வருடாவருடம்
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!
நேற்றைய நள்ளிரவில்..
இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...
கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...
கைகுலுக்கிய தோழமைகள்...
இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..
என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!
துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..
வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...
திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...
இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...
'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!
வியப்பாயிருக்கிறது! 2 மாதங்கள் முன்பு வரை நானும் தனிமையும் மட்டுமாய் நிரப்பியிருந்த என் நாட்கள் இப்போது எல்லைகள் கடந்த தொடர்புகளோடு கண்முன் விஸ்வரூபமாய் விரிகின்றன. இத்தனை வருடங்களில் எந்தப் பிறந்தநாளும் இப்படி வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்ததாய் நினைவிலில்லை!
இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.
இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அபி அப்பா மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனார்!!
கிண்டலும் கேலியுமாய் 'கவுஜ' எழுதி சங்கம் மூலம் வாழ்த்திய பாசமிகு அண்ணன் இளா மிகச்சரியாய் நிமிடங்களை.. நொடிகளைக் கணக்கிட்டு துல்லியமாய் நாளின் துவக்கத்தில் வாழ்த்தி திகைக்க வைத்தார்.
தனக்கே உரிய பாணியில்... நையாண்டியின் நடுவில் நட்பை ஒளித்து வைத்து அழகிய பதிவை பரிசளித்ததும்இல்லாமல்... போனிலும் வாழ்த்தினார் நண்பர் குசும்பன்!
இதுவரை சாட்டில் கூட பேசியிராத அன்புத்தங்கை மைஃப்ரண்ட் போனிலும் சாட்டிலுமாய் திரும்பத் திரும்ப வாழ்த்திக் கொண்டேயிருந்தாள்.
உடன்பிறப்பென பதிவில் வாழ்த்தி என்னையும் பிசாசு ஆக்கியிருக்கிறது குட்டிப்பிசாசு!
நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.
இளந்தல ராயல் ராமின் வாழ்த்து வித்தியாசமாய் (!?) மறக்க முடியாததாயிருந்தது.
சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!
இன்னும் அய்யனார், தம்பி, கோபி, கண்மணி அக்கா, துர்கா செல்லம், மின்னல் ..... மற்றும் வாழ்த்துச் சொன்ன சொந்தங்கள் அனைத்திற்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!
நிறைவாய் மீண்டும்...
நன்றி! நன்றி! நன்றி!
35 comments:
தாமதமான வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
நெகிழ வச்சிபுட்டாங்களா? அம்புட்டு பேரும் உன்னை பாட்டினு ஔவையார்னுசொல்லிட்டுஇருக்காங்க!! நான் உடன்பிறப்புனுசொல்லி இருக்கேன் தாயி!!
எனக்கு என்ன பயம்ன்னா? உன்னை பாட்டினு சொன்னா எனக்கு இன்னும் வயசு போனவன் சொல்லிடுவாங்களோனு பயம்!!
சரி! சரி!! பிறந்தநாள் அதுவுமா ரொம்ப கலாய்க்கல,
பாசமிகு தங்கைக்கு வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!!
மீ தி ஃபர்ஸ்ட்டூ?
இங்கண கும்மி உண்டா??
யெக்கோவ்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆசை சாக்லேட் பத்துரூவாய்க்கு வாங்குங்க. அதை தட்டுல போட்டு புதூ ட்ரஸ் மாட்டிகிட்டு ஒவ்வொரு வீடா ஏறி இறங்கி பெரியவங்க சின்னவங்கன்னு பாக்காம விழுந்து எந்திரிச்சிங்கன்னா... செம கலெக்ஷன்
பத்து போட்டா நூறு கேரண்டி.
நாங்கல்லாம் இப்படிதான்.
எப்பவுமே!
மீண்டும் ஒரு முறை வாழ்த்து சொல்லலாமா?
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
பாசக்கார குடும்பத்துல உங்களுக்காக 500 அடிச்சிட்டோம். :-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி.Many more happy returns.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி.
வாழிய பல்லாண்டு
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
மீ த பாஸ்ட்டு
மை பிரண்ட்
இங்கையும் கும்மி உண்டா?
\\'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!\\
அட..அட....எனக்கும் இப்படி தான் இருந்தது...என் பிறந்த நாள் அன்று தம்பியும்,புலியும் சும்மா கலக்கிட்டாங்க
\\நிறைவாய் மீண்டும்...\\
சாரி எங்களுக்கு இன்னும் நிறைவேல்ல....மீண்டும் வேண்டும் ;)
வெறும் நன்றி மட்டும் தானா...:)
டீ மாஸ்டர் என்ன சொன்னார், அத சொல்லலீயே!!!
iniya pirantha naal vaazhthukkal - ranjith
Inge Kummki Anumathikka padugirathu!
பிறந்த நாள் வாழ்த்துகள் :-)
நன்றிய கூட கவிதைல சொல்லி அசத்திட்ட மா :-)))
மகிழ்ச்சியாய் துவங்கியதை போலவே இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி கடலில் மிதக்க வாழ்த்துக்கள் :)
ஆனாலும் குறுந்தகவல் அனுப்பினது நான் தான்னு நீ சரியா சொல்லிட்டது நிஜமாவே ஆச்சர்யம் தான் :))
//'என்றும் என்னோடிருங்களெ'ன//
நிச்சயமா.. அவ்ளோ சீக்கிரம் உன்ன நிம்மதியா விடறதா எல்லாம் எங்களுக்கு ஐடியா இல்லை :))
சொன்னால் நம்புவீர்களா காயத்ரி!? இன்று நாட்காட்டியைப்பார்த்தபோது உங்களுக்கு பிறந்ததினம் இன்றாயிருக்குமோ என்றொரு சந்தேகம் வந்தது(உங்கள் பதிவின் முகவரி வைத்துதான்).. வந்துபார்த்தால் ஆம்..
உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும் எனக்கு பின்னூட்டமிடுவதென்பது கடந்துபோகிறவர்களுக்கு வழங்கும் புன்னகையைப்போல் எளிதானதாக இல்லை...(தொழில்நுட்ப மற்றும் நேரக்குறைவு தான்)
பிறந்ததின வாழ்த்துக்கள்!
ஹாப்பி பேர்த் டேங்க!
மைஃப்ரண்ட், அபி அப்பா நீங்க ரெண்டு பேரும் இல்ல.. முத்துலட்சுமி அக்கா தான் ஃபர்ஸ்டு! தேங்க்ஸ் அக்கா..
குட்டி பிசாசு நெகிழ வெச்சது நீயும் தான்!
மைஃப்ரண்ட்.. இன்னும் எத்தனை முறை வாழ்த்து சொல்வே? :)
தம்பி, வருத்தப்படாத வாலிபா, முத்துக்குமரன்,ரஞ்சித், ஜெஸிலா, வேதா, ட்ரீம்ஸ், சிபியண்ணா எல்லாருக்கும் தேங்க்ஸ்ஸ்!!
(ஹைய்யோ இன்னொரு கவிதை எழுத வெச்சிடுவீங்க போலிருக்கே!!)
// நாமக்கல் சிபி said...
Inge Kummki Anumathikka padugirathu! //
உங்க மனசு நோகக்கூடாதேன்னு சொன்னா.. இங்க வந்து எல்லாருக்கும் அழைப்பு விடுக்கறீங்களா!!
//குசும்பன் said...
டீ மாஸ்டர் என்ன சொன்னார், அத சொல்லலீயே!!//
நான் எங்கிருக்கேன்னு தேடி கண்டுபிடி பாக்கலாம்னு!
(நானென்ன ஐஸ் பாயா விளையாடறேன்..? ஹ்ம்ம்)
//அபிமன்யு said...
சொன்னால் நம்புவீர்களா காயத்ரி!? இன்று நாட்காட்டியைப்பார்த்தபோது உங்களுக்கு பிறந்ததினம் இன்றாயிருக்குமோ என்றொரு சந்தேகம் வந்தது//
நம்பறேன் அபிமன்யூ! தேதி பாக்கும் போது என் நினைவு வந்தது ஆச்சரியம் + மகிழ்ச்சியா இருக்கு. நன்றி!
//முகமறியா நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் நம்மை நெகிழ வைக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்தலுக்கான அர்த்தங்களும் கூட. //
சரியாச் சொன்னீங்க வேதா! வாழ்த்துக்களுக்கு நன்றி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
அவ்வ்வ்வ்வ்வ்....
அன்பின் காயத்ரி! மன்னித்துவிடுங்கள். பிறந்தநாளன்றே வாழ்த்தும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன். வாழ்த்துக்கள்! நாளாக நாளாக கவிதைகள் மெருகுற காண்கிறேன். நன்றாக வருவீர்கள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அப்போது, இப்போது வாழ்த்த மறந்தவளை மறந்துவிடமாட்டீர்களே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
நன்றி ஆழியூரான்.
//அப்போது, இப்போது வாழ்த்த மறந்தவளை மறந்துவிடமாட்டீர்களே//
தமிழ் நீங்கள் வாழ்த்தியதில் இன்றும் பிறந்தநாளாய் உணர்கிறேன். கஜினியை போலா யாராவது கனமான பொருளால் தலையில் தாக்கும் வரை உங்களை மறக்காமலிருப்பேன். போதுமா? :))
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி ;)
Post a Comment