Wednesday, February 13, 2008

உதிர்தல்



சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...

ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.

25 comments:

Dreamzz said...

வாவ் வாவ் :)
அழகான சோகம்

nagoreismail said...

"சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை..."

சில பிரியங்களை
சொல்லமுடிவதுமில்லை

"உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன.."

ஆனாலும் உதிர்ந்த பூக்களை விடவும்
உடைந்து போன நேசம்
உறுதியாகவும் இருக்கின்றனவே - நாகூர் இஸ்மாயில்

நிவிஷா..... said...

kavithai is nice

நட்போடு
நிவிஷா

Thamiz Priyan said...

//சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...//
:)

Anonymous said...

ஏற்கப்படாத பிரியங்கள் அனைத்தும் உதிர்ந்து போகின்றனவா?

கும்பா said...

ரொம்ப நாளா ரூம் போட்டு ரோசனை பன்னி எழுதுன நல்ல கவுஜ

TBCD said...

சில சமயங்களில் ஏற்கப்படாத பிரியங்கள் நெஞ்சுக்குள்ளே பதியம் போட்டு, தண்ணீர் ஊற்றி, காலத்துக்கு பூத்துக் கொண்டேயும் இருக்குதாம்...

sajay said...

NESANGALUM URAVUGALUM
POOKKAL POLA THAN
UTHIRUM POTHU ALLA . . .
MALARNTHU SELIKKUM POTHU.
UTHIRUM POOKKALAI POLALLAMAL
URAVUGALUM, NESANGALUM
POOTHU SIRIKKUM POOKKALAI
PONDRU AMAIVATHE SARIYANATHU.

Unknown said...

Chance illa....

CVR said...

அழகான கவிதை!! :-)

LakshmanaRaja said...

//சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...//

:))

ஜே கே | J K said...

நல்லாத்தான் இருக்கு

துரியோதனன் said...

//உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன//

உடைந்து போன நேசங்கள் கவிதாயினியின் இந்த கவிதையை படிச்சுட்டு ஒன்னு சேர்ந்துடுவாங்களோ?


பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

-காயத்ரி

ஆடுமாடு said...

//சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...//


ம்ம்ம்

நல்லாருக்கு!

மிதக்கும்வெளி said...

good

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..

சில நேரங்களில்
கவிதைகளாகவும்.//

உண்மை :))

அழகான சோகம்தான்!

தினேஷ் said...

பூப்போல உதிர்ந்த கவிதை...

தினேஷ்

Sanjai Gandhi said...

இது அழுகாச்சியா?
பு.த.செ.வி. :(

Sanjai Gandhi said...

//சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை..//

வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்... :(

.... போன் பண்ணி எதுனா திட்ட ட்ரை பண்ணலாம்னு நெனைக்காத... பிச்சிபுடுவேன் பிச்சி.. :D

Sanjai Gandhi said...

//ஆடுமாடு said...

//சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...//


ம்ம்ம்

நல்லாருக்கு//

கலக்கறே கவிதாயினி... உன் கவுஜ ஆடுமாடுக்கெல்லாம் பிடிக்கிது.. :D
... சும்மா டமாசுக்கு...

சுரேகா.. said...

//ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது

உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன//

இப்படி எதாவது எழுதி..
நல்லபேரு வாங்கிக்கிட்டு போயிடுங்க!

:)

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க கவித....

செந்திலான் said...

சில நேரங்களில்
கவிதைகளாகவும்..?

சில நேரங்களில்
காயத்ரிகளுமாகவா...?

Gowripriya said...

azhagaana kavithai...

N A V ! N said...

"சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை..." wow