Thursday, June 7, 2007

அன்புள்ள உனக்கு...





மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!

செயல்கள் எதிலும்
முழுமையில்லை

கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...

ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது!

காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

23 comments:

Guna said...

//காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!//

எப்படிங்க இப்படி எல்லாம் ???, ரூம் போட்டு உக்காந்து யோசிப்பிங்களோ!!!

Nice One

காயத்ரி சித்தார்த் said...

//ரூம் போட்டு உக்காந்து யோசிப்பிங்களோ!!!//

ம்ஹூம்.. அதெல்லாம் ரகசியமாக்கும்!!
தேங்க்ஸ் குணா!

அபி அப்பா said...

கலக்கப்போவது யாரு? அட நம்ம தங்கச்சிதானுங்கோ!!!!!

G3 said...

//உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!//

நோ பீலிங்க்ஸ் டா செல்லம்.. எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான்.. அப்புறம் அவரு பீல் பண்ணுவாரு

"என்றுமே நீ
அறியப்போவதில்லை
உன் கணவனாய் இருப்பதின்
கஷ்டங்களை!"
-னு :-)))

குமரன் said...

கவிதைக்கு பொய் அழகு!

//உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!//

பிராக்டிக்கலாக, உன் காதலனாய் இருப்பதின் கஷ்டங்களை! இது தான் நிஜம்.

இந்த பொண்ணுங்க பண்ற லொள்ளு இருக்கே! தாங்க முடியதுப்பா!

நந்தா said...

//மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!

செயல்கள் எதிலும்
முழுமையில்லை

கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...

ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது//

இந்த வரிகள் வரை னீங்கள் காதலின் தவிப்பை சொல்வதாகவே எனக்குப் பட்டது. ஆனால்

//காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!//

திடீரென்று எதோ சறுக்கியிருப்பதாய் எனக்குப் படுகிறது. நான் சொல்வது சரியா?

இந்த முரண்பாடுகளைத் தவிர்த்து உங்களது வரிகள் அமைப்பு என்னை வழக்கம் போலவே கொள்ளை கொண்டு விட்டது.

காயத்ரி சித்தார்த் said...

அப்படியா அண்ணாச்சி!!! தேங்க்ஸ்!

அடியே ஜி3.. உன் குறும்புக்கு ஒரு லிமிட் இல்லாம போச்சு! வந்து உன் வாலை ட்ரிம் பண்றேன் இரு!

நொந்தகுமாரன்.. நீங்க நொந்ததின் காரணம் இதானா?

தேங்க்ஸ் நந்தா! விட்டா என் கவிதை பத்தி ஒரு தீஸிஸ் எழுதுவிங்க போல!!

ஜே கே | J K said...

நல்லாயிருக்குங்க.

ஆனா முதல் பாதி காதலின் வலியாகவும், அடுத்த பாதி காதலனை குறிப்பது போலவும் தோன்றுகிறது.

குமரன் said...

//நொந்தகுமாரன்.. நீங்க நொந்ததின் காரணம் இதானா?//

பல பதிவர்களின்
பதிவால்
தூக்கம் கெட்டவன்

தன் எழுத்தால், சிந்தனையால்
சித்ரவதை செய்த பொழுது
மெளனமாய்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
மற்ற பதிவர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை!

நந்தா said...

நல்ல கவிதையை எப்படி வேணாலும் ஆராயலாம். தவறே இல்லை. படித்தவுடன் எனக்குத் தோணியது. அவ்வளவே.

Anonymous said...

//என்றுமே நீ
அறியப்போவதில்லை
உன் கணவனாய் இருப்பதின்
கஷ்டங்களை!" //

hehe...g3 akka, gayathiri paavam.


//உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை! //
yaaruku puriya pooguthu.ellam vanthu unnoda kathalana iruppathu thaan kastam nu sound viduranga.manasu thangala :-(((

Chandravathanaa said...

nallayirukku

Priya said...

நல்ல கவிதை!

Unknown said...

/என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!/


காதலன்கள் புரிந்து கொண்டால் சரி!

வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

நன்றி ஜே.கே!

//மற்ற பதிவர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை!//

ஒரு முடிவோட தான் இருக்கிங்க போல!

துர்கா உனக்காச்சும் புரியுதா நான் பாவம்னு.. :(

சந்திரவதனா.. வள்ளி.. அருட்பெருங்கோ.. முதல் வருகைக்கு நன்றி.

manasu said...

G3 எப்ப்வும் உண்மைய மட்டும் தா சொல்வாங்க போல என்னை
மாதிரி:-))))))

(பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் படிச்சதில்லையா )

ALIF AHAMED said...

///
"என்றுமே நீ
அறியப்போவதில்லை
உன் கணவனாய் இருப்பதின்
கஷ்டங்களை!" -னு :-)))
///


கமாண்ட் சூப்பர்...:)

காயத்ரி சித்தார்த் said...

மனசு.. மின்னல்.. நல்லாருங்க ரெண்டு பேரும். பாவி ஜி3... இப்டி கவிதைய காமெடி ஆக்கிட்டு போய்ட்டியே!! :((

MyFriend said...

படமும் சூப்பர். கீழே உள்ள கவிதையும் சூப்பர். ;-)

MyFriend said...

//அபி அப்பா said...
கலக்கப்போவது யாரு? அட நம்ம தங்கச்சிதானுங்கோ!!!!!
//

அசத்த போவதும் இவங்கதானுங்கண்ணா. :-D

காயத்ரி சித்தார்த் said...

வா தங்கச்சி! இப்பதான் வழி தெரிஞ்சுதா உனக்கு?

//அசத்த போவதும் இவங்கதானுங்கண்ணா. :-D //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒரு வழி பண்ணிடறதுன்னு முடிவு பண்ணிருக்கிங்களா எல்லாரும்?

மஞ்சூர் ராசா said...

காதலன் பார்வையில் இந்த கவிதை எப்படி இருந்திருக்கும் என ஒரு தோணல்.

MUTHU KUVIYAL said...

gaythiri manasa eppadinga paravaiyoda oppidaringa

nalla karpanai valamunga enanala unga kavuitha padicha pinnala en manase vera etho thani pola unara mudiyuthu

balakumaran oru kathaila manasu alaipayuratha oru kuthurai pul veliyil odara mathiri ezhuthi iruppar

10 - 12 varusangalukku munnala antha kathai padichapothu iruntha athe feel kondu poyiduchi

kavithagalellam super

pidinga periya paratta
valga valamudan

kumar