Monday, September 29, 2008

குறையொன்றுமில்லை..

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்
விழுந்து விட்டாற் போலிருக்கிறது.

கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன.

உவகையில் கசியும் விழிநீர்
தரைவிழும் முன்னர்த்
தடுத்தாட் கொள்ளப்படுகிறது.

'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.

இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.

57 comments:

G3 said...

:))))))))))))

Anonymous said...

நன்கு உள்ளது!!

Anonymous said...

//உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.//

இந்த வரிகள் எளிதாக புரிந்துக் கொள்ளும்படி உள்ளது!!!

Anonymous said...

//'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன.//

அற்புதமாக இருக்குங்க!!

na.jothi said...

உங்க கண்ணன் கிட்ட சொல்லியாச்சா இதை

நந்து f/o நிலா said...

அப்பாட புள்ளைக்கு முழுசுமா தெளிஞ்சிடுச்சுப்போய்ய்,
அழுவாச்சி இல்லாத கவுஜ சூப்பர்.

Thamiz Priyan said...

:) நிறைவோடு வாழ்வதற்கு வாழ்த்துக்கள்!

குப்பன்.யாஹூ said...

இன்று காலைதான் நினைத்தேன். (௨மநி நேரங்கள் முன்னால்)

ஒரு பதிவு போடுங்கள், படிக்க ஒன்றும் இல்லை என்று.

பள்ளி காலங்களில் வாசித்தல் மீது இல்லாத ஆர்வம் இப்போது இருக்கிறது.

கூறும் முன்பாய்க்
குறைகள் களையப்படுகின்றன

திருமணம் ஆகி முதல் 6 மாதங்கள் பாருங்கள்., கூறும் முன்பே கோரிக்கைகள் தீர்க்கப்படும் உடனுக்கு உடன்.

எப்போதும் போல ஒரு நல்ல பதிவு அளித்தமைக்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_yahoo

குப்பன்.யாஹூ said...

G3 உங்கள் மொபைல் போனில் அல்லது ஈமெயில் இல் ஏதும் செட்டிங்க்ஸ் செய்து உள்ளீர்களா , காயத்ரி பதிவு போட்டதும் sms அல்லது அலெர்ட் மெசேஜ் வரும்படி.

பதிவு போட்டு 30 நிமிடத்திற்குள் பினூட்டம்.


Hey i have written for kindal.

It is nice to see G3 and gayathri , all have good wavelenght, thought process. keep it up.


I think we need to keep gayathri blog window open in our screen in minimised icon (like how we keep yahoo messenegr, gtalk icons).
kuppan_yahoo

குப்பன்.யாஹூ said...

பின்னூட்டம் (இந்த வார்த்தையே சரியா என்று தெரிய வில்லை) எழுதும் போட்டி ஆர்வத்தில், கவிதையை உள் வாங்கி படிக்க வில்லை. இப்பொழுதுதான் படித்தேன் 3 முறை,. மிக அருமை.

இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது.

மிக அற்புதமான வார்த்தை ஆழுகை. நதியை ஒரு பெண்ணாக உருவாக படுத்தி கரைகளை ஒரு கணவன்/ காதலன் / தந்தை/ தாய் ஆக உருவகம் செய்தல். மிக மிக அருமை.

3 அல்லது 4 முறை தாமிரபரணியில் வெள்ளம் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், வெள்ளத்தின் வீச்சு குறைய நதிக்கு பூஜை செய்வோம், அப்பொழுது நதியை ஒரு பெண்ணாகத்தான் உருவகம் செய்வோம், இந்து மத வேதங்களில் கூட நதிகளை பெண்களாகத்தான் உருவகம் செய்கிறார்கள்.


தீயினில் தூசாகி , சாம்பல் ஆவதை solkireergalaa , புரிய வில்லை எனக்கு அந்த ௨ வரிகள்.

சாம்பல் ஆகி kettu அழிகின்றன அல்லது ?

Unknown said...

"போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்"

இதற்கு அர்த்தம் விளங்கவில்லை அம்மணி.

ஒரே ஒரு சந்தேகம். இது பாலைத்திணை மாதிரி தெரியலையே, முல்லைத்திணை அல்லது குறிஞ்சித்திணை மாதிரி தெரியுது. :)

மற்றபடி கவிதை அருமை.

Unknown said...

"போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்"

இதற்கு அர்த்தம் விளங்கவில்லை அம்மணி.

ஒரே ஒரு சந்தேகம். இது பாலைத்திணை மாதிரி தெரியலையே, முல்லைத்திணை அல்லது குறிஞ்சித்திணை மாதிரி தெரியுது. :)

மற்றபடி கவிதை அருமை.

PS: ஏதாவது தவறு இருந்தால் திருத்தவும்.
http://en.wikipedia.org/wiki/Sangam_landscape#Kurinji_.E2.80.93_Mountainous_Region
http://en.wikipedia.org/wiki/Sangam_landscape#Mullai_.E2.80.93_Forests

காயத்ரி சித்தார்த் said...

ஜி3..

பதிவை பப்ளிஷ் பண்ணிட்டு தமிழ்மணத்துல அப்டேட் பண்ணிட்டு வர்றதுக்குள்ள கமெண்ட்டா? என்னத்துக்கு இந்த சிரிப்பு? ;) (சொல்லிடாத)

காயத்ரி சித்தார்த் said...

நன்றிங்க புனிதா..

ஸ்மைல்.. உங்க கேள்விக்கு பதிலும் உங்க பெயர் தான். :) நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

அய்யோ நந்து அண்ணா.. இப்ப்ப்ப்ப்டி ஓட்றீங்களே. :)

தமிழ்ப்பிரியன் வாழ்த்துக்கு நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

//I think we need to keep gayathri blog window open in our screen in minimised icon (like how we keep yahoo messenegr, gtalk icons).
kuppan_yahoo
//

குப்பன்.. என்ன இதெல்லாம்? எதாச்சும் ஆட்டோ வரப்போகுதா? பயமா இருக்கே.. :)

காயத்ரி சித்தார்த் said...

//போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்"

இதற்கு அர்த்தம் விளங்கவில்லை அம்மணி.

//

ராம்ஸ்.. இது திருப்பாவையில் இடம்பெறும் ஆண்டாளின் வரி. அவள் பயன்படுத்தியிருக்கும் பொருள் வேறு. நான் பயன்படுத்திருப்பது (என் பிழைகளும்) இதுவரை என்னைக் கடந்து போன துயரங்களும் இனி எதேனும் துன்பங்கள் வரவிருந்தால் அவையும் உன் முன்னால் தீயில் பட்ட தூசு போல பொசுங்கி மறைகின்றன என்ற பொருளில்.

தீ மாசற்றது.. தீயில் விழும் எவையும் தானும் தீயாகி புனிதமடைவது போல... :)

குப்பன்.யாஹூ said...

'போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
உன் முன்னால்
தீயினில் தூசாகித்'
திசை கெட்டழிகின்றன

இதற்கு விளக்க உரை எழுதுங்க டீச்சர்.

கோனார் உரையில் கூட தேடி பார்த்துட்டேன், பயன் இல்லை

நாங்க பள்ளிகூடத்துல தமிழ் பாடம் ஆர்வத்துடன் படிக்க வில்லை. இணைய தளம், சுஜாதா ellam படிச்சதுக்கு அப்புறம்தான் தமிழ் மீதே ஆர்வம் வந்தது.

காயத்ரி சித்தார்த் said...

//ஒரே ஒரு சந்தேகம். இது பாலைத்திணை மாதிரி தெரியலையே, முல்லைத்திணை அல்லது குறிஞ்சித்திணை மாதிரி தெரியுது. :)//

ஆகப்படாதுங்களா? குறிஞ்சியும் முல்லையும் திரிந்து உருவானது தான் பாலைன்னு சிலப்பதிகாரம் கூட சொல்லுதே. :))))

//மற்றபடி கவிதை அருமை.//

நன்றிங்க.

ஆயில்யன் said...

//இருபெரும் கரைகளுக்குள்
பெருகியோடும் நதியாய்

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்.//


சூப்பரூ!

ஆயில்யன் said...

//காயத்ரி said...
ஜி3..

பதிவை பப்ளிஷ் பண்ணிட்டு தமிழ்மணத்துல அப்டேட் பண்ணிட்டு வர்றதுக்குள்ள கமெண்ட்டா? என்னத்துக்கு இந்த சிரிப்பு? ;) (சொல்லிடாத)
//


இது என்ன கேட்டகிரியில வரும் மிரட்டலா?

மங்களூர் சிவா said...

/
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
/

கவுஜர்ஸ் பிலிஸ் எல்ப் என்னய்யா அர்த்தம் இதுக்கு!?!?

மங்களூர் சிவா said...

அப்பாடா புள்ளைக்கு முழுசுமா தெளிஞ்சிடுச்சுப்போய்ய்,
அழுவாச்சி இல்லாத கவுஜ சூப்பர்.

மங்களூர் சிவா said...

//
rams said...

"போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்"

இதற்கு அர்த்தம் விளங்கவில்லை அம்மணி.
//

அப்பாடா இன்னொரு சேம் ப்ளட்

காயத்ரி சித்தார்த் said...

குப்பன் விளக்கம் எழுதியாச்சே..

ஆயில்யன் ஏன் கோர்த்து விடறீங்க இப்டி? அவளை மிரட்ட முடியுமா யாராச்சும்? :)

காயத்ரி சித்தார்த் said...

// மங்களூர் சிவா said...
அப்பாடா புள்ளைக்கு முழுசுமா தெளிஞ்சிடுச்சுப்போய்ய்,
அழுவாச்சி இல்லாத கவுஜ சூப்பர்
//

ஹலோ புதுமாப்ளை இங்கன என்ன செய்றீரு? இருங்க மிஸ்டர்.குசும்பன்கிட்ட போட்டுக் குடுக்கறேன்.

நாமக்கல் சிபி said...

:))))))))

இன்னிக்கு கொஞ்சம் புரிஞ்சா மாதிரியும் இருக்கு! ஆனா வழக்கம்போல புரியலை!

(அதுசரி! புரிஞ்சாத்தான் கலாய்க்கணுமா என்ன?)

நாமக்கல் சிபி said...

//"போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்"

//

இது திருப்பாவைல வரும் பாட்டாச்சே!

அம்மணி ஆழ்வார் பாடல்கள் ஆராச்சி செஞ்சது இதுக்குத்தானா? பாவம் ஆண்டாள்!

கோபிநாத் said...

\\ காயத்ரி said...
ஜி3..

பதிவை பப்ளிஷ் பண்ணிட்டு தமிழ்மணத்துல அப்டேட் பண்ணிட்டு வர்றதுக்குள்ள கமெண்ட்டா? என்னத்துக்கு இந்த சிரிப்பு? ;) (சொல்லிடாத)
\\

சொல்லிட்டாங்க ;))

saran said...

penniyam saarnthu sollumbothu aandaalai puratchiyaalar enbaargal..thiruppaavaiyin siru therippai ungal kavithaiyodu sernthisaikka seithirukkireergal..
kuraiyonrumillai..


saran

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு...

தமிழன்-கறுப்பி... said...

அப்பாடா இத எவ்வளோ நாளா எதிர்பார்த்தோம் கவிதாயினி...:)

தமிழன்-கறுப்பி... said...

அப்பாடா இத எவ்வளோ நாளா எதிர்பார்த்தோம் கவிதாயினி...:)

தமிழன்-கறுப்பி... said...

அழகு...

ALIF AHAMED said...

முடியல :)

Unknown said...

/*
//ஒரே ஒரு சந்தேகம். இது பாலைத்திணை மாதிரி தெரியலையே, முல்லைத்திணை அல்லது குறிஞ்சித்திணை மாதிரி தெரியுது. //

ஆகப்படாதுங்களா? குறிஞ்சியும் முல்லையும் திரிந்து உருவானது தான் பாலைன்னு சிலப்பதிகாரம் கூட சொல்லுதே. ))
*/

இந்த விசயம் தெரியாம போச்சே... வேறு ஒரு பின்னூட்டத்துல இருந்து தான் தெரிஞ்சுது...

வாழ்த்துக்கள் :))

நசரேயன் said...

அருமை..

ஜியா said...

ம்ம்ம்ம்... ஓகே ஓகே!!

வல்லிசிம்ஹன் said...

காயத்ரி மகிழ்ச்சியா இருக்கு. சந்தோஷக் கவிதை !!அப்பாடா:)

வல்லிசிம்ஹன் said...

காயத்ரி மகிழ்ச்சியா இருக்கு. சந்தோஷக் கவிதை !!அப்பாடா:)

யாரோ said...

கவிதை நன்கு ....சில வரிகள் அர்த்த படுத்த கடினம் ...சரளா நடை பிடித்திருக்கிறது
நானும் ஒரு வலைப்பதிவு செய்துள்ளேன் பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
- கார்த்தி

Unknown said...

யக்கா... இது குப்ப படம்... இதுக்கெல்லாம் விமர்சனமே தேவையில்லை...

வால்பையன் said...

சாய்வு நிலையில் உள்ல எழுத்துகள், வேறெதுவும் அர்த்தம் தருகிறதா?

மொத்தத்தில் கவிதை புரிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல தெரிகிறது

Unknown said...

புரியிது.......
ஆனா....
புரியில.........



http://madydreamz.blogspot.com/

Unknown said...

இன்னும் மூணு வருஷம் கழிச்சு இதே கவிதையை மீள்பதிவு செய்ய முடியுமா?

Venkata Ramanan S said...

wowwww!!!! Breath takin :)

SUBBU said...

Mudiyalada Saamii

Muthusamy Palaniappan said...

Migach Sirantha Uvamai

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரசிக்க வைத்தது. நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா said...

எப்பொழுதும் வேண்டுதல்கள் சிறியதாக இருக்கும்... நீங்கள் சில யுகங்களேனும் அவரோடு வாழ்ந்திடவேண்டும் என்று பெரியதாகவே கேட்கிறீர்களே!!

தவறு அல்லது வருத்தம் தெரிவிக்கும் முன்னரே, செய்யவிடாமல், சொல்லவிடாமல் தடுத்தாட்கொள்ளும் ஒரு துணைவன் இருந்தால் வாழ்வே சுகம்தான் இல்லையா??

அருமையான கரு.. கவிதை.

Anonymous said...

காயத்ரி கவிதை அருமை.
http://mahawebsite.blogspot.com/

Ponmalar said...

Really superb.

Ponmalar said...

Really superb.

Gowripriya said...

அருமை காயத்ரி... மிகவும் ரசித்துப் படித்தேன்.. திருப்பாவையைக் கையாண்டிருக்கும் விதமும் அருமை

Anonymous said...

உன்னிரு கரங்களுக்குள்
வாழ்ந்துவிட தோன்றுகிறது...
ஒரு சில யுகங்களேனும்
//


சரியாகத்தான் சொல்லி உள்ளிர்கள்
---------------------------
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு
சூரியனையும் சுற்ற
பூமிக்கு ஒரு ஆண்டு ஆகிறது
உன்னைமட்டுமே சுற்றும் எனக்கு
ஒரு ஆயுள்போதாது

குறை ஒன்றும் இல்லை !!! said...

Ayya yen peru !!!!

ரௌத்ரன் said...

ரொம்ப அழகான கவிதை...