Tuesday, June 12, 2007

இப்படிக்குக் காதல்!
மனதின்
இனிப்புப் பிரதேசம் ஒன்றில்
வசிக்கிறாய் நீ!

உயிரின் தந்தி அதிர..
எங்கோ சில பூக்கள் உதிர...
உன்னில் மோதி மீளும்
நினைவலைகள்
ஒவ்வொரு முறையும்
விட்டுப் போகின்றன...

கொஞ்சம் கர்வத்தையும்
ஒரு சில கவிதைகளையும்!

35 comments:

Nandha said...

நல்ல கவிதை காயத்ரி. அதிலும் உன்னுடைய நினைவுகள எனக்கு கர்வத்தை அளிக்கின்றன என்று சொன்னீர்கள் பாருங்கள். அதை என்னால் உணர முடிகிறது.

தம்பி said...

அய்யோ இந்த காதலிக்கறவங்க பண்ற இம்சை இருக்கு தாங்க முடியல போ...

இப்படிதான் கவிதை கர்வம் கடைசில கை விட்டுட்டும் போயிடுவாங்க.


எழுதிகிட்டே இருக்க வாழ்த்துக்கள்.

காயத்ரி said...

நன்றி நந்தா!

தம்பி... ஏன் இந்த ரத்தவெறி? இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்டி சலிச்சுக்கறீங்க?

G3 said...

ஐயா!! புது போஸ்ட்டு போட்டாச்சு :-))

அட அடா.. சூப்பர் கவிதை... டீ மாஸ்டர் மாட்டிட்டாரு போல?? ;-))

காயத்ரி said...

ஏய் வாயாடி! அடங்க மாட்டியா நீயி? என்னை ஓட்டறத பார்ட் டைம் ஜாப்பா வெச்சிருக்கியா? எனக்கு டீயே வேணாம் போங்கப்பா.. :(

G3 said...

//ஏய் வாயாடி! அடங்க மாட்டியா நீயி?//

நான் அடங்கிட்டா உலகம் அழிஞ்சிடுமாம்.. ;-)))

//என்னை ஓட்டறத பார்ட் டைம் ஜாப்பா வெச்சிருக்கியா? எனக்கு டீயே வேணாம் போங்கப்பா.. :(//

அடடா, ரொம்ப பீல் பண்ணிட்டியோ.. சரி.. அடுத்த 3 போஸ்ட்ல உன்ன ஓட்டல.. போதுமா?? ஸ்மைல் ப்ளீஸ்...

G3 said...

சொல்ல மறந்துட்டேனே.. 50-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் !!!!

46 நாள்-ல 50 போஸ்டு.. சூப்பர் பாஸ்டு தான்.. இன்னும் நிறைய எழுதி அசத்த வாழ்த்துக்கள் :-)))

காயத்ரி said...

//அடுத்த 3 போஸ்ட்ல உன்ன ஓட்டல.. போதுமா?? //

சே தங்கம்! உன் கருணையே கருணை!

அட ஹாஃப் செஞ்ச்சுரி அடிச்சாச்சா? நான் கூட கவனிக்கல! தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்!!

manasu said...

//மனதின்
இனிப்புப் பிரதேசம் ஒன்றில்
வசிக்கிறாய் நீ!//

ஸ்வீட் வக்க வீட்ல வேற இடமேயில்லையா???


ஓடுது குதிர
ஆடுது மதிர......

யப்பா யாரப்பா அது டீ மாஸ்டரா இல்ல புரோட்டா மாஸ்டரா தயவுசெய்து காதலிச்சிரப்பா-:((((

நாளும் ஒரு கவிதைன்னா தாங்காது பூமி!

காயத்ரி said...

ஏய் மனசு! ஜி3 ஒருத்திய சமாளிக்கவே நான் டெய்லி எக்ஸ்ட்ரா மீல்ஸ் சாப்பிட வேண்டியிருக்கு! இதுல நீங்க வேற அவ கூட கூட்டணியா? ஆஹா.. ஒரு குரூப்பாத் தான் கிளம்பிருக்காய்ங்க போலிருக்கு? :(

காயத்ரி said...

//தயவுசெய்து காதலிச்சிரப்பா-:((((//

காதலிக்க வேண்டாம்.. கண்ணாலம் கட்டிக்க சொல்லுங்க! அப்புறம் உங்களை எல்லாம் ஏன் நான் இம்சை பண்ணப் போறேன்? :))))

Visaagan said...

chweettttt one...

Visaagan said...

chweeeeeettt one.
very nice

குசும்பன் said...

"நாளும் ஒரு கவிதைன்னா தாங்காது பூமி!"

ஒரு கவிதை எழுதினா தப்பா--------- தப்பு இல்ல

நாளும் ஒரு கவிதை எழுதினா தப்பா.......தப்பு மாதிரி தெரியுது.

ஒரு வாரம் முழுவதும் கவிதை எழுதினா தப்பா---- அய்யய்யோ பெரிய தப்புதான்.

"காதலிக்க வேண்டாம்.. கண்ணாலம் கட்டிக்க சொல்லுங்க! அப்புறம் உங்களை எல்லாம் ஏன் நான் இம்சை பண்ணப் போறேன்? :)))) "

அதானே கல்யாணத்துக்கு அப்புறம் இம்சை பண்ணதான் ஒரு ஆள் கிடைச்சுடும்ல!!!

வீ. எம் said...

நல்லதொரு கவிதை- வாழ்த்துக்கள் காயத்ரி - வீ எம்

வேதா said...

காயத்ரியின் பதிவில் அதான் வாலறந்த ஜி3 பதிவில் உங்க பின்னூட்டம் பார்த்துட்டு இங்க வந்தேன் :) வந்தா அட நம்ம ஜோதில ஐக்கியமாக ஒரு ஆள் கிடைச்சுட்டீங்க. நாமளும் கவிதைகள் எழுதறதுண்டு ஆனா உங்க லெவல் இல்ல :) ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க காயத்ரி :)

/கொஞ்சம் கர்வத்தையும்
ஒரு சில கவிதைகளையும்!/
இந்த வரிகள் அழகோ அழகு :)

வேதா said...

அட 50வது பதிவா வாழ்த்துக்கள் காயத்ரி :)

காயத்ரி said...

குசும்பன்.. சரியாத்தான் பேரு வெச்சிருக்கீங்க! தாங்க முடியல. விசாகன்.. வீ.எம், வேதா நன்றிங்க.

Padmapriya said...

Gayathri unga posts laam padichen.. :) kavithaya ezhuthi thallirkeenga??! super eh iruku..

seri adhenna profile la Kavithai pidikum aana ezhutha theriyadhu nu potirkeenga??

ellam suttadha??

Padmapriya said...

Sutta pazham naalum sooda nallave iruku!!

Best wishes,
Priya

Padmapriya said...

adhum indha kavithai sema touchy

காயத்ரி said...

//Padmapriya said...
Sutta pazham naalum sooda nallave iruku!!//

யம்மா! மொதலுக்கே மோசமாகிடும் போலிருக்கே! ஜி3 பண்ற காயத்ரி வேறங்க.. அட்ரஸ் மாத்தி வந்துட்டீங்க போல. கவிதை எழுத தெரியாதுன்னு சொல்லிக்கிறது ஒரு தன்னடக்கத்துக்காக. ஆளாளுக்கு அத்த எடு இத்த எடுன்னு சொல்லி என் ப்ரொஃபைல் ஒன் வேர்ட் ஆன்சர் மாதிரி தம்மாத்தூண்டு ஆகிடும் போலிருக்கு :(

Arunkumar said...

//
காயத்ரியின் பதிவில் அதான் வாலறந்த ஜி3 பதிவில் உங்க பின்னூட்டம் பார்த்துட்டு இங்க வந்தேன் :) வந்தா அட நம்ம ஜோதில ஐக்கியமாக ஒரு ஆள் கிடைச்சுட்டீங்க
//

ரிப்பீட்டு...

50 போஸ்டுக்கு வாழ்த்துக்கள் காயத்ரி :)

Arunkumar said...

எப்ப வந்தீங்கன்னு கூட எனக்கு தெரியல அதுக்குள்ள 50 அடிச்சிட்டீங்க.. கலக்குங்க

நாடே ஜி3-அ ஓட்டுது.. அவுங்க இங்க வந்து உங்கள ஓட்றாங்களா? என்ன கொடும சரவணன் !!!

Arunkumar said...

ஒரு மேட்டர் சொல்லிக்குறேன்.

//
கவிதை எழுத தெரியாதுன்னு சொல்லிக்கிறது ஒரு தன்னடக்கத்துக்காக.
//
தன்னடக்கத்து ஒரு படி கீழ போயிட்டீங்க...

Arunkumar said...

@வேதா
//
நாமளும் கவிதைகள் எழுதறதுண்டு ஆனா உங்க லெவல் இல்ல :)
//
மொத்தமா அடக்கம் பண்ணிட்டீங்க போல தன்னடக்கத்த..
நம்புற மாதிரி ஜோக் சொல்லுங்க வேதா நெக்ஸ்ட் டைம்...

Guna said...

வாழ்த்துக்கள் காயத்ரி. கவிதைக்கு மட்டும் இல்ல, இனிப்புப் பிரதேசத்துல வசிக்கிறதுக்கு ஒரு டீ மாஸ்டர பிடிச்சிட்டிங்கள்ல அதுக்கும் சேர்த்து தான். உங்க கல்யாணத்துக்கு எல்லாருக்கும் ஸ்பெஷல் டீ உண்டுல்ல ?

குட்டிபிசாசு said...

சேச்சே! என்னமா எழுதுரீங்க!

வாரேவா..

G3 said...

@வேதா : //அதான் வாலறந்த ஜி3 பதிவில்//

ஆரம்பமே இப்படியா வேதா? பாவம்மா நானு :-(


@அருண் : //நாடே ஜி3-அ ஓட்டுது.. அவுங்க இங்க வந்து உங்கள ஓட்றாங்களா?//

இந்த ஒரு சைட்ல தான் உங்க தொல்லைலான் இல்லாம நிம்மதியா இருந்தேன்.. இங்கயும் வந்துட்டீங்களா ஆப்படிக்க?? இனி வெளங்கினா மாதிரி தான் :-(((

G3 said...

//யம்மா! மொதலுக்கே மோசமாகிடும் போலிருக்கே!...கவிதை எழுத தெரியாதுன்னு சொல்லிக்கிறது ஒரு தன்னடக்கத்துக்காக. //

இப்போ புரியுதா ஓவர் தன்னடக்கம் ஒடம்புக்கு ஆகாதுன்னு :-))

Anonymous said...

/அட அடா.. சூப்பர் கவிதை... டீ மாஸ்டர் மாட்டிட்டாரு போல?? ;-))
//

காயத்திரி இதை சொல்லவே இல்லையே :))

Anonymous said...

//கொஞ்சம் கர்வத்தையும்
ஒரு சில கவிதைகளையும்! //

what a feeling!haha

காயத்ரி said...

//நாடே ஜி3-அ ஓட்டுது.. அவுங்க இங்க வந்து உங்கள ஓட்றாங்களா? என்ன கொடும சரவணன் !!! //

ஆமா அருண்.. நீங்களாச்சும் நியாயத்த கேளுங்க.

// இனிப்புப் பிரதேசத்துல வசிக்கிறதுக்கு ஒரு டீ மாஸ்டர பிடிச்சிட்டிங்கள்ல //

இன்னும் இல்லீங்க குணா.. துர்கா நீயும் நம்பித்தொலை :(

நன்றி பிசாசு!

saran said...

gayathri kavithaigalileye romba sumaraana kavithai ithuthaan.aaramba kaala kavinjanin kavithai pola vaarthaigalil cherivu illai..yaarukkum kayathrikku kuttu vaiththatharkku raththam kothikkalaiye.

M.Saravana Kumar said...

"மனதின்
இனிப்புப் பிரதேசம் ஒன்றில்
வசிக்கிறாய் நீ!"

அது எந்த ஏரியா???