பிரிவுடன்படிக்கை..
எவருமற்ற அந்த சாலையினோரம் நின்றபடி
சாசனமொன்றை வாசிப்பவன் போல
உணர்ச்சிகளற்ற த்வனியில்
அறிவித்துக் கொண்டிருந்தாய்
"இது நம் இறுதிச் சந்திப்பென"
உன் சொற்கள் பட்டவிடங்களில்
மனம் கொப்புளித்துக் கொண்டது..
சொற்களில் சில
நீலம் பாரிக்கத் தொடங்கின..
மேலும் சில
மரங்களாய் முளைத்து
முட்களாய் கிளைத்து
அடர்சிவப்பு நிறத்தில்
பூக்களாய்ப் பூத்தன...
எஞ்சியவை எல்லாம்
என் கண்ணீர் பட்டழிந்து கொண்டிருக்க..
காற்றின் பக்கங்களில் அவசரமாய்த் தேடுகிறேன்
எந்தச் சொல் உன் இறுதிச் சொல்லென.
29 comments:
meendum oru azhagaana soga kadhai! nice :)
கவிதை நல்லா இருக்கு!! :)
enakkoru unnmai theriyavendum ithukku enna arththam...
(aanal kavithai purikirathu...)
காயத்ரி...என் கல்லூரி காலமெல்லாம் ஞாபகம் வருது.
நல்லா இருங்க...
//ஆடுமாடு said...
காயத்ரி...என் கல்லூரி காலமெல்லாம் ஞாபகம் வருது.
நல்லா இருங்க...
//
எனக்கும்தான் ஆனா கல்லூரி கா கா
ஞாபகத்துக்கு வந்து ஒரே அழுகாச்சியா இருக்கு :(
attendance...
படம் அழகா இருக்கு. :-)
கவிதையை பத்தி நான் என்ன சொல்ல? அதான் உங்களுக்கே தேஎரியுமே! ;-)
உடன்படிக்கை எல்லாம் நல்லா தான் இருக்கு...கையெழுத்து ஆகிடுச்சா இல்ல இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கா!?...;))
Back to the form... :)
கவிதை நன்றாகயிருந்தது... :)
பட்டவிடங்களில்
நீலம் பாரிக்கத் துவங்கின
(பட்ட விடங்களில் - பட்ட விஷங்களில் என்று பிரித்துப் படித்த போது நீலம் பாரித்தல் கூடுதல் அழகு). நன்றாக இருக்கிறது கவிதை.
பிரமிளிக்குப் பிறகு 'காற்றின் பக்கங்கள்' அதிகம் பேர் உபயோகிக்கத் துவங்கிவிட்டார்கள்...
நன்றி !!!
கவிதைக்கு சோகம்தான் அழகு....
குட்!
இத படிச்சவுடனே எனக்கு அழுகையா வருது. ஆனா எப்படி எழுதுறதுன்னு தெரியல..
அட யாருங்க அந்த புண்ணியவான்..
இந்த வார்த்தைகளையெல்லாம் எப்புடி அழகா பயன்படுத்துரீங்க.. எங்கயாவது தனியா டியுஷன் போறீங்களா?
//உன் சொற்கள் பட்டவிடங்களில்
மனம் கொப்புளித்துக் கொண்டது..//
ஒரு திரைப்படத்தின் சில காட்சிகள்தான் எப்போதும் மனதில் நிற்கும்.
அதுபோல் மனம் விட்டு அகலாமல்..
வார்த்தைகளின் வெம்மையை வெளிப்படுத்திய அற்புத வரிகள்!
அசத்துங்க.!
Romba Nalla Irukku Gayathri.
Very Touchy.
முதல்முறையாய் உங்கள் பதிவிற்க்கு வருகிறேன்..
//
காற்றின் பக்கங்களில் அவசரமாய்த் தேடுகிறேன்
எந்தச் சொல் உன் இறுதிச் சொல்லென.
//
- அருமை
இத்தனை விரைவாக பின்னூட்டம் இடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி காயத்ரி.
எழுத்துக்களில் கவனம் செலுத்தவே செய்கிறேன் இருந்தும் கோட்டை விட்டுவிடுகிறேன். அத்தனை மோசமான பிழைகளா? எதில் பிழை என்று கூறினால் திருத்த உதவும்!
மறுபடியும் ஒரு அழுவாச்சியா???
ஆனால் நல்லா இருக்கு.
மிக அருமையான சொற்தெரிவு!
வாழ்த்துக்கள்!
//உன் சொற்கள் பட்டவிடங்களில்
மனம் கொப்புளித்துக் கொண்டது..//
Gayatri is known for the lines of this nature (or) posts of this nature...
All the best...
மிக அழகான கவிதை.ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் தனிமையும்,தவிப்பும்,நிராகரிப்பும் நிரம்பி கண்ணீர் என இல்லை கவிதை என வந்துளது.
வலியோடு கையொப்பமிட்ட ஒரு உடன்படிக்கை.
- சகாரா.
எப்படி உங்களால மட்டும் இப்படி எலுத முடியுது ?
காயு,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
எனக்கொரு சந்தேகம்.. இது பிரிவுடன் படிக்கையா? இல்ல பிரிவு உடன்படிக்கையா? ஏன்னா.. பிரிவு + உடன்படிக்கை = பிரிவு உடன்படிக்கை..
பிரிவ்+உடன்படிக்கை = பிரிவுடன்படிக்கை.
காயத்ரி டீச்சர் கொஞ்சம் க்ளியர் பன்றிங்களா ப்ளீஸ்.. :)
படித்தவுடன், இத்துணை ஆண்டுகளுக்குப் பின்னும், நெஞ்சத்தில் இருக்கும் ரணங்களின் வடுக்களினின்று உதிரம் கசிவது போல் தோன்றுகிறது.
kalakiteenga..Good job
kalakiteenga...Goood job
Post a Comment