Wednesday, December 19, 2007




அழகாயிருப்பதாய் நினைத்துப் பறித்த
ரத்த நிறத்துப் பூவொன்று
தன் சுவாரசியமிழந்தது
அடுத்த சில கணங்களில்...

பறித்த போதிருந்த
மென்மை துறந்து
கனக்கத் துவங்குகிறது
கைகளில்...

பறிக்காமலே இருந்திருக்கலாமென
யோசித்துக் கொண்டிருக்கையில்...
இதழிதழாய் பிய்த்தெறியத்
தொடங்கி விட்டன
விரல்கள்.

16 comments:

காட்டாறு said...

யதார்த்தம்!

மலைவாசி said...

hmmm .. நிஜம்தான். நான் கூட முதல்லே, எப்படா உங்க கவிதை வரும்-னு IE-ஐ refresh பண்ணிட்டிருந்தேன். இப்போ....ம்ம்ம்ம்ம் சில மாற்றங்கள் நிஜம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பூக்களைப் பறிப்பதும் இதழிதழாய்ப் பிய்த்துப் போடுவதும் பழகிப் போனது தானே இந்தப் பாழாய்ப் போன விரல்களுக்கு...

ரசிகன் said...

adappavamee.. ingayum kolai veriyaa?

ரசிகன் said...

annaa etharthamaa irkku...

ஜே கே | J K said...

நல்லா இருக்கு.

//இதழிதழாய் பிய்த்தெறியத்
தொடங்கி விட்டன//

குரங்கு கையில் பூமாலைனு ஒரு பழமொழியே இருக்கே.

LakshmanaRaja said...

மனதின் கனத்தை விரல்கள் அறிய தாமதிப்பதில் தான் வாழ்வில் முரண்கள் எதார்த்தம் ஆகிவிடுகிறது

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வாழ்வின் மருண்ட,துவண்ட பக்கங்களையே (பெரும்பாலும்)ஸ்பரிசித்துச் செல்லும் உங்கள் கவிதைகள் யோசிக்க வைக்கின்றன அம்மணி..
ஏன் இந்த ஆயாசம்?

கோபிநாத் said...

;))

Dreamzz said...

WOW WOW WOW!
kavidhai... super.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏம்பா முதல்ல படத்தை தேடி பார்த்து அதுக்கு கவிதை எழுதறியா என்ன ? ம்... கடைசிவரி நச்சுன்னு இருக்கு .. இப்ப நச் தானே ட்ரெண்டே...

இராம்/Raam said...

தலைப்பை தவிர்த்து இன்னொன்னு'ம் மிஸ் ஆகுது கவிதாயினி... :(

காஞ்சனை said...

வாழ்க்கையை எவ்வளவு அழகா எதார்த்தமா சொல்லிருக்கீங்க.
நன்று. :)

- சகாரா.

ஆடுமாடு said...

//பறித்த போதிருந்த
மென்மை துறந்து
கனக்கத் துவங்குகிறது
கைகளில்...//

நல்லா இருக்கு காயத்ரி. நானும் கவிதைன்னு எழுதறேன். ஆனா, உங்க கவிதைகள்ல இருக்கிற அழகியலும் நடையும் எனக்கு வாய்க்கவில்லை. பொறாமைதான். என்ன செய்ய?
ம்ம்ம்ம்...

ரூபஸ் said...

அட போங்க.. நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்லி எனக்கு வாய் வலிக்குது..

அதுசரி என்ன தலைப்பை கானோம்...???

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பிரமாதம்!

-ப்ரியமுடன்
சேரல்