Monday, July 9, 2007

பொருளற்றுப் போகும் நேசங்கள்

நேற்றைய முன்னிரவில்
பிழையின் சாயலில் நிகழ்ந்துவிட்ட
நிகழ்வொன்று...

இரவெல்லாம்
இருளின் கருமையள்ளி
முகத்தில் பூசிக்கொண்டு
வன்மம் தின்று வயிறு பெருத்து
திசைகள் எங்கும்
வெறுப்பின் வேர் பரப்பி
சுட்டு விரல் நீட்டிக்
குற்றம் சாட்டுகிறது காலையில்...

அடிபட்ட சீற்றம் மறைத்து
வெறி மிகுத்து வேட்டையாடி
குருதிசிந்தக் கொன்று தின்ற பின்னால்
சிவந்த பற்களில் சிக்கியிருக்கின்றன
நேசத்தின் துணுக்குகள்...

சொல்லிவிட முடியாத வலியொன்று
செல்லுமிடமெல்லாம் தொடர்கிறது...

இருக்கட்டும்..

மண்டியிடுதல்களும்
சரணடைதல்களும்
ஒருபோதும்
புரிதல்களைத் தருவதில்லை.

24 comments:

ஜி said...

எல்லாம் தனித்தனியா புரியுது.. மொத்தமா சேத்து ஒன்னுமே புரியல :((

தம்பி said...

//மண்டியிடுதல்களும்
சரணடைதல்களும்
ஒருபோதும்
புரிதல்களைத் தருவதில்லை//

எங்கிட்ட சொல்லுதாயி,
ஆள மட்டும் காட்டு
நான் புரிய வைக்கிறேன்.

காயத்ரி said...

என்னத்த சொல்லி.. என்னத்த புரிய வெச்சு.. போங்கப்பா எல்லாம்..

காயத்ரி said...

அழப்படாது ஜி.. உனக்கு புரியறாப்பல நாளைக்கு இன்னொன்னு எழுதிடலாம். சரியா? கண்ணத் தொடச்சிக்கோ.

இராம் said...

கவிதாயினி,

இந்த கவிதை'க்கு பொழிப்புரை, விளக்கவுரை எழுதி அனுப்பட்டுமா??? ;)

manasu said...

எப்படிங்க இப்படி?????

சும்மா அதிருதில்ல....

ramachandranusha said...

காயத்ரி, கவிதை நன்றாக வந்துள்ளது. கடைசி நான்கு வரிகள் அருமை

முத்துலெட்சுமி said...

\\என்னத்த சொல்லி.. என்னத்த புரிய வெச்சு.. போங்கப்பா எல்லாம்..//

ம்..காயத்ரி..ஏம்மா ஏன்.. வர வர ஒரே அழுகாச்சி அதிகமாகிட்டே போதே..

\\அடிபட்ட சீற்றம் மறைத்து
வெறி மிகுத்து வேட்டையாடி
குருதிசிந்தக் கொன்று தின்ற பின்னால்
சிவந்த பற்களில் சிக்கியிருக்கின்றன
நேசத்தின் துணுக்குகள்...//

அட்டகாசமா இருக்கு இந்த வரி..
நேசத்தின் உணர்வு வேட்டையாடும் போது இல்லையில்லையா ..இப்போ புலம்பி என்னத்த செய்யறது.

குட்டிபிசாசு said...

//சொல்லிவிட முடியாத வலியொன்று
செல்லுமிடமெல்லாம் தொடர்கிறது...//

யாரது உங்களை பிறந்தநாள் அதுவுமா யோசிக்க வச்சது!!

காயத்ரி said...

//இந்த கவிதை'க்கு பொழிப்புரை, விளக்கவுரை எழுதி அனுப்பட்டுமா??? ;) //

உங்க மொழிப்புலமைக்கு முன்னாடி நானெல்லாம் சாதாரணம் இளந்தல! ஏன் இதுக்கெல்லாம் உங்க பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்றீங்க?

காயத்ரி said...

மனசு.. 'அதிருது'னா என்னங்க? நல்லாருக்குன்னு அர்த்தமா? படம் பார்த்தும் எனக்கொன்னும் புரியல. நீங்களாச்சும் சொல்லுங்க.

//ம்..காயத்ரி..ஏம்மா ஏன்.. வர வர ஒரே அழுகாச்சி அதிகமாகிட்டே போதே..//

அதெல்லாம் ஒன்னுமில்ல..அக்கா! பாருங்க சிரிச்சிட்டு தான் இருக்கேன்.

:))))

காயத்ரி said...

//யாரது உங்களை பிறந்தநாள் அதுவுமா யோசிக்க வச்சது!! //

பிறந்தநாள் அன்னிக்கு நானா யோசிக்கக் கூடாதா குட்டிபிசாசு?!!!

:)

கோபிநாத் said...

\\அதெல்லாம் ஒன்னுமில்ல..அக்கா! பாருங்க சிரிச்சிட்டு தான் இருக்கேன்.

:))))\\

கவிதை அழுவுது...நீங்க சிரிக்கிறிங்க... ம்ம்ம்...நம்பிட்டோம்

என்ன கொடுமை சார் இது

ranjith said...

Some of ur poems gives more meaning. this poem is one among them.

I mean to say it gives enough room for the reader to interpret.
I might be wrong in this comment but i feel that is the success of this writing or any writing as well.
sorry still my comp is having some problem in assigning some 0 and 1 for my language i suppose - ranjith

Dreamzz said...

ம்ம்ம்... புரியற மாதிரி இருக்கு...

Dreamzz said...

15

மிதக்கும்வெளி said...

/மண்டியிடுதல்களும்
சரணடைதல்களும்
ஒருபோதும்
புரிதல்களைத் தருவதில்லை/

அப்படியா.

எதிர்ப்பற்றுச் சரணடைந்த
திசையெங்கும்
புத்தனின் வாசனை.
இன்னமும் கனவுகள் மட்டுமே
மிச்சமிருக்கும் வாழ்க்கையில்
பகலை விழுங்கி எழுகிறது நிலா.
கடலுக்கடியில் புதைந்துகிடக்கிறது
நிசப்தம் புத்தனின் விழிகளாய்.
புத்தா,
நிம்மதியைப் பரப்பு
தத்சவா.

G3 said...

உன்னோட இந்த கவிதை எனக்கு ஒரு நிகழ்ச்சிய ஞாபக படுத்துச்சு :))

என் நண்பர் ஒருத்தர் மேல இதே அளவு கோபம் இருந்தது. ஆனா அடுத்த நாள் அவங்க கிட்ட பேசும் போது இந்த கோவம் ஒரு துளி கூட எட்டி பாக்கவே இல்ல. பேசி முடிச்சப்புறம் தான் ஞாபகம் வந்தது அவங்க மேல நாம கோபமா இருந்தோமே.. ஆனா அவங்க கிட்ட பேசும் போது அது பத்தி ஞாபகமே வரலியேன்னு.. ஏன் அப்படி மறந்தேன்னு இன்னும் எனக்கு புரியல. அவங்க கிட்ட பேசற சந்தோஷத்துக்கு முன்னால என் கோபம் பொருளற்றத்தாயிடுச்சோ??

ஜி said...

// காயத்ரி said...
//இந்த கவிதை'க்கு பொழிப்புரை, விளக்கவுரை எழுதி அனுப்பட்டுமா??? ;) //

உங்க மொழிப்புலமைக்கு முன்னாடி நானெல்லாம் சாதாரணம் இளந்தல! ஏன் இதுக்கெல்லாம் உங்க பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்றீங்க? //

enakku neraya neram irukuthu.. plus rendu kavujaikku virivurai ezuthirukken.. so enakku callsheet kedaikumaa??

காயத்ரி said...

கோபி.. :)))

தேங்க்ஸ் ரஞ்சித்..

ட்ரீம்ஸ்.. புரியற 'மாதிரி' தான் இருக்கா? புரியல அப்போ?

காயத்ரி said...

//கடலுக்கடியில் புதைந்துகிடக்கிறது
நிசப்தம் புத்தனின் விழிகளாய்.
புத்தா,
நிம்மதியைப் பரப்பு//

சுகுணா! அட்வைஸா இது? பிரமிப்பா இருக்கு... :)

காயத்ரி said...

//உன்னோட இந்த கவிதை எனக்கு ஒரு நிகழ்ச்சிய ஞாபக படுத்துச்சு //

கவிதைகள் ஏதோ ஒரு விதத்துல நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி தான். ஆனா உனக்கு தோணின அர்த்தத்துல எழுதல.

காயத்ரி said...

//so enakku callsheet kedaikumaa??
//

ஜி... உனக்கு தான் மொத்தமா சேத்து ஒன்னும் புரியலயே!! நீயெல்லாம் விளக்கம் எழுதி என்ன ஆக போறே!!

Thekkikattan|தெகா said...

நல்லாருந்துச்சு :-)