Friday, January 9, 2009

பாற்கடல்!

சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் நிச்சயம் அவையும் இடம் பெற்றிருப்பதாய் சாதிப்பார்! இந்த முறை சென்னையிலும் ஈரோட்டிலுமாய் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குகையில் லா.ச.ரா வின் 'பாற்கடலை' அதிதீவிரமாய் தேடிக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் லா.ச.ரா -வின் படைப்புலகம் கிடைத்தது.. மேலதிகமாய் கவிஞர் அபியின் விமர்சனங்களோடு.

சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் குறுநாவல்கள் பற்றிய அறிமுகங்களோடு கூடிய அத்தொகுப்பு நூலை இருள் கவியத் தொடங்கிய மாலையொன்றில் காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து படிக்கத் துவங்கினோம். காவிரி முன் போலில்லை. என் சின்னஞ்சிறு விழிகளில் விரிந்து விரிந்து.. என் இளம் பிராயங்களின் கரைகளில் நிரம்பித், ததும்பிக் கொண்டிருந்தது போல பின்னெப்போதும் அது இருக்கவில்லை. ஆறும் கல்பொரு சிறு நுரையாகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? என்றாலும் ஆற்றங்கரைகளுக்கேயுரிய தனி வசீகரமும் இல்லாமலில்லை.

"சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும். சொல்லாமல் உணர்த்தும் நளினம் கைவர வேண்டும். தமது நடவடிக்கைகள் மெளனத் தளத்தில் இருக்க வேண்டும்" என்று தீவிரமாக ஆசைப்படுபவர் லா.ச.ரா என்கிறார்
அபி.

அபியின் கணிப்பு சரி தான் என்றாமோதிக்கிறது 'பாற்கடல்'. பாற்கடலைப் போல, படிக்கப் படிக்க உடம்பு சிலிர்த்துக் கொண்டதும், மனம் பெரு மைதானம் போல விரிந்து கொண்டே சென்றதும், படித்து முடிக்கையில் பேரானந்தமும்
பெருந்துக்கமுமாய் தொண்டை அடைத்துக் கொண்டதுமான மெய்ப்பாடுகள் வேறெப்போது நிகழ்ந்தனவென்று நினைவிலில்லை. எங்கள் முன்னால் வற்றி இளைத்து, உடம்பெங்கும் எலும்புகள் துருத்தினாற் போல் நகர்ந்து கொண்டிருந்த நதி கூட சட்டென்று பாற்கடலாகி விட்டது போலொரு பிரமை தட்டிற்று. சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

'நல்ல கதை... நல்ல்ல கதை' - சித்து தன்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். கடிதமா கதையா என்று பிரித்துப் பார்க்கவியலாதபடி வெகு இலாவகமாய் நகரும் கதையின் கட்டமைப்பை வெகு நேரம் வியந்து கொண்டிருந்தார். வலைப்பதிவில் நிச்சயம் எழுதவேண்டும் என்றார்.

இதோ இப்போது பாற்கடல் பற்றி எழுதுவது என்று முடிவான பின்னும் கூட லா.ச.ரா விரும்பும், அவர் படைப்புகள் அனைத்திலும் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் 'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' கைவருமா
என்ற சந்தேகத்தில் தான் நான் இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறேன்.

இக்கட்டுரை நிச்சயம் ஒரு விமர்சனக் கட்டுரையில்லை.. இன்னின்ன நிறைகள், இத்தனை குறைகள் என்று பட்டியலிடும் எண்ணமில்லை. மாறாய் ஒரு அளப்பரிய உன்னத கணத்தை, எப்போதும் மாறாமலிருக்கும் உண்மையொன்றை, மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை மட்டுமே இதில் சுட்டிப் போக விரும்புகிறேன். ஒரு விழைவு.. அல்லது ஆற்றுப்படுத்தும் முயற்சி.. அல்லது முதன்முதலாய் கடல் பார்க்கும் குழந்தையின் ஆச்சரியம்!

"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. .... ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனேயே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.."

என்று நிறைவுறுகிறது கதை. நம் பழஞ்சமூகம் முன்னொரு காலத்தில் கட்டமைத்திருந்த கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம் தான் பாற்கடலின்
கதைக்களமாகியிருக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் பற்றிய தற்காலத்தைய அவநம்பிக்கையை, முன்மதிப்பீடுகளை எல்லாம் பொட்டிலறைந்தாற் போல ஒரே ஒரு கதையின் மூலம் களைந்து விட முடியுமா என்ற ஐயப்பாட்டை சாத்தியமாக்கியிருக்கிறது லா.ச.ரா வின் எழுத்து. அன்பு, பாசம், காதல், நெகிழ்ச்சி, உறவு, பிரிவு.... இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில் நிறைந்திருக்கும் உண்மையின் சதவீதத்தை அன்னம் போல பிரித்துக் காட்டியிருக்கிறது.

கதை படித்த நாளிலிருந்து பாற்கடல் என்ற படிமம் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எவர் உருவாக்கியிருப்பார்கள் இதை? கற்பனைக்கெட்டா வண்ணம் ஆழமும் விரிவுமாய் பரவியிருக்கும் உவர்கடலை, முழுவதும் பாலால் நிரப்பிப் பார்க்க எந்த மனம் விரும்பியிருக்கும்? விஷமும் அமிர்தமும் அதிலிருந்தே வந்ததென்ற கற்பனை எவர் மனத்தில் உதித்திருக்கும்?

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை, மனதில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமிடையிலான தடுப்புச் சுவற்றை வலுவுற மேலெழுப்பிக் கட்டியதெனில் லா.ச.ராவின் 'பாற்கடல்' இருமைகளுக்கிடையிலான தடித்த கோட்டினை முற்றிலும் இல்லாமலாக்கியிருக்கிறது. உண்மை தான். சூரியன் ஒரேயிடத்தில் இருக்கையில் இரவேது? பகலேது? உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது!

41 comments:

நட்புடன் ஜமால் said...

\\"பாற்கடல்!"\\

பார் கடல்.

நட்புடன் ஜமால் said...

விமர்சனம் என்றல்லாது ஒரு அறிமுகம் எனக்கொள்ளலாம்.

அருமையாகச்சொல்லியிருக்கின்றீர்கள்.

பாற்கடல் - ம்ம்ம் - கடலை பார் --- பார் கடல்.

பார்த்து எழுதப்பட்ட விளக்கங்கள்.

இப்புத்தகத்தை தேடி படிக்கனும், முயற்சிக்கிறேன் ...

கபீஷ் said...

உங்க எழுதும் முறை அழகா இருக்கு.

Anonymous said...

//நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது//

பகிர்வுக்கு நன்றிங்க..:-)நீண்ட நாட்களுக்குப் பிறகு!!!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

துள்ளும் தமிழ். நல்ல உரை. உங்களுடைய எழுத்து வழக்கம் போன்றே இனிமையாய் இருக்கிறது.

உங்களிருவருக்கும் இனிய மணவாழ்விற்கான வாழ்த்துக்கள் (தாமதமாகவெனினும்).

அது சரி... அமர்ந்து படிக்குமளவிற்கு நல்ல இடத்தை ஈரோட்டுக் காவிரிக்கரையில் எங்கு கண்டீர்கள்?

nagoreismail said...

நலமா?

MyFriend said...

me the first?

நிலா said...

யாரோ புதுசா ஒருத்தவங்க ப்ளாக் எழுத வந்திருக்காங்க போல?

அறிமுக போஸ்ட் ஒண்ணும் போடலியா? :P

G3 said...

//மனம் தளும்பும் மகிழ்ச்சியொன்றை தற்செயலாய் ஸ்பரிசித்து விட்ட அனுபவத்தை //

உன் பதிவை பாத்ததும் என் ரியாக்ஷன் இதே :)

G3 said...

Welcome back :) அப்பப்போ இப்படி பதிவு போடு :D

தமிழன்-கறுப்பி... said...

வாங்க வாங்க...

☀நான் ஆதவன்☀ said...

ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தி ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி.

இனி பாலைத் திணை என்ற தலைப்பு முல்லை அல்லது குறிஞ்சித் திணையாக மாறுமா???

தமிழன்-கறுப்பி... said...

ரசனையான வரிகள்...

தமிழன்-கறுப்பி... said...

\\
இன்னும் பின்னவீனத்துவ வாதிகளின் கேலிக்குள்ளாகும் இதேபோன்ற இன்னபிற பொய்களில்
\\

நல்லா கேட்டுக்குங்க...மக்கள்...:)

சந்தனமுல்லை said...

அதென்னவோ உங்கள் பதிவுகள் படிக்க, திரும்ப திரும்ப படிக்க எனக்கு அவ்வளவு சுவாரசியம்! ஒருவேளை உங்கள் போல் எழுதவேண்டுமென்பது என் உள்ளூர புதைந்துகிடக்கும் அவாவோ!?

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. அழகுத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. முதன் முறையாக வாசிக்கிறேன் உங்கள் எழுத்தை. பிரமாதம் காயத்ரி. கூடவே ’பாற்கடல்’ பற்றிய பகிர்வுக்கும் நன்றி.

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.. முடியலை..

கல்யாணம் ஆகியுமா நீ திருந்தலை.. :(

//சித்துவிற்கு புத்தகங்கள் என்றால் அலாதிப் ப்ரியம்//

இல்லையே.. சிக்சர்னா தான் ரொம்ப பிரியம்னு படிச்சிடுக்கேனே.. :)

இராம்/Raam said...

கவிதாயினி,


அருமையான விமர்சனம்... சிங்கை வந்தப்பிறகு ஓய்வு நேரங்கள் புத்தகங்களோடு கழிந்து கொண்டு இருக்கிறது.

தமிழ்செல்வியின் அளம்& மாணிக்கம்,
மகேந்திரனின் வண்ணத்துபூச்சியின் மரணசாசனம்,
வ‌ண்ண‌தாச‌னின் சிறுக‌தை தொகுப்புக‌ள்,
நாஞ்சில் நாட‌னின் புத்த‌க‌ங்க‌ள் சில‌

என்னுடைய‌ வாசிப்பின் வாச‌லில் வ‌ரிசையாக‌ இருக்கின்ற‌ன‌.. பாற்க‌ட‌ல்'ஐயும் அதொடு இணைந்தாகி விட்ட‌து... நன்றி :)

இராம்/Raam said...

//யாரோ புதுசா ஒருத்தவங்க ப்ளாக் எழுத வந்திருக்காங்க போல?

அறிமுக போஸ்ட் ஒண்ணும் போடலியா? :P//


yessu... Repeatee... :)

KARTHIK said...

// சொல்லி வைத்தாற் போல் நிறைவாய் இரு புன்னகைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.//

இந்தப்புன்னகை நீடித்திருக்கட்டும்.

அப்பதான் பல அழுவாச்சி காவியம் வராமா இருக்கும் :-)).

//நிலா said...
யாரோ புதுசா ஒருத்தவங்க ப்ளாக் எழுத வந்திருக்காங்க போல?

அறிமுக போஸ்ட் ஒண்ணும் போடலியா?//

நம்ம டைபிஸ்டுகிட்ட சொல்லி முதல் ஒரு பதிவ போட்டு அறிமுகபடுத்திகிட்டு.அப்புறமா அடுத்தவிங்க அறிமுகத்த கேக்கலாம் சரியா.

ச.ஜெ.ரவி said...

‘‘உறவுகளும் அவை தரும் துன்பங்களும் அதைத் தொடர்ந்த தேற்றுதல்களும் பின் வரும் இன்பங்களும் என்றான வாழ்க்கைச் சுழற்சி கூட இத்தனை நாட்கள் இரவு பகலைப் போல வேறு வேறாய் காட்சியளித்தவை தானில்லையா? ’’
...................
‘எழுத்துகள் அத்துனையிலும் உண்மை வழிகிறது’
அழகிய விமர்சன உரை மன்னிக்கவும் அறிமுக உரை.
வாழ்த்துக்கள்.

குப்பன்.யாஹூ said...

வாருங்கள் வரவேற்கிறோம் இதய பூர்வமாக.

மிகவும் அருமையான பதிவு, முன்பு அழகான ராட்சசி பிறந்த நாள் குறித்து எழுதிய பதிவு போல இந்த பதிவும், தமிழ் பதிவு உலக வரலாற்றில் ஒரு மைல்கல்.

புத்தகம் வாங்கி படிக்க முயற்சிக்கிறேன்.

குப்பன்_யாஹூ

ஆயில்யன் said...

//நன்றும் தீயதுமான அல்லது நன்மையும் தீமையுமற்ற பாற்கடலைப் போன்றது தான் குடும்பங்களெனில் ஒவ்வொரு மனிதரையும் கூட பாற்கடலாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது//


அழகாய் சொன்னதாக எனக்கு தோன்றுகிறது!

புத்தகம் பற்றிய அறிமுகமும் கூட அருமை தங்கச்சி :))

ஸ்ரீ.... said...

வசீகரமாக எழுதும் தாங்கள் ஏன் அடிக்கடி எழுதுவதில்லை? இதை நீங்கள் குற்றச்சாட்டாகக் கருதினாலும் சரி. பாற்கடல், உங்களின் மற்றுமோர் அழகுத் தமிழ்க்கடல்.

ஸ்ரீ..

gayathri said...

Welcome back :) உங்க எழுதும் முறை அழகா இருக்குஅப்பப்போ இப்படி பதிவு போடு :D

Bee'morgan said...

திரும்பவும் வந்ததே மகிழ்ச்சி.. :) பாற்கடலுடன் வந்திருப்பது இரட்டை மகிழ்ச்சி.. :)
அழகியல் குன்றாத அறிமுகம்.. அருமை..

Dinesh C said...

வழக்கம் பொல சிந்திக்க தூண்டும் சுவையான பதிவு..

//சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்க வேண்டும்//
The Man who makes the least of the movements is the
man in charge :) Basic Body Languagekkum thaan!

சூர்யா said...

Welcome back, rombha naal kazhithu oru blog. Neriya padam vanthirukae...padathukku pogalaiya.. Iniya thamizh puthandu matrum pongal nalvaazhthukkal. Padam parthu vitu, thirai vimarsana pongal padaikkavum..
Avaludan
Suriya

enRenRum-anbudan.BALA said...

இல்லறம் இனிதாக அமைய வாழ்த்துகள் !!!

கல்யாணத்திற்குப் பின் முதல் இடுகையா ? நல்ல தேர்வு, "பாற்கடல்" :)

gayathri said...

me they 30

துர்க்கா-தீபன் said...

'சொல்லாமல் உணர்த்தும் நளினம்' என்பதைத்தான் தி.ஜானகி ராமனும் மோகமுள்ளில் " சொல்லாமல் புரியாதது சொல்லியா புரியப்போகிறது" என்று கதை வழி கண்ணிர்த்துளி வரவழைத்ததாக உணர்கிறேன்.

அம்சமான பதிவுகள் உங்களது. Blog எழுதுகிறோம் பேர்வழி என்று வதைப்பதில்லை உங்கள் எழுத்துகள். இம்சை அரசியை விகடன் அறிமுகம் செய்ததில் Toronto வில் நானெழுதினேன் உங்கள் எழுத்து ராஜாங்கத்தில் என் அடிமைசாசனத்தை. அன்றிலிருந்து உங்கள் எழுத்துகளை தொடரும் ஏகலைவன் ஆன்மா நான் ( கட்டை விரலை கேட்டுடாதீங்க spacebar ஐ தட்ட முடியாது). தாமதங்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை இயங்குவது மகிழ்ச்சிக்குரியது.

அறிவுமதி சில இலக்கிய நயங்களை எவ்வாறு புரியும் திரை இசை ஆக்கினாரோ அதுபோலவே நீங்களும் சில இலக்கிய நயங்களை நடைமுறை வாழ்வு நோக்கி திருப்பும் நாசூக்கு தெரிந்தவர். எவ்வாறு அறிவுமதியின் இலக்கிய இசை இழப்பில் உடன்பாடு இல்லையோ ( பிரபஞ்சனின் வார்த்தையில் "அவனவனுக்கு அவனவன் உணர்ச்சி பவித்திரம்" ஆத்மநாமின் அகால மரணம் உட்பட..... இழப்பு நமக்குத்தான் அவர்களுக்கில்லை) அதுபோலவே உங்களின் பதிவுகளையும்..........................

" சொல்லாமல் புரியாதது சொல்லியா புரியப்போகிறது"

அதற்காகத்தான் இந்த தட்டிகொடுத்தல்கள்.... ( நீங்களும் ஒரு பாற்கடல் தான் என்று தான் சிம்பிளாக எழுத நினைத்தேன் ரொம்ப ஓவரோ என்றுதான் இவ்வளவு நீளமாக எழுத வேண்டியதாக போச்சு..)

காயத்ரி சித்தார்த் said...

ஜமால்.. அது பார் + கடல் அல்ல. பால் + கடல் = பாற்கடல். உங்களுக்கு இந்து சமயம் முன் வைக்கும் படிமங்கள் குறித்து அறிமுகமில்லையென்று நினைக்கிறேன். நண்பர் எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும். :)

காயத்ரி சித்தார்த் said...

கபீஷ்.. முதல் வரவா இது? நன்றி!

புனிதா.. ரொம்ம்ம்ம்ப நாளாய்டுச்சு இல்ல! நேரமின்மை மட்டுமல்ல.. ஆர்வமின்மையும் காரணம். :)

செல்வராஜ்...

//அது சரி... அமர்ந்து படிக்குமளவிற்கு நல்ல இடத்தை ஈரோட்டுக் காவிரிக்கரையில் எங்கு கண்டீர்கள்?//

ஈரோடு காவிரிக்கரையும் பாற்கடலைப் போலத்தாங்க! நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கும். :) நன்றி பின்னுட்டத்திற்கு! (ராகவேந்திரர் கோவிலுக்குப் பக்கத்துல கொஞ்ச நல்ல இடமும் இருக்குங்க)

காயத்ரி சித்தார்த் said...

இஸ்மாயில்.. மிக நலம்! நன்றி!

மைஃப்ரண்ட்.. நீ இன்னும் திருந்தவேயில்லையா??

நிலா said...

// யாரோ புதுசா ஒருத்தவங்க ப்ளாக் எழுத வந்திருக்காங்க போல?
அறிமுக போஸ்ட் ஒண்ணும் போடலியா? :P//

நிலா செல்லம்.. உங்க ஊரு தான் நானும்னு சொல்லிருக்கனே! இது போதாதா? புதுசா ஒரு அறிமுகம் தேவையா? ;)

காயத்ரி சித்தார்த் said...

G3 said...

// Welcome back :) அப்பப்போ இப்படி பதிவு போடு :D//

முயற்சிக்கறேன் மா!

தமிழன் கறுப்பி.. (என்ன பேருங்க இது?!) நன்றிங்க!

நான் ஆதவன்.. நன்றி பின்னூட்டத்திற்கு. தலைப்பை மாத்தியே ஆகனுமா என்ன? உள்ளீடு மாறினா போதாதா? :)

காயத்ரி சித்தார்த் said...

சந்தனமுல்லை..
உங்கள் பின்னூட்டம் கூச்சம் தருகிறது. எனக்கும் சித்துவிற்குமான உரையாடலில்.. கடிதங்களில் பெரும்பாலும் பப்புவும் இடம்பிடித்து விடுகிறாள்! உங்களது அம்மாக் கணங்கள் வெகு அருமை. நீங்கள் என்னைப் பாராட்டுவது ஆச்சரியமளிக்கிறது. மிக்க நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

ராமலக்ஷ்மிக்கா ரொம்ப நன்றி!

ராம்.. சிங்கப்பூர்ல நீங்க நூலகத்துக்கு கூட்டிட்டு போகலன்னு சித்து வருத்தத்துல இருக்கார். புத்தக வரிசையா சொல்லி அவரை வெறுப்பாத்தாதீங்க. :)

கார்த்திக், குப்பன் யாஹூ, ஆயில்யன் அண்ணாச்சி.. எல்லாருக்கும் நன்றி!

காயத்ரி சித்தார்த் said...

//SanJaiGan:-Dhi said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.. முடியலை..
கல்யாணம் ஆகியுமா நீ திருந்தலை.. :(//

ம்ஹூம் இல்ல! ஏன் திருந்தனும் தொழிலதிபர் திரு திரு (ரொம்ப மரியாதை!) சஞ்சய் அவர்களே? :)

காயத்ரி சித்தார்த் said...

ஸ்ரீ.. உங்கள் குற்றச்சாட்டில் ஏதும் தவறில்லை தான். இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். நன்றி!

காயத்ரி.. பதிவுலகில் மொத்தம் எத்தனை காயத்ரிகள்!! நன்றி!

Bee'morgan, தினேஷ் நன்றி.

சூர்யா.. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. அபியும் நானும் பார்த்தோம். படம் நல்லா இருந்தா விமர்சிக்கவே தோண மாட்டிங்குது என்ன செய்ய?! நல்ல மொக்கைப் படமா பரிந்துரை பண்ணுங்க.. பார்த்துட்டு வந்து புலம்பறேன். :)

காயத்ரி சித்தார்த் said...

பாலா.. வாழ்த்துக்களுக்கு நன்றி!

துர்கா.. மகிழ்ச்சியாயிருக்கிறது உங்கள் பின்னூட்டம் படித்து. நன்றி உங்கள் அன்பிற்கு!

சூர்யா said...

villu villunu oru padam vandhu irukae poi parunga - Enga oorula padam patha naalu peru "moochu pechu" illama suthikittu thiriyarunga, oru friendukku padatha suggest pannaen, padatha pathuttu, kobama un friendshipae vaendamnu odittan...

Aduthavan vaazhkayila vaazhakka bajji podradhunna intha cinema karungalukku oru santhosham... :-(