Monday, June 4, 2007

சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை!

ஹி..ஹி.. தெரியும். தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே? அதான் இல்ல! சமையல் கலையை கத்துக்கிறதுக்கு நான் என்னெல்லாம் முயற்சி மேற்கொண்டேன்.. அதுக்கு எத்தனை விதமான கூர்நோக்கு, நுண்ணோக்கு மற்றும் தொலைநோக்கு அணுகுமுறைகள் கையாளப்பட்டனன்னு இந்த கட்டுரைல (!) விம் பார் போட்டு விளக்கப் போறேன். அதுக்கு தான் இந்த தலைப்பு!!

நான் ரொம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு +2 படிச்ச கண்ணீர் கதைய சொல்லிருக்கேன் இல்ல? அதனால.. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரே டயர்ட் எனக்கு! ஸ்ஸ்ஸ்... அப்பாடான்னு நிம்மதியா சாப்டு, தூங்கி, குட்டீஸ் கூட லூட்டி அடிச்சு, ஊர் சுத்தி, படம் பார்த்து.. சொந்தக்காரங்க வீட்டுக்கெலாம் போய் நலம் விசாரிச்சு.. சந்தோஷத்தோட உச்சத்துல இருந்தப்போ திடீர்னு நம்ம புத்தருக்கு வந்த மாதிரி ஒரு ஞானோதயம் வந்து தொலச்சிடுச்சு. "இப்படி எத்தனை நாள் ஆட்டமும் பாட்டமுமா இருப்ப காயத்ரி? உனக்கு என்னிக்கு தான் பொறுப்பு வரும்"னு என் மனசாட்சி என்னை பெஞ்ச் மேல நிக்க வெச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவ எடுக்க வேண்டியதா போச்சு. அதாங்க.. சமையல் கத்துக்கிறதுன்னு!

உடனே நேரா அம்மாட்ட போய் வீரசிவாஜி மாதிரி விறைப்பா நின்னு, "ஆணையிடுங்கள் அம்மா.. நான் செய்து முடிக்கிறேன் சமையலை" ன்னு வசனம் பேசினேன். புள்ளைக்கு பொறுப்பு வந்தா பண்டிகைக்கு கூழ் ஊத்தறேன்னு அம்மா வேண்டியிருந்தாங்க போல! உடனே நடிகர் திலகம் சிவாஜி மாதிரி எமோஷனலா கண்ணீர் ததும்ப சமயபுரம் மாரியம்மன பாத்து ஒரு லுக் விட்டாங்க! அப்புறம் சமையல் க்ளாஸ் ஸ்டார்ட் ஆச்சு. என்னிக்கு என் திட்டம் வெளில தெரிய வந்துச்சோ அன்னிக்கே.. "அம்மா! நான் லைஃப்ல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் வாழணும்னு ஆசைப்படறேன்" அப்டின்னு சொல்லிட்டு சித்தி வீட்டுக்கு போய்ட்டான் என் தம்பி. நான் இதுக்கெல்லாமா அசருவேன்? "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"ன்னு பாட்டு பாடிட்டே சமைக்க ஆரம்பிச்சேன். அதென்னமோ தெரிலங்க.. நான் சமைக்க ஆரம்பிச்சவுடனே எங்கம்மாக்கு பக்தி முத்திப் போச்சு. என்னிக்கெல்லாம் நான் சமைக்கிறனோ அன்னிக்கெல்லாம் அவங்க விரதம் இருப்பாங்க! இருக்கட்டுமே? 'அப்பா'ன்னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை? அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர்.. நான் எப்டி சமைச்சாலும் சாப்பிடுவார்!!

தினம் எங்கம்மாவ ஹால்ல உக்காத்தி வெச்சிட்டு ஒவ்வொரு டப்பாவா எடுத்திட்டு வந்து.. "மிளகாத்தூள் இதானே?" "மல்லித்தூள் இவ்ளோ போட்டா போதுமா?" ன்னு கேட்டு கேட்டு கிச்சனுக்கும் ஹாலுக்குமா ஓடி ஓடி ரன் எடுப்பேன் நான். உள்ள.. வறுத்தல், வதக்கல், காய்தல், தீய்தல்னு எல்லா எக்ஸ்ப்ரிமெண்ட்டும் முடிச்சு குழம்பு மாதிரி ஒன்ன கொண்டு வந்து அப்பா முன்னாடி வெப்பேன். அவர் பிசைஞ்சு ஒரு வாய் சாப்பிடறதுக்குள்ள... ரிசல்ட் பாக்குற ஸ்டூடெண்ட், பிரசவ வார்டு முன்னாடி நிக்கற ஹஸ்பண்ட், லவ்வ சொல்லப்போற விடலைப்பையன் இவங்கள மாதிரி எல்லாம் டென்ஷனாகி அவர் மூஞ்சிய உத்து உத்து பாப்பேன். எங்கப்பா ரொம்ப கூச்சப்பட்டு நெளிஞ்சு.. "போம்மா...நல்லாத்தான் இருக்கு"ன்னு கூசாம பொய் சொல்வார்!

சித்திரம் மட்டுமில்லிங்க.. சமையலும் கைப்பழக்கம் தான். பழகிப் பழகி இப்ப நல்லாத்தான் சமைக்கிறேன். (சத்தியமா! நம்புங்க ப்ளீஸ்) ஒரே ஒரு குறை என்னனா... எவ்ளோ போராடியும் எனக்கு இன்னும் டீ போட வர மாட்டிங்குது. சில நேரம் சலசலன்னு இருக்கும்.. சுண்ட வெச்சா கசக்கும்.. பால் கம்மியாகி கருப்பாவோ.. ஜாஸ்தியாகி சப்புன்னோ ஆய்டும். எல்லாம் சரியா இருந்தா ஆத்தி ஆத்தியே ஆறிப்போய்டும். சரியான இம்சைங்க இது. "டீயே போட வரல. நீ நல்லா சமைக்கிறேன்னு நாங்க நம்பனுமா"ன்னு கேக்கப்படாது. சில உண்மைகள் அப்படித்தான். கஷ்டப்பட்டாவது நம்பித்தான் ஆகனும்.

இந்த பிரச்சினையால அம்மா இல்லாத நேரம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா பதட்டமாய்டும் எனக்கு. அவங்க மழைல சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு வந்தாலும்.. "ஹி ஹி.. வாங்க.. உக்காருங்க.. ஜூஸ் சாப்பிடறீங்களா" அப்டின்னு தான் கேப்பேன்.
அப்டித்தான் ஒருத்தர் வந்தார் அன்னிக்கு. அம்மா அப்பதான் பக்கத்து கடைக்கு போயிருந்தாங்க. என்ன பண்றது? நானும் பிஸ்கட்.. முறுக்கு எடுத்து வெச்சு.. பையன் சவுக்கியமா.. பாட்டி சவுக்கியமா.. நாய்க்குட்டி சவுக்கியமான்னு பேச்ச வளர்த்திப் பாத்தேன். அவரா.. "தலைவலிம்மா.. கொஞ்சம் டீ போடேன்" ன்னு வாய் விட்டே கேட்டுட்டார். இதுக்கு மேல என்ன பண்ண? "இந்த அம்மாவ வேற காணமே"னு உள்ள உதறல். திரு திருன்னு முழிச்சுட்டே உள்ள போய் அடுப்ப பத்த வெச்சு.. ஒரு டம்ளர் டீக்கு 2 டம்ளர் தண்ணி வெச்சு தூள் போட்டு.. அடுப்பையும் sim ல வெச்சிட்டு உள்ளயே செட்டில் ஆய்ட்டேன்!! அவ்ளோ தண்ணியும் சுண்டறதுக்குள்ள அம்மா எப்படியும் வந்துடுவாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!
நான் சத்தமில்லாம கிச்சன்லயே இருக்க.. அவர் ஹால்ல தேமேன்னு உக்காந்திருக்க நேரம் பாட்டுக்கு போய்ட்டுருக்கு. ஒரு வழியா அம்மா வந்துட்டாங்க. "வாங்க.. எப்ப வந்திங்க.. டீ எதாச்சும் சாப்டிங்களா?" ன்னு அம்மா கேக்க.. "ம்ம்.. உங்க பொண்ணு டீ போடறேனு உள்ள போனா. போய் பாருங்க தூள் வாங்க எஸ்டேட்டுக்கே போய்ட்டா போல" ன்னு அந்த மனுஷன் என் மானத்தை கப்பலேத்தி டாட்டா காட்டி அனுப்பி வெச்சிட்டார்.

அன்னில இருந்து நாங்க எல்லாரும் டீ குடிச்சாலும் விருந்தாளிங்களுக்குன்னே ப்ரூவும்.. காம்ப்ளானும் வாங்கி வெச்சிட்டாங்க வீட்டுல. ஹி ஹி.. அதெல்லாம் நல்லா போடுவேனாக்கும்! உயரமா வளர முடியலன்னு கவலைப்படறவங்க யாராச்சும் இருந்தா வாங்க வீட்டுக்கு.. காம்ப்ளான் குடிக்கலாம்!

பி.கு: நல்லா டீ போடத் தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்க.. ப்ளீஸ்!

25 comments:

அபி அப்பா said...

அட்டகாசம் போங்க! இதுக்குதான் நான் சாமியாரா போறேன்ன்னு சொன்னேன், விட்டாங்களா?:-))

அபி அப்பா said...

நம்ம பாசமலர் கூட இங்க அவங்க அப்பாவை கஷ்டப்படுத்தியதை சொல்லியிருப்பாங்க! நல்லா இருங்க!!!

muthukumar said...

//என்னிக்கு என் திட்டம் வெளில தெரிய வந்துச்சோ அன்னிக்கே.. "அம்மா! நான் லைஃப்ல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் வாழணும்னு ஆசைப்படறேன்" அப்டின்னு சொல்லிட்டு சித்தி வீட்டுக்கு போய்ட்டான் என் தம்பி.//

//நான் சமைக்க ஆரம்பிச்சவுடனே எங்கம்மாக்கு பக்தி முத்திப் போச்சு. என்னிக்கெல்லாம் நான் சமைக்கிறனோ அன்னிக்கெல்லாம் அவங்க விரதம் இருப்பாங்க!//


i enjoyed to read this.keep it up

Guna said...

என்னாது?? டீ போடுற வரன் வேணுமா ?? அப்போ, உங்களுக்கு மாப்பிளை பார்க்க டீக்கடை டீக்கடையா தான் போகணும் போல ??

Nice post :)

துர்கா|†hµrgåh said...

ennai pola oru jeevana?same blood.ennakum samaiyal eppo ok.but tea sucks.But eppothaan nalla tea poda varuthu.making tea is one tough job.
and u write nicely(ippadi pala peyar sonna appo naan nambala.eppo i do).keep up the good work gal :-)

காயத்ரி said...

//இதுக்குதான் நான் சாமியாரா போறேன்ன்னு சொன்னேன், விட்டாங்களா?:-)) //

யார் விட மாட்டேன்னு சொன்னது?

நன்றி முத்துக்குமார்.

குணா குறும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு!

//ippadi pala peyar sonna appo naan nambala.eppo i do)//
நிஜமாவா துர்கா? யார் அந்த பலர்?

வல்லிசிம்ஹன் said...

டீ குடிக்க வரலாம்னு சொல்றீங்களா.

அம்மாவோட விரத நாளெலாம் முடிஞ்சு போயிருக்கும்னு நம்பறேன்.:-))

துர்கா|†hµrgåh said...

//நிஜமாவா துர்கா? யார் அந்த பலர்? //

paalar nu sollithen so list romba long thaniya vanthu kelunga oru periya liste koodukiren ma

இராம் said...

யக்கோவ்,

அந்த தெய்வ மச்சான் பாவம்.... :)

G3 said...

// தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே? //

இந்த ப்ளாக்ல அந்த மாதிரி தப்பான விஷயமெல்லாம் நாங்க எதிர்பாக்கமாட்டோமே :P

//"அம்மா! நான் லைஃப்ல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் வாழணும்னு ஆசைப்படறேன்"//
//நான் சமைக்க ஆரம்பிச்சவுடனே எங்கம்மாக்கு பக்தி முத்திப் போச்சு. என்னிக்கெல்லாம் நான் சமைக்கிறனோ அன்னிக்கெல்லாம் அவங்க விரதம் இருப்பாங்க! //
ரொம்ப விவரமானவங்க தான் 2 பேரும் :-)) பொழச்சிக்குவாங்க :-))

G3 said...

//சில நேரம் சலசலன்னு இருக்கும்.. சுண்ட வெச்சா கசக்கும்.. பால் கம்மியாகி கருப்பாவோ.. ஜாஸ்தியாகி சப்புன்னோ ஆய்டும். எல்லாம் சரியா இருந்தா ஆத்தி ஆத்தியே ஆறிப்போய்டும். சரியான இம்சைங்க இது.//

நாங்க உஷார் பார்ட்டி இல்ல.. எங்க அப்பா காப்பி கேட்டா நான் பாலை காய்ச்சி எடுத்துட்டு போய் குடுத்துடுவேன்.. அப்புறம் லைனா டிக்காஷன் சக்கரைன்னு எல்லாத்தையும் அவர் கிட்டயே கொண்டு போய் குடுத்துடுவேன்.. உங்களுக்கு எது எந்த அளவு வேணுமோ நீங்களே போட்டுக்கோங்கன்னு.. எங்கப்பா என்னதிதுன்னு கேட்டா 5 ஸ்டார் ஹோட்டல்லலான் இப்படி தான்ப்பா குடுப்பாங்கன்னு டயலாக் வேற அடிப்பேன் :-))

G3 said...

//என்னாது?? டீ போடுற வரன் வேணுமா ?? அப்போ, உங்களுக்கு மாப்பிளை பார்க்க டீக்கடை டீக்கடையா தான் போகணும் போல ??//

நானும் இதை வழிமொழிகிறேன் :-)))

சிங்கம்லே ACE !! said...

nalla nakaichuvai padhivu.. vazthukkal..

ippo thaan tea matter veliya varuthu.. onnonna inime thaan varanum :D :D

தம்பி said...

எனக்கு டீ மட்டும்தான் ஒழுங்கா போடவரும்னு நினைச்சேன். இப்போ வெண்டைக்கா காரகுழம்பு
சாம்பார், சிக்கன், சாதம் கூட ஒழுங்கா வரும்னு இப்பதான் தோணுது. உங்களுக்கு நான் எவ்வளவோ பரவால்ல போலருக்கு.

சமையல்ல என்னோட ஆஸ்தான ஆலோசகர்

அபி அப்பா.

போன்ல சொல்லிக்குடுத்தே நல்லா சமைக்க வச்சிட்டாரு.

டீ போடுவது இப்படின்னு ஒரு ஐடியா குடுத்ததுக்கு வளெர தேங்க்ஸ்

பொன்ஸ்~~Poorna said...

கலக்குறீங்க.. நீங்க போட்ட டீயை நீங்களாவது குடிப்பீங்களா? ;)

காயத்ரி said...

//டீ குடிக்க வரலாம்னு சொல்றீங்களா.//

எவ்ளோ நேர்மையா டீ போட வராதுன்னு சொல்லிருக்கேன்.. மற்படி இப்டி கேட்டா?

ராம்.. அதுக்கு தான் சமைக்கத் தெரிஞ்ச மாப்ளயா தேடறது! உங்க மச்சான் அவரே சமைச்சு அவரே சாப்பிட்டுகிட்டா நான் வேணாம்னா சொல்லப் போறேன்!!

ஜி3 செல்லமே.. உங்க அப்பா படற கஷ்டத்துக்கு எங்க அப்பா பட்டதெல்லாம் கம்மி போலிருக்கே?

தம்பி நானும் நல்லாதான் சமைப்பேன்! (ஹிஹி) அபி அப்பா சொல்லிக்குடுத்து அதை சாப்பிட்டு தெம்பா பின்னூட்டம் வேற போடறீங்க!! அதிசயம் தான்!

// நீங்க போட்ட டீயை நீங்களாவது குடிப்பீங்களா? ;)//

பொன்ஸ்.. அந்த விபரீத விளையாட்டுல நான் இறங்கறதில்ல!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஹி..ஹி.. தெரியும். தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே?//

ஹீஹீ.. இல்லையே! நான் ஒரு காமெடி பதிவைத்தானே எதிர்ப்பார்த்தேன். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அம்மா இல்லாத நேரம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா பதட்டமாய்டும் எனக்கு. அவங்க மழைல சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு வந்தாலும்.. "ஹி ஹி.. வாங்க.. உக்காருங்க.. ஜூஸ் சாப்பிடறீங்களா" அப்டின்னு தான் கேப்பேன். //

ஹீஹீ.. சேம் ப்ளட்! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பி.கு: நல்லா டீ போடத் தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்க.. ப்ளீஸ்!//

சீக்கிரமே நல்ல செய்தி சொல்வீங்க போலிருக்கே!

ஹீஹீ.. வேய்ட்டீங். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பரா இருந்துச்சு.. செம்ம கலாக்கல். :-D

அடிக்கடி கவிதைன்னு எழுதுறதைவிட இப்படிப்பட்ட போஸ்ட் போட்டு கலக்குங்க அக்கா. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அபி அப்பா said...
நம்ம பாசமலர் கூட இங்க அவங்க அப்பாவை கஷ்டப்படுத்தியதை சொல்லியிருப்பாங்க! நல்லா இருங்க!!!
//

அண்ணே, நல்லாவே ப்ராக்ஸி கொடுக்கிறீங்க.. அப்படியே எனக்கும் கொடுங்கோ.. :-D

காயத்ரி said...

//அடிக்கடி கவிதைன்னு எழுதுறதைவிட இப்படிப்பட்ட போஸ்ட் போட்டு கலக்குங்க அக்கா. :-D //

முயற்சி பண்றேன் தங்கச்சி! நம்ம கைல என்ன இருக்கு! ரொம்ப லேட்டா வந்ததுக்கு, ஒரேயடியா இத்தன கமெண்ட் போட்டு கூல் பண்ணிட்டே! பொழச்சு போ..

குட்டிபிசாசு said...

என்னங்க இப்படி டீ மட்டும் போட தெரிஞ்ச வரனா கேட்கிரீங்க! சாம்பார், ரசம்,...எல்லாம் செய்ய தெரிஞ்சா எவ்வளவு வசதியா இருக்கும்!

ram said...

இன்று உங்களால் அலுவலகத்தில் எனக்கு பெரும் பிரச்சினை உங்கள் மொக்கை பதிவுகளை படித்தபின் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை நான் சிரிப்பை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வந்து வாயை பொத்தி நினைத்து நினைத்து சிரித்து, கடவுளே மிகவும் அருமை.
நன்றாக வாய்விட்டு சிரித்து ரொம்ப நாளாகிறது

மிகவும் அற்புதமன நகைச்சுவை விருந்து

நான் உங்கள் குடும்ப ப்லொக்கெர்ஸ் நிறைய படித்திருந்தும் யாருக்கும் பின்னூட்டம் இட்டதில்லை
இதுதான் என் முதல் பின்னூட்டம்
அவ்வப்பொது தமிழ்நதி க்கு எழுதவென்டும் என்று நினைப்பேன்
ஆனால் உங்கள் பதிவை படித்தபின் என்னால் பின்னூட்டம் போடாமல் நகரமுடியவில்லை

good writing

Ramesh V

M.Saravana Kumar said...

"இந்த பிரச்சினையால அம்மா இல்லாத நேரம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா பதட்டமாய்டும் எனக்கு. அவங்க மழைல சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு வந்தாலும்.. "ஹி ஹி.. வாங்க.. உக்காருங்க.. ஜூஸ் சாப்பிடறீங்களா" அப்டின்னு தான் கேப்பேன்...."

WOW.. WAT A COMEDY SENSE.....
;)