Sunday, January 20, 2008

வனம்


இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..

சொல் விழுந்த இடங்களில்
மற்றுமோர் மனம் முளைக்கிறது.

மறுபடி முளைத்து
மறுபடி கிளைத்து
மனங்கள் பெருகிப் பெருகிப்
பெருகியபடியிருக்க
முடிவில்
எல்லைகளில்லாப்
பெருவன
மாகிறேன் நான்.

வனத்திற்குள் வழிகளுண்டா?
வனத்திற்கு வாசல்களுண்டா?
வனமில்லா இடமேதும் உண்டா?
தெரியவில்லை..

உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போது
மெளனம் பேசப் பழகுகின்றன.

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.

31 comments:

இராம்/Raam said...

//முடிவில் எல்லைகளில்லாப்
பெருவனமாகிறேன் நான்

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.//

இந்த வரிகளுக்கு இடையில் அந்த வரிகள் தேவையில்லைன்னு நினைக்கிறேன்... :) :) :)

Dreamzz said...

//நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.//
வாவ்...
கவிதைய ஒரு கான்செப்ட்ல அழகா ஆரம்பிச்சு.. விளக்கி...
முடிச்சு இருக்கீங்க...

loved these last 2 lines.

எரிந்த காடுகள் எரிந்தவையாகவே
இருந்தால்... உலகத்தில் இப்பொழுது
காடுகள் இருக்காது...
மீண்டும் இலை துளிர்க்கும்..தழைக்கும்....

SanJai said...

//இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..//

இல்லையா பின்ன.. அதனால தான எங்களால நெனைச்ச நேரத்துல மொக்கை போட்டுத் தள்ள முடியுது. :)

பாச மலர் said...

//சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..//

அழகான சொல்லாடல்..

அருமையான கடைசி வரிகள்

TBCD said...

தனிகிறதுக் காடு...இல்லையா...?

// தணிகிறது காடு.//

வேதா said...

/இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..../
என்ன சொல்றதுன்னே தெரியல இந்த வரிகளை விட்டு தாண்ட முடியவில்லை..

/நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு./
காடுடன் சில நினைவுகளும் தான்.. :)

வரிகள் ரொம்ப அருமையா இருக்கு காயத்ரி :)

குசும்பன் said...

ஹலோ 101 பயர் சர்வீஸ் இங்க ஒரு காடு பத்திக்கிட்டு எரியுது நீங்க வரவேண்டாம் கவிதாயினி கவிதையை படிப்பவர்கள் விடும் கண்ணீரில் தானாக்க அணைந்துவிடும்!!!

Jeeves said...

//
நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.//
மௌனத்தின் குரல்.. அருமை.


வாழ்த்துகள்.

Jeeves said...
This comment has been removed by the author.
LakshmanaRaja said...

மிக நல்ல கவிதை.
மிக சரியான உணர்வின் வெளிப்பாடு.

மிதக்கும்வெளி said...

ம்..

karthik said...

//நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.//

நல்லாருக்கு.

Kannan Seetharamn said...

இந்த கவிதை உங்க "standard" க்கு இல்லை... ஒரு அழுவாச்சியும் வரலா...;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னைக்கு புரிஞ்சிருக்கு.. இன்னைக்கு புரிய.. ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..

Narayanan said...

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு
Verumaiya ..azhaga solli irrukeenga

SanJai said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னைக்கு புரிஞ்சிருக்கு.. இன்னைக்கு புரிய.. ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

Jeeves said...

முதல்வன் ல கடைசி சீன்ல அர்ஜீன் சொல்லுவார்

" கடைசீல என்னையும் அரசியல் வாதி ஆக்கிட்டியே" அப்படின்னு....

அதே மாதிரி கவிதாயினி அவர்களே.. என்னையும் கவிதை எழுத வச்சுட்டீங்களே

ஹ்ம்ம்ம்... விதி யாரை விட்டது.

இதோ என்னோட கவிதை

///
புதையுண்ட சொல்லாலே
வதையுண்ட மனமொன்று
வெந்து தீய்கிறது
மெதுமெதுவாய்

கொன்றதை மீண்டும்
தின்று கொழுத்து
சாம்பலில் இருந்து
புதையுண்ட சொல்லின்
விஷ வீரியத்தோடு
உயிர்த்தெழுகிறது
மனம்.
///

சென்ஷி said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
என்னைக்கு புரிஞ்சிருக்கு.. இன்னைக்கு புரிய.. ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..//

SUPER..... :)))

சுரேகா.. said...

//உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போது
மெளனம் பேசப் பழகுகின்றன.//

நல்ல முரண்தொடையுடன்... உண்மையும் இணைந்து...அழகூட்டுகிறது !

வாழ்த்துக்கள்!

தேவ் | Dev said...

கவிதை நல்லாயிருக்கு

Anonymous said...

//

உச்சரிக்க விரும்பா உதடுகள் இப்போது மெளனம் பேசப் பழகுகின்றன

நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய் வெந்து தணிகிறது காடு

//

கடைசி வரிகள் அருமையா வந்திருக்கு. படமும் தான்.

(அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வனப்பகுதியோ?

nagoreismail said...

இயக்குனர் பேரரசுவின் 'பழனி' பார்த்து விட்டு மொட்டை போடுமாறு மன்னிக்கவும்.. மொக்கை போடுமாறு வேண்டுகிறோம் - நாகூர் இஸ்மாயில்

nagoreismail said...

வனங்களின் மரணம் - இதோ எனது மௌன அஞ்சலி - நாகூர் இஸ்மாயில்

துரியோதனன் said...

//இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..//

நல்ல கவிதை. கண்ணீர் இந்த தீ-யை அனைக்கும் என்று நம்புகிறேன்

சுரேகா.. said...

நம்ம வீட்டுப்பக்கம் வந்து போங்களேன்..!

http://surekaa.blogspot.com

sathish said...

//
நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு.
//

அருமை!

நிவிஷா..... said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதை is nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

ரசிகன் said...

//வேதா said...

/இப்போதெல்லாம்
சொல்காய்ச்சி மரமாகிவிட்டது
மனம்..../
என்ன சொல்றதுன்னே தெரியல இந்த வரிகளை விட்டு தாண்ட முடியவில்லை..

/நினைவுகள் உரசிக்கொண்டதில் மெதுவாய்
வெந்து தணிகிறது காடு./
காடுடன் சில நினைவுகளும் தான்.. :)

வரிகள் ரொம்ப அருமையா இருக்கு காயத்ரி :)//

ரிப்பிட்டேய :)

சுரேகா.. said...

வந்துட்டுப்போனதுக்கு நன்றிங்க.!

இதையும் பாருங்க!

http://surekaa.blogspot.com/2008/01/blog-post_23.html

கோகிலவாணி கார்த்திகேயன் said...

முதல் முறை இந்தக் கவிதையை வாசிக்கும் போது ஒண்ணும் புரியவில்லை. அடுத்த முறை வாசிக்கும் போது ஏதோ ஒரு சோகம் வந்து மனதில் உட்கார்ந்து கொண்டது.

பாம்பாட்டிச் சித்தன் said...

வணக்கம்

பெருந்தேவியின் “இக்கடல் இச்சுவை” தொகுப்பில் சில வரிகள் நினைவிற்கு வருகின்றன
“ஓயாத மனக்கிளிகள்
பாஷ்யத்தை நிறுத்த சற்றே
எக்கனி தரட்டும்”

நன்றி