Wednesday, September 10, 2008

மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...



நடிப்பு : விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்
திரைக்கதை & இயக்கம் : ஆர்.கண்ணன்
இசை: வித்யாசாகர்
தயாரிப்பு : சத்யஜோதி ஃபிலிம்ஸ்

சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி கிளம்பிப் போயாச்சு. உள்ள நுழையும்போது படம் போட்டு 10 நிமிஷமாகியிருந்துச்சு. அடடா! கொஞ்சம் முன்ன வந்திருக்கலாமேன்னு வருத்தப்பட்டுட்டே பாக்க ஆரம்பிச்சோம். இண்டர்வெல்ல "அடடா! ரொம்ப பின்ன வந்திருக்கலாமே" ன்னு மறுபடி ஒருமுறை வருத்தப்பட்டோம்!!

படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் 'படம் எப்படியிருந்துச்சு? என்ன கதை?'ன்னு கேட்டாங்க அம்மா. ஒரு ஆர்வக் கோளாறுல ரொம்பவும் சுருக்கமா கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதிரடியா ஆரம்பிச்சா நல்லா இருக்குமேன்னு இப்படி தொடங்கினேன்..

"வில்லன் ஹீரோவ பெரிய சுத்தியால அடிக்க வர்றான் மா.. ஹீரோ அதை தடுக்கறார். அப்ப என்னாகுதுன்னா... அந்த இரும்பு தவறிப் போய் வில்லனோட வைஃப் மண்டைல விழுந்து அவ செத்து போய்டறா... அதுல இருந்து வில்லனுக்கு வருது பாருங்க ஒரு வெறி..."

"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"

"அது வேற ஒரு பிரச்சினைக்கு.. ஹீரோவோட தங்கச்சிக்கு வில்லன் சப்போர்ட்டா வர்றான். அதனால ஹீரோ அவனை அடிச்சிடறார்"

"ஹீரோ தங்கச்சிக்கு வில்லன் ஏன் சப்போர்ட் பண்றான்??!!"

"இது ஒரு நல்ல்ல கேள்வி! ஹீரோவோட வீட்டை அவனுக்கு தெரியாம அவன் தங்கச்சி விக்கறா. அதை தடுக்கும்போது தான் இப்டியாய்டுது"

"தங்கச்சி ஏன் அண்ணனுக்கு தெரியாம சொத்தை விக்கனும்?"

"அதுவந்து... அது இன்னொரு பிரச்சினை.. ஹீரோவோட அப்பாவுக்கு ரெண்டாந்தாரத்துப் பொண்ணு அது. சொத்துக்காக அடிச்சுக்கறாங்க.."

இப்டியே ஒவ்வொரு பிரச்சினையா விரிவா எடுத்து சொல்லி கதை ஆரம்பம் வரை போய் மறுபடி ரிவர்ஸ் கியர் எடுத்து க்ளைமாக்ஸ் வரை போய் சுருக்க்க்கமா நான் சொல்லி முடிச்சப்ப... அம்மா, "படத்துக்கு நடுவுல புகை பிடிக்காதீர், அஜந்தா பாக்குத்தூள் னு கார்டெல்லாம் வருமே? அதை சொல்லாம விட்டுட்டியே?" ன்னு கேக்கறாங்க. (அவ்வ்வ்வ்) . நானென்னங்க செய்வேன்? வாழைப்பழத்தை விளக்கெண்ணை விட்டு பிசைஞ்ச மாதிரி இருக்கு கதை. இத விட தெளிவா வேறெப்படி சொல்றதாம்?

சரி வேற மாதிரி சொல்றேன்.. உங்களுக்காச்சும் புரியுதான்னு பாருங்க.

7 வருஷமா லண்டன்ல இருந்த விநய், அப்பா செத்ததும் திரும்பி வர்றார் இந்தியாக்கு. இவ்ளோ நாள் சம்பாதிச்ச காசுல இங்கயே பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கறார். வந்து பாத்தா பேங்க்ல பணமேயில்ல. சம்பாதிச்சு அனுப்பின 60 லட்சமும் எங்க போச்சின்னு தெரில. அப்பாக்கு இன்னொரு மனைவி இருக்காங்கன்னும் 20 வயசுல பொண்ணொருத்தி (லேகா வாஷிங்டன்) இருக்கான்னும், தான் அனுப்பின பணத்துல அப்பா மதுரைல ஒரு வீடு வாங்கி வெச்சிருக்கார்னும் விசாரிச்சு தெரிஞ்சுக்கறார்.

அப்பா சொத்து தனக்குத் தான்னு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க. லேகாக்கு அமெரிக்காக்கு போய் படிக்க பணம் வேணுமாம். ரெண்டு பேரும் அந்த வீட்டை விக்க முயற்சி பண்றாங்க.

ஆச்சா? கத ஒரு மாதிரி வெளங்குதா? இது வரைக்கும் எனக்கு என்னவோ தினத்தந்தில நிலத்தகராறு, சொத்துத் தகராறு நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி.

அப்பால விநய் என்ன செய்றார்னா.. நேரா மதுரைக்கு போய் அந்த வீட்லயே தங்கி அங்க குடியிருக்கற பாவனா ஃபேமிலியை வீட்டைக் காலி பண்ண சொல்றார். பாவனா முடியாதுன்றாங்க. பாவனாவை கன்வின்ஸ் பண்றதுக்காக "நாம சின்ன வயசுல ஒன்னாப் பழகியிருக்கோமே" ன்னு இஷ்டத்துக்கு ரீல் விடறார். தமிழ் சினிமா நியதிப்படியும் டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரியும் பாவனாக்கு விநய் மேல காதல் வந்திடுது.

ஒரு வழியா அவங்க வீடு காலி பண்ணினதும் வீட்டை அளந்து பாத்தா பக்கத்து வீட்டுக்காரன் 1900 சதுரடி ஆக்ரமிச்சு கட்டிருக்கான். ( என்ன அநியாயம் பாருங்க!) அவன் மேல கோர்ட்ல கேஸ் போட்டு, வாதாடி, ஜெயிச்சு, நோட்டீஸ் ஒட்டி, ஆக்ரமிப்பெல்லாம் இடிச்சு, வீட்டை விக்க ஏற்பாடெல்லாம் பண்ணிடறார். (ஆஆவ்வ்வ்வ்)

அப்ப பாத்து தங்கச்சி கிளம்பி வந்து மதுரைய கலக்கிகிட்டிருக்கற குணா-ன்ற தாதா துணையோட வீட்டை விக்கப் பாக்கறா. வில்லனும் என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி பொண்டாட்டியோட குடும்ப சகிதமா ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்திடறார். கரெக்டா விநய் ஸ்பாட்டுக்கு வந்து தங்கச்சியப் பாத்து "கையெழுத்து போடாத" ன்றார். வில்லன் "நீ போடு" ன்றார். இவர் "போடாத"ங்கிறார். அவரு "போடு"ங்கிறார். வந்த ஆத்திரத்துல எனக்குத்தான் யார் தலைலயாச்சும் கல்லைத் தூக்கிப் போடலாமான்னு இருந்துச்சு.

இந்த சண்டைல வில்லனோட வைஃப் செத்துப் போய்டறாங்களா அங்க தான் கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கறாங்க. (அங்ங்ங்ங்க கொண்டு போயா வெச்சீங்க? - நன்றி விவேக்!) வில்லன் துரத்த ஆரம்பிக்கறார். வீடே வேணாம்டா சாமீன்னு இவங்க ஊருக்கு ஓடிர்றாங்க. ஊடால பாவனாவும் சென்னைக்கு வந்து "நாங்க சின்ன வயசுல இருந்து காதலிக்கிறோம்.. எனக்கு அவுக(விநய்) மடில தான் காது குத்தினாங்க"னு அவங்க பங்குக்கு நமக்கு காது குத்தறாங்க . (அய்ய்ய்ய்ய்யோ!) பணம் கிடைக்காம ஹீரோ சுத்தமா வெறுத்துப் போய் மறுபடி லண்டன் கிளம்பறார். அவ்ளோ நாள் சும்மா இருந்த வில்லன், சரியா இவரு கிளம்பற அன்னிக்கு ராகுகாலம் எமகண்டம் பாத்து லேகாவ கடத்திடறார். ஏர்போர்ட் வரைக்கும் போன விநய் நம்ம அபிஅப்பா மாதிரியே ஃப்ளைட்டை கோட்டை விட்டுட்டு தங்கச்சிய காப்பாத்தப் போறார்.

விநய் லேகாவை காப்பாற்றினாரா... ? லேகாவின் லட்சியம் நிறைவேறியதா? தாதா குணாவை போலீஸ் கைது செய்ததா? அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்தார்களா? பாவனா - விநய் காதல் என்னவாயிற்று? விடைகளை வெள்ளித்திரையில் காண்க ன்னு நான் சொன்னா நீங்க என்னை அடிக்க வர மாட்டீங்க தானே?

இயக்குனர் ஆர்.கண்ணன் மணிரத்தினத்தின் உதவியாளராம். நம்பறாப்ல இல்ல படம். (சைடு பிசினஸா பழனில பஞ்சாமிர்தம் வித்துட்டிருந்தார் போல) இசை வித்யாசாகர் ஒரே ஒரு பாட்டு நல்லாருந்த மாதிரி இருந்துச்சு.. அதும் இப்ப மறந்து போச்சு. படத்துல நகைச்சுவைக்கு விவேக்கும் சந்தானமும். சந்தானம் ஸ்கோர் பண்றார். இவங்க ரெண்டு பேரை விடவும் அருமையா காமெடில கலக்கியிருக்கறது சிவாஜி புகழ் 'லக லக லக' இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!!
விநய்க்கு தமிழ்நாட்டுல 'விலைவாசி ஏறிட்டே போகுது, டீசல் கிடைக்க மாட்டிங்குது, எப்பவாச்சும் தான் கரெண்ட் வருது..' ன்னு கவலை போலிருக்கு.. எப்பவும் சோகமாவே இருக்கார். க்ளைமாக்ஸ்ல அவர் வில்லனுக்கு அட்வைஸ் பண்ற சீன் இருக்கே... ஸ்ஸஸ்ஸ்ஸ்... (கேப்டன்! உங்களைப் போய் எல்லாரும் கிண்டல் பண்றாங்களே? அடுத்த எலக்ஷன்ல என் ஓட்டு தேமுதிகவுக்கு தான்!)

ஆனா இத்தனை கொடுமையையும் மறக்கற அளவுக்கு பாவனா அழகா இருக்காங்க. விநய் தன்னை பொண்ணு பாக்க வந்திருக்கறதா நினைச்சுகிட்டு தயங்கி தயங்கி பேசற காட்சி அழகு! வில்லன் மனைவியா வர்ற அதிசயா... கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல வந்தாலும் நடிப்பு அசத்தல்! இலவச இணைப்பு மாதிரி பாவனா தங்கச்சியா வர்ற சின்ன பொண்ணு செம க்யூட். பாட்டெல்லாம் கேக்கற மாதிரி இல்லன்னாலும் பாக்கற மாதிரி இருக்கு...
மொத்தத்தில் ஜெயம்கொண்டான் ரொம்பவும் சகிப்புத் தன்மையுள்ள மக்கள்ஸ் (அதாவது என்னய மாதிரி!) ஒரே ஒரு முறை கண்ண மூடிக்கொண்டு பார்க்கத் தகுந்த படம் என்று இந்த விமர்சனக் குழு பரிந்துரைக்கிறது.

ஜெயம்கொண்டான் - மறைக்கப்பட்ட உண்மைகள் :
படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. டொய்ங்க்க்..." அப்டின்னு பாடிகிட்டே வீட்டுக்கு போய்ட்டோம்.

72 comments:

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))

வால்பையன் said...

இயக்குனர் சீரியசா எடுத்த ஒரு படத்தை நகைசுவை மசாலா தூவி கலக்கிடிங்க!
தியேட்டர்ல சீட்டே கிடைகலயாமே (படுத்து தூங்க) சொல்லவே இல்ல

Sen22 said...

Same Blood...

அவ்வ்வ்வ்வ்வ்

பாவனா தங்கச்சியா வரவங்க தீபிகா இல்லைங்க சரண்யா...

☀நான் ஆதவன்☀ said...

ஹா ஹா ஹா
நீங்க இது போல மொக்க படம் நிறைய பார்த்து இது போல நல்ல விமர்சனம் தர என் சாபங்கள்

Sen22 said...

//"அடடா! இன்னும் ரொம்ப பின்ன வந்திருக்கலாமே" ன்னு மறுபடி ஒருமுறை வருத்தப்பட்டோம்!!//

ஆஹாஹாஹாஹாஹாஹா

Sen22 said...

//வில்லனும் என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி பொண்டாட்டியோட குடும்ப சகிதமா ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்திடறார். //

பிண்றீங்க, பிண்றீங்க

Sen22 said...

//வில்லன் மனைவியா வர்ற அதிசயா... கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல வந்தாலும் நடிப்பு அசத்தல்!//

உண்மையிலே அதிசயா நடிப்பு சூப்பரு...

காயத்ரி சித்தார்த் said...

நன்றி முரளிகண்ணன்.

//இயக்குனர் சீரியசா எடுத்த ஒரு படத்தை நகைசுவை மசாலா தூவி கலக்கிடிங்க!//

சீரியசா? முழுநீள நகைச்சுவை காவியம்ங்க. :)

காயத்ரி சித்தார்த் said...

//Same Blood...

அவ்வ்வ்வ்வ்வ//


சென்22... புதுசா வர்றீங்க போல?உங்களுக்கும் இதே கஷ்டமா? அழாதீங்க.. ப்ளீஸ்.

//பாவனா தங்கச்சியா வரவங்க தீபிகா இல்லைங்க சரண்யா..//

எதுவா இருந்தா என்னங்க? ரோஜாவுக்கு பேரா முக்கியம்? (அப்பாடா! சமாளிச்சிட்டேன்.) :)

(பேர் சரியாத் தெரிலங்க. மாத்திட்டேன்.)

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க இது போல மொக்க படம் நிறைய பார்த்து இது போல நல்ல விமர்சனம் தர என் சாபங்கள்//

என்னய பாத்தா பாவமா இல்லீங்களா ஆதவன்? :(

சந்தர் said...

// கத ஒரு மாதிரி வெளங்குதா? இது வரைக்கும் எனக்கு என்னவோ தினத்தந்தில நிலத்தகராறு, சொத்துத் தகராறு நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி.//

சும்மா பின்றீங்க போங்க!

ஆயில்யன் said...

//நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை//

இதுவும் சூப்பரூ!: ))))))))))))))


அக்கா கலக்குறீங்க போங்க!

குப்பன்.யாஹூ said...

எல்லா யுவதிகளும் வினய் சாக்லேட் பேபி என்று சொல்கின்றனர். சென்னை திரை அரங்குகளில் சுடிதார்களும் ஸ்கூட்டி களும் நிறைந்து காணப்படுகிறது.

வினய் புடிக்கலையா உங்களுக்கு, மன சாட்சியோடு சொல்லுங்க (உங்க தங்கை இந்த பதிவு படிக்க மாட்டங்க, கவலை வேண்டாம்).

மொக்கை படத்தை கூட சுவாரஸ்யமாக எழுத முடிஉம் என்று நிரூபித்தமைக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்

காயத்ரி சித்தார்த் said...

சுந்தர், ஆயில்யன், ஜி3 நன்றி! :)

குப்பன்...

விநய் பிடிக்கலன்னு யார் சொன்னா? படம் போனதே விநய் - பாவனா காம்பினேஷனுக்காக தான். பாடல் காட்சிகள் தவிர மத்த எல்லா நேரத்துலயும் விநயை பாத்தா அய்யோ பாவம் னு இருக்கு.. என்ன செய்றது?

ramachandranusha(உஷா) said...

உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி :-)))))))))))))))))

குப்பன்.யாஹூ said...

மேடம் இன்னிக்கு கல்லூரி போகலையா. ரிப்ளை கமெண்ட்ஸ் எல்லாம் உடனுக்குஉடன் பதிவு செய்கிறீங்க.

குப்பன்_யாஹூ


நான் பொறுப்பா ஆபீஸில் உக்காந்து ப்லோக் படிக்கறேன் (எங்க குரு டுபுக்கு சொல்லி தந்த பாடம்). எங்களை பாத்தாவது திருந்துங்க மேடம்.

காயத்ரி சித்தார்த் said...

குப்பன்.. கல்லூரியாவது கத்திரிக்காயாவது? நான் இப்போ கல்யாணப் பொண்ணாக்கும்! :)

காயத்ரி சித்தார்த் said...

உஷா அக்கா. இந்த பாட்டு ஜூப்பரா இருக்கே!! அடுத்த மொக்கைப் படத்துக்கு யூஸ் பண்ணிக்கறோம்.. டேங்க்ஸ் :)

Anonymous said...

பார்க்க நினைத்த படம்... நல்ல வேளை காப்பாத்திட்டீங்க... படத்தைவிட உங்க விமர்சனம்தான் சூப்பர்...வழக்கம் போல...! :-)

சரவணகுமரன் said...

ஹா... ஹா... ஹா...

Anonymous said...

” கல்லூரியாவது கத்திரிக்காயாவது? நான் இப்போ கல்யாணப் பொண்ணாக்கும்! :)”

அப்ப இதான் தங்கச்சி கொடுத்த கல்யாணப் பரிசாக்கும்?? :))))

காயத்ரி சித்தார்த் said...

இனியவள் புனிதா, சரவணகுமரன் நன்றி!

விஜய்.. :)) என்ன இப்டி சொல்லிட்டீங்க? பாவம் அவளும் தானே எனக்கு துன்பத்துல துணையா இருந்தா..?

பொய்யன் said...

Is it a Tamil movie?

குசும்பன் said...

//படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. //

அப்ப இன்னும் நாலு மாசம் கழிச்சு நடக்கபோவது பொம்மை கல்யாணமா?

குசும்பன் said...

இன்னும் நாலு மாசம் நாலும் மாசம் நாலு மாசம் என்ன என்ன படம் எல்லாம் பார்க்க முடியுமோ பார்த்துக்குங்க!!!

குசும்பன் said...

ஆயில்யன் said...


அக்கா கலக்குறீங்க போங்க!//

ஆயில்யனுக்கு வயது 29 என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

காயத்ரி சித்தார்த் said...

அச்சிச்சோ... அவசரமாக க்ளிக்குனதுல இனியவள் புனிதா
சொன்ன திருமண வாழ்த்தையும், லக்கிலுக் அண்ணா
சொன்ன "மறுபடி ஒரு மொக்கை விமர்சனம் படிச்சிட்டேன்.:("
ன்ற கமெண்ட்டும் ரிஜக்ட் ஆகிப்போச்சி.

சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். :(

காயத்ரி சித்தார்த் said...

//இன்னும் நாலு மாசம் நாலும் மாசம் நாலு மாசம் என்ன என்ன படம் எல்லாம் பார்க்க முடியுமோ பார்த்துக்குங்க!!!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... யார் சொன்னா 4 மாசம்னு? இன்னும் 2 1/2 மாசம் தான்.
பாவி இன்னும் யாரார்கிட்ட சொல்லி வெச்சிருக்காரோ தெரிலயே.:(
கோவைல ஒரு கொலை நடக்கப் போவுது.

chandru / RVC said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றதுனு இதைத்தான் சொல்லுவாங்க. தலைவர் ரித்திஷ் நடித்த நாயகன் பார்த்து நீங்க விமர்சனம் போட்டா உங்க ரசிகப்பெருமக்கள் எல்லாம் ஜென்ம சாபல்யம் அடைவோம். செய்வீங்களா?

chandru / RVC said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றதுனு இதைத்தான் சொல்லுவாங்க. தலைவர் ரித்திஷ் நடித்த நாயகன் பார்த்து நீங்க விமர்சனம் போட்டா உங்க ரசிகப்பெருமக்கள் எல்லாம் ஜென்ம சாபல்யம் அடைவோம். செய்வீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

//நீங்க இது போல மொக்க படம் நிறைய பார்த்து இது போல நல்ல விமர்சனம் தர என் சாபங்கள்//

என்னய பாத்தா பாவமா இல்லீங்களா ஆதவன்? :(//

பாவமா? உங்கள பார்த்தா?
இப்ப தான் உங்க "மொக்கைகள்" எல்லாத்தையும் படிச்சுட்டு வர்ரேன். (சிரிச்சு சிரிச்சு வயிறு வலித்தது நிஜம்)
சாமி!!!!!!! உங்களுக்கு "மொக்க ராணி"ன்னு பட்டமே கொடுக்கலாம்.
உங்களுக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன், உண்மையிலேயெ அந்த மாப்பிள்ளைய நினச்சா தான் பாவமா இருக்கு!

SK said...

நல்ல வேலை நான் தப்பிச்சுட்டேன்.

download பண்ணலாம்'நு இருந்தேன் escapeeeeeeee

அருமையா எழுதி இருக்கீங்க.

அபி அப்பா said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... யார் சொன்னா 4 மாசம்னு? இன்னும் 2 1/2 மாசம் தான்.
பாவி இன்னும் யாரார்கிட்ட சொல்லி வெச்சிருக்காரோ தெரிலயே.:(
கோவைல ஒரு கொலை நடக்கப் போவுது.//

நியாயமா அந்த கொலை மாயவரத்திலே தானே விழனும்:-))

மொக்கை படத்து விமர்சனம் சூப்பர். அதிலும் அந்த மறைக்கப்பட்ட உண்மைகள் சூப்ப்பரோ சூப்பர். கடைசியா அந்த டொய்ங் டச் அருமை!!

Unknown said...

அந்தச் சின்னப் பொண்ணு பேர் சரண்யா தான். யாரடி நீ மோகினி படத்திலே நயன்தாராவுக்கு தங்கையா வந்து தனுஷை ஒத்தை லவ்ஸ் பண்ணி "பாலக்காட்டு பக்கத்திலே ஒரு" பாட்டுக்கு குத்து டான்ஸ் போடுமே அந்தப் பொண்ணு தான். வினய் இன்னும் கொஞ்ச நாள் உன்னாலே உன்னாலே மாதிரி படங்கள் நடிச்சாலே போதும், ஏன் தேவையில்லாம செண்டிமெண்ட் கொட்டி நடிக்கணும்ன்னு ஆசைப்படுறாருன்னு தெரியல.

கதிர் said...

தொடர்ந்து பாவனா படங்களை குறை சொல்றதே பொழப்பா போச்சுல்ல உங்களுக்கு...
வன்ன்ன்ன்ன்ன்மையாக கண்டிக்கிறேன்.

Amuthan said...

had a good laugh, good review

Thamira said...

படம் முடிஞ்சு வெளில வந்ததும் நானும் தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் பரிதாபமா பார்த்துகிட்டோம்... அப்றம் தோள்ல கை போட்டுகிட்டு "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை.. டொய்ங்க்க்..." அப்டின்னு பாடிகிட்டே வீட்டுக்கு போய்ட்டோம்.//
உங்கள் எழுத்துத்தில் நகைச்சுவை கொடிகட்டிப்பறக்கிறது. வாழ்த்துகள் காயத்ரி. மேலும் உங்கள் பிற பதிவுகளையும் படிக்க ஆவலாகிறேன்.

nagoreismail said...

கடைசி வரைக்கும் படத்தோட கதை என்னான்னு சொல்லவே இல்லையே..!
ஒரு வேலை, நான் கண்ணை மூடிட்டு படிச்சதுனாலேயா?

Unknown said...

Vimarsanam nalla irukku...

நாமக்கல் சிபி said...

//நியூஸ் படிக்கறாப்ல இருந்துச்சி//

படத்தோட மொத்த விமர்சனமும் இதுலயே தெரிஞ்சிடுச்சு!

காப்பாத்தினதுக்கு நன்றி!

துரியோதனன் said...

ஒரு வாரம் உங்க blog பக்கம் வரல. அதுக்குள்ள நாலு பதிவு
வாங்க கவிதாயிணி நலம்தானே? ஜெயங்கொண்டான் விமர்சனத்த படிச்சாலே தெரியுது ஃபுல் பார்ம்ல இருக்கிங்க....

thamizhparavai said...

//"வில்லன் ஹீரோவ பெரிய சுத்தியால அடிக்க வர்றான் மா.. ஹீரோ அதை தடுக்கறார். அப்ப என்னாகுதுன்னா... அந்த இரும்பு தவறிப் போய் வில்லனோட வைஃப் மண்டைல விழுந்து அவ செத்து போய்டறா... அதுல இருந்து வில்லனுக்கு வருது பாருங்க ஒரு வெறி..."


"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"


"அது வேற ஒரு பிரச்சினைக்கு.. ஹீரோவோட தங்கச்சிக்கு வில்லன் சப்போர்ட்டா வர்றான். அதனால ஹீரோ அவனை அடிச்சிடறார்"


"ஹீரோ தங்கச்சிக்கு வில்லன் ஏன் சப்போர்ட் பண்றான்??!!"


"இது ஒரு நல்ல்ல கேள்வி! ஹீரோவோட வீட்டை அவனுக்கு தெரியாம அவன் தங்கச்சி விக்கறா. அதை தடுக்கும்போது தான் இப்டியாய்டுது"


"தங்கச்சி ஏன் அண்ணனுக்கு தெரியாம சொத்தை விக்கனும்?"


"அதுவந்து... அது இன்னொரு பிரச்சினை.. ஹீரோவோட அப்பாவுக்கு ரெண்டாந்தாரத்துப் பொண்ணு அது. சொத்துக்காக அடிச்சுக்கறாங்க.."


இப்டியே ஒவ்வொரு பிரச்சினையா விரிவா எடுத்து சொல்லி கதை ஆரம்பம் வரை போய் மறுபடி ரிவர்ஸ் கியர் //

ஆஹா நீங்க பின்னாடி சொன்ன கதையை விட இந்தக்கதை நல்லா இருக்கு..
இப்பிடி முன்னுக்குப் பின் முரணா(ஆயுத எழுத்து,விருமாண்டி) மாதிரி எடுத்திருந்தா படம் ஒரு வேளை நல்லா இருந்துருக்குமோ என்னவோ..?
உங்க திரைக்கதை சூப்பர்...

Anonymous said...

//"அப்ப தான் வெறி வருதா? அப்ப ஏன் முன்னயே சுத்தில அடிக்க வந்தானாம்?"//

:)))))))))

இத மாதிரி என் தங்கையும் ரன் படம் பாத்துட்டு கதை சொன்னா. ரிவர்சில.
இன்னிக்குவரை நா நன் பாக்கல. இல்லாரும் நல்ல படம்னுதா சொல்றாங்க. ம்ம்ம்ம்

ஆனா நீங்க சொன்ன மாதிரி இவங்களும் படம் எடுத்திருந்தா நல்ல திரைக்கதை புதுமைனு சொல்லியிருப்பாங்க.( மொமன்டோ மாதிரி ஹிஹி)

நகைச்சுவை உங்களுக்கு அல்வாமாதிரி வருது.
தொடர்ந்து கலக்குங்க.
முதல் வருகையில் சுபாஷ்

ச.ஜெ.ரவி said...

சொதப்பலான திரைக்கதை, இழுக்கும் இரண்டாம் பாதி ஆகியவை படம் பார்க்கும் ஆவலை குறைப்பது உண்மை. உங்கள் விமர்சனத்தின் ஒரு பாதி சரிதான். ஆனால், கதை கூறிய விதம், வேகமெடுக்கும் முதல் பாதி, கண்களை குளிரூட்டும் பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு, சிறிய கதாபாத்திரங்களை சிறப்பாக அமைத்த இயக்குனரின் உழைப்பு, முதல் படத்தில் அசத்திய லேகா, பின்னணியில் மயக்கிய வித்யாசாகர் என படத்தின் பெரும்பாலான அம்சங்கள் உங்கள் விமர்சனத்தில் இடம்பெறாதது ஏனோ?

ஜோசப் பால்ராஜ் said...

படம் எப்டி இருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் ரொம்ப அருமையா இருந்துச்சு.

அடுத்து ஒரு பதிவு அபி அப்பா பிளைட்ட மிஸ் பண்ண கதைய விவரிச்சு எழுதுங்களேன். நான் இப்ப தான் உங்க வலைப்பூவுக்கு வர்றேன். ஏற்கனவே எழுதியிருந்தா லிங்க் கொடுங்க.

Wandering Dervish said...

விமர்சனம் படிக்கும் பொழுதே கண்ணை கட்டுதே,
படத்த முழுசா பார்த்த உங்க நிலைமையா நினைச்சா !!!!!!

உங்க விமர்சனத்த படிச்சவங்க ,அவுங்க கூட்டாளிங்க இப்படி எக்கசெக்கமான பேரு,
இந்த படம் ஓடுற தியேட்டர் பக்கமா கூட போக மாட்டாங்க

உங்களால அநியாய நஷ்டம் பட தயாரிப்பாளருக்கு.
எப்படியோ நாங்க பொழைச்சோம்

தேங்க்ஸ்'ங்கோ.

Bee'morgan said...

//
இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!!
//நானும் தான் :) :)

காயத்ரி சித்தார்த் said...

//தலைவர் ரித்திஷ் நடித்த நாயகன் பார்த்து நீங்க விமர்சனம் போட்டா உங்க ரசிகப்பெருமக்கள் எல்லாம் ஜென்ம சாபல்யம் அடைவோம். செய்வீங்களா?//

rvc .. ஏங்க இந்த கொலைவெறி? :(

காயத்ரி சித்தார்த் said...

// உங்களுக்கு "மொக்க ராணி"ன்னு பட்டமே கொடுக்கலாம்.//

:)))

//உங்களுக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன், உண்மையிலேயெ அந்த மாப்பிள்ளைய நினச்சா தான் பாவமா இருக்கு!//

என்ன செய்றது? எல்லாம் போன ஜென்மத்துல பண்ணின புண்ணியம்! :)

காயத்ரி சித்தார்த் said...

நன்றி sk..

@அபி அப்பா,

//நியாயமா அந்த கொலை மாயவரத்திலே தானே விழனும்:-))

ஆஹா.. உங்க வேலை தானா இது? :(

மொக்கை படத்து விமர்சனம் சூப்பர்.
அதிலும் அந்த மறைக்கப்பட்ட உண்மைகள் சூப்ப்பரோ சூப்பர்.
கடைசியா அந்த டொய்ங் டச் அருமை!!

:))))))))) நன்றி அண்ணா!

காயத்ரி சித்தார்த் said...

//அந்தச் சின்னப் பொண்ணு பேர் சரண்யா தான். யாரடி நீ மோகினி படத்திலே நயன்தாராவுக்கு தங்கையா வந்து தனுஷை ஒத்தை லவ்ஸ் பண்ணி "பாலக்காட்டு பக்கத்திலே ஒரு" பாட்டுக்கு குத்து டான்ஸ் போடுமே அந்தப் பொண்ணு தான்//

பொண்ணை அடையாளம் தெரிஞ்சுதுங்க kvr..
பேர் தான் சொதப்பிடுச்சி. :)

விநய் சோகமா இருக்கறத பாத்தா
பயங்கரமா சிரிப்பு வருது! என்னத்தச் சொல்ல! :)

காயத்ரி சித்தார்த் said...

//தொடர்ந்து பாவனா படங்களை குறை சொல்றதே பொழப்பா போச்சுல்ல உங்களுக்கு...
வன்ன்ன்ன்ன்ன்மையாக கண்டிக்கிறேன்.//

டம்பி..

ஒரு ஊரறிஞ்ச ரகசியம் சொல்லட்டா? பாவனா
குண்டாகிட்ட்ட்டேஏஏஏ போய்ட்டிருக்காங்க.

ப்ளீஸ் டம்பி.. கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.
மனசை தளர விடாதீங்க. ;)

Tech Shankar said...

Supernga..

காயத்ரி சித்தார்த் said...

நன்றி அமுதன்.

//உங்கள் எழுத்துத்தில் நகைச்சுவை கொடிகட்டிப்பறக்கிறது. வாழ்த்துகள் காயத்ரி//

:) நன்றி தாமிரா.

//கடைசி வரைக்கும் படத்தோட கதை என்னான்னு சொல்லவே இல்லையே..!//

இஸ்மாயில்.. அப்டின்னு ஒன்னு இருந்தால்ல சொல்றதுக்கு? இப்ப
சொல்லிருக்கறது கதை மாதிரி. :)

காயத்ரி சித்தார்த் said...

நன்றி அருள்ராஜ்.

சிபியண்ணா.. ஒழுங்கா படிங்க. அது தினத்தந்தில.

//வாங்க கவிதாயிணி நலம்தானே? ஜெயங்கொண்டான் விமர்சனத்த படிச்சாலே தெரியுது ஃபுல் பார்ம்ல இருக்கிங்க....//

துரியோதனன்.. ரொம்ப நல்லாருக்கேங்க. :)
4 மாசம் கழிச்சு இப்பத்தான் திரும்பி வந்திருக்கேன்.

காயத்ரி சித்தார்த் said...

//ஆஹா நீங்க பின்னாடி சொன்ன கதையை விட இந்தக்கதை நல்லா இருக்கு..
இப்பிடி முன்னுக்குப் பின் முரணா(ஆயுத எழுத்து,விருமாண்டி) மாதிரி எடுத்திருந்தா படம் ஒரு வேளை நல்லா இருந்துருக்குமோ என்னவோ..?
உங்க திரைக்கதை சூப்பர்//

தமிழ்ப்பறவை.. நீங்க என்னை வெச்சு காமெடி பண்ணலயே? நன்றி
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

//நகைச்சுவை உங்களுக்கு அல்வாமாதிரி வருது.
தொடர்ந்து கலக்குங்க.
முதல் வருகையில் சுபாஷ்//

சுபாஷ்.. ரன் நல்ல படம் தான். விறுவிறுன்னு போகும்.
மாதவன் - மீரா செம காம்பினேஷன். பயப்படாம பாருங்க.
பாராட்டிற்கு நன்றி. :)

காயத்ரி சித்தார்த் said...

ஜோசப் பால்ராஜ் ... நன்றி.

//அடுத்து ஒரு பதிவு அபி அப்பா பிளைட்ட மிஸ் பண்ண கதைய விவரிச்சு எழுதுங்களேன். நான் இப்ப தான் உங்க வலைப்பூவுக்கு வர்றேன். ஏற்கனவே எழுதியிருந்தா லிங்க் கொடுங்க.//

ஒருமுறை நடந்தாத் தாங்க அது கதை. ஒவ்வொரு முறையும் அவரு ஊருக்கு கிளம்பறேன்னு
டாட்டா காட்டிட்டு கிளம்பி ஏர்போர்ட் போய்.. கொஞ்ச நேரத்துல திரும்பி வந்து போன்
பண்ணி 'இப்பவும் ஃப்ளைட்டை விட்டுட்டேன்ன்னுவார்'. இதை என்னான்னு விவரிக்க?

அபிஅப்பா... இதும் மறைக்கப்பட்ட உண்மைகளா? மன்னிச்சிக்கோங்க. ;)

காயத்ரி சித்தார்த் said...

//உங்க விமர்சனத்த படிச்சவங்க ,அவுங்க கூட்டாளிங்க இப்படி எக்கசெக்கமான பேரு,
இந்த படம் ஓடுற தியேட்டர் பக்கமா கூட போக மாட்டாங்க

உங்களால அநியாய நஷ்டம் பட தயாரிப்பாளருக்கு.//


ஹலோ மிஸ்டர் நாடோடி..

விமர்சனம் படிச்சமா சிரிச்சமான்னு போக மாட்டிங்களா? ஏங்க இப்டி கோர்த்து விடறீங்க? :)

காயத்ரி சித்தார்த் said...

// Bee'morgan said...

//
இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன்! க்ளைமாக்ஸ்ல, கடைசீஈஈஈஈ ஆளா வந்து டுமீல்னு வில்லன சுட்டுட்டு "நான் பாத்துக்கறேன் நீங்க போங்க" ன்னு கம்பீரமா விநய்கிட்ட சொல்ற நகைச்சுவை காட்சியை நான் ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்!!
//

நானும் தான் :)//


:)))) சேம் பின்ச்.


தமிழ்நெஞ்சம்.. நன்றிங்க

manasu said...

எனக்கென்னவோ நீங்க இது மாதிரி படங்களா பதிவு போடுறதுக்குனெ தேடிப்பிடிச்சு பார்கிறாப்ல இருக்கு.

கோபிநாத் said...

!!!!!!!!

:)))))

சரண் said...

படத்தை விட உங்கள் விமர்சனம் பல மடங்கு நல்லருக்குதுங்க...

குமரன் said...

சமீபத்திய திரைப்படங்களில், ஆபாசம் இல்லாமல், பெண்கள் கதாபாத்திரங்களுக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் இந்த படம் ஒரு படம். கதாநாயகனை விட தங்கை லேகா நன்றாகவே தன் கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

படம் ஒரு மொக்கைன்னா, உங்க விமர்சனம் மொக்கை. விளையாட்டுத்தனம் அதிகமா இருக்கிறது. உருப்படியான விமர்சனம் இல்லை.

இராம்/Raam said...

:))

சுரேகா.. said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இதுக்குத்தான் உங்களை அடிக்கடி பதிவு போடுங்கன்றோம் கேக்குறீங்களா?

priyamudanprabu said...

ஏதாவது மொக்கை படத்துக்கு போறது அப்புறமா உக்காந்து பொலம்புறது...இதையே பொழப்பா வச்சிருக்கீங்களா?????????

priyamudanprabu said...

நாயகன் தாண்டிதாண்டி அடிக்கவில்லை
ஒரு பெண்ணின் பின்னால் நாக்கை தொங்கப்போட்டு நாயாய் அலைய்யவில்ல,,அப்புறம் கடைசிகாட்சி வசனம்

எனக்கு படம் பிடிச்சிருக்கு
நாட் பேட்

மங்களூர் சிவா said...

காப்பாத்தினதுக்கு நன்றி!

King... said...

:))

CA Venkatesh Krishnan said...

//வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் கலந்து//

சூப்பரான விமர்சனம். யாருமே கண்டுக்கலயே

எப்படிங்க? ! ! !

அனுபவமா? இல்லன்னா மொக்கை மொக்கையா பாத்து இப்படி ஆயிட்டீங்களா??

விடாம மொக்கை படமா பாத்து விமர்சனம் செய்து தொண்டாற்றுங்க

Travis Bickle said...

தமிழ் சினிமா நியதிப்படியும் டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரியும் பாவனாக்கு விநய் மேல காதல் வந்திடுது.

padatha ottalam,athugaga ipadiya,yeah there are so many logical mistakes,but its a good attempt as far as i am concerned,a lot better than saroja,sarojala mattum logical mistakes illaiya,athum climax sema comedy,
apram santhosh subramaniyam,genelia oru innocent chinna ponna illa love vandha oru adulta,neegalae sollunga

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆனா வந்த எல்லா படங்கள்ளையும் இதுகொஞ்சம் பரவாயில்லன்னு எழுதிட்டேனே.....

மறுபடியும் ஒருமொக்கைப்படம் விமர்சனம் படிச்சிட்டேன் அப்படிங்கறது நல்ல கமெண்ட் அது இருந்தால் எல்லாரும் ரிப்பீட்டே போட்டிருந்திருப்பாங்க.. :)