் - கிளைமேக்ஸ்.

உங்கள் விமர்சனம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

அபர்ணா சென்னின் "15 Park Avenue" பார்த்து விட்டீர்களா? இல்லையென்றால் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

மின்னுது மின்னல் said...

இருதயம் பலஹீனமாவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்
//

உங்க பதிவை தொறந்தாதான் இதயம் திக்குதிக்குனு அடிக்கிது..:)

மின்னுது மின்னல் said...

கற்பனை...

அப்படினு ஒரு படம் நல்ல அருமையான படம் விமர்சனம் தேவை..!!!

அபி அப்பா said...

வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்

அபி அப்பா said...

சத்தம் போடாதே போயிட்டு வந்து பிளாக் பக்கம் சத்த கித்தம் போட்டா ரத்தம் பார்க்க நேரிடும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் கருத்துக்கள் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றன. கருத்தின ஆழத்திறகாவது பார்க்கலாம் போலிருக்கிறது

அபி அப்பா said...

மின்னல் நல்ல ஆளுய்யா நீர், கற்பனை பார்க்க வச்சு பின்ன காயத்ரி பதிவு போட்டு இதல்லாம் தேவையா? நல்லா இருய்யா!

அபி அப்பா said...

மைபிரண்ட் பதிவ படிக்கலையே, குட் நானும் படிக்கலை ஹஹ்ஹஃஹ்ஹா

அபி அப்பா said...

நம்ம டார்கெட் எத்தினின்னு சொல்லுங்கப்பா!

அபி அப்பா said...

யாரும் இருக்கியலா இல்ல நான் மட்டும் தானா! பயமா இருக்குப்பா சீக்கிரம் யாராவது வாங்கப்பா!

ILA(a)இளா said...

நல்ல விமர்சனம். இன்னும் படம் பார்க்கலை பார்த்துட்டுத்தான் சொல்லனும். ஆமா தமிழ்மணம் நட்சட்த்திர பகுதியில இருக்கிற படம் யாருதுங்க? உங்க பேத்தியோடதா?

அபி அப்பா said...

யோவ், விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க போயிட்டீங்களாப்பா வாங்க நான் தனியா பொலம்பிகிட்டு இருக்கேன்யா!

அபி அப்பா said...

நல்ல வேளை இளா வந்துட்டாரு, வாங்க வாங்க எப்டி இருக்கீங்க இளா?

Charu said...

கதை என்னவென்று அறிய படம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.. உங்கள் விமர்சனத்திலேயே படத்தின் கதை தெரிந்து விட்டது. நன்றி.

நாமக்கல் சிபி said...

//யோவ், விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க போயிட்டீங்களாப்பா வாங்க நான் தனியா பொலம்பிகிட்டு இருக்கேன்யா!//

அபி அப்பா! நானும் வந்துட்டேன்!

நாமக்கல் சிபி said...

//உங்க பேத்தியோடதா?
//

அது என் கொள்ளுப் பேத்தியோடது!

- இப்படிக்கு கவிதாயிணியின் கொள்ளுப் பேத்தி!

நாமக்கல் சிபி said...

//அம்முவாகிய நான்//

கும்முவாகிய நான்னு போட்டா பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன்!

கண்மணி said...

சிபி இந்த வாரம் இந்த மடத்துல கும்மியா ஹிம் ம்ம் கொட்டுங்க கொட்டுங்க

ஆட்டைக்கு அபி அப்பாவச் சேர்த்துக்கங்க.

காயத்ரி காது கிழியும் இவங்க கும்மியில உஷார்

ILA(a)இளா said...

பாட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ. பின்னூட்டத்துக்கு யாரும் கம்பேனிக்கு வர மாட்டேங்குறாங்க :(

Charu said...

நான் இங்க வந்துட்டேன் :)

Charu said...

வேற யாரெல்லாம் இருக்கீங்க?

கோபிநாத் said...

\\Charu said...
வேற யாரெல்லாம் இருக்கீங்க?\\

நான் இருக்கேன்..

Charu said...

டொக்.. டொக்..

கோபிநாத் said...

பதிவை படிச்சிங்களா??

Charu said...

மத்த ரெண்டு பேரும் அங்கயே தூங்கிட்டாங்களா??

Charu said...

அதெல்லாம் படிச்சு எப்பவோ பின்னூட்டம் போட்டாச்சு :)

Charu said...

//அப்பறம் ஏன் அறியாப்பிள்ளையை காரணமா சொல்லிக்கிட்டு.... :)
//

அப்படி சொல்லுங்க முத்துலட்சுமி :) நீங்கதான் உண்மைய கரெக்டா புரிஞ்சு வெச்சிருக்கீங்க :)

கோபிநாத் said...

\\மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
இந்தப் படம் பார்க்கணும்னு இருக்கேன்.

//அத்தி பூத்தாலும் ஆலமரம் பூத்தாலும் இனி மொக்கைப்படம் பார்க்க தியேட்டருக்குப் போவதில்லையென சங்கல்பம் எடுத்திருந்ததால் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.//

இனி மொக்கைப்படம் பார்க்க மாட்டீங்களா? :((( ஏனுங்க இந்த விபரீத சங்கல்பமெல்லாம். நீங்க மொக்கைப்படமா பார்க்கணும்னு இல்ல இங்க நான் கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டிருக்கேன். கொஞ்சம் கருணை ப்ளீஸ்\\

ரிப்பிட்டேய்....

Charu said...

//ILA(a)இளா said...
பாட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ. பின்னூட்டத்துக்கு யாரும் கம்பேனிக்கு வர மாட்டேங்குறாங்க :(
//

நாங்க வந்தாச்சு.. நீங்க எங்க போயிட்டீங்க???

கோபிநாத் said...

\\மக்களே கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பா. இவங்க மொக்கைப் படம் பார்க்கணும். இடுகை போடணும். நாம படிக்கணும். பொரண்டு பொரண்டு சிரிக்கணும். இதெல்லாம் உலகம் இயங்குவதற்கு வேண்டிய விசயங்களில்லையா. இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாங்க. \\

காயத்ரி எங்களை நீங்க தான் மொக்கை படம் பார்த்து காப்பதனும் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல போறது என்னன்னா... நாளைய கும்மி ஒரு கவுஜ கவுஜ கவுஜ போஸ்ட்லதான்! எல்லாரும் மறவாமல் வந்து கலந்துக்கணும்ன்னு அஒல்லிக்கிறோம்.

பி.கு: இந்த் அறிவிப்பை படித்துவிட்டு கவிதாயினி கவுஜ போஸ்ட் போடலைன்னா, நம்முடைய கும்மி வேறொரு போஸ்ட்டுக்கு மாறலாம். எந்த போஸ்ட்டுன்னு நாங்க கூடிய சீக்கிரத்திலேயே அறிவிப்போம். சரீயா?

Charu said...

//இனி மொக்கைப்படம் பார்க்க தியேட்டருக்குப் போவதில்லையென சங்கல்பம் எடுத்திருந்ததால் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது//

தெளிவா சொல்லுங்க.. இனிமே மொக்க படமே பாக்க மாட்டீங்களா? இல்ல மொக்க படத்த தியேட்டர்ல பாக்க மாட்டீங்களா???

Charu said...

//போயிட்டு வந்து சத்தம் போட்டா பரவால்லயா?//

அதானே.. ஒரு படத்த பாத்துட்டு நம்ம கவிதாயினியால எப்படி அமைதியா இருக்க முடியும்? விமர்சனம் எழுதலனா அவங்க மண்டை வெடிச்சிடுமே :)

கோபிநாத் said...

\போதாக்குறைக்கு தவறாமல் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் 'புண்ணியவதி' இந்த படத்திற்கு மட்டும், 'படம் பார்த்தாலோ விமர்சனம் எழுதினாலோ குத்துவேன் கொல்லுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணம்\\

மக்களே கடைசியில அந்த புண்ணியவதி படத்தை பார்த்துட்டாங்க :)

Charu said...

//(அது ஏன் தமிழ்ப்படங்களில் மட்டும் பிரசவ நேரங்களில் மழை பெய்கிறது?)//

அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது??

Charu said...

//மக்களே கடைசியில அந்த புண்ணியவதி படத்தை பார்த்துட்டாங்க :)//

அந்த புண்ணியவதியால ஒரு மணி நேரம் கூட முழுசா பாக்க பிடிக்காம பாதிலியே வெளிநடப்பு செஞ்சிட்டாங்களாம்...

கோபிநாத் said...

\\Charu said...
//(அது ஏன் தமிழ்ப்படங்களில் மட்டும் பிரசவ நேரங்களில் மழை பெய்கிறது?)//

அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது??\\

....படித்தது : தமிழிலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஏ., எம்.ஃபில்)

அதான் :)

கோபிநாத் said...

\\Charu said...
கதை என்னவென்று அறிய படம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.. உங்கள் விமர்சனத்திலேயே படத்தின் கதை தெரிந்து விட்டது. நன்றி.\\

நீங்க பதிவை படிச்சிட்டிங்கன்னு நம்பிட்டோம்

Dreamzz said...

//என்றாலும் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணீப் பெண்கள் மற்றும் இருதயம் பலஹீனமாவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்! (ஜி3 நீ இதுல எந்த கேட்டகிரி?)//
இது எல்லாம் சொல்லி தான் தெரியனுமா!

Dreamzz said...

இன்னும் படம் பாக்கல. பார்த்திட்டு படிக்கிற்றேன் :))

ambi said...

அருமையான விமர்சனம். தமிழ் படம் எல்லாம் இந்த ஜிலேபி தேசத்துல பாக்க முடியாது. :)

நன்றி ஹை!

காயத்ரி said...

பாவிகளா.. நட்டநடு ராத்திரில இந்த கும்மு கும்மிருக்கீங்களே.. அடுத்த கும்மி எங்க எப்பன்னு ப்ரோக்ராம் வேற ஃபிக்ஸ் பண்றா ஒருத்தி.. அவ்வ்வ்வ்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. எல்லாம் ஒரு வாரத்துக்கு தான் சொல்லிட்டேன்.

காயத்ரி said...

ஸ்ரீதர் வெங்கட், அம்பி.. முதல் வருகைக்கு நன்றி!

LakshmanaRaja said...

நல்ல விஷயம் நல்ல படம் பார்க்க ஆரம்பிச்சது.

ரொம்ப நல்ல விஷயம் அதுக்கு விமர்சனம் எழுதுவது..

வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு.

தருமி said...

ஒரு திரைப்பட விமர்சனம் படிக்க வந்து ஒரு நல்ல பதிவரைத் தெரிந்துகொண்டேன்.

நன்றியும் வாழ்த்துக்களும்...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நிறைய கற்றுக்கொடுத்துள்ள படம்.

உடலுழைப்புத் தொழிலாளர்களின் மனதை(யும்) நன்றாகப் படம் பிடித்துள்ளார்கள்.

தன் மனைவியை விலையாகக் கேட்டவனை, கெட்டவனைத் தலைவனாகக் கொண்டிருந்த இலக்கிய அமைப்பிடமிருந்து பார்த்திபன் விருதினை வாங்குவது சரியான முடிவாகத் தெரியவில்லை.